Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharathi Pottri Aayiram - Part 3
Bharathi Pottri Aayiram - Part 3
Bharathi Pottri Aayiram - Part 3
Ebook135 pages34 minutes

Bharathi Pottri Aayiram - Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏறத்தாழ கடந்த நூறு ஆண்டுகளில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியோர் ஆயிரக்கணக்கானோர். அவனைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியாக 51 கவிஞர்கள் இயற்றியுள்ள ஓராயிரம் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இவை மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது. இந்த மூன்றாம் பாகத்தில் கே.பி.அறிவானந்தம் இயற்றிய பாடல்களோடு இன்னும் 27 கவிஞர்கள் இயற்றிய 422 பாடல்கள் இடம் பெறுகின்றன.

புலவர் கு.பொ.பெருமாள், ஹா.கி.வாலம் அம்மையார், ப.ஜீவானந்தம், தேனம்மை லட்சுமணன்,கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி மன்னை பாஸந்தி, ச.நாகராஜன். பாவலர் கி. பாரதிதாசன்,
பிரான்சு கலைமாமணி புலவர் நாகி,
தமிழ்மாமணி புலவர் சீனு. இராமச்சந்திரன், கலைமாமணி இலந்தை இராமசாமி
கனடா, கவியோகி வேதம்,பாவலர் எஸ். பசுபதி,
கனடா, புதுவையைச் சேர்ந்த கல்லாடன், பாவலர் அண்ணா. தருமலிங்கம், புலவர் செ. இராமலிங்கன், புலவர் துரை. மாலிறையன், பாவலர் சூரிய விசயகுமாரி, கவிஞர் தே. சனார்த்தனன், பாவலர் வே. முத்தையன்,
கவிஞர் வ. பழனி,கவிஞர் மு. தியாகராசன், கவிஞர் இராச.தியாகராசன் புலவர் மு. இறைவிழியனார்,பாவலர் சிவ. இளங்கோ
கவிஞர் முனைவர் உரு. அசோகன்,
கவிஞர் ந. இராமமூர்த்தி ஆகியோரது பாடல்கள் இந்த மூன்றாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

கவிஞர்களைப் பற்றிய அறிமுகமும் நூலில் தரப்பட்டுள்ளது. பாரதியாரின் கவிதையில் உள்ள நுட்பமான விஷயங்களை இந்தக் கவிதைகளில் காணலாம். அத்தோடு கவிஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் அறியலாம். பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய கவிதைகள் இவை. அனைவருக்கும் பரிசாகக் கொடுக்க உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580151011081
Bharathi Pottri Aayiram - Part 3

Read more from S. Nagarajan

Related to Bharathi Pottri Aayiram - Part 3

Related ebooks

Reviews for Bharathi Pottri Aayiram - Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharathi Pottri Aayiram - Part 3 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாரதி போற்றி ஆயிரம் - பாகம் 3

    Bharathi Pottri Aayiram - Part 3

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    பகுதி - 71

    பகுதி – 72

    பகுதி – 73

    பகுதி – 74

    பகுதி – 75

    பகுதி – 76

    பகுதி – 77

    பகுதி – 78

    பகுதி – 79

    பகுதி – 80

    பகுதி – 81

    பகுதி – 82

    பகுதி – 83

    பகுதி – 84

    பகுதி – 85

    பகுதி – 86

    பகுதி – 87

    பகுதி – 88

    பகுதி – 89

    பகுதி – 90

    தொகுப்பாளன் முடிவுரை

    முன்னுரை

    என்னுடைய குடும்பமே பாரதி பற்றுடைய குடும்பம் என்றால் அது மிகையாகாது.

    எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் பாரதியார் பாடல்களை ஜெயபாரதியில் வெளியிட்டு பாரதியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்.

    அவர் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடும் போது பிரமித்துப் போய் மெய்மறந்து அதைக் கேட்போம். எனது சகோதரர்கள் அனைவரும் பாரதியார் பாடல்களைப் பரப்பும் பணியில் இடைவிடாது ஈடுபட்டவர்கள்.

    அடுத்து சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு வி.ஜி. சீனிவாசன் சிறந்த பாரதி பக்தர். எங்கள் குடும்ப நண்பர். அவர் எங்களை பாரதியார் வழியில் நன்கு ஊக்குவித்தவர்.

    ஆக இயல்பாகவே பாரதியாரைப் போற்றியவர்களை நாங்கள் போற்றி வந்தோம். இந்த வகையில் பாரதியாரைப் போற்றி வெளிவரும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்பொழுது படித்து இவற்றைத் தொகுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் அவ்வப்பொழுது என் மனதில் எழுவதுண்டு.

    மகாகவி பாரதியாரை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்திய எனது கட்டுரைகளின் தொகுப்பு இரு பாகங்களாக புஸ்தகா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. (மஹாகவி பாரதியாரை பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும் பாகம் 1 மற்றும் பாகம் 2)

    அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றி அவ்வப்பொழுது எழுதிய எனது கட்டுரைகளின் தொகுப்பையும் புஸ்தகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    (அதிசய மஹாகவி பாரதியார்)

    பாரதியாரைப் போற்றி எழுதப்பட்ட ஒராயிரம் கவிதைகளை சேகரித்து, தொகுத்து www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் 11-12-2017 முதல் வெளியிட ஆரம்பித்தேன். இந்தப் பணி 7.5.2018இல் முடிவு பெற்றது.

    இதனை வெளியிட்ட, www.tamilandvedas.com இணையதளத்தை நடத்தி வரும் திரு ச.சுவாமிநாதனுக்கு எனது நன்றி. பல்வேறு பதிப்பகங்கள், கவிஞர்கள், இணையதளங்கள், ப்ளாக்குகள் அவற்றிற்கான உரிமையாளர்கள் மற்றும் படைப்பாளிகள், கவிஞர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதைத் தொடர்ந்து படித்து ஊக்கமூட்டிய அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

    நூலைத் தொகுப்பதில் நான் பட்ட சிரமங்களை முடிவுரையில் தந்துள்ளேன்.

    இதை வெளியிடுவதில் காபிரைட் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று யோசித்து ஒவ்வொரு பகுதியிலும் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டு வந்தோம்:

    காபிரைட் பிரச்சினை இருப்பின் அதை எழுதியோரோ அல்லது கவிதைகள் அல்லது புத்தகத்தை வெளியிட்டோரோ வேண்டாம் என்று சொன்னாலோ ஆட்சேபணை தெரிவித்தாலோ அது உடனடியாக இந்தத் தொகுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று உறுதி கூறுகிறோம்.

    ஆனால் பல கவிஞர்களும் ஏராளமான அன்பர்களும் இந்த முயற்சியைப் போற்றி வரவேற்றனர். தங்கள் பங்கிற்கு தாங்கள் எழுதி வெளியிட்ட கவிதை நூல்களை அனுப்பி எங்களை பிரமிக்க வைத்தனர்.

    இந்த நூலில் இடம் பெறும் ஏராளமான கவிஞர்களை வெளி உலகம் சரியாக அறிந்து போற்றவில்லை. அவர்களைப் போற்றினால் பாரதி பணி ஆற்றுவதில் சிறந்தவர்களாவோம்.

    பாரதியாரைப் போற்றி எழுதப்பட்ட ஆயிரம் கவிதைகளைக் கொண்ட இந்த நூல் மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது.

    முதல் பாகத்தில் 22 கவிஞர்கள் எழுதிய 254 பாடல்கள் இடம் பெற்றன. இரண்டாம் பாகத்தில் இரு கவிஞர்கள் எழுதியுள்ள 324 பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்த மூன்றாம் பாகத்தில் கவிஞர் கே.பி.அறிவானந்தம் மற்று 27 கவிஞர்கள் இயற்றியுள்ள 422 பாடல்கள் இடம் பெறுகின்றன.

    எனது நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ள பங்களூர் புஸ்தகா டிஜிடல் மீடியா நிறுவனம் இந்த நூலையும் டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் வெளியிட முன் வந்துள்ளது.

    PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தக்க ஆதரவைத் தந்த அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

    பாரதியாரைப் போற்றுவோம்.

    வாழிய பாரதத் திருநாடு!

    ச. நாகராஜன்

    பங்களூரு

    14-4-2024

    ஶ்ரீ குரோதி வருடம் சித்திரை முதல் நாள்

    பகுதி - 71

    பாடல்கள் 579 முதல் 587

    பாரதி பத்துப்பாட்டு

    கவிஞர் கே.பி. அறிவானந்தம் அவர்கள் இயற்றியுள்ள நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான ‘குயில் பார்வையில் பாரதி’ தொடர்கிறது.

    ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

    30 முதல் 38 வரை உள்ள பாடல்கள்

    இருவ ரென்னை விரும்பி நின்ற போதில்

    ஒருவர் மீதும் உளம்தி ரும்பா நாளிலே

    அருமை யான அரச மரபின் செம்மலாய்

    பெருமை மிக்க இளவ லங்கு வந்தனன்

    கண்ட போதே காத லென்றால் பொருந்துமோ?

    பண்ப தல்ல என்ற சொல்லும் பொய்த்ததே

    கண்ட போதில் இதயம் மாறி கலந்ததால்

    மண்ணின் மாண்பு மாறி யாவும் மறந்ததே

    திடமு டனிரு மனமி ணைந்து திளைத்ததால்

    உடலி ரண்டும் உளமுருகி ஒன்றலால்

    இடமு டனொரு கால மென்ப தின்றியே

    தடம்ப திக்கத் தந்து விட்டேன் தன்னையே

    காத்தி ருந்த இருவ ரதனைக் கண்டனர்

    ஆத்தி ரத்தில் அறிவி ழந்து வந்தனர்

    நேத்தி ரத்தில் ரத்தம் வாளில் நேர்பட

    தீத்தெ றித்தல் போல வெட்டிச் சாய்த்தனர்

    உடலினையான் தந்திட்ட காத லர்தாம்

    உயிரையே எனக்காகத் தந்த போதில்

    திடமுடனே கலக்கமின்றி என்னைப் பார்த்து

    திரும்பவும்நாம் மறுபடியும் பிறப்போ மென்றார்

    மடமையென சிலர்சொல்வார் ஆனால் என்னே

    Enjoying the preview?
    Page 1 of 1