Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punitha Oru Puthir
Punitha Oru Puthir
Punitha Oru Puthir
Ebook157 pages1 hour

Punitha Oru Puthir

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புனிதாவின் புரியாத புதிருக்கு விடை தெரிந்தும் வாய் திறவாது இருக்கும் தாய்மாமன், தாரத்தின் புதிர் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி மௌனம் சாதித்துத் தனியே வாழும் தந்தை, மாமியார் புனிதாவின் மர்மம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி வாய் திறவாத கணவன் கிரீசன், இவர்களிடமிருந்து அப்புதிருக்கு விடை காண துளசிபடும் பாடுகள் என்வென்று? அதற்காக அவள் அடைகின்ற அவமானங்கள் என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்…!

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580155608784
Punitha Oru Puthir

Read more from Lakshmi

Related to Punitha Oru Puthir

Related ebooks

Related categories

Reviews for Punitha Oru Puthir

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punitha Oru Puthir - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புனிதா ஒரு புதிர்

    Punitha Oru Puthir

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    துளசி! துளசி!

    மென்மையான அவளது குரல் தூக்கத்தைக் கலைத்தது. சந்தன சோப்பின் நறுமணம் கம்மென்று முகத்தில் அடிப்பதை உணர்ந்தாள். சில்லென்று நீர்த்துளிகள் கன்னங்களின்மீது உதிர்த்ததும் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். ஈரத் தலையைத் துவட்டிக்கொண்டு, கண்கள் அருகே குனிந்து கொண்டிருந்த கிரீசனின் முகம் தெரிந்தது.

    விடியுமுன் அவன் எழுந்து, வேலைக்காரிக்குக் கதவைத் திறந்து, பால் வாங்கி வைத்து, காப்பி, பலகாரம் தயார் செய்து வைத்துவிட்டு, குளித்தும் முடித்துவிட்டான். சமையல் அறையில் குக்கர் அடுப்பின்மீது சீறும் ஒலி கேட்டது.

    முன் தூங்கி, பின் எழும் பேதை அவள்! ஆனால், அவள் கணவன் கிரீசன் கொஞ்சமும் அலுத்துக் கொண்டதே இல்லை. போதாததிற்கு அவள் செய்யவேண்டிய வேலைகளையும் காலையில் அநேக நாள் அவன் செய்து முடித்து விடுகிறான்.

    தேவானை தயாராக வெந்நீரை எடுத்து வச்சிருக்கும். பல் விளக்கி, குளிச்சிட்டு வந்துடு அன்புடன் சொன்னான் அவன். துளசி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழரை தாண்டி விட்டது. தன்னை மறந்து அப்படி ஒரு தூக்கமா?

    எழுந்தாள்.

    குளியலறையில் பல் துலக்கியவாறே, ஷவரைத் திறந்து விட்டாள். பூவாக உதிர்ந்த நீர் திவலைகளுடன், அவள் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டு ஓடின. சமீபத்தில் அவளுக்கு ஏற்பட்ட இழப்புகளின் நினைவால் பொங்கிய கண்ணீர் அல்ல, அது.

    அன்பைத் தவிர வேறு எதுவுமே கொடுக்கத் தெரியாத பண்பான கிரீசன் அவள் கணவன். ஐந்து ஆண்டு மண வாழ்க்கைக்குப் பின்னும் அவனை ஆழமாக உண்மையாக நேசிக்க முடியாது அவள் உணர்விலே ஓர் ஊனம். அதை நிவர்த்திக்கத் தெரியாது, அவள் தவித்துக்கொண்டு இருந்தாள். அந்த வேதனைதான் கண்ணீராக, அவ்வப்போது அவள் நெஞ்சை சுட்டது.

    வேறு ஒரு பெண்ணை அவன் மணந்து இருந்தால் அவன் வாழ்வு எவ்வளவோ நிறைந்து இருக்குமே? ஆனால், ஒரு நாள் கூட அவன் சுட்டிக்காட்டி கடுமையாகப் பேசியது இல்லை. எத்தனை நல்ல கணவன் கிரீசன்.

    கண்களைத் துடைத்துக்கொண்டு சீக்கிரம் பல் விளக்கி, முகம் கழுவிக் கொண்டாள். அவள் உடுத்திக் கொள்ள மாற்று சேலை இத்யாதிகளை தயாராக வைத்திருந்தான் கிரீசன்! அவனுக்கு மனைவி தினமும் செய்ய வேண்டிய கடமைகளை, அவன் அன்போடு சலிக்காது அவளுக்குச் செய்கிறான். வெட்கக்கேடு!

    தன்னை மாற்றிக்கொண்டு, தன்னை திருத்தி அமைத்துக் கொள்ள, ஓர் அன்பு மனைவியாக வாழ அவள் எத்தனையோ தடவை முயன்றாள். ஏதாவது ஒரு நிகழ்ச்சி குறுக்கிட்டு அவளது உணர்வுகளை சிதைத்துக்கொண்டு இருந்தது.

    அவசரமாக குளித்து முடித்து, முகம் கழுவும் பீங்கான் மேல் பதிந்திருந்த கண்ணாடியில் தலையைச் சீவி முடித்துக் கொண்டாள். அருகில் இருந்த அலமாரியில் அவளது ஒப்பனைப் பொருள்கள் இருந்தன. நெற்றியில் பளிச்சிட்ட குங்குமப் பொட்டுடன் அலங்காரத்தை முடித்துக்கொண்டு அறைக் கதவைத் திறக்கத் திரும்பினாள்.

    குளியலறை சன்னல் தோட்டத்தைப் பார்த்தபடி அமைந்திருந்தது. கிணற்று மேடையருகே பாத்திரங்களைத் துலக்க தேவானை தயாராகிக்கொண்டு இருந்தாள். வேலை நடுவே இடைச் சுவர் வழியே எட்டிப் பார்த்த அடுத்த வீட்டு வேலைக்காரியிடம் அவள் பேசுவது கணீர் என்று கேட்டது.

    இப்பத்தான எங்க வூட்டம்மா எழுந்திருச்சிருக்கிறாங்க. அவங்க பலகாரம் சாப்பிட்ட பிறகுதானே நான் காப்பியை பார்க்க முடியும்? பாவம், அந்த ஐயா. வழக்கம் போல அடுப்படியில் அவதிப்பட்டுகிட்டு இருக்கார்...

    நல்ல சோமாரிப் பொண்ணு உங்க வீட்டு அம்மா!

    சுருக்கென்று தைத்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள் துளசி. வேலைக்காரிகளின் விமரிசனத்தைப் போலத்தானே சுற்றிலும் வீட்டவர்கள் அவளைப் பற்றிப் பேசுவார்கள்?

    மனம் கூசியவளாக வெளியே வந்தாள். சாப்பாட்டு அறை மேஜைமீது எல்லாம் தயாராக இருந்தன. கிரீசன் குழந்தை அருணுக்கு பள்ளிக்கூடம் செல்ல சீருடையைப் போட்டுக்கொண்டு இருந்தான்.

    அம்மா! கையை நீட்டி ஆவலுடன் அவளிடம் தாவ முயன்ற மகனை தந்தை அதட்டினான். அம்மாவைத் தொந்தரவு பண்ணாமல் போய் உட்காரு. சாப்பிட நேரமாச்சு.

    தாயைப் பரிதாபமாகப் பார்த்தான் மகன்.

    நீயும் போய் உட்கார். சாப்பிட்டுவிட்டு நான் உடனடியாக கிளம்பணும். நேரம் ஓடுது கூறிவிட்டு பரிமாறத் தொடங்கினான்.

    உன்னையும் குழந்தையைப் போல வற்புறுத்த வேண்டியிருக்கு. நான் அந்தப் பக்கம் போனதும் சாப்பிடாம பட்டினி கிடந்து உடம்பை கெடுத்துக்கிறே. இதனால் எல்லாம் நடந்து போனது மாறப் போகுதா? சாப்பிடு உம் அதட்டினான்.

    இட்டிலியை விழுங்க முடியாது துக்கம் அவள் நெஞ்சை இறுக்கியது. கண்களில் பொங்கிய நீரை சமாளித்துக் கொண்டாள்.

    பார்வை மெல்ல எதிர் சுவரில் தொங்கிய படத்தின்மீது படிந்தபோது தன் மனதிலே மீண்டும் துன்ப உணர்வு உறுத்த தவித்தாள்.

    அம்மா புனிதா நோய்வாய்ப்படுமுன் எடுத்த படம் அது. மூக்குக் கண்ணாடி வழியே கண்களால் சிரித்த அம்மா... புனிதா உண்மையில் ஓர் அழகி. பேரழகி என்றே சொல்லலாம். பட்டையாகக் கூந்தல் நரைக்கத் தொடங்கிய போதிலும், அந்த வயதிலும் ஒடிய உயரமாக, மூக்கும், உதடும் செதுக்கி வைத்தது போன்ற அமைப்புடன் கம்பீரமாக வீட்டிற்குள் வளைய வந்தவள். சிரித்தால் பற்கள் பளீரென்று மின்ன, களைகட்டிவிடும் முகம். பார்க்க எத்தனை அழகோடு இருந்தது!

    கிரீசன் கவனித்துவிட்டான். தன் கையை மேஜையின் குறுக்கே நீட்டி அவள் இடக் கரத்தை மெல்லப் பிடித்து அழுத்தினான். எத்தனையோ வைத்தியம் செய்து பார்த்தோம். அவங்க நோய் குணமாகலை. காலம் முடிஞ்சுடிச்சு. அவங்க போயிட்டாங்க.

    அவள் கண்கள் கலங்கின.

    காலம் முடியலை. என் அப்பாதான் அவங்களை சீக்கிரம் சாக வச்சுட்டார். அவர் செய்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமா! அதனால்தான் அம்மா சீக்காளியானாங்க.

    சொல்ல நா துடித்தது. வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள். துளசி கண்ணீரைச் சமாளித்தபடி நன்றியுடன் கணவனைப் பார்த்து முறுவலித்தாள்.

    சாப்பிட்டு முடித்ததும், கையைக் கழுவிக்கொண்டு அவன் அலுவலகம் போக வேறு உடை உடுத்த உள்ளே சென்று விட்டான். அம்மாவின் படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தாள் துளசி. துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. அந்த ஆண்டு அவள்வரை துயரம் நிறைந்த ஆண்டாகக் கழிந்துவிட்டது.

    ஆண்டின் இறுதியில் அவள் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயானாள். பாட்டியை உரித்துக்கொண்டு வந்திருப்பதாக எல்லோரும் புகழ்ந்தார்கள். பிறந்த மூன்றாவது தினம் திடீரென்று இரவு ஜன்னி கண்டு ஆஸ்பத்திரியிலேயே அது இறந்துவிட்டது.

    குழந்தையை இழந்த துயரத்தில் குடல் குமுறிக்கொண்டு இருந்த சமயம் அவளைப் பெற்ற தாய் நோய் முற்றி படுத்த படுக்கையாகி விட்டாள். ஆஸ்பத்திரியில் இருந்து துளசி வீடு திரும்புமுன் புனிதாவின் உடல்நிலை மோசமாகி விட்டது.

    அம்மா! என்னைப் பாருங்க!

    தழுதழுத்த மகளை மெல்ல கண் திறந்து பார்த்தாள் புனிதா. வழக்கம்போல மயக்கம். அந்த மவுனப் புன்னகை முகத்தில் ஒளியிட, பேசாது மகளை ஒரு கணம் பார்த்து விட்டு, கண்களை மூடிக் கெண்டாள். அப்படியே நினைவு இழந்து போனாள். பிறகு போயே விட்டாள்.

    பெற்ற மகளையும், பெற்றவளையும் அடுத்தடுத்து பறி கொடுத்துவிட்ட அதிர்ச்சியில்... மீளா துயரத்தில் பித்தம் பிடித்தவள் போலிருந்தாள் துளசி. கிரீசன் மட்டும் அவளிடம் அத்தனை அன்புடன் நடந்து கொண்டிருக்காவிட்டால், அவளும் தாயை விரைவில் பின்பற்றியிருப்பாள்.

    என்ன யோசனை?

    அலுவலக உடுப்புடன் வெளிப்பட்ட கிரீசன் செல்லமாக அவள் கூந்தலை மெல்ல வருடினான். கன்னத்தோடு கன்னம் வைத்து அவளைத் தழுவிக் கொண்டான். கையைக் கழுவாம நான் இன்னமும் உட்கார்ந்திருக்கேனே? மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டு நகர்ந்தாள்.

    குக்கரில் சோறும், பருப்பும் தயார். மேலே மெள்ளமா நீ சமைக்கலாம். குழந்தை அருணை பன்னிரெண்டு மணிக்கு போய் மறக்காமல் பள்ளிக் கூடத்தில் இருந்து கூட்டிக்கொண்டு வந்துடு. நான் வரட்டுமா! அன்போடு, ஆசையுடன் கேட்டபடி அருகில் வந்தான் கிரீசன்.

    வழக்கம் போல அவள் கன்னத்தை செல்லமாக மெல்லக் கிள்ளினான். நான் வர்ற வரைக்கும் நல்ல பெண்ணாக இருக்கணும். பால் சாப்பிடணும். சும்மா எதையாவது நினைச்சுட்டு வருத்தப் படக்கூடாது. சரியா.

    தலையை ஆட்டி முறுவலித்தாள் அவள்.

    காரைக் கிளப்பி, தோட்டத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து வாசலில் நிறுத்தினான் கிரீசன். மகனை அழைத்துப் போக உள்ளே வந்தான்.

    வாயிற்படியருகே சோகமாக அவள் நின்றுகொண்டு இருந்தாள். இன்னிக்கு நீ ஒரு காரியம் பண்ணணும். செய்வியா? கேட்டுவிட்டு சிறிது சந்தேகமாக அவளைப் பார்த்தான்.

    சொல்லுங்க. செய்யறேன்.

    "கட்டாயம் செய்யணும். அருணை அழைச்சிட்டு வரும் போது வழியில் அப்படியே அடுத்த தெருவுக்குள்ளே போய் உன்

    Enjoying the preview?
    Page 1 of 1