Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pennpoove Panpaadu
Pennpoove Panpaadu
Pennpoove Panpaadu
Ebook66 pages25 minutes

Pennpoove Panpaadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதன் இயல்பில் மென்மையானவன். அன்பு வட்டம் ஒன்றில் இருக்க விரும்புபவன். ஆனால் அவனுடைய அடுத்த பக்கம் விபரீதமானது. பெண்ணை தன் கால்களின் கீழே நசுக்கி வைப்பது. அடிமையிலும் அடிமையாக ஆக்கி வைப்பது. ஆட்டி வைப்பது. அதில் கிடைக்கும் ஏதோ ஒரு அநீதியான இன்பத்திற்காக எந்த எல்லைக்கும் போவது. ஆனால் எல்லாம் புரிந்தவள் பெண். அறிவுத்தளத்தில் உட்கார்ந்து இயங்குபவள். எப்படி அவள் இந்த வழக்குகளை முடித்துக் கொள்கிறாள்? வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateMay 4, 2024
ISBN6580166811082
Pennpoove Panpaadu

Read more from V. Usha

Related to Pennpoove Panpaadu

Related ebooks

Related categories

Reviews for Pennpoove Panpaadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pennpoove Panpaadu - V. Usha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பெண்பூவே பண்பாடு

    (சிறுகதைத் தொகுப்பு)

    Pennpoove Panpaadu

    Author:

    வி. உஷா

    V. Usha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-usha

    பொருளடக்கம்

    1. அன்பென்ற மழையிலே...

    2. அப்பா என்கிற ஆசான்

    3. நிலவொளி போல ஒருத்தி

    4. பெண் பூவே பண் பாடு

    5. கீழே விழும் ஆப்பிள்கள்

    6. குற்றமும் வெற்றியும்

    7. பொழுதும் விடியும் பூவும் மலரும்

    1

    அன்பென்ற மழையிலே...

    அடிபட்ட நத்தையைப் போல இரவு மிக மிக மெதுவாக ஊர்ந்தது.

    அகிலா சடாரென எழுந்து கொண்டாள்.

    பாப்பு நல்ல உறக்கத்தில் இருந்தாள். குழந்தையை மென்மையாக அணைத்தபடி ரவியும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

    பெருமூச்சுடன் அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

    இன்று முதல் அலைச்சல் ஆரம்பம். குழந்தைக்கு நல்ல ஒரு காப்பகம் தேட வேண்டும். சாதாரண காரியம் இல்லை அது. மணலில் விழுந்த குண்டூசியைத் தேடுவது போல அவ்வளவு சாகசமானது.

    என்ன அகி, அதுக்குள்ள எழுந்துட்ட? மணி மூணுதான் ஆகுது... படு என்று ரவி அரைகுறை கண்களைத் திறந்தபடி சொன்னான்.

    மெல்லிய குரலில் அவள் பேசினாள்.

    பாப்புக்கு புது காப்பகம் பாக்கணும் ரவி... இன்னிக்கு கெஞ்சிக் கூத்தாடி லீவு வாங்கியிருக்கேன்... மூணு நாள் லீவு கெடைக்குது சேர்ந்தமாதிரி சனி, ஞாயிறு சேர்த்து... எப்படியும் அலைஞ்சு திரிஞ்சு பிடிச்சுடலாம் ரவி... சரியா?

    என்ன? என்ன சொல்ற? என்று அரைகுறை தூக்கம் கலைந்து ரவி எழுந்து விட்டான்.

    விளையாடறியா அகிலா? இந்த கிரீச் கெடைக்கவே எவ்வளவு கஷ்டப்பட்டோம்? நல்லவேளையா அந்த திலகவதி மேடம் எங்கிருந்தோ வந்து நம்ம பக்கத்து தெருவுல காப்பகம் தொடங்கினாங்க... நம்ம அதிர்ஷ்டம் அது... பெரிய அதிர்ஷ்டம்... நீயும் நானும் நிம்மதியா வேலைக்குப் போறோம்.... வீட்டு லோன், வண்டி லோன், மெடிகல் லோன்னு ஆயிரம் தவணை கட்டி அப்பா அம்மான்னு ஊருக்கும் பணம் அனுப்புறோம்... எல்லாத்துக்கும் அடிப்படை குழந்தை நல்ல இடத்துல நல்ல பெண்ணால பாத்துக்கப்படுறா... இந்த நிம்மதிதானே? அதுவும் நாம போய் விடவும், கூட்டிட்டு வரவும் அவ்வளவு ஈசியா இருக்கு... இதையா மாத்த சொல்றே? என்ன ஆச்சு உனக்கு?

    குழந்தை புரண்டு படுத்தது. ம்மா மா என்று முனகி அவளை கட்டிக் கொண்டது.

    படு அகிலா... எல்லாம் நல்லா போய்கிட்டிருக்கு... எதையோ போட்டு வீணா குழப்பிக்கறே... விடு

    இல்லே ரவி என்றாள். கண்கள் படபடத்தன.

    என்ன?

    அன்னிக்கு நான் கொஞ்சம் முன்னாடியே போயிட்டேன் காப்பகத்துக்கு... பாத்தா நம்ம பாப்புவை மடிமேல் போட்டு தூங்க வெச்சிட்டிருக்கா... இதுவும் கட்டை விரலை வாய்ல போட்டுகிட்டு ஆனந்தமா தூங்குது

    நல்ல விஷயம்தானே? குழந்தையை அன்பா பாத்துக்கறாங்கதானே?

    இல்லே ரவி... அப்படி இல்லே அது

    புரியலே

    அவள் நீண்ட பெருமூச்சு விட்டு அடிக்குரலில் சொன்னாள்.

    அடுத்த நாளே பாப்புக்கு காய்ச்சல் வந்துட்டது... நல்ல சளி, இருமல்... பாப்பு நல்ல ஆரோக்கியமான குழந்தை... இந்த இரண்டு வருஷத்துல டாக்டர், மெடிசின்னு நாம சுத்தியிருக்கோமா ரவி? இல்லேதானே? ஏன் இப்ப மட்டும் வரணும், அதுவும் சிவியரா?

    என்ன சொல்ல வரே? சுத்தமா புரியலே... கிரச் நல்ல சுத்தமா, தூய்மையாத்தானே இருக்கு? குழந்தைன்னா சளி, காய்ச்சல்னு வராதா?

    "பாப்புக்கு வராது... ஆனா வந்தது... ஏன்? அந்த திலகவதியால... யெஸ்... அவளுக்கு குழந்தை இல்லே... நாப்பது வயசாகுது... புருஷன் ஆர்மில வேலை செஞ்சு காஷ்மீர்ல இறந்து போய்ட்டான்... தனி ஆளு... அவ கைபட்டா எதுவும் விளங்காது ரவி... இப்பதான், நேத்துதான் விஷயம் தெரிஞ்சுது. குழந்தை இல்லாத மலடி கிட்டே என்

    Enjoying the preview?
    Page 1 of 1