Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Allangadi Santhaigal
Allangadi Santhaigal
Allangadi Santhaigal
Ebook270 pages1 hour

Allangadi Santhaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உயிரோடு இருப்பவர்களை உயிரோடு இருக்க வைப்பதற்கான எந்த எத்தனங்களையும் செய்யத் தயாராகஇல்லாத அரசும் ஆளும் வர்க்கமும் அவர்கள் இறந்த பிறகு பணம் பெறுவார்கள் என்கிற காப்பீட்டு உத்தரவாதத்தை மீண்டும் மீண்டும் தருகிறது. அப்படி பெறப்பட்ட நிதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்ட மூலதனமாக மாற்றப்படுகிறது. ‘இறந்தவருக்கான பணம் அவரது குடும்பத்துக்கு’ என்ற வாக்குறுதி குடும்ப அமைப்புமுறை, நீட்டிக்கப்படவேண்டிய விசுவாசமும் உத்தரவாதமும் நிரம்பிய நிறுவனமாக மறுஉறுதி செய்யப்படுகிறது. இப்படியான நிறுவனங்களின் கடவுள்களைக் குறித்துத்தான் இந்தக்கட்டுரைத் தொகுப்பு பேசுகிறது. மேலும் சமகாலத்தில் புறக்கணிக்கப்பட்ட தலித்துகளின் பிரச்னைகளைக் கோட்பாட்டுச்சாயலுடன் அல்லது அதையே கவித்துவமாயமாக நிகழ்த்தும் வல்லமை கொண்டவையாகவும் அமைகிறது.

Languageதமிழ்
Release dateMay 4, 2024
ISBN6580177510891
Allangadi Santhaigal

Read more from Yavanika Sriram

Related to Allangadi Santhaigal

Related ebooks

Reviews for Allangadi Santhaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Allangadi Santhaigal - Yavanika Sriram

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அல்லங்காடிச் சந்தைகள்

    (பின் காலனியக் கட்டுரைகள்)

    Allangadi Santhaigal

    Author:

    யவனிகா ஶ்ரீராம்

    Yavanika Sriram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yavanika-sriram

    பொருளடக்கம்

    முன்னுரை

    குறுக்குமறுக்குமாகத் தடவிச்செல்லும் மொழி

    முருகபூபதியின் செம்மூதாய் - ஒரு பார்வை

    தேசியக் கவிதைகளும் விசுவாசமற்ற சொற்களும்

    இனப் பிரச்சினைகளுக்கு அப்பால் இலங்கை - ஒரு பின்காலனித்துவப் பார்வை

    இந்திய நதி நாகரிகத்தின் சாதியத் தேசியமும் பன்னாட்டு நவீன பாராளுமன்றக் கூட்டுக் குடும்பங்களும்

    மத்தியதர வர்க்கத்துக் காதலும் மூலதனத்தின் கீழ் சோரம்போகும் இலக்கிய உற்பத்திகளும்

    கோ-எஜுகேஷனிலிருந்து கோ-ஒர்க்கிங் ஹவுஸ்களுக்கு...

    புராதனத் தாய்மையின் நெடுங்காலச் சோகமும் விசுவாசமற்ற நவீனப் பெண்களும்

    அதிகாரத்தின் கவனிப்பற்ற மரணங்களும் இறந்தபிறகே பணம் வறுபவர்களும்

    பின் நவீனத்துவ வாசிப்பில் இலக்கியம் வழியான சமூக ஓர்மைகளின் மறு படைப்பு

    நவீன கவிதையில் தாமதமான அறிவும் புதிய புனைவுகளும்

    நவீன கவிதைகளின் சராசரி புரிதல்

    மாதிரியில்லா மொழி உலகமும் பிரக்ஞையில்லா கலகமும்

    தலித்துகளுக்கு சந்தையில் விற்க ஒரு பொருளும் இல்லை

    அதிகாரத்தின் வறுமையும் கறுப்பினத் தலைமையும்

    தேசியம் ஒரு கற்பிதம்: அ. மார்க்ஸின் விவாதப்புள்ளிகள்

    பசி, காமம், மறு உற்பத்தி சார்ந்த கதையாடல்கள்

    நன்றி

    கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன்,

    மாலதிமைத்ரி, குட்டிரேவதி, சல்மா,

    பெருந்தேவி, லதா ராமகிருஷ்ணன், உமா மகேஸ்வரி,

    சுகிர்தராணி, லீனா மணிமேகலை, சக்தி ஜோதி,

    தாரா கணேசன், சு. தமிழ்ச்செல்வி, கீதாஞ்சலி பிரியதர்ஷினி.

    கதவு சிலேட், புதுவிசை, புதிய காற்று, உயிர் நீழல், லும்பினி.இன், பூஞ்சாரல் டைம்ஸ்.

    உலகின் பிந்தங்கிய, சுரண்டப்பட்ட மக்களாகிய நமது கடமை ஏகாதிபத்தியத்தைத் தாங்கிநிற்கும் அஸ்திவாரங்களை அழிப்பதாகும்.

    - சே. குவேரா

    முன்னுரை

    அரசியல்நீக்கம் செய்யப்பட்ட எழுத்தே சிறந்த இலக்கியம் என்று நம்பப்பட்ட நவீன எழுத்தியக்கம், கோட்பாடுகளால் இடையீடு செய்யப்பட்ட காலகட்டத்தில் எழுத வந்தவர் கவிஞர் யவனிகாஸ்ரீராம். அந்தக்காலகட்டமே யவனிகாவை உருவாக்கியது. அவரால் உருவாக்கப்பட்டவன் நான். இலக்கியம் மற்றும் அரசியல் குறித்த எங்களிருவரின் பார்வைகளில் உள்ள பொதுவான அம்சங்கள் என்னை அவர்பால் ஈர்த்தன. வெறுமனே அரசியல் கருத்துகள் கொண்டிருந்த என்னை இலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்தி செழுமைப்படுத்திய யவனிகாவின் கட்டுரைத் தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதுவது, எனக்குக் கிடைத்த நற்பேறு.

    2010-ல் உயிர் எழுத்து பதிப்பகத்தால் முதல் பதிப்பு கண்டு தற்போது வேரல் வெளியீடாக மறுபதிப்புக்காணும் இத்தொகுப்பை ஏற்கனவே நான் வாசித்திருந்த போதும் சூழலில் இன்றளவும் ஒட்டி நிலவும் பல கருத்தாடல்களை விவாதிக்கும் பலரிடம் அல்லது சிலரிடம் இக்கட்டுரைகள் எப்பிடி

    கவனம் பெறாமல் போனது என்ற எனது ஆச்சரியம் ஒருபுறம் இருக்க, இன்றைய வாசிப்பிலும் அவை தொடர்ந்து இயங்கியபடி இருப்பதை இந்த முன்னுரையில் குறிப்பிடவே முயல்கிறேன்.

    யவனிகாவின் கவிதைகள் எப்படி தனித்துவமானவையோ அதேபோல்தான் அவரது கட்டுரைகளும் தனித்தியங்கும் மொழியைக் கொண்டவை. அவரது கட்டுரைகள் (வழக்கமான) கவித்துவம் கொண்டவை என்பதல்ல அதன் பொருள். இன்னொருவகையில் சொன்னால் அவரது கட்டுரைகள் கவித்துவம் கொண்டவைதான். கவித்துவம் என்றால் அழகியலும் மென்மையும் உருக்கமும் என்னும் அர்த்தத்தை மாற்றியமைத்தவை. அவை சமகாலத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் பிரச்னைகளைக் கோட்பாட்டுச்சாயலுடன் அல்லது அதையே கவித்துவமாயமாக நிகழ்த்தும் வல்லமை கொண்டவை.

    யவனிகாவின் இந்தக் கட்டுரைகளிலும் அவரது மொழித்தடங்களைக் காணலாம். நான் உள்பட பலர் கவிதைக்கும் கட்டுரைக்கும் தனித்தனியான மொழிதலையே கையாள்வது வழக்கம். ஆனால் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது கோணங்கியின் ஒரு நாவலைப் படிக்கும் அனுபவத்தையோ யவனிகாவின் ஆற்றல்மிக்க ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவத்தையோ நாம் உணரலாம். ஒருவரி தன்னைத்தானே நீட்டித்துக்கொண்டு ஒரு பத்தியாக மாறும் லாவகம், கவிதைகளில் மட்டுமே நிகழும் மொழியின் அற்புத விளையாட்டு இவை அத்தனையும் இக்கட்டுரைகள எங்கிலும் காணலாம். இந்தக் கட்டுரைகள் முழுக்க அரசியல் பேசுபவை. ஆனால் முன்னோடிகளின் மேற்கோள்களை மிகக்குறைவாகத் தந்து பல புதிய விஷயங்களை சமகாலத்துப் பொருத்தப்பாடுகளுடன் பேசுபவை என்பது மிக முக்கியமானது.

    அவருடன் உரையாடிய நண்பர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரைகளின் நடை மிகநெருக்கமாக அமைந்திருப்பதை உணர முடியும். யவனிகாவுடனான நீண்ட உரையாடல்களில் அவர் என்ன மொழியில் பேசுவாரோ அவைதான் இந்தக் கட்டுரைகளின் மொழியும். மேலும் அவருடனான உரையாடலில் எப்போதும் ஆச்சர்யப்படுத்தும் விஷயம், அவரது ‘கண்டுபிடிப்புகள்’ (Findings). நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் புதிய பார்வை நுட்பங்களுடன் அவர் அணுகும்போக்கு. அதுதான் இந்தக் கட்டுரைகளின் பலம் என்று கருதுகிறேன்.

    கவித்துவமனம் என்பது கற்பனைவளம் மட்டுமல்ல, யாரும் காணாத விஷயங்களைக் கண்டுணரும் நுட்பமும்கூட. காப்பீட்டுத்திட்டங்கள் குறித்த ஒரு கட்டுரை அப்படியான ஒன்று. எந்தத் தருணத்திலும் மிகச்சிறந்த கவிதையாக மாறிவிடக்கூடிய கட்டுரை அது. உயிரோடு இருப்பவர்களை உயிரோடு இருக்க வைப்பதற்கான எந்த எத்தனங்களையும் செய்யத் தயாராக இல்லாத அரசும் ஆளும் வர்க்கமும் அவர்கள் இறந்தபிறகு பணம் பெறுவார்கள் என்கிற காப்பீட்டு உத்தரவாதத்தை மீண்டும் மீண்டும் தருகிறது. அப்படி பெறப்பட்ட நிதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்ட மூலதனமாக மாற்றப்படுகிறது. ‘இறந்தவருக்கான பணம் அவரது குடும்பத்துக்கு’ என்ற வாக்குறுதி குடும்ப அமைப்புமுறை, நீட்டிக்கப்படவேண்டிய விசுவாசமும் உத்தரவாதமும் நிரம்பிய நிறுவனமாக மறுஉறுதி செய்யப்படுகிறது. இப்படியான நிறுவனங்களின் கடவுள்களைக் குறித்துத்தான் இந்தக் கட்டுரைத் தொகுப்பு பேசுகிறது.

    இலக்கியவெளியில் தொடர்ந்து இயங்கிவருபவராகவும் கடந்த கால்நூற்றாண்டாக எழுதிவரும் படைப்பாளிகளைக் கவனித்துவருபவராகவும் இலக்கிய உரையாடல்களில் தொடர்ந்து பங்குபெறுபவராகவும் யவனிகா தனது சமகாலப்படைப்புகள் குறித்த புரிதல்களை முன்வைக்கிறார். அரசியல் தீண்டாமையைக் கடைப்பிடித்து அகவுணர்வுகளை முன்வைப்பவையே நவீனம் என்ற பம்மாத்து உடைந்து வெகுகாலம் ஆனபோதும் மீண்டும் தரிசனம், அழகியல், காவிய மறு உருவாக்கம், கேள்விகளற்ற மந்தைகளென தனக்கான வாசகர் வட்டங்களை உருவாக்கிக்கொள்வது, விமர்சனங்கள் அனைத்தையும் ஒற்றைப்பார்வையுடையதாய்ச் சுருக்கி முத்திரை குத்துவது ஆகியவற்றின் வழியே நம் காலத்திலும் இந்தப் போக்கு மேலெழுந்துவருகிறது. ஆனால், யவனிகாவின் கட்டுரைகள் பெரும்பாலும் கோட்பாட்டு - இலக்கிய உரையாடல்கள் உச்சத்திலிருந்த காலத்தில் எழுதப்பட்டவை. சமகாலத்துப் போக்குகளையும் கணக்கிலெடுத்து அவர் தன் அவதானங்களை இன்னும் முன்வைக்க வேண்டும். அது அவசியமும்கூட.

    இன்றைய காலகட்டத்தில் தேசப்பற்று, முதலாளிய ஆதரவு, ஒழுக்க மதிப்பீடுகளைக் காப்பாற்றுவது என்ற பெயரில் சாதிய - ஆணாதிக்க மதிப்பீடுகளைக் காப்பாற்றுவது ஆகியவற்றை சிரமேற்கொள்ளும் நடுத்தரவர்க்க மனநிலையிலிருந்து கவிதைகள் விலகவேண்டியதன் அவசியத்தை யவனிகாவின் கட்டுரை சரியாகவே முன்வைக்கிறது. அதேநேரத்தில் அவரால் மதுவிடுதிச் சந்திப்புகள் நடத்திய கலகக்காரர்களாக முன்வைக்கப்பட்ட விக்கிரமாதித்யன், லஷ்மி மணிவண்ணன் போன்றோர் காலப்போக்கில் என்னவாக மிஞ்சியிருக்கிறார்கள் என்ற மறுபார்வையும் அவசியம். எல்லாக் கலகங்களுக்கு மத்தியிலும் விக்கிரமாதித்யன் தனது சாதிய - ஆணாதிக்க மதிப்பீடுகளைக் கைவிடத் தயாராயில்லை. இன்னொருபுறம் லஷ்மி மணிவண்ணன் மாற்று இலக்கிய, அரசியல் பார்வைகளின்மீது வன்மத்தைக் கக்கும் இந்துத்துவக் காலாட்படையாகச் செயல்படுகிறார் என்பதையும் யவனிகா கணக்கெடுக்க வேண்டும்.

    மதுவிடுதி கலகங்கள் ஓய்ந்திருக்கும் காலமிது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கோட்பாட்டு உரையாடல்கள் ஓய்ந்திருக்கின்றன. மீண்டும் ஊர்ப்பெருமை, சாதிப்பெருமை, மதப்பெருமை, பண்பாட்டுப்பெருமை பேசும் படைப்புகள் முன்னெழுகின்றன. கோட்பாட்டாளர்கள் படைப்பாளிகளின் எதிரிகளாகக் கட்டமைக்கப்படுகிறார்கள். எழுத்தாளர்களுக்கு விசுவாசமான படைகள் உருவாக்கப்படுகின்றன. விமர்சனங்கள் என்பவை மதிப்புரைகளாகச் சுருங்குகின்றன. பரஸ்பர பாராட்டுகள் இலக்கிய விமர்சனங்கள் என்றழைக்கப்படுகின்றன. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, அதேநேரத்தில் அழகியல் மதிப்பீடும் இல்லாத மொன்னையான படைப்புகள் இன்றைய சமூகவலைத்தளக் கட்டமைப்புக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகின்றன. மதவாதப் பாசிசம் சர்வ அதிகாரத்துடன் உச்சத்திலிருக்கும் வேளையில் நமது இலக்கிய முன்னோடிக் கலகக்காரர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், புதிதாக உருவான படைப்புகள் என்ன இடையீடுகளை நிகழ்த்தியிருக்கின்றன என்பது குறித்த தன் விரிவான பார்வைகளை யவனிகா உரையாடலாக முன்வைக்க வேண்டும்.

    மூலதனமே வசீகரமான கடவுளாக மாறிப்போயுள்ள பின்காலனியக் காலகட்டத்தில் அதன் உள்ளாடைகளை இலக்கியம் வழியே உருவ வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் அவரது கவிதைகளும் கட்டுரைகளும் பேசுகின்றன. தேச விசுவாசம், குடும்ப விசுவாசம், மரபு விசுவாசம், அழகியல் விசுவாசம் ஆகியவற்றைக் கைவிட்டு, காலத்தின் பிரச்னைகளை எழுதச்சொல்லி ஒரு அறைகூவலை யவனிகாவின் கட்டுரைகள் முன்வைக்கின்றன.

    அம்பேத்கரும் பெரியாரும் அயோத்திதாசரும் மறுவாசிப்பு செய்யப்பட்ட காலத்தில் யவனிகாவின் கவிதைகள் தொடங்கின. மூலதனத்தின் தந்திரங்களை அறியும் மனத்துடன் பின்காலனியச் சூழலைப் புரிந்துகொண்டு அதை இன்றைய மார்க்சியத் தேவையுடனும் நவீனக் கோட்பாடுகளின் பொருத்தப்பாட்டுடனும் இணைத்து எழுதவேண்டியதன் அவசியத்தையே அவர் சமகால மாற்றுகளாக வலியுறுத்துகிறார் என்று கருதுகிறேன். இந்தக் கட்டுரைகளிலும்கூட அதே பார்வைத் தெறிப்புகள்.

    படைப்பாளி என்பதைத் தாண்டி ஒரு வணிகராக கிழக்காசிய நாடுகளில் பயணம் செய்தவர் என்ற முறையில் பின்காலனியம் ஏற்படுத்தியிருக்கும் வாழ்க்கை மாற்றங்களும் ஒவ்வொரு தேசத்துக்குள்ளும் ஊடுருவும் மூலதன ஆதிக்கம் குறித்த புரிதல்களும் அவரது கட்டுரைகளிலும் பிரதிபலிக்கின்றன. போர் ஓய்ந்த இலங்கை எப்படி உலகமயத்தின் வேட்டைக்காடாக மாற்றப்படுகிறது என்னும் கட்டுரை இன்றைய ஈழ அணுகுமுறையாளர்களுக்கு முக்கியமான ஒன்று.

    புனிதத்தின் பெயரால் உருவாக்கப்படும் நதிநாகரிகம் குறித்த கதையாடல்கள், எப்படி தூய்மைவாத ஆணாதிக்க அதிகாரத்தை நிலைநிறுத்தப் பயன்படுகின்றன என்பதையும் பழங்குடிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படும் சோகத்தையும் மற்றுமொரு கட்டுரை பேசுகிறது. ஆணும் பெண்ணும் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பை நவீன முதலீட்டியம் உருவாக்குவது, கூட்டுப்பண்ணையில் பணிபுரிவதைப் போன்றதல்ல, மாறாகத் தன் மூலதனத்தை விரிவுசெய்வதற்கான கூட்டு அடிமைகளைத் தக்கவைத்துக்கொள்ளத்தான். அதற்காகச் சில பாலியல் மீறல்களையும் அது அனுமதிக்கத் தயாராகவிருக்கிறது என்பதையும் திருப்பூர் ஆலைகளை முன்வைத்து யவனிகா சுட்டிக்காட்டுகிறார். வாடகைத்தாய்கள் உருவாகியுள்ள காலத்தில் ‘தாய்மையின் புனிதத்துக்கு’ என்னதான் மதிப்பு என்று நவீனப் பெண்ணியக் கேள்விகளை முன்வைக்கிறார் யவனிகா.

    எல்லா வகையான அதிகாரங்களும் மொழிவழியாகக் கட்டமைக்கப்படும்போது அதிகாரத்துக்கு எதிரான போராட்டங்களும் மொழிவழி நிகழ்கின்றன என்ற புரிதலுடன் மனுதர்மம் முதல் இன்றைய சமகாலக் கவிதைகள் வரை அணுகுகிறார். ‘போல’ என்னும் ஒப்புமை எந்த மாதிரியான அதிகாரப்படி நிலைகளை உற்பத்தி செய்கிறது என்பதை நுட்பத்துடன் ஒரு கட்டுரை இடப்படுத்துகிறது. ஒபாமா அமெரிக்க அதிபரானதையொட்டி முன்வைக்கப்பட்ட ‘கறுப்பரின விடுதலைக்குரல்களின்’ பின்னால் உள்ள வெள்ளை காலனிய அதிகாரம் குறித்த கட்டுரையும் அ. மார்க்ஸின் தேசியம் குறித்த பார்வைகளும் அவை தமிழ்ச்சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த கட்டுரையும் குறிப்பிடத்தக்க ஒன்று. தலித்துகள் வணிகத்தில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசும் கட்டுரை ஒன்று இரண்டாயிரவருடங்கள் கடந்துபோன பின்னாலும் தாம் தலித்துகளை ஒடுக்குகிறோம் என்று இன்றுவரை உணராத ஒரு அறிவு நாணயமற்ற சாதிய மேலாதிக்க சமூகத்தின் மெத்தனமான நடைமுறையை தலித்தியப் பார்வையின் வழியே கேள்விக்குள்ளாக்குகிறது. உசுப்புகிறது. ‘தலித் மூலதனம்’ என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்த உரையாடல்களும் போபால் பிரகடனமும் சிலகாலமும் பேசப்பட்டன. பின் அந்தக் குரல்கள் அடங்கிப்போயின. ஆனால் இக்கட்டுரையில் தலித்துகள் வணிகத்தில் இடம்பெற வாய்ப்பற்றுபோன நிலக்கூலி நிலையையும் அல்லது தடைசெய்யப்பட்டு வணிகத் தூய்மையை காரணம் காட்டி ஒதுக்கலுக்கு உள்ளாக்கியதுமே அவர்கள் இந்திய அளவில் சமூகமதிப்பையும் அந்தஸ்தையும் நீதியையும் வளர்ச்சிகளையும் பெறமுடியாமல் போனதற்கான முக்கிய காரணம் என்று நுட்பமாக ஒரு வரலாற்று வாதத்தை முன்வைக்கிறார். இப்பார்வை இந்திய அளவில் வேறு எவராலும் இதுவரை முன்மொழியப்படவில்லை என்றே தோன்றுகிறது. (இங்கு விபரங்களோடு ஆய்வர்கள் குறுக்கிடலாம்.)

    தொடர்ந்து சாதியத்தால் ஒடுக்கப்பட்ட நாடார்கள் எப்படி வணிகத்தைக் கைப்பற்றினார்கள் என்பது அவசியம் விவாதிக்கப்பட வேண்டியதே என்றாலும் நாடார்களின் வளர்ச்சி, அதற்குப் பின்னாலிருந்த சமூக, அரசியல் மாற்றங்கள் ஆகியவை குறித்த வரலாற்றுப் பார்வைகள் இன்னும் நம் உரையாடல்களுக்கு வலுசேர்க்கும்.

    இலக்கியம் மற்றும் சமூக அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்த அவதானிப்புகளை பல புதிய பார்வை நுட்பங்களுடன் முன்வைக்கும் யவனிகாவின் இந்தக் கட்டுரைகள் இருண்ட பள்ளங்களின் மீதான எரிகற்கள். நிறுவனங்களின் மீதான விசுவாசத்தைக் கொஞ்சமாவது அசைத்து, கேள்வி கேட்கும் சிந்தனை உசுப்பல்களை சாத்தியமாக்கினால் அதுதான் இந்தக் கட்டுரைகளின் வெற்றி.

    சுகுணா திவாகர்

    குறுக்குமறுக்குமாகத் தடவிச்செல்லும் மொழி

    இயந்திரங்களின் அசைவும் தொழில்நுட்பத்தின் காட்சி மற்றும் மின்னணுப் பாய்ச்சல்களால் பூமிப் பந்தினைச் சுற்றி வெப்பத்தை மட்டுமல்ல ஜீவராசிகள் அனைத்திற்குமே உடல்நலப் பதற்றத்தையும் கூடவே உயிரச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகைக்கூற்றல்ல. எளிய வாழ்வின் கதியிலிருந்து மனித அக்கறை மட்டுமல்லாது திட, திரவ, வாயுப் பொருட்கள் அனைத்திலும் ஏற்படும் கரிமங்களால் மூச்சுத்திணரும் உலகில் மூலதனத்தின் உயிர்த்தன்மை அற்ற பொருள் குவிப்பு அதன் குப்பைகள் மற்றும் சந்தைப் பயங்கரங்கள் யாவும் மத்திய காலத்திலிருந்து குடும்பம் என்ற ஒற்றை அமைப்பை ஆண், பெண், சந்ததி என முக்கோண உறவாக மட்டும் நீடித்துக்கொண்டு வந்திருக்கும் பழைய தலைமுறைகளுக்கு இன்று சவாலாக மாறியிருக்கின்றன. நிலங்கள் அனைத்தும் முதலீட்டுக்குக்கீழ் வந்துவிட்ட பின்பு அதன்மேல் அசையும், அசையாப் பொருட்கள் அனைத்தும் மறு உற்பத்தியற்ற கழிவுகளாக மந்தைகளுக்குள் திணிக்கப்படும்போது, அதன் சந்தைக்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், விளம்பரங்கள் மற்றும் எதிர்காலம் பற்றிய ஊடக வெளிச்சங்கள் கல்வியறிவு அற்ற எளிய உலகங்களை பிரக்ஞையற்று காயடித்தும் வந்திருப்பதை இன்றைய கண்ணுக்குத் தெரியாத அழுத்தங்களிலிருந்து நம்மில் யார் ஒருவரும் உணர்ந்துகொள்ள இயலும்.

    அத்தகைய நெருக்கடிகளை பகிர்ந்துகொள்ளும் பொருட்டு, இக்கட்டுரைத் தொகுப்பு கலை இலக்கியங்கள் வழியாக பின்காலனித்துவ காலத்தில் வாழ நேர்ந்த ஒருவனின் வந்தடைதல்களாகவும் அல்லது கடந்துபோக முயலும் எத்தனிப்பாகவும் தகவமைப்பாகவும் பிரதியாக்கம் பெறுகிறது.

    மேலும் இக்கட்டுரைகள் தனக்குள் கொண்டிருக்கும் வியாக்கியானங்கள் போக, பல வகையிலும் பெரியார், அம்பேத்கர், விடியல், நிறப்பிரிகை, அடையாளம் வெளியீடுகள் மற்றும் அ. மார்க்ஸ், எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, வளர்மதி, வேட்டைக்கண்ணன், ரவிக்குமார், ராஜ்கௌதமன், நாகார்ஜூனன், தமிழவன், ரமேஷ் - பிரேம் ராஜன்குறை போன்றோரின் எழுத்துகளிலும் உரையாடல்களிலும் மண்ட்டோ, ப. சிங்காரம், ஆத்மாநாம், ஷோபாசக்தி போன்றோரின் கதையாடல்களிலும் ஓரளவு தாக்கம் பெற்றவை என்றபோதிலும் பின் காலனித்துவச் சலனங்களின் ஊடே எனது பயணங்களும் ஊகங்களும் இதில் அதிக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாகச் சொல்வதென்றால் எனது சக நவீன கவிஞர்களுடன் மேலும் தொடர்ந்து தாக்கப்பட்டு விமர்சனங்களுக்கும் உள்ளாகிவரும் அவர்களின் விளிம்புநிலை அளவு அவஸ்தைகளுக்கிடையேயான விவாதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலக்கியத்தின் வழியே குறுக்குமறுக்காக தடவி அறிந்துசெல்லும் இக்கட்டுரைகள் அவநம்பிக்கை ஊட்டும் தன்மைக்கு இணையாக சில உளவியல் காரணிகளையும் முன்வைப்பவை. பெண்ணிய, தலித்திய நோக்கிலும் பேச

    Enjoying the preview?
    Page 1 of 1