Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayul Dhandanai
Aayul Dhandanai
Aayul Dhandanai
Ebook126 pages1 hour

Aayul Dhandanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் கதாநாயகி ஜனனி! குகன் என்பவருடன் திருமணமாகி ஜனனிக்கு, ஒரு பையன் இருக்கிறான். குகனின் சகோதரி நளினி, இவர்கள் குடும்பத்தில் நுழைந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறாள். அந்த பிரச்சனைகள் என்னென்ன? முடிவில் யாருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது? என்பதை வாசித்து தெரிந்துகொள்வோம்!

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580100611116
Aayul Dhandanai

Read more from Devibala

Related authors

Related to Aayul Dhandanai

Related ebooks

Related categories

Reviews for Aayul Dhandanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayul Dhandanai - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆயுள் தண்டனை!

    Aayul Dhandanai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம்: 01.

    அத்தியாயம்: 02.

    அத்தியாயம்: 03.

    அத்தியாயம்: 04.

    அத்தியாயம்: 05.

    அத்தியாயம்: 06.

    அத்தியாயம்: 07.

    அத்தியாயம்: 08.

    அத்தியாயம்: 09.

    அத்தியாயம்: 10.

    அத்தியாயம்: 11.

    அத்தியாயம்: 12.

    அத்தியாயம்: 13.

    அத்தியாயம்: 14.

    அத்தியாயம்: 15.

    அத்தியாயம்: 16.

    அத்தியாயம்: 17.

    அத்தியாயம்: 18.

    அத்தியாயம்: 19.

    அத்தியாயம்: 20.

    அத்தியாயம்: 21.

    அத்தியாயம்: 01.

    இரவு எட்டு மணிக்கு குகன் வீடு திரும்பும் போது வீடே போர்க்களமாக இருந்தது. அப்பா கூச்சல் போடுவது தெருக்கோடி வரை கேட்டது. பைக்கை நிறுத்தி பூட்டி விட்டு, குகன் உள்ளே ஓடி வர, குழந்தை முதுகில் அப்பா அறைவதை குகன் பார்த்தான். அவனால் தாங்க முடியவில்லை.

    அப்பா! என்ன பண்றீங்க நீங்க?

    அம்மா பதட்டமாக ஓடி வந்தாள்.

    என்னடா பண்ணிட்டேன்? உன் பையனை நான் கொல்லலை. முதுகுல ஒண்ணு வச்சேன், அதுவும் வலிக்காம தான்.!

    சரிப்பா. அது மூணு வயசு கூட நிரம்பாத குழந்தை. அதுக்கு என்னப்பா தெரியும்?

    எல்லாம் தெரியும்டா. இதுக்கா தெரியாது, குட்டி பிசாசு? சொன்னா ஒரு வார்த்தை கேக்க மாட்டேன்னு சபதம் எடுத்துட்டு வந்து பிறந்திருக்கு.! பிடிவாதம் கழுத்து வரைக்கும் இருக்கு.!

    அம்மா அருகில் வந்தாள்.

    இன்னிக்கு ஸ்கூலுக்கும் போக மாட்டேன்னு அழுது குளிச்சு, உங்கம்மா இவனை தூக்கிட்டு வெளில போய், இவன் பந்தாட்டம் துள்ளி, பேலன்ஸ் தவறி உங்கம்மா விழுந்துட்டா. முழங்கால், கையில சிராய்ப்பு. அதுல தொடங்கின அழுகை, இன்னும் நிக்கலை. எனக்கு அறுபத்தி ஏழு. அம்மாவுக்கு அறுபத்தி மூணு. ஓடற வயசாடா எங்களுக்கு?

    நான் விழுந்தது பிரச்னை இல்லைடா. இவன் சாப்பிடலை. ரெண்டு தடவை அரை, அரை டம்ளர் பால் குடிச்சான். அதுக்கே போராடி, அப்பா அமுக்கி பிடிச்சு வாய்ல ஊத்தினோம். எப்படீடா ஒடம்பு தாங்கும்? பசிக்காதா குழந்தைக்கு? கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி எல்லாம் பார்த்துட்டோம். எதுவும் பலிக்கலை. அழுகை ஓயலை. நாங்க சோர்ந்துட்டோம். லேசா முதுகுல ஒண்ணு வச்சா, பயந்து சாப்பிடுவானானு அப்பா முயற்சி செய்யும் போது, நீ வந்தே. முடியலை குகா.!

    அம்மா அழுது விட்டாள். குகனுக்கு பார்க்க பாவமாக இருந்தது. இருவருக்கும் வயதாகி விட்டது. நிறைய உழைத்தாகி விட்டது. ஏராளமான பொறுப்பு. சகோதரிகள், வயதான பெற்றோர் என முதல் தலை முறையை பார்த்து, தான் பெற்ற நாலு குழந்தைகளை படிக்க வைத்து, மூன்று பெண்களை கல்யாணம் செய்து வைத்து, நடுவில் வீடு கட்டி, குகனை படிக்க வைத்து, அவனது மூன்று வயது மகன் சஞ்சயை எட்டும் போது உடல் மற்றும் மன பலவீனம் கோபமாக வெடிக்கிறது. புரிகிறது. குழந்தையை வாங்கி கொண்டான். அது அழுகையை படிப்படியாக நிறுத்த,

    இதப்பாரு குகன்...நாங்க செத்தாச்சு. தினசரி இதே கதை நீடிச்சா, நாங்க படுத்த படுக்கை ஆயிடுவோம். அப்பவும் கஷ்டம் உனக்குத்தான்.!

    அப்பா கறாராக சொல்ல, நேரம் ஒன்பது மணி.

    என்னடா? ஜனனியை இன்னும் காணலை? அவங்கம்மா வீட்டுக்கு போயிட்டு, ஆடி அசைஞ்சு வர்றாளா?

    இதை அம்மா கேட்ட நேரம், ஜனனி உள்ளே நுழைந்தாள். அவளே மகா கடுப்பில் இருந்தாள். கம்பெனி வண்டி அன்று இல்லாததால், பஸ் பிடித்து நெரிசலில் பிதுங்கி செத்து, சுண்ணாம்பாகி உள்ளே வர, மாமியார் இந்த மாதிரி பேச, ஆத்திரம் வெடித்து விட்டது.

    அம்மா வீட்டுக்கு இப்ப போக எனக்கு பைத்தியமா? ஆடி அசைஞ்சு வரலை அத்தே. கசங்கி, நொறுங்கி வந்து நிக்கறேன்.!

    எதுக்கு நீ இப்ப சத்தம் போடறே, வந்ததும், வராததுமா? நான் என்ன தப்பா கேட்டுட்டேன் உன்னை?

    தப்பு தான். வீட்டுக்குள்ள ஃபேன் அடில இருக்கறவங்களுக்கு வெளில வேலைக்கு போயிட்டு வர்றவங்க கஷ்டம் தெரியாது.!

    மாமனார் மதிவாணன் வேகமாக எழுந்து வந்தார்.

    என்னம்மா வாய்க்கு வந்த படி பேசற? யாரும் இங்கே ஏசி, ஃபேனை போட்டுட்டு காலை நீட்டிட்டு ஒக்காரலை. உன் மகன் படுத்தின பாட்டுல, எங்க கண்ணுகள் வெளில வந்தாச்சு. தினசரி மூட்டு கழண்டு போகுது தெரியுமா? எங்க வயசுக்கு எங்களுக்கு இது தாங்குமா? பேசற நீ?

    நானும் பீச், மால்னு சுத்திட்டா வர்றேன்.? நாலு காசு சம்பாதிக்க நாக்கை புடுங்கிக்க வேண்டியிருக்கு. பேசக்கூடாதா?

    ஜனனி! உள்ளே போயேன்.!

    எதுக்கு என்னை அடக்கறீங்க? உங்களை பெத்தவங்க என்ன பேசினாலும் நியாயமா? நான் பேசினா மட்டும் குற்றமா?

    நீ உள்ளே வா.!

    அவளை இழுத்து கொண்டு நடந்தான் குகன். உள்ளே வந்ததும் வெடுக்கென கையை உதறினாள். குகன் கதவை சாத்தினான்.

    நான் இந்த வீட்ல கொத்தடிமையா? யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கணுமா?

    அப்படி நான் சொல்லலை. சொன்னாலும், நீ கேக்கற ஆளா? வார்த்தைக்கு வார்த்தை பதில் தராம என்னிக்கு நீ மௌனம் சாதிச்சிருக்கே?

    நானும் செருப்பா தேஞ்சு, சம்பாதிக்கறது யாருக்காக?

    நமக்காக. எனக்காக, உனக்காக, நம்ம குழந்தைக்காக. நிச்சயமா என்னை பெத்தவங்களுக்காக இல்லை. அப்பா வாங்கின வீடு இது. ஃபேன்னு நீ சொன்னதும், அவர் வாங்கினது. அப்பாவுக்கு வர்ற பென்ஷன்ல மாசம் முப்பதாயிரம் அவங்க ரெண்டு பேர் செலவுக்கு தர்றார். ஆனா என் குழந்தை, பிள்ளை வழி முதல் பேரன்ங்கற காரணமா அவனை பாத்துக்கற கடமை இருக்குனு நம்ம கூட இருக்காங்க. வசதியான ஒரு சீனியர் ஹோம்ல போய் தங்கினா, அவங்களுக்கு இத்தனை கஷ்டங்கள் இல்லை. அவசரப்பட்டு வாயை விடாதே. அவஸ்தை நமக்குத்தான்.!

    அப்படீன்னா என் பக்கம் நியாயமே இல்லையா?

    அப்படி யாரும் சொல்லலை. நீ உழைக்கறே. நிறைய கஷ்டங்கள் உனக்கும் இருக்குனு எனக்கு தெரியும் ஜனனி.!

    குழந்தையை பாத்துக்கற காரணமா, அதை காரணமாக்கி, உங்கம்மா ஒரு துரும்பை கூட கிள்ளி போடறதில்லை. நான் காலைல நாலுக்கு எழுந்து சமையல் முடிச்சு, குழந்தையை தயார் பண்ணி, அதுக்கு ஊட்டி விட்டு, அரக்க பரக்க ஓடறேன். ராத்திரி எட்டுக்கு வந்து டின்னர் பண்றேன். நான் படுக்க மணி பதினொண்ணு தாண்டுது. நான் மனுஷியா? மாடா?

    கதவு தட்டப்பட்டது. குழந்தையின் அழுகை. குகன் கதவை திறந்தான். அம்மா தான்.

    ஏம்பா...வந்ததே ஒன்பது மணிக்கு. இப்பவும் கதவை சாத்திட்டு அரை மணி நேரமா? குழந்தை தாங்குமா?

    வேற எதுக்காகவும் கதவை மூடலை அத்தே!

    ஒரு மாமியார் கிட்ட பேசற பேச்சாடீ இது?

    உங்க பேச்சுல, தப்பான அர்த்தம் வருது அத்தே!

    நீ மட்டும் ஒழுங்கா பேசறதா நினைப்பா? இந்த வயசுக்கு மேல முடியாம தவிச்சாலும், குகன் ஒரே பிள்ளைங்கற காரணமா, அவனோட குழந்தையை பாத்துக்கறது எங்க கடமைன்னு நாங்க எல்லாத்தையும் பொறுத்துத்தான் போறோம். அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. மணி ஒன்பதரை. ராத்திரி இன்னிக்கு பட்டினியா?

    குகன்! எல்லா நாட்களும் நான் செஞ்சிட்டுத்தான் இருக்கேன். என் ஒடம்பும் இரும்பால செய்யலை. வெளில ஆர்டர் பண்ணுங்க.!

    தம்பி! வெளி உணவு உங்கப்பாவுக்கு சேராது. பிரச்னை வரும்.!

    ஃப்ரிஜ்ல மாவு இருக்கு. வந்ததும் ஊறப்போட்டு ராத்திரி பதினொரு மணி ஆனாலும் க்ரைண்டர் போடத்தானே செய்யறேன். இட்லியோ, தோசையோ ஊத்தி குடுங்க.!

    அம்மா வெளியே வந்து அப்பாவிடம் போட்டு விட, உடை மாற்ற ஜனனி கதவை

    Enjoying the preview?
    Page 1 of 1