Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellai Nira Pambugal
Vellai Nira Pambugal
Vellai Nira Pambugal
Ebook171 pages1 hour

Vellai Nira Pambugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜக்காத் யார் கொடுக்கலாம் யாருக்கு கொடுக்கலாம் எவ்வளவு கொடுக்கலாம் எவ்வப்போது கொடுக்கலாம் என 'ஜக்காத்' கதை விவரிக்கிறது. முஸ்லிம்கள் வந்தேமாதரம் பாடலாமா கூடாதா? இறந்து போனவருக்கு பெரிய தொகை கடன் கொடுத்ததாக பொய் சொன்னால் என்ன நடக்கும்? சில வல்லரசு நாடுகள் இஸ்லாமுக்கு எதிராக வெறுப்பை விதைக்க என்ன காரணம்? இஸ்லாமியர்கள் ஒரு வருடத்தில் அதிகபட்சம் எத்தனை நோன்புகள் வைக்கலாம்? தீவிரவாத மகனுக்கு எதிராக தேசபற்று தாய் என்ன செய்வாள்? இஸ்லாமியர்கள் தங்கத்தை கடன் வாங்கினால் எப்படி திருப்பி தரவேண்டும் போன்ற பல கேள்விகளுக்கு தகுந்த பதில் இந்த தொகுப்பில் இருக்கிறது. படிக்க அசைபோட அற்புதமான தொகுப்பு இது.

Languageதமிழ்
Release dateMay 18, 2024
ISBN6580111011149
Vellai Nira Pambugal

Read more from Arnika Nasser

Related to Vellai Nira Pambugal

Related ebooks

Related categories

Reviews for Vellai Nira Pambugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellai Nira Pambugal - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெள்ளை நிறப்பாம்புகள்

    (20 இஸ்லாமிய நீதிக்கதைகளின் தொகுப்பு)

    (தொகுதி – 1)

    Vellai Nira Pambugal

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஜக்காத்

    2. வந்தே மாதரம்

    3. பரிகாரம்

    4. ஒரே ஒரு பொய்

    5. ரகசியமாய படு ரகசியம்

    6. பரக்கத் சிக்கன்

    7. ஜக்கரியா கசாப்புக்கடை

    8. புறம்போக்கு நிலம்

    9. அம்மாவின் ஆணை

    10. உறவினர் கூட்டம்

    11. வெள்ளை நிறப்பாம்புகள்

    12. அழகிய கடன்

    13. வாடகைதாரர்

    14. நான் விசேஷமானவன்

    15. தர்மம்

    16. கொஞ்சம் கொஞ்சம்

    17. இஸ்லாமோபோபியா

    18. களா நோன்பும் நபில் நோன்பும்

    19. அல்லாபக்ஸ் ஜுவல்லர்ஸ்

    20. ஜுலைமாதம் ஏழாம் தேதி

    முன்னுரை

    உலகத்தில் 6900 மதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இஸ்லாம். இஸ்லாத்தை இருநூறு கோடிமக்கள் பின்பற்றுகின்றனர். நான் ஒரு இந்திய தமிழ் முஸ்லிம். மதத்தால் இந்து- முஸ்லிம் சகோதரர்கள் சண்டை இட்டுக்கொள்வது எனக்கு ஒவ்வாத விஷயம். ஒவ்வொரு மதத்தினனும் பிறமத விழுமியங்களை கோட்பாடுகளை அறிந்து பிற மதத்தினனை கண்ணியப்படுத்தவேண்டும். மதம் சாராத ஆத்திகனாக இருந்த நான் தினமலர் அந்துமணியின் கட்டளைக்கிணங்கி திருக்குர்ஆனை (தமிழ்பதிப்பு) படிக்க ஆரம்பித்தேன்.

    கடந்த பதினாறு வருடங்களாக இஸ்லாமின் புனிதநூலை, நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை, விழுமியங்களை, கோட்பாடுகளை, வட்டார மொழி வழக்கை, உணவுபழக்க வழக்கத்தை, ஆடை உடுத்தும் நேர்த்தியை, மார்க்க கல்வியை, கல்வி-பணி-அதிகாரம் சார்ந்த பங்களிப்பை, இமாம்களின் வாழ்க்கை தரத்தை சிறு சிறு நீதிக்கதைகளாய் எழுதி வருகிறேன். நான் தெரிந்து கொண்டதை பிறருக்கு ஊட்டி விடுகிறேன்.

    இக்கதைகளுக்கான அழகிய முன் மாதிரி பைபிள் கதைகளும் திருக்குறள் கதைகளும் தான். நான் எழுதும் இஸ்லாமிய நீதிக்கதைகள் உலகிலேயே முதல்முயற்சி. இக்கதைகளின் முழுமுதல் நோக்கம் மதநல்லிணக்கமே. இதுவரை 500 இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதியுள்ளேன். ஆயிரம் எழுதி முடிக்க இறைவன் உதவட்டும். இக்கதைகளில் கதைத்தன்மை அதிகம். மார்க்கக் கருத்துகள் இல்லாமல் சுவாரசியமான கதைகளாகவும் இவற்றை நீங்கள் வாசிக்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும் இருபது இஸ்லாமிய நீதிக்கதைகள் இருக்கும். வெளியிட்ட புஸ்தகாவுக்கு நன்றி.

    என்றென்றும் அன்புடன்

    ஆர்னிகா நாசர்

    கைபேசி எண்: 7358962913, 9442737404

    சமர்ப்பணம்

    எனக்கும் வகிதாவுக்கும் 10.02.1985அன்று தென்காசியில் திருமணம் நடந்தது. பணியிட பிரச்சனைகளை சமாளித்து தாக்குப்பிடித்து எழுத்திலும் நான் கொடி உயர்த்த பிரதான பங்களிப்பை தந்தவர் வகிதா. நூறு ஆண்களின் மனதிடம் மிக்கவர் வகிதா. எனது மூன்றாவது கைஅவர். அவர் எனக்கு கொடுத்தது அதிகம். நான் அவருக்கு கொடுத்தது மிகமிகக் குறைவு. உண்மையில் நான் எழுதியவை அனைத்தையும் அவருக்குதான் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவையடக்கத்துடன் இத்தொகுப்பை மட்டும் திருமதி வகிதா நாசருக்கு காதலுடன் சமர்ப்பிக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன்

    ஆர்னிகா நாசர்

    கைபேசி எண்: 7358962913, 9442737404

    1. ஜக்காத்

    சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்திருந்தார் முகமது யூனுஸ். அவருக்கு 59வயதிருக்கக் கூடும். 170செ.மீ. உயரமும் 42 அங்குல பருமனும் இருந்தார். தலையில் அலங்கார வலைத் தொப்பி. கான்டாக்ஸ் லென்ஸ் அணிந்த பழுப்புக்கண்கள். முழுக்கை சட்டை-காலர் பகுதியிலும் இருகை நுனிகளிலும் தங்க பட்டன்கள். கிப்ஸ் லுங்கி. கட் ஷு. அத்தர் நறுமணம் பூசியிருந்தார்.

    எதிரே அமர்ந்திருந்த லாப்டாப் கம்ப்யூட்டரின் பட்டன்களை தட்டினார் யூனுஸ். சிலரின் புகைப்படங்களுடன் கூடிய வாழ்க்கைக்குறிப்புகள் மானிட்டரில் தெரிந்தன. யூனுஸின் உதவியாளன் ஜேக்கப் லாப்டாப் பதிவுகளின் நகல் வைத்திருந்தான். இருவருக்கும் எதிரே நூற்றுக்கணக்கானோர் ஒழுங்கற்ற வரிசை அமைத்து நின்றிருந்தனர். ஜேக்கப் தொண்டையைச் செருமிக்கொண்டு பட்டியலின் முதல் பெயரை வாசித்தான்.

    புண்ணியகோடி

    புண்ணியகோடி என விளிக்கப்பட்டவன் முன்னுக்கு நடந்து யூனுஸை வணங்கினான். மனனம் பண்ணி வந்த வார்த்தைகளை மிழற்றினன்.ஜலாமலைக்கோம் பாய்

    அவனது தவறான உச்சரிப்பை திருத்த முயலாமல் முறுவலித்தார் யூனுஸ்.வலைக்கும் ஸலாம் இந்தாப்பா இந்த கவர்ல மூவாயிரம் ரூபா இருக்கு. இத வச்சு நீயும் உன் குடும்பமும் இந்த வருட தீபாவளிய மகிழ்ச்சிகரமா கொண்டாடுங்க

    டாங்ஸ் பாய் கும்பிட்டபடி விலகினான் புண்ணியகோடி.

    ஜேக்கப் அடுத்தப் பெயரை வாசித்தான்.பன்னீர் செல்வம்

    மூவாயிரம் ரூபாய்க்கு சமமான மரியாதை பொதிந்த வணக்கம் போட்டான். அவன் மீது ஆல்கஹால் நாற்றமடித்தது.

    என்ன வேலை பாக்ற பன்னீர்செல்வம்?

    கொத்தனார் வேலை

    குடிச்சிட்டு வந்திருக்க போல

    நேற்று ராத்திரி குடிச்சது இப்ப கப்படிக்குது

    உன் கூட உன் சம்சாரம் வந்திருக்குதா?

    இல்லிங்க

    உன் சம்சாரத்தை கூட்டிட்டுவா. பணத்த அது கைலதான் தருவேன்

    அவ அவசரமா பண்ருட்டி போயிருக்கா. வர நாலுநாளாகும். பணத்த என் கைலயே குடுத்திருங்க பாய் இறைஞ்சினான்.

    பேச்ச வளக்காதப்பா. உன் சம்சாரம் வந்தாத்தான் பணம். ம். கிளம்பு கிளம்பு

    பன்னீர்செல்வம் நூற்றுக்கணக்கான கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தபடி கிளம்பினான்.

    அடுத்தடுத்து பெயர்கள் வாசிக்கப்பட அவர்களை அழைத்து அவர்களை பற்றிய விவரங்களை சரி பார்த்து பணக்கவரை வழங்கினார் யூனுஸ். நாற்பத்தி மூன்றாவது ஆளாக அறவாழி வந்தான். அறவாழி நன்கு பாடுவான். இசைக்கல்லூரியில் அலுவலக உதவியாளனாக பணிபுரிந்தவன். மேலதிகாரியுடன் தகராறு செய்து வேலையை இழந்தவன்.

    வா உன் பெயர் அறவாழிதானே

    வரேன். உங்க பேரு முகமது யூனுஸ்தான?

    ஜேக்கப் விக்கித்தான்.

    எதுக்கு இந்த பணபட்டுவாடா பாய்?

    எங்க முஸ்லிம்ல ஒவ்வொரு பணக்காரனும் தான் சம்பாதிக்றதில நாற்பதில் ஒரு பங்கை ஏழைகளுக்கு ‘ஜக்காத்’தா குடுக்கனும்ன்றது விதி. முஸ்லிம் அல்லாதோருக்கு ஜக்காத் கொடுக்கக் கூடாதுன்னு மார்க்க அறிஞர்கள் சொல்லுவாங்க. நான் அதை பொருட்படுத்தல. ஜக்காத்துக்கு ‘மார்க்க வரி’-ன்னு தமிழ்ல அர்த்தம் கொள்ளலாம்

    அப்ப நீங்களா குடுக்க வரல. உங்க மத வற்புறுத்தலுக்காக குடுக்றீங்க. அது சரி... என்ன கணக்கு போட்டு நூறு பேருக்கு தலா மூவாயிரம் மூவாயிரம் தரீங்க?

    முடிந்த வருட என் சொத்து கணக்கை பார்த்து அதிலிருந்து இவ்வருடம் நான் பண்ண வேண்டிய ஜக்காத் தொகை இருபது லட்ச ரூபாய்னு தெரிஞ்சிக்கிட்டேன். இப்பகுதில தீபாவளி கொண்டாட வசதி இல்லாத நூறு பரம ஏழைகளை எனது அலுவலக உதவியாளர்கள் தேரந்தெடுத்து தந்தனர். அந்த உங்களை இன்றைய தினம் வரவழைச்சு மூணுலட்ச ரூபாயை பிரித்தளிக்கிறேன். மீதி 17லட்சத்தில் வேறுபல தர்மகாரியங்கள் செய்ய உத்தேசித்திருக்கிறேன்

    வடிவேலு போல் தோள்களை குலுக்கிக் கொண்டான் அறவாழி.உங்களுக்கு தீபாவளி பற்றி என்ன தெரியும்?

    நரகாசுரன் அழிந்த நாளை இந்துசகோதார்கள் தீபத்திருநாளா கொண்டாடுறாங்க

    தீபாவளி பண்டிகைய நீங்க நம்புறீங்களா பாய்?

    நான் நம்புறதா முக்யம்? கோடிக்கணக்கான மக்கள் நம்பி பண்டிகை நாளா கொண்டாடுறாங்க. பலகோடிமக்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன்- இந்து சகோதரர்கள் எங்கள் நம்பிக்கைகளை மதிப்பது போல

    தீபாளிக்கும் ரம்ஜானுக்கும் மூணு நாதான் வித்தியாசம். ரம்ஜான் கொண்டாட முடியாம தவிக்கும் ஏழை முஸ்லிம்களுக்கு ஜக்காத் பண்ணாம இந்துகளுக்கு நீங்க ஜக்காத் பண்ணும் மர்மம் என்ன?

    ஒரு மர்மமும் இல்லை. நூறு ஏழை முஸ்லிம்களுக்கு அடுத்தவாரம் ஜக்காத் அளிக்க இருக்கிறேன்

    இருபது லட்ச ரூபாயை ஜக்காத் பண்றீங்களே... இந்த பணம் நியாயமான முறைல சம்பாதிச்சதா?

    சந்தேகப்படாதப்பா. என்னுடைய ஒவ்வொரு ரூபாயும் நியாயமான சம்பாதிப்பில் வந்ததே

    ஒரு முஸ்லிம் பணத்ல ஒரு இந்து தீபாளி கொண்டாடலாமா? சிரித்தார் யூனுஸ்.

    தப்பான கோணத்ல சிந்திக்ற பேசுறப்பா. எந்த பண்டிகையும் குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்தமாகாது. யார் வேண்டுமானாலும் எந்த பண்டிகையையும் கொண்டாடலாம். எங்க வீட்டுக் குழந்தைகள் தீபாவளி கொண்டாடுவாங்க. எனக்கு பரிச்சயமான பல இந்து நண்பர்கள் தேக ஆரோக்கியத்துக்காக என்னுடன் சேர்ந்து ரம்ஜான் நோன்பு நோற்பதுண்டு. பண்டிகைகள் மனிதர்களின் சந்தோஷங்களுக்காக. பண்டிகைகள் மனிதரை ஒரு போதும் துண்டாடாது. வடநாட்டு பண்டிகையான ஹோலி பண்டிகையின் அர்த்தம் தெரியாம நாம எத்னி பேரு கலர் தண்ணிகளை ஒருத்தருக்கொருத்தர் பீய்ச்சி அடிச்சிக்கிரம்? கடல் நீர் மேகமாகும். மேகம் மழை பொழியும். நாம உபயோகிச்சது போக மீதி நீர் ஓடி கடலோடு கலக்கும். இந்த சுழற்சி பூமி தோன்றியதிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. பணமும் சுழற்சிக்கு உட்பட்டது. பணம் ஒரு நாளைக்கு மதவித்தியாசம் பாராது பல நூறு கைகளுக்கு மாறுகிறது. பணத்ல முஸ்லிம் பணம் இந்து பணம் என்று வித்தியாசம் ஏது?

    நிறைய பேசுறீங்க பாய். இப்ப நாஞ்சொல்றத நீங்க கேளுங்க. பண்டிகைன்றது என்ன? பண்டிகைகளை மனுசன் எதுக்கு வச்சான்? வருடம் முழுக்க உழைச்சு சிறுபணம் சேமிச்சு வருடத்ல ஒரு நா குடும்பத்தினரோட புதுத்துணி உடுத்தி நல்ல சாப்பாடு சாப்ட்டு மகிழவே பண்டிகை. நான் கொண்டாடுற பண்டிகைல என் வியர்வை வாசனைதான் அடிக்கனும். தீபாவளி செலவை குறிவச்சு வருடம் முழுக்க உழவுமாடாய் உழைக்ற ஏழை இந்துமக்கள் தமிழகத்தில் பலகோடி பேர் உண்டு. அந்த உழைப்புல கிடைக்கும் சந்தோஷத்தை அளக்க உலகில் கருவிகள் இல்லை பாய்

    நான் குடுக்ற பணத்தை கூடப்பிறந்த அண்ணன் குடுக்றதா நினைச்சிக்க அறவாழி. அண்ணன் தரும் பணத்தை தம்பி அறுத்து கூறு போட்டு பார்ப்பானா?

    "நீங்க

    Enjoying the preview?
    Page 1 of 1