Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kodai Kaala Kolaigal
Kodai Kaala Kolaigal
Kodai Kaala Kolaigal
Ebook102 pages38 minutes

Kodai Kaala Kolaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏற்காட்டில் நடந்த இருகொலைச் சம்பவத்தை பற்றி டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் இருவரும் நேரில் வந்து விசாரணையைத் தொடங்கினார்கள். இக்கதையில் டாக்டர் நந்தா யார்? அவருக்கு ஏற்பட்ட மர்ம கொலைக்கும், இளைஞன் ஜனார்த்தன் என்பவருக்கும் என்ன தொடர்பு? மாடல் அழகி என்றப் பெண்ணுக்கும் இக்கொலைக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் வாருங்கள் வாசித்து தெரிந்துகொள்வோம்...!

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580100711032
Kodai Kaala Kolaigal

Read more from Indira Soundarajan

Related to Kodai Kaala Kolaigal

Related ebooks

Related categories

Reviews for Kodai Kaala Kolaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kodai Kaala Kolaigal - Indira Soundarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கோடை கால கொலைகள்

    Kodai Kaala Kolaigal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    காரம் ததும்பும் ஆத்திரத்து கோழி பிரியாணியில் அங்கங்கே சயனைட் ஒளிந்திருந்தது. டாக்டர் நந்தா மருத்துவத்தில் ரசாயனத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கினவர். அவரின் நாக்கு மட்டும் எப்படியோ! அந்த சயனைட் சுவைமயை இனங்கண்டு கொண்டன

    சோர்வாக உதித்திருந்தான் சூரியன்.

    "ஏற்காட்டைப் பொறுத்தமட்டில் எப்பொழுதுமே அவன் அப்படித்தான்! வெளுத்த பனி மேகமும், கறுத்த மழை மேகமும் கன்னாபின்னாவென்று கலந்து பிணைந்து கிடக்க ஊரின் மேல் லட்சக்கணக்கான மீட்டரில் மெல்லிய வெண் துகில் வீழ்ந்து கிடப்பது போன்ற ஒரு தோற்றம்.

    பைனாகுலரில் அந்த தோற்றத்தை ரசித்து ருசிச்சபடி நின்று கொண்டிருந்தான் பிரசாத். ‘29 வயது. 62 கிலோ, வெண்ணெய் வெளுப்பு, கும்மென்ற ஸ்டெப் கட்’ விரும்பி அணியும் நீல டிஸ்கோ பேண்ட் ஷர்ட்டில் அவனை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளைக்கு நினைப்பு சினிமா பக்கம் போனது.

    தம்பி நீங்க பாரெஸ்டரா இருக்கறதுக்கு பதிலா பேசாம சினிமாவுல நடிக்கப் போயிருந்திருக்கலாம். போன வாரம் நாம் வாழவந்தி பக்கம் ஒரு ஷூட்டிங். நானும் பார்க்கப் போயிருந்தேன். கதாநாயக நடிகரை பார்த்தப்போ எனக்கு உங்க ஞாபகம்தான் வந்திச்சு... அநாவசியமாக அதிகம் வழிந்தார் கிருஷ்ணபிள்ளை.

    பிரசாத் அவரது வயதை உத்தேசித்து இது போன்ற வழிசலை ஜீரணிப்பது வாடிக்கை. இன்றும் வாடிக்கை தொடர்ந்தபோது மணி ஏழரை இருக்கும்.

    பிரசாத் பைனாகுலரை விட்டு நீங்கவில்லை!

    பைனாகுலரில் படுதொலைவில் ஓரிடத்தில் அபூர்வமாய் பல ஓநாய்கள் தெரிந்தன. பிரசாத்தின் குதிங்காலை நண்டு கவ்வியது!

    காட்சியில் ஆழ ஊன்றியதில் அவைகள் அங்கே ஒரு மாமிச விருந்தில் மூழ்கியிருப்பது தெரிந்தது.

    இடத்தை நெருங்க ஐந்து நிமிடமாகி விட்டது. கிருஷ்ணபிள்ளை வனாந்தர உத்திப்படி வேட்டு கொளுத்திப் போட்டதில் மாமிசத்தைவிட்டு தூரப்போய் நின்றன அவைகள். விழியால் பிரசாத்தையும், கிருஷ்ணபிள்ளையையும் பார்த்து வெறித்தன. ‘விழிகளை நோண்டிபிடுவேன்’ என்றன.

    விருந்துக்குரிய மாமிசத்தைப் பார்த்தபோது பிரசாத் ஒருகணம் தீயை மிதித்து விட்டான்!

    ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அமெரிக்கன் கிராப்புக்கு சொந்தமான கழுத்து, கழுத்துக்குக் கீழே ஓநாய்களின் விருந்து நிகழ்ந்து முடிந்திருந்தது. மிச்சங்கள் கொத்தப்பட்டு, குதறப்பட்டுக் கிடந்தன. பக்கமாய் அவர் புதைக்கப்பட்டதற்கான அறிகுறியாய் ஓநாய்களால் பறிக்கப்பட்ட குழி!

    கூடவே மற்றுமொரு சவத்தின் கால் விரல் தெரிந்தது! மணலை விலக்கிவிட்டுப் பார்த்ததில் முப்பது வயதில் ஒரு வாலிபன் ‘ஹலோ சொன்னான்?

    கிருஷ்ணப்பிள்ளை இந்த முறை கத்தியே விட்டார்.

    ***

    சேலத்திலிருந்து டி.எஸ்.பி. சந்திரகுமார் வந்திருந்தார். க்ரைம் பிராஞ்ச்சின் அதிமுக்ய இன்ஸ்பெக்டர் ருத்ராவும் உடன் வந்திருந்தார். இருவரும் சடலங்களைப் பார்க்கவேண்டி ஸ்டேஷனின் பின்புறம் சென்றனர், ஆஸ்பெஸ்டாஸ் சரிவுக்குக் கீழே எளிய சிமெண்ட் பூச்சு தரையில் புதிய வெள்ளைத் துணியால் வேயப்பட்ட இரண்டு பிணப் பொட்டலங்களில் முதலாவதாக வாலிபனின் பிணத்தை பார்வையாக்கினார் ஒரு போலீஸ்காரர்.

    புருவத்தை சுருக்கிக்கொண்டு அந்த சடலத்தின் முகத்தில் ஊன்றினார் டி.எஸ்.பி. ருத்ராவோ அந்த முகத்தின் அத்துமெத்த அமைப்பை தனக்குள் கணிதப்படுத்திக் கொண்டிருந்தார்.

    அடுத்து சீர்குலைந்த வயதானவரின் சடலம் பார்வைக்கு நின்றது. இந்த முறை டி.எஸ்.பி.! மெலிதாக கத்தியே விட்டார்.

    ஓ மை காட்... இது டாக்டர் நந்தா!

    ருத்ரா நிமிர்ந்து டி.எஸ்.பி.யைப் பார்த்தார்.

    மிஸ்டர் ருத்ரா... இது டாக்டர் நந்தா சேலத்துல இருக்கற டாக்டர்ஸ்ல இவர் நம்பர் ஒன். போன வாரம் கூட நான் பார்த்துப் பேசியிருக்கேன்...

    டி.எஸ்.பி. சந்திரகுமாரின் பேச்சும் கவனமும் பதட்டத்தோடு ருத்ராவின் பக்கம் திரும்ப, டாக்டர் நந்தா என்று உணரப்பட்டவரை திரும்பவும் வெள்ளைத் துணிக்குள் அடக்கினார் போலீஸ்காரர் ஒருவர். கூடவே முகத்தை சுளித்துக்கொண்டு நந்தாவை நாடி வந்த ஈக்களையும் விரட்டினார்.

    ஸ்டேஷனின் மையத்தில் அனைவரும் அதீத பரபரப்போடு ஃபாரெஸ்டர் பிரசாத்தின் பேச்சில் கலந்திருந்தனர், பிரசாத் தான் சடலங்களை சந்தித்த விதத்தை விவரித்துக் கொண்டிருந்தான்.

    அடுத்த வினாடி ஜீப் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கி விரைந்தது. காமிரா சகிதம் க்ரைம் பிராஞ்சின் ஒரு போட்டோ கிராபரும் அவர்களோடு இணைந்து கொள்ள டி.எஸ்.பி. மட்டும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இனிய நண்பர் நந்தாவுக்கு இப்படியொரு முடிவா? எப்படி இது நடந்தது... கூட இருக்கும் அந்த இளம் பிரேதம் யாருடையது...?

    செம்மநத்தம் செல்லும் சாலையில் இலகுவாக வழுக்கிக் கொண்டிருந்தது அந்த ஜீப். இரு மருங்கிலும் காப்பிச் செடிச் சரிவுகள். ஊடே ஊடே உயர்ந்து நிற்கும் கருமருது மரங்கள். அதன் உச்சியில் ஏகமாய் மைனாக்கள்...

    ஆளரவமற்ற ஒரு ஒடுக்கில் மலட்டுத்தனமாய் ஒரு சிறிய சமவெளி தென்பட்டது. அதற்கு அப்பால் அரசாங்கத்துக்குச் சொந்தமான சந்தன மரக்காடு.

    சந்தன மரங்களை நோட்டம் போட்டப்பதான் ஏதேச்சையாக பாடிகளைப் பார்த்தேன். ரியலி ஷாக்ட்! பேசிக்கொண்டே நின்ற ஜீப்பிலிருந்து இறங்கினான் பிரசாத். தொடர்ந்தார் டி.எஸ்.பி. ருத்ராவின் விழிகளிலோ கழுகு பறந்தது!

    சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த இடமும் அந்தக் குழியின் ஆழமும் பத்திரமாக இரண்டு கான்ஸ்டபிள்களால் பாதுகாக்கப்பட்ட நிலையில் காமிரா பளிச் பளிச் என்று அவற்றை வெளிச்சமாக்கி விழுங்கியது.

    இன்ச் டேப் கார் டயரின் அகலத்தை கணக்குப் போட்டது. டயரின் ஏர் ரிலீவிங் ஸ்பாட்டுகளால் உண்டான மண்ணின் புரொஜக்ஷனில் அது எந்த

    Enjoying the preview?
    Page 1 of 1