Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathanin Karuppu Mutham
Saathanin Karuppu Mutham
Saathanin Karuppu Mutham
Ebook165 pages1 hour

Saathanin Karuppu Mutham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இஸ்லாமிய பெண்களுக்கும் முயற்சி செய்தால் ஆன்மிக ஞானம் கிடைக்கும் என்பதையும் ஒரு சிறுமியின் தொழுகையை கண்டு ரசிக்க வானவர் வந்து நிற்பதையும் ஒரு முஸ்லிம் ஒரு கெட்டவனுக்கு துணை நிற்கக் கூடாது எனவும் பெரு நாளில் கணவன் மனைவிக்கு கொடுக்கும் எதிர்பாரா பரிசு பற்றியும் தந்தைக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை தந்தையின் நண்பருக்கும் செய்யலாம் என்பது பற்றியும் அதிகாலை தொழுகை முக்கியத்துவம் பற்றியும் ஒரே தட்டில் இணக்கமான பலர் சாப்பிடலாம் என்பது பற்றியும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் சுவாரசியமாக பேசுகின்றன. படித்து முடித்தால் கிடைப்பது பேனா முத்தம்.

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580111011159
Saathanin Karuppu Mutham

Read more from Arnika Nasser

Related to Saathanin Karuppu Mutham

Related ebooks

Related categories

Reviews for Saathanin Karuppu Mutham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathanin Karuppu Mutham - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாத்தானின் கறுப்பு முத்தம்

    (20 இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுப்பு)

    தொகுதி 18

    Saathanin Karuppu Mutham

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஞானத்தின் ஊற்று

    தொழுகை அடையாளம்

    மார்க்கப் போதனை

    ஸலாத்துன் நாரியா

    மலக்

    நபிகள் நாயகம்

    ஆமீன்

    கொடுமைக்காரன் துணை

    பரக்கத்

    தயம்மும்

    தீன்குலப் பெண்னே...

    தர்க்கம் புரி மனமே!

    சாத்தானின் கறுப்பு முத்தம்

    உப்புரிமை

    அத்தாவின் நண்பர்

    பயான்

    சஹன் சாப்பாடு

    கவனம் கவனம் உஸ்தாத்

    யார் முதலில்?

    பஜ்ரு தொழுகை

    முன்னுரை

    உலகத்தில் 6900 மதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இஸ்லாம். இஸ்லாத்தை இருநூறு கோடிமக்கள் பின்பற்றுகின்றனர். நான் ஒரு இந்திய தமிழ் முஸ்லிம். மதத்தால் இந்து- முஸ்லிம் சகோதரர்கள் சண்டை இட்டுக்கொள்வது எனக்கு ஒவ்வாத விஷயம். ஒவ்வொரு மதத்தினனும் பிறமத விழுமியங்களை கோட்பாடுகளை அறிந்து பிற மதத்தினனை கண்ணியப்படுத்தவேண்டும். மதம் சாராத ஆத்திகனாக இருந்த நான் தினமலர் அந்துமணியின் கட்டளைக்கிணங்கி திருக்குர்ஆனை (தமிழ்பதிப்பு) படிக்க ஆரம்பித்தேன்.

    கடந்த பதினாறு வருடங்களாக இஸ்லாமின் புனிதநூலை, நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை, விழுமியங்களை, கோட்பாடுகளை, வட்டார மொழி வழக்கை, உணவுபழக்க வழக்கத்தை, ஆடை உடுத்தும் நேர்த்தியை, மார்க்க கல்வியை, கல்வி-பணி-அதிகாரம் சார்ந்த பங்களிப்பை, இமாம்களின் வாழ்க்கை தரத்தை சிறு சிறு நீதிக்கதைகளாய் எழுதி வருகிறேன். நான் தெரிந்து கொண்டதை பிறருக்கு ஊட்டி விடுகிறேன்.

    இக்கதைகளுக்கான அழகிய முன் மாதிரி பைபிள் கதைகளும் திருக்குறள் கதைகளும் தான். நான் எழுதும் இஸ்லாமிய நீதிக்கதைகள் உலகிலேயே முதல்முயற்சி. இக்கதைகளின் முழுமுதல் நோக்கம் மதநல்லிணக்கமே. இதுவரை 500 இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதியுள்ளேன். ஆயிரம் எழுதி முடிக்க இறைவன் உதவட்டும். இக்கதைகளில் கதைத்தன்மை அதிகம். மார்க்கக் கருத்துகள் இல்லாமல் சுவாரசியமான கதைகளாகவும் இவற்றை நீங்கள் வாசிக்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும் இருபது இஸ்லாமிய நீதிக்கதைகள் இருக்கும். வெளியிட்ட புஸ்தகாவுக்கு நன்றி.

    என்றென்றும் அன்புடன் ஆர்னிகா நாசர்

    கைபேசி எண் : 7358962913, 9442737404

    சமர்ப்பணம்

    திண்டுக்கல்லில் 1980களில் நானும் இர்ஷாத் அஹமது எனும் நண்பரும் சம்பத் என்கிற நண்பரும் ‘ஆர்னிகா’ எனும் கையெழுத்து பிரதி நடத்தினோம். எங்கள் ஆசிரியர் குழுவில் எங்களுக்கு ஒரு படி மேலே நின்று எங்களை வழி நடத்தினார் சம்பத்.

    திண்டுக்கல் சம்பத் இப்போது கோவை சூலூரில் வசிக்கிறார். சித்தர் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் சர்சீடர் அவர். நண்பர் திண்டுக்கல் சம்பத் அவர்களுக்கு இத்தொகுப்பை அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன் ஆர்னிகா நாசர்.

    ஞானத்தின் ஊற்று

    தில்ரஸ் பானு ஆலாபித்தாள்."என் அன்புக்குரிய அக்காள் மகளே! அங்க வா! தில்ரஸ்ஸுக்கு வயது நாற்பது பத்து வயது இரட்டைக் குழந்தைகளுக்கு தாய். முதுகலை அரபி படித்தவள். இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவள். கணவன் குவைத்தில் பணிபுரிகிறான். இவளோ தனது இரட்டை குழந்தைகளுடன் கோத்ததிரியில் வசிக்கிறாள். வீட்டு வாசலில் பெண்களுக்கான ஆடையகம் நடத்துகிறாள்.

    தில்ரஸ் பானுவுடன் துணைக்கு அவளின் அக்காள்மகள் தௌலத்துல் கதீரா இருக்கிறாள். வயது இருபது ஆலிமா பட்டம் பெற்றவள். வந்தேன்... என்ன விஷயம் சாச்சி?

    நீ எனக்கு மகள் முறை என்றாலும் எனக்கொரு அம்மாவாக இருந்து என்னை வழி நடத்துகிறாய். என்னைவிட அறிவாளி நீ மார்க்க விஷயங்களிலும் நீ எனக்கு ஒரு குரு!

    ‘சும்மா இரு சாச்சி. உன்னிடமிருந்து நானும் என்னிடமிருந்து நீயும் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம் என்பதே உண்மை!"

    ஆன்மிகத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாய் பிரகாசிக்க முடியுமா

    ஏன் முடியாது?

    ஆண்களில் ஆண்-பெண் என்கிற வித்தியாசம் எல்லாம் கிடையவே கிடையாது என்கிறார் சூஃபி அத்தார். பெண் என்பவள் இறைவனின் படைப்பிலேயே பரிபூரண அழகை வெளிபடுத்துபவள். அவள் படைக்கபட்டவள் அல்ல படைப்பவள் சாச்சி. பெண் இறைவனின் வெளிச்சம்!

    அப்படியா சொல்கிறாய்?

    இறைவனின் திருப்பெயர்கள் ரஹ்மான், ரஹீம் என்கிற இருபெயர்களும் பெண்ணின் கருவறை என்கிற வேர் சொல்லிருந்து வந்தவை சாச்சி!

    ஓவ்!

    மரணம் வரும் முன்பே மரணித்து முடிகின்ற தகுதி பெண்களுக்கு உண்டு சாச்சி!

    பெரிய பெரிய வார்த்தை எல்லாம் கூறுகிறாய் தௌலத். எனக்கொரு ஆசை நிறைவேற்ற முடியும் என்பதனை நீதான் கூற வேண்டும்!

    என்ன ஆசை சாச்சி!

    நாற்பது நாட்கள் எவர் கலப்பற்ற மனதுடன் அல்லாஹ்வை தியானிக்கிறரோ அவருடைய மனதிலிருந்து ஞானத்தின் ஊற்று நா வழியாக வெளியாகும் என மாரக்க நூலில் படித்தான். நீயும் நானும் நாற்பது நாள் அல்லாஹ்வை தியானித்து ஞானத்தின் ஊற்று நம்மிடம் பீரிட காண்போமா?

    நிலாவினாள் தௌலத்துல் கதீரா.

    இந்த மதத்தில் இல்லறத்தை துறந்த துறவற’ம் பூண்டு ஆன்மிக ஞானம் பெறுகிறார்கள். ஆன்மிக ஞானம் பெறுபவர்களை இந்து மதம் யோகிகள், ஞானிகள் சித்தர்கள் முனிவர்கள் என கொண்டாடுகிறது. இஸ்லாம் மதத்தில் ஞானம் பெற்றவர்களை சூஃபிகள், ஷெய்க், சர்க்கார், பாவா, வாப்பா என அழைக்கிறார்கள். இலங்கையில் இஸ்லாமிய ஞானிகளை பாவாங்கள் என விளிக்கின்றனர். என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா ரோஜாதானே?

    சரியாக சொன்னாய் செல்லம்!

    கிபி 717ல் ஈராக்கில் ராபித்துல் பஸரியா என்கிற சூஃபியா பிறந்தார்கள் அவர்தான் இஸ்லாமின் முதல் பெண் சூஃபி. அவரை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? அவரைப் போல நாமாக முயற்சிப்போம் சாச்சி!

    முடியுமா தௌலத்!

    ஒரு முஸ்லிம் பெண்ணை பார்த்து ‘நீ ஒரு ராபியத்துல் பஸரியா’ என்று சொல்லிவிட்டால் இந்த உலகில் இருக்கும் எல்லா விருதுகளும் கிடைத்து விட்டது போல் அந்த பெண் மகிழ்வாள். இவ்வளவுக்கும் ராபியா பற்றி அவளுக்கு அவ்வளவாக தெரியாமல் இருக்கலாம், முஸ்லிம் பெண்களிடம் மிக உயர்ந்த இடம் ராபித்துல் பஸரியாவுக்கு இருக்கிறது!

    "ராபியத்துல் பஸரியா பற்றி மேலும் சொல் தௌலத்’

    ராபியா நூறு பெண்களுக்கு மேலானவர். வேதனை உடுத்தி தலை முதல் கால்வரை உண்மையில் மூழ்கியவர். இறைவனின் பிரகாசத்தில் அழிந்து போனவர் என்கிறர் சூஃபி அத்தார்!

    ஓஹ்!

    ஒரு முறை ஹஸன் பஸரி (ரஹ்) சொற்பொழிவு செய்ய ராபியாவுக்காக காத்திருக்கிறார். அந்த கிழவிக்காவா காத்திருக்கிறீர்கள். நாங்கள் போதாதா’ என்கின்றனர். கூட்டத்தினர் ‘யானைகள் குடிப்பதற்கான பானத்தை நான் எப்படி எறும்புகளின் பாத்திரத்தில் ஊற்றி நிரப்புவது? என பதிலளித்தார் ஹஸன் பஸரி!

    டெரிபிக் தௌலத்!

    ராபியாவை இரண்டாம் மரியம்’ எனலாம். ஒரு முறை ராபியாவை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு அணுகுகிறார் ஹஸன் பஸரி. அப்போது ராபியத்துல் பஸரியா ஹஸனை பார்த்து கேட்கிறார். ‘பொதுவாக ஆணுக்கு அறிவு எத்தனை பங்கு பெண்ணுக்கு அறிவு எத்தனை பங்கு?’ ஹஸன் இறுமாப்பாய் பதிலளிக்கிறார். ‘ஆணுக்கு அறிவு ஒன்பது பங்கு ஆசை ஒரு பங்கு பெண்ணுக்கு அறிவு ஒரு பங்கு ஆசை ஒன்பது பங்கு! ----உடனே ராபியா ‘ஒன்பது பங்கு ஆசையுள்ள பெண்கள் அதனை அடக்கி ஆளும் போது ஒரு பங்கு ஆசையுள்ள ஆணால் அதனை அடக்கி ஆள முடியாதா?’ என கேட்க ஹஸன் திரும்பி போய் விட்டார்!"

    ராபியா மலை என்றால் நாம் மடு மகளே!

    முயன்றால் நாமும் மலையாகலாம் சாச்சி. சூடானில் நோய்கள் தீர்ப்பதில் வல்ல’ ஷெய்கா’ எனும் சூஃபி பெண் குருமார்கள் இருக்கிறார்கள். நாமும்’ ஷெய்கா’ ஆவோம் சாச்சி. பாத்திமா நிஷாபூர் போல மூமினா காத்தூன் போல நாமும் ஆன்மிக தென்றால் ஆகமுடியும். இஸ்லாமின் ஆழ்பரிமாணம்தான் சூஃபிஸிஸம். ஆன்மிகத்தின் வெகுஆழத்தே நீந்துவோம். இறைவனை பார்க்க முயற்சிப்போம். பார்க்க முடியாவிட்டால் இறைவன் நம்மை பார்க்கட்டும். இறைவழிபாட்டில் பரிபூரணத்தை எட்ட முயற்சிப்போம் சாச்சி

    ஞானத்தின் ஊற்று பீரிட என்ன செய்யலாம் தௌலத்?

    இன்றிரவிலிருந்து நாற்பது நாட்களுக்கு நபில்நோன்பு வைப்போம். மூன்றில் ஒருபங்கு வயிறு நிறைய உணவருந்தி சஹர் வைப்போம். ஒரு டம்ளர் நோன்பு கஞ்சியும் இரண்டு பேரீச்சம் பழங்களும் வைத்து நோன்பு திறப்போம். உணவின் மீதான ஆசையை வேற்றுப்போம். மாமிசம் விரும்பி தின்பதை குறைப்போம்

    சரி மகளே!

    தினம் ஐந்து வேளையுடன் நள்ளிரவு தொழுகை தஹஜத்தையும் விடாமல தொழுவோம். நமக்கு தீங்கு செய்தவர்களின் மீதான பழிவாங்கும் எண்ணத்தை தலைமுழுகவோம்! ஏழை எளியவர்களுக்கு ஜக்காததும் சதகாவும் கொடுப்போம். தொழும் நேரம் போக மீதி நேரங்களில் இறைவனின் நாமங்களை ‘திகர்’ எடுப்போம். தஸ்பீஹ் மணிமாலையை கைவிரல்கள் ஓயும் வரை உருட்டுவோம்!"

    கட்டாயம்!

    தினம் மூன்று வேளை குர்ஆன் ஓதுவோம்! நாம் குர்ஆன் ஓதும் இனிமையை ரசிக்க மலக்குகள் நம்மை சுற்றி நிற்கட்டும்!

    Enjoying the preview?
    Page 1 of 1