Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanam Puthusu Boomiyum Puthusu
Vaanam Puthusu Boomiyum Puthusu
Vaanam Puthusu Boomiyum Puthusu
Ebook148 pages58 minutes

Vaanam Puthusu Boomiyum Puthusu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நீங்க என்ன செய்யப் போறீங்க டாக்டர் உன்னி?” அந்த கரகரப்பான கம்பீரமான குரல் இவர்கள் காதிலும் விழுந்தது. உன்னியைப் பார்த்து அவரருகில் நின்று கொண்டிருந்த ராம் யார் என்பதைப் போல ஜாடை காட்ட அம்ரு குரல் எழும்பாமல் வாயசைத்து பிரதமர் என்றாள். அவர்களை கவனித்துக் கொண்டிருந்த உன்னி ஆமாம் எனபதைப் போல தலையசைத்து தன் உரையாடலில் கவனமாக இருந்தார். “இப்போது கூட சிந்தெடிக் அரிசி தயார் செய்து விட்டோம் சார். அதை சரியான முறையில் ஆயிரம் பேருக்கு உணவாக கொடுத்து சோதித்து விட்டோம். பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏதுமில்லை. கிட்டத்தட்ட வெற்றி தான்”

“குட். எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்?” “இப்போது தான் சார் அண்டார்டிகா கான்பரென்ஸ்க்கு அழைப்பு வந்திருக்கு. சிந்தெடிக் மில்க்கும் அப்ரூவல் ஆயிருச்சு.  அதில் சிந்தெடிக் அரிசியையும் சேர்த்து ப்ரெசென்ட் பண்ணி அப்ரூவல் ஆயிருச்சுன்னா அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடலாம் “பக்கத்திலே எங்கேயாவது வேலைப் பாருன்னா திருச்சில தான் வேலைப் பார்ப்பேன்னு அடம்”

“நான் படிச்சிருக்கிற படிப்பிற்கு திருச்சியில உணவு ஆராய்ச்சி மையத்தில தான் வேலை பார்க்க முடியும். அதுவும் இளம் விஞ்ஞானி” “அதெல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனால் தினம் ஒரு நாளைப் போல இங்கே இருந்து திருச்சிக்குப் போயிட்டு வரே” “என்ன ரொம்பத் தான் அலுத்துக்கறே? இதோ இங்கே பக்கத்தில இருக்கிற திருச்சி தானே..! ஜஸ்ட் ஒரு மணி நேரம் புல்லட் ரயில் பிரயாணம்” “அவ்வளவு சுலபமா போச்சு உனக்கு” “உன் காலத்தில் தாம்பரத்திற்கும் எக்மோருக்கும் எத்தனை நேரம் ஆச்சு?” என்று பதில் கேள்வி கேட்டாள். “போக ஒரு மணி நேரம். வர ஒரு மணி நேரம்”

“அதே போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் தான் திருச்சிக்கு. சிம்பிள்” என்று மிகவும் அசால்ட்டாக சொன்னவள் “இன்னும் பதினொரு செகண்டில் ஒரு விமானம் கடந்து போகும். அதன் இரைச்சல் காது ஜவ்வை கிழிச்சிரும். ஜன்னல் கதவை மூடி வை” துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580147211162
Vaanam Puthusu Boomiyum Puthusu

Read more from G. Shyamala Gopu

Related to Vaanam Puthusu Boomiyum Puthusu

Related ebooks

Related categories

Reviews for Vaanam Puthusu Boomiyum Puthusu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanam Puthusu Boomiyum Puthusu - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வானம் புதுசு பூமியும் புதுசு

    Vaanam Puthusu Boomiyum Puthusu

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அம்மா...மா... தொண்டை கிழிய கத்தினாள் அம்ருதா.

    ஏண்டி கத்தறே?

    அந்த ஜன்னல் கதவை சாத்து. மணி ஆறாகப் போறது

    தினம் உன்னோட இது ஒரு ரோதனை

    என்ன பண்றது? அலாரம் அடிக்கிறது பாரு

    தினம் இது இன்னொரு ரோதனை அலாரத்தை அமர்த்தினாள் அம்மா ரேவதி.

    இப்போ எழுந்தா தான் நான் எழு மணிக்கு ட்ரைன் பிடிக்க முடியும் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கலைந்திருந்த முடியை எடுத்து முடிந்து கொண்டாள் அம்ருதா.

    பக்கத்திலே எங்கேயாவது வேலைப் பாருன்னா திருச்சில தான் வேலைப் பார்ப்பேன்னு அடம்

    "நான் படிச்சிருக்கிற படிப்பிற்கு திருச்சியில உணவு ஆராய்ச்சி மையத்தில தான் வேலை

    பார்க்க முடியும். அதுவும் இளம் விஞ்ஞானி"

    அதெல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனால் தினம் ஒரு நாளைப் போல இங்கே இருந்து திருச்சிக்குப் போயிட்டு வரே

    என்ன ரொம்பத் தான் அலுத்துக்கறே? இதோ இங்கே பக்கத்தில இருக்கிற திருச்சி தானே...! ஜஸ்ட் ஒரு மணி நேரம் புல்லட் ரயில் பிரயாணம்

    அவ்வளவு சுலபமா போச்சு உனக்கு

    உன் காலத்தில் தாம்பரத்திற்கும் எக்மோருக்கும் எத்தனை நேரம் ஆச்சு? என்று பதில் கேள்வி கேட்டாள்.

    போக ஒரு மணி நேரம். வர ஒரு மணி நேரம்

    அதே போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் தான் திருச்சிக்கு. சிம்பிள் என்று மிகவும் அசால்ட்டாக சொன்னவள் இன்னும் பதினொரு செகண்டில் ஒரு விமானம் கடந்து போகும். அதன் இரைச்சல் காது ஜவ்வை கிழிச்சிரும். ஜன்னல் கதவை மூடி வை துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.

    மூச்சு முட்டறதுன்னு ராத்திரி கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வெச்சா இவளுக்கு ஆகாது. மூடு மூடுன்னு ரோதனை என்று அலுத்தவாறு ஜன்னலை மூடினாள்.

    "ரொம்ப அலுத்துக்காதே ரேவு. ஜன்னலை திறந்து வெச்சிண்டு இருக்கப் போய், அந்த

    பிளைட்காரன் ரொம்ப வேகமா போகப் போய், அந்த வேகத்திலே விஷ்க்குன்னு உன்னை காத்து மேலே இழுத்துண்டு போச்சுன்னா என்ன பண்றது?" என்று கேட்டார் அவள் கணவர் ராமாமிர்தம்.

    ஆஹா, கே. பி சுந்தராம்பா மாதிரி எத்தனைப் போய்...? அப்படியாவது என்னை அந்த காத்து அடிச்சி நான் அப்படியே போயிட்டால் நிம்மதியா இருக்கலாமேன்னு நெனப்பு

    ஏண்டி காலங்கார்த்தாலே இப்படி அக்கப்போர் பேசுவே.?

    உங்களை தெரியாதா எனக்கு?

    தினம் நியுஸில் காட்டறான். எழுநூறு அடுக்கு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்னவர்களை ஏரோப்ளேன் போகும் வேகத்துக்கு இழுத்துண்டு போயிருக்குன்னு

    அது சரி. ஒருநாளும் உங்க ஆசை நிறைவேறாது. அம்புட்டு தான் சொல்வேன் என்று சிவாஜி கணேசன் ஸ்டைலில் நொடித்துக் கொண்டாள்.

    இவ்வளவு பெரிய ஃப்ளாட். பக்க சுவர்கள் எல்லாம் கண்ணாடி தடுப்பு. வெளிச்சம் உள்ளே வராமல் இருக்க அடர் வண்ணத்தில் திரைசீலைகள் போடப்பட்டிருப்பதால் இரவா? பகலா? என்று தெரியாது வீட்டில் இருக்கும் ரேவதிக்கு. என்ன தான் கட்டிடம் முழுவதும், அடுப்பறை முதல் கழிவறை வரை சென்ட்ரலைஸ் ஏசி என்றாலும் நாள் முழுவதும் இதே தட்ப வெப்பத்தில் இருப்பதால் மூச்சு முட்டிப் போவது போல இருக்கும் ரேவதிக்கு. அதனால் இரவில் ஜன்னலை திறந்து வைக்க அம்ருவிடம் மன்றாடுவாள். அவள் கணவர் ராமாமிர்தம் எந்த ராஜா எந்த பட்னம் போனா நமக்கென்ன என்று இருப்பவர் தாயுக்கும் மகளுக்கும் நடக்கும் யுத்தத்தில் அம்பயர் மாதிரி கைகளை தலைக்கு மேல் தூக்கி அம்பேல் என்று நடுநிலையாக நின்று விடுவார்.

    அம்மா...காப்பி இருந்தா தாயேன்

    எனக்கும் ஒரு வாய் என்று லேசா கெஞ்சிய கணவரை முறைத்தாள் ரேவதி. அவர் பரிதாபமாக அவளை பதிலுக்குப் பார்த்தார். இன்றைய உலகின் போக்குக்கு தன்னை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள போராடி ஒரு வழியாக தேறியவர் இந்த காப்பியை மட்டும் மறக்க முடியாமல் நாக்கை சப்புக் கொட்டிக் கொள்ளத் தான் செய்வார். பாவம்.

    நேத்திக்கு நீ கொண்டு வந்த ஒரு பால் பவுடரை கலக்கி வேணா போட்டுத் தரேன்

    சிந்தெடிக் மில்க். பால் போல இருக்கும். ஆனால் அது மாட்டிடம் இருந்து கிடைச்சது இல்ல என்றாள் அம்ருதா.

    அப்புறம்? என்று திகைத்தாள் ரேவதி.

    செயற்கை வகையில் உண்டாக்கினது

    எத்தையாவது குடிச்சிட்டு சித்தம் கலங்கி போய்டப் போறது அம்ரு

    "என்னுடைய ஆராய்ச்சியின் முடிவே இது தான்மா. பிரமாத வெற்றி. பிரதமருக்கு நேரம் கிடைக்கலை. அவர் டைம் கொடுத்துட்டார்னா உடனே நம்ம சிந்தெடிக் மில்கை லான்ச்

    பண்ணிடுவோம்"

    ஏண்டி திங்கற வஸ்து கூடவா செயற்கை இருக்கணும்?

    செயற்கை உரமிட்டு விவசாயம் பண்ணினீங்க இல்ல. அதன் விளைவு தான் என்றாள் அம்ருதா.

    இத்தனை ஜனத்துக்கும் வேணுங்கற பாலுக்கும் தயிருக்கும் எங்க போறது?

    போதுமான ஆடு மாட்டை வளர்க்கறது

    இத்தனை ஜனத்துக்கும் வேணுமே. செயற்கை முறை கருவூட்டலில் எவ்வளவு முடியுமோ அத்தனை கால்நடைகளை உற்பத்தி செஞ்சாச்சு என்றாள் அம்ருதா.

    இந்த சின்தடிக் பால் வந்தாச்சுன்னா இன்னும் தினுசு தினுசா ஸ்வீட் பண்ணி தருவாண்டி கவர்மெண்ட்காரன் என்றார் ராமாமிர்தம்.

    மனுஷாளுக்கு என்னென்னவோ கவலை. இவருக்கு பாரு. திங்கறது ஒன்னு தான் வேலை

    முப்பது வருஷத்துக்கு முன்னாடி ரிடயர் ஆகி உக்காந்துண்டு இருக்குறவனுக்கு வேற என்ன வேலை தர முடியும் அரசால்? என்றார் ராமாமிர்தம்.

    இனி ரிடைர்மென்ட் வயசே என்பதுப்பா என்றாள் அம்ருதா.

    சரி பேசிட்டு இருக்காதே. சீக்கிரம் குளிச்சிட்டு வா

    அதீத மக்கள் தொகை பெருக்கம். இன்றைய உலகின் மொத்த மக்கள் தொகை ஆயிரம் கோடி. அதிலும் அதிகப்படி ஆசியாவில் தான். சீனாவை முந்திக் கொண்டு இந்தியா முதலிடத்தைப் பிடித்தாயிற்று. ஒரு இண்டு இடுக்கு விடாமல் மக்கள் வீடுகள் கட்டிக் கொண்டு குடியிருக்கப் போய் விவசாய நிலத்தின் பரப்பளவு மொத்தமும் சுருங்கி போக இத்தனை மக்களுக்கும் போதுமான உணவு இல்லை.

    முப்பது வருடங்களுக்கு முன்பு விளைநிலங்கள் மொத்தமும் கார்பரேட்டின் கைகளில். அவர்கள் நிர்ணயித்ததே விலை. கட்டுபடியாகாத வகையில் இருக்கும் உணவை எப்பாடு பட்டேனும் விலை கொடுத்து வாங்க முயன்றாலும் உணவு பொருள் தட்டுப்பாடு. உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கை பஞ்சத்தை உண்டாக்கி ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டின் மேல் உணவிற்காக போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டு உலகின் நிம்மதியே போய் விட்டது.

    விளைவு.?.

    பஞ்சம் பசி பட்டினி வறுமை அதைத் தொடர்ந்து திருட்டு கொலை கொள்ளை கற்பழிப்பு சமூக விரோத செயல்கள். அதனால் பிறக்கும் பிள்ளைகளுக்கும் போதுமான ஊட்டசத்து இல்லாததால் நோஞ்சானாக வியாதிக்கார பிள்ளளைகள். கொடூரங்களின் வகைகள் ஏராளம். விளைவுகள் அதி பயங்கரம். சொல்லிக் கொண்டே போகலாம். நினைக்கவே குலை நடுங்கும். கற்பனைக்கு எட்டாத கொடுமை அது.

    அதிலும் குறிப்பாக இந்தியா அதீத மக்கள் தொகை பெருக்கத்தினால் இல்லையில்லை மக்கள் தொகை வெடிப்பினால் (population explore) திணறிக் கொண்டிருந்தது. இந்திய இளைஞர்கள் அடுத்த நாடுகளுக்கு போனார்கள் கல்வி வேலை வாய்ப்பு என்ற பெயரில் அடிமைகளாக.

    மொத்தம் ஆயிரம் கோடி மக்கள் தொகையும் வாழ்ந்தாக வேண்டும். எல்லா நாட்டிலும் உணவிற்கும் இருப்பிடத்திற்கும் பெரும் பிரச்சினை. பூமாதேவி பாரம் தாங்காமல் அடிக்கடி தோள் மாற்றி தோள் மாற்றி பூமியை சுமந்து கொண்டிருந்தாள். அவளுக்கு கை கொடுப்பார் யாருமில்லை. என்றைக்கு பொறுமையிழந்து மொத்தமாக கீழே போட்டு உடைக்கப் போகிறாளோ தெரியவில்லை என்று உலக நாட்டின் தலைவர்கள் கவலைப்பட்டார்கள்.

    ஆறுகள் யாவும் வற்றிப் போய் அதன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. ஓடிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு ஆறுகளும் மாசு அடைந்து எப்போதாவது அதில் வரும் தண்ணீர் கசப்பேறிப் போய் குடிக்கவோ வேறு எதற்குமோப் பயன்படுத்த இயலாதாகிப் போயிற்று. அதனால் பயன்பாட்டிற்கு உதவாத ஆறுகளை அரசாங்கமே மூடிப் போட்டது. ஆறு, குளம்

    Enjoying the preview?
    Page 1 of 1