Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varunkaalam Vasantha Kaalam
Varunkaalam Vasantha Kaalam
Varunkaalam Vasantha Kaalam
Ebook114 pages43 minutes

Varunkaalam Vasantha Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொழிலதிபர் மந்திர மூர்த்தியின் மகள் ஆர்த்தியும், டாக்டர் வசந்தும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றன. அவர்களை கொலை செய்தது யார்? கொலையாளியை கண்டுபிடித்தார்களா? வரும் காலம் வசந்த காலமாக மாறியதா? இல்லையா என்பதை தேவிபாலாவின் விருவிருப்பான நடையின் பார்ப்போம்!

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580100608232
Varunkaalam Vasantha Kaalam

Read more from Devibala

Related to Varunkaalam Vasantha Kaalam

Related ebooks

Reviews for Varunkaalam Vasantha Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varunkaalam Vasantha Kaalam - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வருங்காலம் வசந்த காலம்

    Varunkaalam Vasantha Kaalam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    புத்தாண்டு! பொங்கல் வாழ்த்துக்கள்!

    "யாருன்னு பாக்கறீங்களா? நாங்கதான்! உங்க பிரசன்னாவும் லதாவும். வெளிநாடு போயிருந்தோம். ஒரு நீண்ட சுற்றுப் பயணம். தாயகம் திரும்பினதும், முதல் வேலையா அசோகன் கிட்ட மாட்டிக்கிட்டோம்.

    இழுத்துக்கிட்டு வந்து உங்ககிட்ட விட்டுட்டார்."

    நீங்களும், நாங்களும் ஜாலியா கொஞ்ச நேரம்...

    பாஸ்! எனக்கு மானம் போவுது... வந்த வேலையை தொடங்குங்க!

    என்னம்மா நீ! எல்லாருக்கும் எதிரே...!

    என்னங்க! ரெண்டு பேரும் என்னை மறந்துட்டீங்களே!

    நடுவுல... யாருங்க?

    நான் தாங்க தேவிபாலா!

    கதை எழுதற வேலையை பாருங்க பாஸ்!

    சரிங்க. எதுக்கு சண்டை? வாசகர்கள் கதை ஏன் லேட்டுன்னு கல்லு, கட்டைனு கையில எடுக்கறதுக்குள்ள கதையைத் தொடங்குங்க...

    அம்பயர் அசோகன் விசிலடித்து விட்டார்... ‘பீ... பீப்பீ...!’

    விளையாட்டு தொடங்கி விட்டது!

    1

    பெட்டி படுக்கை எல்லாம் தயாராக இருக்கிறது ஆர்த்தி உள்ளறைக்கு வந்து சாமி படத்திற்க்கு எதிரே விழுந்து வணங்கினாள். எழுந்தாள். எதிரே அப்பா.

    அவரை நெருங்கினாள்.

    அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டுக் கொண்டு வர, அவர் மார்பில் சரிந்து விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.

    அவரும் அழுதார். கண்களைத் துடைத்து சுதாரித்துக் கொண்டார்.

    ஷ்! அம்மாடீ அழக் கூடாதும்மா! கல்யாணம் முடிஞ்சு, புருஷன் வீட்டுக்குப் போற எல்லா பெண்களுக்கும் உள்ள மனச்சங்கடம் தான் இது. கண்ணைத் துடைச்சிட்டு சிரிடா கண்ணு

    அப்பா... நினைச்ச மாதிரி உங்களை இனி நான் பார்க்க முடியாது!

    ஏன்? ராத்திரி ரயில் ஏறினா, மறுநாள் பகலுக்குள்ளே வந்து சேர்றன். நாக்பூர் என்னம்மா... தூரத்துலேயா இருக்கு?

    என்ன ரெடியா?

    சம்பந்தியம்மாவின் குரல்.

    உங்க மாபியார் குரல் கொடுத்தாச்சு. புறப்படும்மா!

    நானும் போயிட்டா, உங்களை கவனிக்க யாருமில்லைப்பா. வேளா, வேளைக்கு சரியா சாப்பிடுங்க. பிஸ்னஸ்ன்னு தூக்கம், ஓய்வு எதுவும் இல்லாம உழைக்காதீங்க!

    சரிம்மா!

    சம்பந்தியம்மாள் உள்ளே வந்து விட்டார்.

    அப்பாவை விட்டுப் பிரிய மனசில்லையா?

    மன்னிச்சிடுங்க. தாயில்லாம வளர்ந்த குழந்தை. என்னை விட்டு ஒருநாள் கூட இருந்ததில்லை. அதனால் தான்...

    நீங்களும் எங்க கூட வந்து ஒரு மாசம் இருங்க சம்பந்தி. அவளுக்கும் ஏக்கம் தீரும்.

    எப்படீம்மா? பேக்டரி தொழிலாளர்கள் எல்லாம் தான் இல்லாம சரிவர இயங்காது. செல்லமா வளர்ந்த பொண்ணு. நீங்கதான் அவளை...

    ராசாத்தியாட்டம் பார்த்துப்பேன். அவளே உங்களை சந்திக்கும்போது அதைச்சொல்லுவா. புரியுதா?

    அம்மா நேரமாச்சு! முகேஷ் வந்து குரல் கொடுத்தான்.

    வந்துட்டம் மாப்ளை!

    வாசலுக்கு எல்லாரும் வந்துவிட, வேனில் ஏறிவிட்டாள் ஆர்த்தி. மற்றவர்களும் ஏறிவிட, கதவு சாத்தப்பட்டது .வேன் நகர, அப்பா கண்ணீருடன் கையசைப்பதைக் காண முடியவில்லை ஆர்த்திக்கு.

    தெருக்கோடியில் வேன் திரும்பும் போது விளக்குக் கம்பத்தடியில் அவன் நிற்பது தெரிந்தது.

    கண்களில் ஏராளமான ஆர்வம் சுமந்து அவசரமாக அவளுக்கு கைகாட்டினான்.

    ஆர்த்தி ஒரு நொடி பதறிப் போனாள்.

    யாரும் பார்த்து விட்டார்களா என்று ஒரு முறை விழிகளைச் சுழல விட்டாள்.

    வேன் நின்றது, முன்னால் போன வாகனங்கள் நிற்பதால்.

    அவன் வேனை நோக்கி ஓடி வரத் தொடங்கினான். ஆர்த்திக்கு இதயத்துடிப்பே ஒருகணம்விடுபட்டது. வெகு அருகில் அவன் நெருங்கி விட்டான்.

    அதற்குள் வாகனங்கள் விலக, வேனும் புறப்பட்டு விட்டது.

    பின்னால் அவன் ஓடி வருவது தெரிந்தது.

    நெஞ்சுக்குள் என்னவோ ஒரு சங்கடம்... கண்களை மூடிக் கொண்டு சாய்ந்தாள்.

    உனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கா ஆர்த்தி?

    ஆமாம் ரவி

    நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன் ஆர்த்தி எனக்கு நீ துரோகம் பண்ணலாமா?

    த பாரு ரவி! நான் உன்னை ஒரு தோழனாத்தான் இப்பவும் நினைக்கறேன். நீ தோட்டக்காரன் பிள்ளை. உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நீ நினைச்சா, அந்த நினைப்புக்குக் கூட இங்கே தண்டனை உண்டு எங்கப்பா மல்ட்டி மிலியனார். உன்கிட்ட நான் நின்னு பேசறதைக் கூட அவர் விரும்பமாட்டார்!

    ஆர்த்தி... சின்ன வயசுலேருந்து...!

    நீயும் நானும் சந்திக்கறம். எனக்கு நாலு வயசாக இருக்கும் போதே உங்கப்பா இங்கே வேலைக்குச் சேர்ந்தார். கண்ணாமூச்சி ரேரேனு விளையாடின காலத்தொட்டே உன்னை எனக்குத் தெரியும். அதனாலதான் இப்படியெல்லாம் பேசற உரிமையை உனக்கு நான் தந்திட்ருக்கேன். மனசுல வேண்டாத ஆசைகளை வளர்த்துட்டு கஷ்டப்பட்டு, என்னையும் வேதனைப்படுத்தாதே

    அதற்கு மேல் அவன் பேசவில்லை.

    முழுக் கல்யாணத்திலும் கலந்து கொண்டு கடுமையாக ஒத்துழைத்தான். ஆனால் அந்த தாபமும், காதலும் பார்வையில் கசிய அது ஆர்த்தியை என்னவோ செய்தது.

    இதோ தெருக்கோடி வரை துரத்திக் கொண்டு வருகிறான்.

    இனியாவது என்னை மறப்பானா?

    வேன் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாசலில் நின்றது.

    அது கோடை காலமானதால் ஒரு விசேஷ ரெயில் டெல்லிக்குவிடப்படுவதாக இருந்தது.

    அதில் ஒரு ஏஸி கோச் முழுமைக்கும் பதிவு செய்து விட்டார் அவள் அப்பா மந்திர மூர்த்தி.

    ஆட்கள் பதினைந்து பேர் இருப்பார்கள்.

    இவர்களைத் தவிரயாரும் வெளியாள் கூடாது என்று பதிவு செய்து விட்டார்.

    ரயிலில் ஏறிவிட்டார்கள்.

    மனித முகங்களும், வியாபார வண்டிகளும் அலை பாய்ந்து கொண்டிருக்க,

    அறிவிப்பு கசியத் தொடங்கியது.

    அந்த நேரம்தான் சென்ட்ரலுக்குள் அவன் நுழைந்தான். கூடவே அந்தப் பெண் இருந்தாள்.

    "த பாரு! நான் சொன்னதையெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோ. அந்த ஏஸி ஸ்லீப்பர் முழுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1