Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veyilodu Peyyum Mazhai
Veyilodu Peyyum Mazhai
Veyilodu Peyyum Mazhai
Ebook61 pages24 minutes

Veyilodu Peyyum Mazhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடும் உழைப்பாளியான இளம் பெண் ஒருத்தி கேட்டாள். "புத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்கு பதிலாக அவருடைய மனைவி யசோதரை ஏதோ ஒரு இரவில், கணவன், குழந்தை, குடும்பத்தை விட்டு துறவு வாழ்க்கைக்குச் சென்று இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா?

புத்தருக்கு கிடைத்த பெரும் புகழும் அங்கீகாரமும் அவளுக்கும் கிடைத்திருக்குமா? இல்லை. நூற்றாண்டுகளின் மோசடி இது. பெண்ணே என்றும் சுமைதாங்கி. அவளே இரண்டாம் பிரஜை. இன்றும் இதுதான் நிலைமை. இந்த சிறுகதையின் நாயகி இதைத்தான் யோசிக்கிறாள். கேட்கிறாள். வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580166811164
Veyilodu Peyyum Mazhai

Read more from V. Usha

Related to Veyilodu Peyyum Mazhai

Related ebooks

Related categories

Reviews for Veyilodu Peyyum Mazhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veyilodu Peyyum Mazhai - V. Usha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெயிலோடு பெய்யும் மழை

    Veyilodu Peyyum Mazhai

    Author:

    வி. உஷா

    V. Usha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-usha

    பொருளடக்கம்

    1. வெயிலோடு பெய்யும் மழை

    2. வழியா இல்லை பூமியில்?

    3. மொட்டுகள் நாளை மலரும்

    4. மன்னவர்கள் வரும்போது

    5. மனமே நீ மாறிவிடு

    6. மருமகள் அல்ல

    7. பெரிய கிளைகள், சிறிய இலைகள்

    1. வெயிலோடு பெய்யும் மழை

    அன்றைய காலை வேளை அப்படித்தான் இருந்தது.

    பானு சமையல் அறை சன்னல் வழியே தெரிந்த வான்வெளியைப் பார்த்தாள். இளமழையும் இளவெயிலும் கலந்து ஓவியக்காட்சியாய் இருந்தது. ஆனால் ரசிக்கிற மனதுதான் இல்லை. அது ஓய்ந்து போய் கவலையில் சுருண்டு கிடந்தது.

    அம்மா... இன்னிக்கு எங்களுக்கு ஸ்போர்ஸ் டே பிராக்டிஸ்... அதனால சப்பாத்தி, பூரி மாதிரி ஈசி உணவு கொடுத்துடும்மா என்று ஆனந்த் குரல் கொடுத்தான்.

    எனக்கும் அப்படியே பண்ணிடு பானு... இன்னிக்கு பாக்டரில மெஷின் செக் பண்ணுகிற வேலை எனக்கு... கை எல்லாம் பிசுபிசுப்பா ஆகிடும்... சப்பாத்தியை கட் பண்ணி வெச்சுடு என்று சரவணன் மகன் புத்தகங்களை எடுத்து வைத்தபடி சொன்னான்.

    சரி

    இன்றைக்காவது எம்.டி.யைப் பார்க்க முடியுமா என்கிற கேள்வி லட்சத்தோராவது தடவையாக உள்ளே இருந்து எழுந்தது. அவர் பெயர் கருணாகரன். பெயருக்கேற்ற கருணை உள்ளம் கொண்டவர் என்றுதான் பர்சனல் டிபார்ட்மெண்ட் ஆட்கள் சொல்கிறார்கள். ஆனால் அவரை நேரில் பார்த்தவர்கள் குறைவு. மிகக் குறைவு. எப்போது வருவார், யாரிடம் பேசுவார், எப்போது போவார் எதுவும் தெரியாது. இரும்புக் கதவுகள் அவர் அனுமதியின்றி திறக்கக் கூடாது என்பது கட்டளை. அவருடைய உதவியாளர் தனபால் கூட வாசலில் எப்போதும் கணினியும் கையுமாக உட்கார்ந்திருப்பானே தவிர, அவருடைய அறைக்கதவைத் திறந்து போக உரிமை கிடையாது. அவராக அழைத்தால்தான் போக முடியும்.

    தென்னிந்திய கிளைகள் எல்லாம் அவர் வசம். கம்பெனியின் வெற்றிக் கோட்டை அவர் வானம் வரை வரைந்து கொண்டு போகிறார். சாதனையாளர், வெற்றியாளர் என்று மீட்டிங்குகளில் அவ்வளவு புகழாரம் சூட்டுவார்கள்.

    என்ன பானு, சரியா தூங்கலையா? கண்ணுக்கு கீழே கருவளையங்களா இருக்கு என்று தனபால் சப்பாத்தியை அடுப்பில் திருப்பிப் போட்டான்.

    ஆமாம்... தூங்கலே... நேத்து மட்டும் இல்லே... ஒரு வாரமா தூங்கலே என்றாள். வார்த்தைகள் அடி ஆழத்திலிருந்து உதிர்ந்தன.

    விடு பானு... தப்பு செய்யாமல் ஏன் தண்டனை? அதுவும் உனக்கு நீயே ஏன் கொடுத்துக்கறே? விடு... வருவது வரட்டும் பாத்துக்கலாம்

    அதெப்படிங்க? இது சீரியஸ் விஷயம் இல்லையா? கம்பெனி டெண்டர் விஷயம்... நான் தான் எதிரி கம்பெனிக்கு சொல்லிட்டேன்னு மேனேஜ்மெண்ட் நினைக்குது... எதிரி கம்பெனில வேலை செய்கிற பிருந்தா என் உயிர்த்தோழிதான்... அதுக்காக? நமக்கு சோறு போடுகிற வேலைக்கு துரோகம் செய்வேனா? அந்த அளவுக்கு நான் தரம் குறைந்தவளா? இந்த ஆறு வருஷ சர்வீஸ்ல என்னை புரிஞ்சுக்கலையா என் கம்பெனி?

    விம்மும் குரலில் சொல்லி கண்களில் நீர் தெறிக்க நிற்கும் மனைவியை ஆதரவுடன் அவன் அணைத்துக் கொண்டான்.

    உண்மை எப்படியும் மறைந்து போகாது பானு... கவலைப்படாதே... நான் வேணா வந்து உன் பாஸ்கிட்டே பேசட்டுமா?

    "அவரை பாக்கறதே முடியாத காரியம்... நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்... ஒரு தடவை, ஒரு அஞ்சு நிமிடம் வாய்ப்பு கொடுத்தால் போதும். என் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லிடுவேன். இந்த வேலை நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு

    Enjoying the preview?
    Page 1 of 1