Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal Pola Thondrum Nijam
Nizhal Pola Thondrum Nijam
Nizhal Pola Thondrum Nijam
Ebook94 pages36 minutes

Nizhal Pola Thondrum Nijam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகேஷ் ராஜியின் இருபத்தைந்து வருட தாம்பத்தியத்தில் இடைப்புகும் சுமதியை எப்படி ராஜி கையாளுக்கிறாள் என்றும் அதன் பின்பு மகேஷுடனான அவள் உறவும் என்னவாகிறது என்பதுதான் கதை.

Languageதமிழ்
Release dateMay 25, 2024
ISBN6580147211161
Nizhal Pola Thondrum Nijam

Read more from G. Shyamala Gopu

Related to Nizhal Pola Thondrum Nijam

Related ebooks

Related categories

Reviews for Nizhal Pola Thondrum Nijam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal Pola Thondrum Nijam - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிழல் போல தோன்றும் நிஜம்

    Nizhal Pola Thondrum Nijam

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!ஹிந்து திருமணங்களில் இந்த மந்திரம் தாலி கட்டும் சமயத்தில், அக்கினியை சாட்சியாக வைத்து கெட்டிமேளச் சத்தத்துடன் சொல்லப்படும்.

    சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் முன்பு வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கிய ராஜி கைப்பையை திறந்து பணத்தை எடுத்து டிரைவரிடம் கொடுத்து விட்டு உள்ளே விரைந்தாள். பின்னாலேயே டிரைவர் அழைத்தான்.யம்மா, பையை விட்டுட்டு போறீங்களே என்று.

    தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையை தொட்டுப் பார்த்துக் கொண்டவள் பார்வை, பை தான் இருக்கிறதே என்பதைப் போல பார்க்கவே அம்மா, உங்க பயண பையை சொன்னேன் என்று சொல்லியவாறு பின்னால் எக்கி காலுக்கடியில் அவள் வைத்திருந்த பையை எடுத்து நீட்டினான்.

    ஓ, நன்றி சார் வாங்கிக் கொண்டவள், யாரோ தன்னை பின்னால் துரத்திக் கொண்டு வருவதைப் போல விரைந்தாள். பயணம் புறப்பட்டு விட்டாளே தவிர எந்த ஊருக்கு போவது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லையே. எங்கேயாவது போக வேண்டும். கண்டிப்பாக போய் விட வேண்டும். யாராலும் தேடிக் கொண்டு வந்து விட முடியாத இடத்திற்கு போய் விட வேண்டும். அது சரி, நம்மை அப்படி யார் தேடிக் கொண்டு வந்து விடப் போகிறார்கள்? தந்தையும் தாயும் எங்கோ திருச்சிக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள். வயதானவர்கள். நானாக கைப்பேசியில் அழைத்தால் தங்கள் கையில் உள்ள கைப்பேசியில் உள்ள பட்டனை அமுக்கி பேச முடியும். தாங்களாக அவளை அழைத்ததில்லை. அழைப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இல்லை. அப்படியிருக்கையில் அவர்களாக அவளை அழைத்துப் பேச போவதில்லை. இன்னும் நம் மகள் அழைக்கவில்லையே என்று மனதிற்குள் கலங்கிக் கொண்டு இருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்திட இயலாதவர்கள். அப்படிப்பட்ட பாவப்பட்ட ஜன்மங்கள். அவர்களுக்கு தன் நிலைத் தெரிய வேண்டாம். வழக்கம் போல எப்போதாவது ஒருநாள் நடுவில் அழைத்து பேசிக் கொள்ளலாம். நான் எங்கே இருந்து பேசுகிறேன் என்று தெரியவா போகிறது அவர்களுக்கு? என்று பெற்றோர்களைப் பற்றி எழுந்த சிறு கவலைக்கும் கலக்கத்திர்க்கும் ஒரு தீர்வை கண்டவள் அவர்களைப் பற்றி இப்போதைய கவலையை தள்ளி வைத்தாள்.

    எங்கே போவது?

    டிக்கட் கவுண்டருக்கு எதிரில் இருந்த வண்டிகளின் புறப்பட்டு வருகை தகவல் பலகையை நின்று ஒரு நிமிஷம் ஆராய்ந்தாள். நவஜீவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரெஸ் ஒன்பது முப்பத்தைந்திற்கு புறப்படுவதற்கு தயாராக பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. ஜெய்பூர் கோயம்புதூர் சூப்பர் பாஸ்ட் பத்து மணி பத்து நிமிடத்திற்கு புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது.

    இந்த ரெண்டில் எதில் போவது?

    கண் காணாத இடத்திற்கு, யாராலும் கண்டுபிடித்திட இயலாத வகையில் தொலை தூரத்திற்கு போய் விடலாம் என்று தீர்மானித்து நவஜீவனுக்கு டிக்கட் எடுக்க விரைந்தாள்.

    புதிதாக திருமணம் ஆன மகளை வழியனுப்ப வந்திருந்த பெற்றோர் தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அம்மா, ஊர் பேர் தெரியாத ஊருக்கு போறே. பாஷையும் தெரியாது. மாப்பிள்ளை வேலைக்கு போய் விடுவார். நீ மட்டும் தனியாக வீட்டில் இருக்கணும். அக்கம் பக்கத்தில் ஜாக்கிரதையாக இருக்கணும்.

    கூடவே அரை நடையும் அரை ஓட்டமுமாக விரைந்து பின் தொடர்ந்து கொண்டிருந்த அந்த புதுமணப்பெண்ணின் தாய் குளத்திற்கு பயந்து கொண்டு எதையோ கழுவாம போன மாதிரி, இங்கே நம்மை அண்டக்கட்டிக் கொண்டிருந்த சொந்தக்காரவுங்களுக்கு பயந்து பிள்ளையை எங்கேயோ தொலை தூரத்தில் அனுப்பி வைக்கிறோம். இது எல்லாம் தேவையா? ஆம்பிளையா லட்சணமா என்னடா பண்ண முடியும் உங்களாலே என்று எதிரே நின்னு ஒரு குரல் கொடுக்க துப்பில்லாமல் தடால் புடால்னு ஒரு கல்யாணத்தை அவசர அவசரமா கட்டி வெச்சி இப்படி அரக்க பறக்க அனுப்பறோமே என்று புலம்பிக் கொண்டே உடன் வந்தாள்.

    அதற்கு அந்த தந்தை நமக்குன்னு ஒரு பையன் இருக்கானா? இல்லை உனக்கு தான் அண்ணன் தம்பிகள் இருக்கானுங்களா? இருந்தால் இந்த சொந்தக்காரப்பயளுகளை ஒரு கை பார்த்திருப்பானே. என்னாலே ஒத்தையா அவனுங்களை எதுத்து நிக்க முடியுமா? என்று அவளுக்கு ஆறுதல் சொல்வதைப் போல மகளைப் பிரிந்து தவிக்கும் பிரிவு துயருக்கும், இவ்வளவு தொலைவிற்கு, கணவன் என்னும் இந்த மனிதனை நம்பி அனுப்புகிரோமே என்று மகளின் பாதுகாப்பிற்குமான கவலைக்கு காரணம் சொல்லிக் கொண்டார் அவர்.

    இவர்கள் பேசுவதைக் கேட்டு சட்டென்று நின்றாள் ராஜி. இவர்கள் பேசிக் கொள்வது உண்மை தானே. எதிர்ப்புகளை எதிர்த்து நின்று எதிர் கொள்வதை விடுத்து, இப்படி பயந்தாகொள்ளித்தனமாக, ஊரை விட்டு, ஊர் பேர் தெரியாத ஊருக்கு ஓடுகிரோமே என்று யோசித்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1