Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasiya Valaigal
Vasiya Valaigal
Vasiya Valaigal
Ebook125 pages1 hour

Vasiya Valaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுசித்தா தன் அம்மாவின் சிநேகிதியான சித்ராவின் வீட்டில் வளர்ந்து வருகின்றாள். சித்ரா தலைமையில் சுகுமார், சுசித்தா இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. இதில் சுகுமார் என்பவன் யார்? சித்ரா, சுகுமார் இருவருக்கும் இடையேயான தொடர்பு என்ன? இறுதியில் யார், யாரை வசிய வலையில் சிக்கவைத்தது என்பதையும் வாருங்கள் வாசித்து தெரிந்துகொள்வோம்...!

Languageதமிழ்
Release dateJun 8, 2024
ISBN6580109911177
Vasiya Valaigal

Read more from Kanchana Jeyathilagar

Related to Vasiya Valaigal

Related ebooks

Related categories

Reviews for Vasiya Valaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasiya Valaigal - Kanchana Jeyathilagar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வசிய வலைகள்...

    Vasiya Valaigal...

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    மழை அவளுடன் சரசமாடிக் கொண்டிருந்தது. சாரல், தூறல் என்றில்லாமல் பரும் துளிகள் அவள்மீது அங்கும் இங்குமாய் தெறித்தன. நடக்க முன்னெடுத்து வைத்த அவளது பாதம், தோள், கை, வகிடு என்று நனைத்து சிலிர்ப்பூட்டின.

    சிணுங்கலுடன் அந்த ஈரத்தை நீவிவிட்டாள் சுசித்தா. வீடு போய் சேர இன்னும் ஐந்து நிமிடங்களாகும். ஆனால் ஓடாமல், மழையின் சரசத்திற்கு ஈடுதர, என்று நிதானமாய் நடந்தாள். அருவிக்கரையில் நின்றால் நேரம் நழுவுவதே தெரிவதில்லை.

    வெளிச்சம் மங்கி, காற்றில் ஈரம் கூடத்தான், வீட்டின் ஞாபகம் வருகிறது... அங்கே விதவிதமாய் கிடைக்கும் உணவு உட்பட!

    அருவிக்குப் போகும் பாதைகள் குளுமையானவை... சுற்றிலும் அசாத்ய பசுமையும்கூட. மாந்தோப்பின் ஊடாய் நடப்பது சலிப்பதேயில்லை. அதிலும் இங்குள்ள மாமரங்கள் வித்தியாசமானவை. கீழிருந்தே கிளை பரப்பி, கோப்பை வடிவில் நிற்கும் வகை! அவை பேய் காற்றில் பிய்த்தடித்து, எதிர்புறமாய் வளைந்த குடைகளைப்போல இவளுக்குத் தோன்றும்... குடையின் கைப்பிடி கம்பியைப்போல மரங்களின் வேர்கள் பூமியின் கீழே ஓடுமாயிருக்கும்...

    மண் வாசனையை ஆழ்ந்து சுவாசிக்க, இவளது மதர்த்த மார்புகள் விம்மித் தணிந்தன. இடுப்புப்பகுதிகூட சுசித்தாவிற்கு மிக அகலந்தான். கூடுதலாய் இவள் ஐந்து அங்குலம் உயரமிருந்தால் வடிவாக அமைந்திருக்கக்கூடிய உடல்.

    வெறுமே ஐந்தடி உயரத்திற்கு 62 கிலோ அதிகந்தான். இது சில மாதங்களுக்கு முன்பு இருந்த எடை... இப்போது கூடியிருக்கும்!

    மார்கழி மாத குளிர் கிள்ள, இவளுக்கு தன்னுள் வெப்பமேற்றிய அக்காட்சி மறுபடி நினைவிற்கு வந்தது. மாமரத்தின் வளைவான ஊஞ்சல் கிளையின்மேல், ஒருத்தியை சாய்த்து, அவளின் மேலே அழுத்தமாய் சாய்ந்தவனின் கை, அவளில் பதிந்த இடத்தை இவள் எதிர்பர்க்கவில்லை... கண்ணும், உடலும் விதிர்த்துவிட்டன! அவர்கள் தம்பதியா... காதலர்களா எனத் தெரியவில்லை. அந்த ஆசை வேகம் அது அவர்களின் ‘காதல் - காலம்’ என்றது... ஆனால் திருமணத்திற்குப் பிறகுதானே இப்படியான அந்தரங்கங்களுக்கு அனுமதி?

    நினைவில் முகம் சிவந்த அந்த நொடி, மழைத்துளி இவளது விம்மிய மார்பில்பட்டு நனைத்தது. சிலிர்த்தாள்... ஒரு துளி நீர் இப்படி உடலை கிளர வைக்குமானால், ஒரு ஆணின் ஆண்மை, அழுத்தம்... இவளுக்கு மூச்சிரைத்தது... உடல் நடுங்கியது.

    இவளுக்கு இவ்வுணர்வு புதியதல்ல... சில வருஷங்களாய் இவளைக் கொத்த ஆரம்பித்திருந்ததுதான்... இப்படியான காட்சிகள், மேலும் உலுக்கி விடுகின்றன!

    மேடேற, மங்கிய மாலை ஒளியில் இவளது வீடு தனி பொலிவுடன் தெரிந்தது. வெளிர் மஞ்சள் பூச்சு... விளிம்புகளில் அடர் மஞ்சளாய் - மாஞ்சோலைக்கு ஏற்ற மாம்பழ நிறமென்று தேர்ந்தெடுத்திருப்பார்களோ?

    இது சுசித்தா பிறந்து, தவழ்ந்த வீடல்ல. இங்கே வரும்போது அவளுக்கு வயது பதின்மூன்று. அதற்கு முந்தின வருஷங்கள் சஞ்சலமானவை. அவளும் அம்மாவும் வசித்தது பம்பாயில். இப்போது மும்பை என்கிறார்கள். புறாக்கூண்டு போன்ற இரு சிறு அறைகள் - வெளியேயுள்ள கூட்டம், இரைச்சல், குப்பை, புழுதி எதுவுமே இவளுக்கு ஆகவில்லை. தமிழும் கற்பிக்கப்பட்ட ஒரு பள்ளியை அம்மா தேடி கண்டுபிடித்து, இவளை சேர்த்திருந்தாள். வீட்டில் பேசப்பட்ட தமிழும், வெளியே கசகசத்த ஹிந்தியும், பாடப்புத்தகத்தின் மொழியும் இவளைக் குழப்பின.

    ‘பகலின் (எதிர்பதம்) இரவுன்னு - புக்கில் போட்டிருக்கும்மா. நீ ராத்திரிங்கற? டீச்சர் கத்துத் தர்ரதுபோல நாம இங்க தமிழைப் பேசலியே?’

    ‘அது அப்படித்தான், போகப்போக பழகிரும்டி.’

    ‘நான் மதராஸியாட்டம் பேசினாலும் வடக்கத்தியாள் மாதிரி இருக்கேனாம்...’

    ‘ஆமான்டி... உன் வாளிப்புதான் எனக்குப் பயம்மாருக்கு’ என்று மகளின் தலை கோதுவாள் அம்மா.

    ‘நமக்கு மனுஷ துணையில்லாத ஊருல உன்னை எப்படி பத்திரப்படுத்தப் போறேன்?’

    ‘நாம தமிழ்நாட்டுக்கு போயிரலாமே?’

    ‘இப்ப சாத்தூர்ல எனக்கு, நமக்கு யாருமில்லடீ.’

    ‘கஷ்டப்பட்ட வீடுகள்ல சொந்தம் பந்தமெல்லாம் ஏதுமிராது. ஆக கிடைச்ச வேலையை பிடிச்சுக்கலாம்னு அப்பா இங்க வந்தார். உடம்பு சரியில்லாதவரை இங்கிருந்த சேட்டு குடும்பம் நல்லாத்தான் கவனிச்சுது. நல்ல வைத்தியந்தான். ஆனா... அவரைக் காப்பாத்த முடியல.

    சேட்டு தங்கச்சி வீட்டுல அப்போ பிள்ளை பேறு இருக்க, நம்ப துணை தேவைப்பட்டது... ஆனா எனக்கும் உடம்பு முன்னைப்போல இல்லடீ...’

    சொல்லும் தாயின் கண்களில் பளபளக்கும் பீதி இவளையும் பற்றிக்கொள்ளும். வெள்ளத்து சருகில் பயணித்த எறும்புகளாய் இவர்கள் தடுமாறிய போதுதான் இவள் சித்ரா சித்தியை சந்தித்தது!

    ஐந்தரை அடியில் சிலைபோல, சரளமாய் பேசி சிரித்த சித்ராவை முதல் பார்வையிலேயே சுசித்தாவிற்கு பிடித்துவிட்டது.

    ‘இப்படி ஒரு சித்தி இருக்கறதாய் சொல்லலியேம்மா. உன் தங்கச்சியா?’

    ‘இல்லல்ல, நாங்க சேர்ந்து படிச்சோம்.’

    ‘அப்ப ஃப்ரண்ட்ஸா - ஒரே வயசா?’

    ‘ம்ம்... அவ டான்ஸ் படிச்சா. அவ மாமா ஒருத்தர் அவளை மெட்ராஸ் கூட்டிட்டு போய் சினிமாவுல சேர்ந்து விட்டாரு.’

    ‘ஓ... அப்ப சினிமா - ஸ்டாரா?’

    ‘அப்படியுஞ் சொல்ல முடியாதுன்ரா... பேரை சுசித்ரான்னு மாத்தி, அலங்காரத்தையும் கூட்டி விட்டிருக்காங்க. ஆனா சின்ன ரோலுங்க, டான்ஸுனுதான் இவ கதை ஓடியிருக்குது. பிறகு ஏதோ ஒரு ஜமீன்தாரைக் கல்யாணம் கட்டினதாய் சொன்னா.’

    ‘அழகுபோல அதிர்ஷ்டமுமானவங்கதான்.’

    ‘அப்படி சொல்ல முடியாதுடீ. கட்டினவங்களுக்கு இடையே 30 வயசாம்... ஏற்கெனவே ரெண்டுதரங் கல்யாணமான ஜமீன்தாருக்கு காலஞ் சென்டு ஒரே பிள்ளை பிறந்ததாம். அதைப் பெத்து தந்தவ, பிரிஞ்சு போயிட, அவரு சித்ராவை சேர்த்துக்கிட்டார் போல. இவ நிலைச்சு, அவரு மகனையும் கவனிச்ச நிம்மதியில் கல்யாணம்னு கட்டிட்டாராம்...’

    ‘ஆனா அது சட்டப்படி செல்லாதுல்லம்மா?’

    ‘என்னை விட நீ விவரந்தான்டீ! ஆனா உயில்ல சித்ராவுக்கும் அந்த ஜமீன் வீட்டுல பாத்யதை உண்டுனு குறிப்பிட்டிருக்காம். மாந்தோப்பு மையத்துல தோரணையான வீடு.’

    தொடர்ந்த தகவலில் சுசித்தா, புதிதாய் வந்த சித்தியிடம் நெருங்க முடிந்தது.

    ‘உம் பேருகூட சித்ரா தேடி எடுத்ததுதான்.’

    விழிகள் உருள கேட்டிருந்தாள் சின்னவள்.

    ‘பிள்ளைப்பேற்றுக்கு நா சாத்தூரில, மாமி வீட்டுல இருந்தப்ப, நீ பிறந்த தகவலு கேட்டு வந்தவ, உனக்கு தங்க செயினும், பெயரையும் கொடுத்தா.’

    ‘வித்யாசமான பேரில்லையாம்மா?’

    ‘ஆஸ்பிஷியஸ்னு - இங்கிலிஷ்ல அர்த்தஞ் சொன்னா -

    Enjoying the preview?
    Page 1 of 1