Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirunaal Vanthathu
Thirunaal Vanthathu
Thirunaal Vanthathu
Ebook120 pages47 minutes

Thirunaal Vanthathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிஜ வாழ்வில் அன்றாடம் நிகழும் ப்ளஸ் மைனஸ் சங்கதிகளை எடுத்துக் கொண்டு, கோப தாபங்களையும் வைத்து அழகாய் கதை பின்னுவதில் தேர்ந்து நிற்கிறார்.

மனிதம் மட்டுமே இவரது கதைகளின் ஊடுபாவாய் நிற்கிறது. விரோதிக்கவோ விலகிப் போகவோ கற்பிக்காத கதைகள். இந்த சூழ்நிலையில் இதுவே தீர்வு என்று பிரகடனப்படுத்துவதால் வாசகனுக்குக் குழப்பம் வரும் வாய்ப்பே இல்லை. பத்து கதைகளும் பத்து முத்துக்கள். தொடர்ந்து சிறுகதைத் தேவதைக்கு நல்லாரங்கள் சூட்டுவார் என்கிற நம்பிக்கையோடு நல்வாழ்த்துகள்.

Languageதமிழ்
Release dateJun 8, 2024
ISBN6580153211190
Thirunaal Vanthathu

Read more from R. Subashini Ramanan

Related to Thirunaal Vanthathu

Related ebooks

Related categories

Reviews for Thirunaal Vanthathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirunaal Vanthathu - R. Subashini Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருநாள் வந்தது

    Thirunaal Vanthathu

    Author:

    சுபாஷிணி ரமணன்

    R. Subashini Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-subashini-ramanan

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    ஒரு விமர்சனம் (எழுத்தாளர், கவிஞர் சக்தி கிருஷ்ணன்)

    என்னுரை

    1. ஆடிப் பெருக்கு - (புது வெள்ளம்)

    2. கோகுலாஷ்டமி - (மனமெனும் மாயக் கண்ணாடி)

    3. விநாயகர் சதுர்த்தி - (நாணயம்)

    4. நவராத்திரி - (ரௌத்திரம் பழகு)

    5. தீபாவளி - (சம்ஹாரம்)

    6. கார்த்திகை - (சிரிப்பின்ஒ(ளி)லி)

    7. மீலாடிநபி - (உள்ளே வரலாமா?)

    8. கிறிஸ்மஸ் - (நிறம் ஒன்றே)

    9. வருடப்பிறப்பு - (காலங்கள் மாறும்)

    10. பொங்கல் - (உறவுப் பாலம்)

    வாழ்த்துரை

    (எழுத்தாளர் ரிஷபன்)

    திருநாள் வந்தது சிறுகதை இலக்கியத்திற்குத் திருநாள் வந்தே விட்டது! தொடர்ச்சியாய் தொகுப்புகள் வெளிவரும் காலம் இப்போது.

    திருமதி சுபாஷிணி ரமணன் பண்டிகைகளை உள்ளடக்கிச் சிறுகதைகளை உருவாக்கி இருக்கிறார். இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் வலியப் புகுத்தாமல் கதையின் போக்கிலேயே திருநாளும் இணைகிறது மிக அழகாய்.

    இவரிடம் பிடித்த அம்சம் இவர் எழுதும் கதைகளில் காணப்படும் பாஸிட்டிவ் வைப்ரேஷன்.

    நிஜ வாழ்வில் அன்றாடம் நிகழும் ப்ளஸ் மைனஸ் சங்கதிகளை எடுத்துக் கொண்டு, கோப தாபங்களையும் வைத்து அழகாய் கதை பின்னுவதில் தேர்ந்து நிற்கிறார்.

    மனிதம் மட்டுமே இவரது கதைகளின் ஊடுபாவாய் நிற்கிறது. விரோதிக்கவோ விலகிப் போகவோ கற்பிக்காத கதைகள். இந்தச் சூழ்நிலையில் இதுவே தீர்வு என்று பிரகடனப்படுத்துவதால் வாசகனுக்குக் குழப்பம் வரும் வாய்ப்பே இல்லை.

    பத்து கதைகளும் பத்து முத்துக்கள்.

    தொடர்ந்து சிறுகதைத் தேவதைக்கு நல்லாரங்கள் சூட்டுவார் என்கிற நம்பிக்கையோடு நல்வாழ்த்துகள்.

    ரிஷபன்

    ஒரு விமர்சனம் (எழுத்தாளர், கவிஞர் சக்தி கிருஷ்ணன்)

    பண்டிகைகள் யாவும் நம்மை மகிழ்ச்சிப் படுத்தவும் நம் பண்பாட்டை வழிவழியாகச் சொல்லவும் வருபவை. இப்பண்டிகைகளின் இயல்பை வைத்து திருமதி. சுபாஷிணி ரமணன் அம்மா அவர்கள் ‘திருநாள் வந்தது’ எனும் இச் சிறுகதைத் தொகுப்பை நமக்கு அளித்திருக்கிறார்.

    இதில் உள்ள பத்து சிறுகதைகளும்

    பண்டிகையின் இனிமையைப் போல நமக்குள் மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்துவிட்டே செல்கின்றன.

    எந்த வெள்ளம் அம்மாவைப் பறித்ததோ அதேவெள்ளத்தில் இருந்து பரத்திற்கு ஒருஅம்மா கிடைக்கும் போது அந்த ‘புதுவெள்ளம்’நமக்குள்ளும் பாய்ந்து பரவசப்படுத்துகிறது.

    ‘மாயக்கண்ணாடி’யில் நம்மைக் கலங்க வைத்து கோகுலைத்தந்து குதூகூலப்படுத்துகிறார்

    ‘நாணயம்’ நா நயத்தின் சிறப்பையும் ஒரு பதட்டத்தையும் விதைத்தே செல்கிறது.

    ‘ரௌத்திரம்’

    இன்றைய பெண் குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை

    ‘தீபாவளி’

    அன்பான உறவுகள் தான் பலம் என்பதை அருமையாகவும் அவர்களுக்கே உரிய மென்மையுடனும் கூற கதை நிறைவாய் நிறைகிறது

    ‘சிரிப்பின் ஒ (லி)ளி’

    முயற்சிப்பவர் தோற்பதில்லை என்பதை வலியுறுத்திச்செல்கிறது

    ‘உள்ளே வரலாமா…’

    மதம் கடந்த மனிதத்தையும் அன்பே எங்கும் வெல்கிறது என்பதையும் மதத்தின் தாய்வீட்டையும் அழுத்தமாகச் சொல்லி தன் முத்திரையைப் பதித்துச்செல்கிறார் கதையாசிரியர்

    ‘நிறம் ஒன்றே’

    மனிதம் மறந்து மதவெறி பிடித்தவர்களுக்கு விழும் சரியான சாட்டையடி.

    ‘காலங்கள் மாறும்’

    குடி ஒரு குடும்பத்தை எப்படிச் சீரழிக்கும் என்பதும் பணம் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதும்

    நம்மைச்சுற்றி கஸ்தூரி மாதிரி பல நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதுமாக ஒரு திரைப்படம் பார்த்த நிறைவைத் தருகிறது

    ‘உறவுப்பாலம்’

    எவ்வளவு வருசமானாலும் சின்னதோ பெருசோ ஆனா தாய்வீட்டு சீர்ன்றது ஒவ்வொரு பொண்ணுக்கும் அது ரொம்ப பெரிய விசயம் இது பெண்ணோடு எப்படி இயல்பாக ஊறியிருக்கிறது என்பதை அழகாகக்காட்டுகிறது.

    நூலாசிரியரின் இயல்பான குணம் போலவே மென்மையும் உறுதியும் கலந்து பத்தும் முத்தாக நம்மை பண்டிகையின் மகிழ்வுடன் பயணப்பட வைக்கிறது

    சக்தி கிருஷ்ணன்(எழுத்தாளர், கவிஞர்)

    சென்னை

    என்னுரை

    ‘சங்கப்பலகை’எனும் முகநூல் குழுமத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை எழுதச் சொல்லி போட்டி வைத்தார்கள். அப்போது சிலவற்றை என்னால் எழுத முடியவில்லை. குழுமத்தில் எழுதியது, எழுதாமல் விட்டது என எல்லாவற்றின் தொகுப்புமாய் இத் தொகுப்பு வெளியாகிறது.

    இதில் முதல் கதையான ‘புதுவெள்ளம்’ பிரபல வாரப்பத்திரிக்கையான ‘கல்கி’ மின் இதழில் வெளியானது. அத்துடன் என் முதல் சிறுகதைத் தொகுப்பிலும் வெளியானது.

    இதற்கு வாழ்த்துரை தந்து மகிழ்வித்த பிரபல எழுத்தாளர் ரிஷபன் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    விமர்சனம் எழுதி தன் கருத்துகளைத் தெரிவித்த எழுத்தாளர் சக்தி கிருஷ்ணனுக்கு மனமார்ந்த நன்றி.

    புஸ்தகத்தை நன்முறையில் அச்சிட்டு ஈ புத்தகமாகவும், அச்சுப் புத்தகமாகவும் வெளியிட்டுத் தரும் ‘புஸ்தகம் ராஜேஷ்’சார் அவர்களுக்கும், அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் மிக்க நன்றி.

    1. ஆடிப் பெருக்கு - (புது வெள்ளம்)

    ஸ்ரீராம் ஊருக்குப் போனதிலிருந்து பரத்துக்கு தனிமை அதிகமாக இருந்தது. சோம்பல் முறித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். அவனில்லாமல் எப்படி இருந்தோம்? என்று கூட ஆச்சரியமாக இருந்தது. மாமா பிள்ளைக் கல்யாணத்திற்காக மும்பை போயிருக்கிறான்.நீயும் வாயேண்டா! அப்டி சுத்திப் பாத்துட்டு வருவோம். ஒரு நாள் தான் கல்யாணம் போப்போறேன். என்று பரத்தையும் கூப்பிட்டான். அந்த ஒருநாள் மொழி தெரியாத இடத்தில் அவஸ்த்தைப்பட பரத் தயாராக இல்லை.அங்கு போனால் பொழுது போகாது என்று நினைத்த பரத் வர மறுத்து விட்டான்.

    லைப்ரரிக்காவது போகலாம் தனக்குள் நினைத்து, பழைய புத்தகங்களை மாற்றி வர எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினான்.

    பரத்துக்கு பெற்றோர், அவனுடைய சிறுவயதிலேயே காலமாகி விட்டனர்.

    தன்னுடைய ஒன்று விட்ட மாமாவின் ஆதரவில் தங்கியே படித்து பட்டம் வாங்கினான்.

    ஐ. டி கம்பெனியில் வேலை கிடைத்ததும் மேலும் மாமா வீட்டில் தங்கி அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அத்துடன் அவர்களின் ஒரே மகன் முரளிக்கு யு. எஸ்சில் பணி கிடைக்க மாமாவும், அத்தையும் அங்கு புறப்பட ஆர்வமாக இருந்தார்கள்.நம்மால் அவர்களுக்கு எதுக்குத் தொந்தரவு? என்று நினைத்து தனியே கம்பெனிக்கு பக்கத்திலேயே வீடு எடுத்துக் கொண்டு தங்குவதாக மாமாவிடம் தயங்கித் தயங்கித் தெரிவித்த போது மாமியின் முகத்தில் வெளிப்படையாகவே தெரிந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் அவன் எடுத்த முடிவு சரியானதுதான் என்பதைத் தெரிவித்தன. மாமா மட்டும் பலவீனமாய் மறுத்துப் பார்த்து, பின் அவனுக்காக ஏற்றுக் கொண்டதாய் தன்னை ஏமாற்றிக் கொண்டார்.

    கம்பெனி அருகிலேயே ஒரு மேன்ஷனில் தங்க ஆரம்பித்தான் பரத். வார இறுதி நாட்களில் மாமா வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தான். படிப்படியாய் மாமா வீட்டுக்குப் போவது குறைந்தது.

    அதே கம்பெனியில் இணைந்த ஸ்ரீராமுக்கு, பரத்தைப் பார்த்ததுமே பிடித்து விட்டது. பரத்துக்கும் அவனைப் பிடித்துவிட, எங்கு தங்கி இருக்கிறான் என்று கேட்டு தான் தங்கி இருக்கும் இடத்திற்கே அழைத்துப் போனான்.

    ஸ்ரீராமின் குடும்பம் திருச்சியில் இருந்தது.

    ஸ்ரீராமுக்கும் அந்த மேன்ஷன் பிடித்துவிட இருவரும் ஒரே அறையில் தங்கிக் கொண்டார்கள். ஸ்ரீராமின்

    Enjoying the preview?
    Page 1 of 1