Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyarntha Manam
Uyarntha Manam
Uyarntha Manam
Ebook125 pages45 minutes

Uyarntha Manam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பள்ளி மாணவ மாணவியருக்கு சிறுவயதிலேயே பசுமரத்தாணிபோல் மனதில் பதிய வேண்டிய நற்கருத்துக்களை உள்ளடக்கிய பத்து மணியான சிறுவர்களுக்கான சிறுகதைகளை 'உயர்ந்த மனம்' என்ற நூலில் வாசித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJun 8, 2024
ISBN6580160510486
Uyarntha Manam

Read more from W.R. Vasanthan

Related to Uyarntha Manam

Related ebooks

Reviews for Uyarntha Manam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyarntha Manam - W.R. Vasanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உயர்ந்த மனம்

    Uyarntha Manam

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. சேற்றிலொரு செந்தாமரை

    2. நட்பை மறந்தாயோ?

    3. மர யானை

    4. நிழலின் அருமை

    5. பாழடைந்த கிணறு

    6. வெள்ளிக்கொலுசு!

    7. ஏணிப்படிகள்

    8. சுமை தாங்கிகள்

    9. கைகாட்டி மரம்

    10. உயர்ந்த மனம்

    முன்னுரை

    குழந்தைப் பருவத்தைக் கடந்து பதின்ம வயது எனப்படும் சிறார் பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கும் பிள்ளைகளுக்கு பல அனுபவங்கள் உடன் தோழர்களாலும், தோழிகளாலும், தாங்கள் எதிர்படும் மாறுபட்ட சூழல்களாலும் கிடைக்கின்றன. அவை அவர்களது எண்ணங்களிலும் நோக்கு நிலைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிள்ளைப் பருவ அறியாமை, கொஞ்சம் கொஞ்சமாக அகன்று தங்களுக்கு ஏற்படும் தோழமைகளாலும், அனுவங்களாலும் அவர்கள் வடிவமைக்கப்படுகிறார்கள்.

    நல்லவைகளும், கெட்டவைகளும் ஒரு சேர அவர்களது மனங்களை ஆளுமை செய்கையில் முதிர்ச்சி அடையாத இளம் பருவப் பிள்ளைகள் தங்களை எது அதிகம் கவர்கிறதோ அல்லது எது மனதில் செல்வாக்கு செலுத்துகிறதோ அதுவே சரியென்று ஏற்று அதில் மனம் சாய்கிறார்கள். அவற்றில் மறைந்திருக்கும் ஆபத்துகளைப் பகுத்தறியும் ஆற்றல் அப்பருவத்தில் இருப்பதில்லை.

    எனவே அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவது பெற்றோர், ஆசிரியர்கள் மட்டுமல்லாது இந்த சமூகத்திற்கும் இருக்கிறது. அவற்றை மனதில் கொண்டே படைப்பாளிகள், குறிப்பாக, சிறார் இலக்கியம் படைப்பவர்கள் நன்னெறி புகட்டும் கருத்துகளைத் தங்கள் பாடல்களில், கதைகளில் புனைந்து சிறார்களை நெறிப்படுத்த முயலுகிறார்கள்.

    அவ்வகையில் எழுதப்பட்டதே ‘உயர்ந்தமனம்’ என்ற இச் சிறார் நூல். இதில் 10 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இக் கதைகளில் பல வகையான சூழ்நிலைகளில், பொருளாதார நிலைகளில் வாழும் சிறார்களைச் சந்திப்பீர்கள். இயல்பிலேயே அன்பு, இரக்கம், பிறருக்கு உதவும் குணம், புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், கீழ்ப்படிதல் முதலிய நற்குணம் கொண்ட சிறுவர் - சிறுமிகளையும், கோபம், வெறுப்பு, அகம்பாவம், அடங்காமை, பொறாமை, ஏமாற்றுதல், தன்னலம், பொய் பேசுதல், பிறரைப் புரிந்துகொள்ளாமை, குறைத்து மதிப்பிடுதல் முதலிய கெட்ட குணம் கொண்ட சிறுவர் - சிறுமியரையும் எதிர்படுவீர்கள். இவ்விரு துருவங்களுக்கும் இடையே இருக்கும் மாறுபாட்டைச் சுட்டுவதே இக்கதைகளின் நோக்கம்.

    தவறான குணங்களையும், எண்ணங்களையும் கொண்டவர்கள் தங்கள் குறைகளை உணர்ந்து திருந்தும் வகையில் அவர்கள் பெற்றோர்களாலோ, ஆசிரியர்களாலோ, உடன் தோழர்களாலோ நெறிப்படுத்தப்படும் வகையில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

    இக்கதைகளைப் படிக்கும் சிறார்கள் தங்கள் முகங்களை இதில் பார்க்கவேண்டும். தங்கள் குறைகளை உணர்ந்து தங்களைச் சீர்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு நெடும் பணயம். அதில் பயணம் செய்பவர்கள் நாம் மட்டுமல்ல. முதலில் நம்மைச் சுற்றியிருக்கும் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகளுந்தான். இவர்களுக்குள் கட்டியமைக்கப்படும் குடும்ப நல்லுறவே நம் வாழ்க்கையை மகிழ்வாக்கும். அடுத்து நம்மைச் சுற்றியிருக்கும் உலகம், அது பள்ளித் தோழர்கள், ஆசிரியர்கள், அயலகத்தார் என்று விரிவடையும்போது அவர்களிடம் எப்படி நடக்கவேண்டும், நல்லுறவைக் காக்கவேண்டும் என்பதையும் இக்கதைகள் உங்களுக்கு உணர்த்தும். உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிகாட்டும் இக்கதைகளை நீங்கள் அவசியம் படிக்கவேண்டும். தோல்வி என்ற படுகுழிக்குள் வீழுமுன்னர் விழித்துக்கொள்வதல்லவா புத்திசாலித்தனம்?

    ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு’

    என்பார் நம் ஐயன் திருவள்ளுவர். அதற்கிணங்க, இக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் உங்களுக்கு உணர்த்தும் நெறிகளைப் பற்றிக்கொண்டு வாழ்க்கையைச் சிறு வயதில் வடிவமைத்துக்கொள்ளுங்கள். வேண்டும் மாறுதல்களை இப்போது செய்ய பழகிக்கொண்டால் அது வாழ்வின் எல்லை வரை உங்களைக் காக்கும் அரணாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை சில அறிவுரைகள் நம்மால் ஏற்க முடியாவிட்டாலும் அதன் பொருளை உணர்ந்துகொள்ளுங்கள். ‘மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும் முதலில் கசக்கும், பின்னால் இனிக்கும் ‘ என்ற முதுமொழியை மறவாதீர்கள். ‘உயர்ந்த மனம்’ உங்களையும் உயர்ந்தமனம் படைத்தவர்களாக்கட்டும்.

    நல்வாழ்த்துகளுடன்,

    வி.ர. வசந்தன்

    1. சேற்றிலொரு செந்தாமரை

    ஹோட்டல் ‘பாரத விலாஸ்’ தன் காலை நேர வியாபாரத்திற்குச் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. முற்றத்தைப் பெருக்கி, தண்ணீர் தெளித்த செல்வம் மேஜை, நாற்காலிகளைச் சரிசெய்தான். தரையை நீரூற்றி கழுவித் துடைத்துவிட்டு, பின்கட்டுக்கு அவன் சென்றபோது, சமையல் பாத்திரங்கள் அம்பாரமாகக் குவிந்திருந்தன. அவற்றை தேய்த்து சுத்தம் செய்வதில் அவன் முனைந்தான். சமையல் பாத்திரங்களைத் தேய்த்து, துலக்கி முடிக்கையில் எச்சில் தட்டுகள் விழ ஆரம்பித்துவிடும். இனி வேலை, வேலை, வேலை. இரவு கடை மூடுவது வரையிலும் வேலைதான்.

    வாசலில் ‘கிணிங்’ என்று சைக்கிள் சத்தம். முதலாளி வந்துவிட்டார். ஆங்காங்கே சோம்பலுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் சுறுசுறுப்பானார்கள்.

    தூய கதர் சட்டை, கதர் வேட்டியுடன் வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலையோடு உள்ளே நுழைந்த முதலாளி அருணாச்சலம், ஊதுபத்தியைக் கொளுத்தி வாழைப்பழத்தில் சொருகி வைத்துவிட்டு உள்ளே ஒரு நோட்டம் விட்டார்.

    பளிச்சென்று துடைத்து வைத்த மேஜை நாற்காலிகளும், சுத்தம் செய்யப்பட்ட தரையும் அவர் கவனத்தை ஈர்த்தன. இந்த செல்வம் வந்து சேர்ந்ததிலிருந்து அவன் செய்கிற வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருப்பதை அவர் கவனிக்கத்தான் செய்கிறார். அவர் உதட்டில் ஒரு திருப்திப் புன்னகை தோன்றியது.

    அந்த நகரத்தில் எவ்வளவோ நவீன சிற்றுண்டி விடுதிகள் வந்துவிட்ட போதிலும், ‘பாரத விலாஸி’ன் மொறுமொறு தோசையும், நெய் மணக்கும் சாம்பாரும், நாக்கில் நீர் ஊற வைக்கும் சர்க்கரைப் பொங்கலும் மிகப் பிரசித்தமானவை. நாற்பது வருடங்களுக்கு முன் இந்த ஹோட்டலை ஆரம்பித்தபோது என்ன தரத்தில் இருந்ததோ, அதே தரத்தில் இப்போதும் இருப்பது அனைவரும் ஒப்புக்கொள்கிற காரியம்.

    இலாபம் பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கருதாமல் உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் அருணாச்சலத்தின் சிறுவயதிலேயே அவரோடு வளர்ந்திருந்தது. இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்டக்காலத்தில், அதில் கலந்துகொண்டு அவர் அனுபவித்த துன்பங்கள் அதற்கு உரமிட்டிருந்தன.

    பாரத விலாஸின் சுவர்கள் நேதாஜி, காந்திஜி, பட்டேல், நேரு போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படங்கள் கண்ணாடிச் சட்டங்களுக்குள் பழுப்பேறி மங்கிய காகிதத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தன. இடையிடையே அக்கால ஓவியர்கள் தீட்டிய இயற்கைக் காட்சிகள் மஞ்சள் படிந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன.

    காந்திஜி போதித்த சத்தியத்தைத் தன் வாழ்க்கையில் மட்டுமின்றி, தொழிலிலும் தவறாமல் கடைபிடித்து வந்தார் முதலாளி அருணாச்சலம்.

    சர்வர்கள் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். நெய் முறுகல் ரெண்டு... மசாலா ஒண்ணேய் என்று கூவிய சர்வரை அருகே அழைத்தார் அருணாச்சலம். "அதோ பாருப்பா, அந்த இரண்டு பேரும் வந்து உட்கார்ந்து அஞ்சு

    Enjoying the preview?
    Page 1 of 1