Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramamirutham
Ramamirutham
Ramamirutham
Ebook145 pages51 minutes

Ramamirutham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராமா என்ற சொல்லே அமிர்தம்தான். உச்சரிக்கும் நாவு தித்திக்கும். மனது இன்புறும். அந்த பகவான் ஶ்ரீராமருடைய நற்குணங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம், மிகப் பொருத்தமாக ஶ்ரீராமநவமிக்கு சமீபத்தில் வெளியிடப்பட்டிருப்பதே ஶ்ரீராமனின் அருளால்தானே. ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு பதிவும் வருங்கால சந்ததியினருக்கு ஶ்ரீராமபிரானின் நற்குணங்களை எடுத்துரைத்து, அவரைப்போன்றே நல்வழியில் வாழ, உபயோகமாக இருக்கவேண்டும் என்பதே இந்த எழுத்தாளர்களின் நோக்கம். எழுதியது இவர்களானாலும் எழுத வைத்தது ஶ்ரீராமனே அன்றி, வேறு யாராயிருக்க முடியும்.

Languageதமிழ்
Release dateJun 8, 2024
ISBN6580168010951
Ramamirutham

Read more from Uma Aparna

Related to Ramamirutham

Related ebooks

Reviews for Ramamirutham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramamirutham - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ராமாமிருதம்

    Ramamirutham

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    அணிந்துரை - 1

    அணிந்துரை - 2

    பத்மா ராகவன்

    1. கல்யாண(குண)ராமா

    2. அன்னையின் நம்பிக்கை

    வனஜா முத்துக்கிருஷ்ணன்

    3. மாருதியின் பக்தி

    உஷா கண்ணன்

    4. ராமனின் பாதையில்

    5. இராமாயணத்தில் ‘அறம்’

    உமா ஸ்வாமிநாதன்

    6. வீர திருமகன்

    ருக்மணி வெங்கட்ராமன்

    7. குணரூபன்

    ஜெயந்தி பத்ரி

    8. கவிச்சக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியும்!

    நந்தினி லாவண்யமூர்த்தி

    9. லவ, குசா

    ராஜேஸ்வரி ஐயர்

    10. நிர்வாக குரு ஸ்ரீ ராமர்

    அணிந்துரை - 1

    அமுதத்தின் துளிகள்…

    அயணம் என்றால் வழி. ராமன் காட்டும் வழி ராமாயணம்.

    ஸ்ரீ ராமாயணம் வேதத்தின் ஸாரம், அதில் தர்மம் மட்டும் சொல்லப்படவில்லை, இன்றைக்கும் நமது அன்றாட வாழ்வியலுக்குத் தேவையான பல விஷயங்களான தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளது.

    பாரத வாசிகளின் வாழ்வியலே தர்மம்தானே. இதை ஸ்ரீ ராமாயண செய்திகளைக் கொண்டு சிறுகதை வடிவில் எடுத்துக்காட்டுகிறது இந்த சிறுகதைகளின் தொகுப்பு.

    இந்த சிறு சிறு கதைகள் அடுத்தத் தலைமுறைக்கு ஸ்ரீ ராமாயண செய்திகள் வழியே வாழ்வியல் தர்மங்களை எடுத்துச் செல்கிறது…

    ஸ்ரீ ராமரின் நற்குணங்கள் மட்டுமல்ல, நாளை பட்டாபிஷேகம் என்று இருந்ததை நாளை வனவாசம் என்று மாற்றியபோது மனதும், முகமும் வாடாது இருந்த ஸ்ரீ ராமன் நமக்கு படிப்பினை. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் ஸ்ரீ ராமனின் இந்த குணம் நமக்கு கை கொடுக்கும் என்று காட்டுகிறது பத்மா ராகவனின் கதைகள்.

    உடன்பிறந்த சகோதரன் செயலைச் சரியாக புரிந்துகொள்ளாது, தன்னைக் கொல்ல வருவதாக எண்ணி சகோதரனைக் கொல்ல நினைத்த வாலி தரும் செய்தி, யாரையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற புத்திமதி. அதனை சொல்ல ஸ்ரீ ஹனுமனைக் கொண்டு மாருதியின் பக்தியில் சொல்கிறார் ஸ்ரீமதி வனஜாமுத்துக்கிருஷ்ணன்.

    தவக்கோலத்தில், ஆனால் கையில் வில்லும் அம்பும் வைத்திருப்பது முரணாக உள்ளதே என்று கேட்டாலும், ஸ்ரீ ராமனையும், லக்ஷ்மணனையும் சரியாகப் புரிந்து கொண்டவனல்லவா ஸ்ரீ ஹனுமன்.

    ஸ்ரீ ஹனுமனைப் பற்றிய தகவல்கள், அவரது கதை நெடுக ஸ்ரீ ஹனுமனின் வாலில் வைக்கும் செந்தூரப் பொட்டு போன்று, ஸ்ரீ ஹனுமனின் பெருமையை சொல்கிறார்.

    ஸ்ரீ ராமரின் அவதாரத்தலமான அயோத்திக்கு யாராலும் வெற்றிகொள்ள முடியாதது என்று பொருள். ஆம்! மீண்டும் ஸ்ரீ அயோத்தி மீட்கப்பட்டுவிட்டது.

    இதோ யாராலும் வெற்றிகொள்ள முடியாத ஆழ்வார்கள் மங்களாஸாசனம் செய்த ஸ்ரீ அயோத்தியிலிருந்து, ஸ்ரீ ராமர் நடந்த பாதையில் கிஷ்கிந்தா முதல் ஸ்ரீ ராமர் பாலம் வரை அழைத்துச் சென்று காட்டுகிறார். மனக்கண்ணால் ஒரு ஆன்மீகப் பயணம்.

    மூன்றாவது ராமாமிருதம் அறத்தைப் பேசுகிறது. சர்ச்சைக்குரியதாக இன்றும் கேட்கப்படும் - அரக்கியானாலும் பெண்ணான தாடகையைக் கொல்லலாமா? என்பது முதல், வாலியை மறைந்திருந்து கொல்லலாமா? என்பது வரை கேட்கப்படும் கேள்விகளுக்கு ஸாத்வீகமாக பதிலளிக்கிறார் உஷா கண்ணன்.

    எழிலன் - அவனது தாத்தா உரையாடல் ஸ்ரீ ராமர் குறித்து ஆரம்பித்து, பேரனின் மனதை எப்படி மாற்றிவிட்டது என்பதை கூறுகிறார் உமா ஸ்வாமிநாதன்.

    ஸ்ரீ ராமன் நல்ல குணங்களின் கொள்கலன் என்று ஆழ்வார்களின் பாசுரம் முதல் ஸ்ரீ வால்மீகிவரை ஆதாரங்களுடன் காட்டுகிறார் ருக்மணி வெங்கட்ராமன். இவர் மிக அழகாக பாசுரங்களை இணைத்துள்ளார். தற்கால குழந்தைகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய குணங்கள் இவை.

    இவர்கள் சந்தித்தால் என்று 30 வருஷம் முன் டிடி தமிழில் வருவது போன்று கவிச்சக்கரவர்த்தியையும், மகாகவியையும் சந்திக்க வைத்துள்ளார் ஜெயந்தி பத்ரி. சகோதர பாசம் முதல் அன்பால், பண்பால் உயர்ந்த ஸ்ரீ ராமனின் குணங்களை அற்புதமாக விவரிக்கிறார்.

    நந்தினி லாவண்ய மூர்த்தி நம்மை அழ வைத்துவிடுகிறார். ஆம்! நமது தாய் சீதையினை காட்டுக்கு அனுப்பும் காட்சியல்லவா. ராஜாஜி இந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ளவே இல்லை. யாரோ ஒரு வண்ணான் சொல்லியதற்காக தர்மத்தின் வடிவமான நமது தாய் சீதையை ஸ்ரீ ராமன் காட்டுக்கு அனுப்பியிருக்கமாட்டார் என்று வாதிட்டார். காட்டுக்கு அனுப்பியவன் ராஜா ராமன், காட்டுக்கு அனுப்பிய பின் அழுதுகொண்டிருந்தான் ஸீதா ராமன்.

    ஸ்ரீ ராமர் ஒரு நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு என்பதை சொல்கிறது ராஜேஸ்வரி ஐயரின் சிறுகதை. அரசனுக்கு நிர்வாகத் திறன் பற்றி காட்டுக்கு தேடிவந்த பரதனுக்கு அறிவுரை சொன்ன ஸ்ரீ ராமனின் கருத்துக்களைப் படித்தால், ஸ்ரீ ராமன் காட்டும் நிர்வாகத்திறன் பற்றி புரிந்துகொள்ளலாம்.

    அஷ்டதிக்கஜங்கள் என்பதுபோல எட்டு பெண்மணிகள் தர்மத்தின் வடிவமான ஸ்ரீ ராமனின் புகழை வேததர்மத்தின் சாரமாகிய ஸ்ரீ ராமாயணத்தைக் கொண்டு ஆன்மீக விஷயங்களை அமுதத் துளிகளாக கதை வடிவில் சொல்லியுள்ளார்கள்.

    கதை சொல்லும் பாட்டி, தாத்தாக்கள் கூட செல்போனில் மூழ்கிவிட்ட இந்தக் காலத்தில், ஸ்ரீ ராமாயணத்தை வாசிக்கத் தூண்டும் வகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு சிறப்பாக உள்ளது.

    ஸ்ரீ ராமாயணம் பற்றியும், ஸ்ரீ ராமனைப் பற்றியும் அலுக்காமல் எழுதிக்கொண்டேயிருக்கலாம். சக்கரவர்த்தித் திருமகன் என்று ஸ்ரீ ராமாயணத்தை எழுதினார் ராஜாஜி. அந்த நூலை எழுதி முடித்தபோது, உயர்ந்த பதவியிலிருந்து விலகும் போதுகூட நான் வருந்தவில்லை, ஸ்ரீ ராமனின் சரிதத்தை எழுதும் பணி முடிந்துவிட்டதே என்று வருந்துகிறேன் என்றார்.

    இந்த நூலை உருவாக்கிய எட்டு ஸ்ரீமதிகளுக்கும் அந்த உணர்வுதான் இருக்கும். படிப்பவர்களுக்கும் கூட அதே நிலைதான்.

    எளிய நடையில் எல்லோரும் அறியும் வண்ணம் கதை வடிவில் சொல்லிய இவர்களது பணி மென்மேலும் வளரவேண்டும். வாசக அன்பர்கள் ஆதரிக்கவேண்டும். இந்த நூல் பரிசளிக்கச் சிறந்தது. எப்போதும் மகிழ்ச்சியை தரும் பரிசு இந்த நூல்.

    இந்த நூல் உருவாக காரணமான பேக்கிடெர்ம் டேல்ஸ் உமா அபர்ணாவிற்கு எனது ஆசிகள்.

    ஆரியத்தமிழன் என்கிற புனைபெயரில் எழுதிவரும் உ. நரசிம்மன் தேப்பெருமாள் நல்லூரை சேர்ந்தவர். வைஷ்ணவ மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாற்றை பற்றிய நூல்களை சேகரிக்கும் இவரது பாரதி நூலகம், இவரது உழைப்பு.

    அணிந்துரை - 2

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

    ராமாமிர்தம் என்ற நூல் மூலம் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இறைவன் சித்தம்தான் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுவதும், அதன்மூலம் உங்களைச் சந்திப்பதும். ஒரு நல்ல விஷயத்தில் அணில் மாதிரி என் பங்கும் இருப்பது அளவற்ற ஆனந்தம்.

    ராமா என்றால் அனைத்துப் பாவங்களும் தீரும். ஆனந்தமான வாழ்வு மலரும். வாழ்க்கையை தர்ம நெறியோடு நேர்மையும், உண்மையும் பிறருக்கு நல்லது செய்தே வாழ வேண்டும் என்பதை உணர்த்தியவன் ராமன். அவனைப் பற்றிய கதைகள்தான் இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவை. நம் காலத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தை என்ற உறவுகள் சூழ கூட்டுக்குடும்பம் இருந்தது. வீட்டில் ராமர் பட்டாபிஷேகம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் இருந்தது.

    பெரியவர்கள் குழந்தைகளுக்கு ராம நாமத்தின் தாத்பர்யத்தை சொல்லி வளர்த்தார்கள். ஆனால் இன்றைய டெக்னாலஜி உலகில் படங்களும் இல்லை. பரவசப்படுத்தும் நாம ஜெபமும் இல்லை. எல்லோரின் உலகமும் மொபைலுக்குள் அடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் ராமரும், ராமரை பற்றிய கதைகளையும் எழுதி ஒரு புத்தகம் வெளிவருவது என்பது மிகப்பெரிய விஷயம். பேரானந்தம் இந்த முயற்சியை முன்னெடுத்து நடத்திய பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனர் உமா

    Enjoying the preview?
    Page 1 of 1