Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vettai
Vettai
Vettai
Ebook198 pages1 hour

Vettai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மலைப்பாறையில் ஒரு கிராமத்துவாசி வேட்டையாடுவதற்கான ஏற்பாடுகளோடு காத்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் வலைவேட்டையில் ஒன்றுமே சிக்கவில்லை. அதன் பின்னர் அவன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் என்ன? தொடர்ந்து இதனோடு இன்னும் சில சிறுகதைகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

Languageதமிழ்
Release dateJun 8, 2024
ISBN6580170310963
Vettai

Read more from J.V. Nathan

Related to Vettai

Related ebooks

Related categories

Reviews for Vettai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vettai - J.V. Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வேட்டை

    (சிறுகதைகள்)

    Vettai

    Author:

    ஜே.வி.நாதன்

    J.V. Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jv-nathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    நரிகள்

    தாகம்

    விருந்து

    அண்டா

    வேட்டை

    எழுதப்படாத தீர்ப்புகள்

    தெய்வங்கள்

    அம்மாசியின் மனக்கணக்கு

    மனைவியைத் தழுவும்போது...

    அதிதி

    மனிதன் என்பவன்...

    வயிறு

    படிச்சவன் பார்த்த பார்வை

    நான் இன்னும் குழந்தையாம்

    ஓர் ஆண்பிள்ளை அழுகிறான்...!

    நரிப்பட்டி வேலம்மா

    செல்வாக்கு

    முன்னுரை

    WhatsApp Image 2024-06-03 at 3.18

    த. ஜெயகாந்தன்

    இந்தத் தொகுதியில் உள்ள 17 கதைகளும் 1973-லிருந்து 1984 வரையிலுமான 11 ஆண்டுகளில் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியானவை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பத்திரிகைகளில் நிறைய, தரமான, படிக்கத்தக்க சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன என்பதற்கு இந்தத் தொகுதி ஒரு சான்று.

    இதை ஒரு நல்ல சிறுகதைத் தொகுதி என்று சிபாரிசு செய்கிற நோக்கம் தவிர, நான் எழுதுகிற இந்த முன்னுரைக்கு இவற்றை விமரிசனம் செய்கிற உத்தேசம் ஏதுமில்லை.

    கதையைப் படித்து அனுபவிக்கிறோம்; சில கதைகள் மிக நன்றாக இருக்கின்றன. சில சுமாராக இருக்கின்றன. படிக்க முடியாமல் பாதியிலேயே மூடிவிட்டு ‘என்ன எழுதுகிறார்கள்!’ என்று அலுத்துக்கொள்ள வைக்காமலிருந்தால் போதும். அது ஒரு நல்ல சிறுகதைத் தொகுதியே ஆகும்.

    இந்தத் தொகுதியைப் படிக்க நேர்கிறவர்களுக்கு. ஜே.வி. நாதன் எழுதிய வேறு கதைத் தொகுதிகள் இருக்கின்றனவா என்று தேடிப் படிக்கத் தோன்றும் வண்ணம் இது அமைந்திருக்கிறது.

    வாழ்வின் நிகழ்ச்சிகளை மனிதாபிமானத்தோடு பார்த்து யதார்த்தமாகச் சித்திரிப்பது இந்த ஆசிரியரின் எழுத்துக்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

    இவர் கதைகளில் நமது கிராம வாழ்க்கையின் தேக்கமும் அவலமும் மனிதர் தம் சிறுமையும் அதே சமயம் அவர்களிடம் ஆழ்ந்து குடிகொண்டுள்ள மானுடப் பெருமையும், எந்த நம்பிக்கையுமில்லாத இந்த வாழ்க்கையின்மீது அந்த மனிதர்கள் கொண்டுள்ள பிடிப்பும் பற்பல சாயைகளுடன் சித்திரமாக்கப்பட்டுள்ளன.

    பல கதைகள் நம்பிக்கை வறட்சியை அடிநாதமாகக் கொண்டிருப்பது எழுதியவரின் குறையோ குற்றமோ ஆகாது. தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன் ஒருவர்தான் தனது கதைகளைத் தாமே துலாக்கோலால் நிறுத்துப் பார்த்து, அவற்றின் பொதுத்தன்மை ‘நம்பிக்கை வறட்சி’ என்று தீர்ப்பும் அளித்தவர். ஆயினும் நம்பிக்கை வறட்சியை அடிப்படையாகக்கொண்ட அவரது கதைகள் தாம் தமிழ்ச் சிறுகதை உலகத்துக்கே நம்பிக்கை தந்த சுடர்களாகும்.

    அவலமும், துயரமும், ஏற்றத்தாழ்வும் நிலவுகிற வாழ்க்கை மாந்தர்களைப் பிரதிபலிக்கும் கதைகளில் எழுதுபவன் தனது நம்பிக்கைகளைத் தம்பட்டமடிக்கச் சிறிதும் இடமில்லை. அவற்றைப் பிரதிபலிப்பதன் மூலம் எல்லாருடைய பார்வையையும் இந்த வாழ்வின்பால் திருப்பி ஒவ்வொரு மானுட மனத்தையும் மனுஷத்துவப்படுத்துகிற நோக்கம் நிறைவேறுகிறதே, போதாதா?

    கதை என்ற பேரில் பொய்யான பிரச்னைகளையும், போலி மாந்தர்களின் வக்கிர வாழ்வையும் விசேஷ வெளிச்சத்தில் காட்டி கண்ணும் மனமும் கூசிக் குறுகும்வண்ணம் சுயமரியாதையற்ற குப்பைகள் குவிந்து வரும் ஒரு விபரீத சூழலிலும் கணிசமான அளவு நல்ல கதைகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன என்ற நமது நம்பிக்கைக்கு இத்தொகுதி ஒரு நல்லடையாளமாகவே திகழ்கிறது.

    ஏழைகளின்பாலும், அனாதைகளின்பாலும், குறிப்பாக அபலைப் பெண்களின்பாலும் ஆசிரியருக்கு உள்ள ஆத்மபூர்வமான அபிமானமே இந்தக் கதைகளுக்கான ஊற்றுக்கள்.

    பாத்திரங்களைத் தேடிப் பிடித்துத் தங்கள் கதை எழுதும் தினவுக்குப் பயன்படுத்திக்கொள்ளுகிற தீய போக்கு இந்தக் கதைகளில் சிறிதும் இல்லை. மாறாகப் பாத்திரங்களைப் படைத்து அந்தப் பாத்திரங்களின்மேல் அபிமானமும் அன்பும், மரியாதை உணர்வும் கொண்டு, அவர்களின் மூலம் நிகழும் மனித நாடகத்தால் வாழ்வின் மீது தாக்கம் உண்டாக்க வேண்டும் என்ற இலக்கிய நோக்கம் இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கதையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றம் காண்கிறது.

    இது நல்ல எழுத்தின், நல்ல எழுத்தாளனின் பண்பாகும்.

    இத்தொகுதியில் உள்ள கதைகள் தேர்ந்த வாசகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். நல்ல கதைகளைப் படித்து நன்றாக இருக்கிறது என்று சொல்வதும், வாய்ப்பு நேருகிறபோது நன்றாக இருக்கிறது என்று இரண்டு வார்த்தைகள் எழுதுவதும் இலக்கியம் சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இந்தத் தொகுதிக்காக இதன் ஆசிரியர் திரு. ஜே.வி. நாதனைப் பாராட்டுகிறேன். படித்தவர் பாராட்டுவர்.

    சென்னை-78

    14-12-’89

    அன்பு

    த. ஜெயகாந்தன்

    என்னுரை

    ‘உங்களால் நிச்சயம் எழுத முடியும்’ என்று எனக்குள் எழுத்தாளனாகும் ஆசையை விதைத்தவர் எழுத்தாள நண்பர் பாசி. இராமச்சந்திரன்.

    ‘அனுபவம்... கண்டது... கேட்டது... அறிந்தது... உணர்ந்தது கொண்டு எழுதுங்கள். முதலில் சிறுகதைகளே பயிற்சிக்கேற்றது. சிறுகதைத் தொகுப்புக்கள் படித்தால் முறை... முறைகள்... புலப்படும். எழுதுங்கள். வெற்றி கிட்டும் வரை சோர்வடையாதீர்கள். வெற்றி பெறுங்கள்’ என்று 1966 நவம்பரில் ‘அகிலன்’ அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார். தொடர்ந்து நேரில் நான் சந்திக்கும் போதெல்லாம் என் எழுத்தின் வளர்ச்சிக்கு அறிவுரைகள் கூறி உற்சாகப்படுத்தினார்.

    சிதம்பரத்தில் நான் வசித்த விளங்கியம்மன் கோவில் தெருவின் கோடியில் மணிக்கொடி எழுத்தாளர் மௌனியும் வசித்தார். காலை, மாலை இரு வேளையும் நாங்கள் நடராஜர் ஆலயத்துக்குப் போவோம். நடக்கும்போதும் அவருக்கு இலக்கியப் பேச்சுத்தான். நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருப்போம். ஓயாது பேசுவார். என் சிறுகதைகளை அக்கக்காக விமரிசித்து விடுவார்.

    எழுத்தாளனுக்கு சுய விமர்சனம் தேவை என்று அடிக்கடி கூறிய மௌனியை ஒருமுறை கணையாழிக்காகப் பேட்டி கண்டபோது நல்ல சிறுகதை எது? என்று கேட்டேன். நல்ல சிறுகதை ஒரு கவிதை என்று பதில் வந்தது. எது கவிதை? என்று கேட்டேன். Poem is a linguistic artifact whose function is to organise the primary data of experience that can be exhibited in and through words என்று பதில் கூறினார். மௌனி தன் முதிய வயது கருதாது என்னோடு கொண்ட நட்பு, என் எழுத்துக்குப் பெரிதும் உதவியாக அமைந்தது.

    தொடர்ந்து வாராவாரம் என் சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் பிரசுரித்ததுடனன்றி, ‘துர்வாசன் பக்கம்’ என்ற பெயரில் இதழ்தோறும் பல்வேறு விஷயங்களை நான் எழுத எனக்காக ஒரு பக்கம் ஒதுக்கிக் கொடுத்தும் என்னை எழுத வைத்தார் ‘காஞ்சி’ வார இதழின் பொறுப்பாசிரியர் திருவாரூர் முத்துராமன்.

    துர்வாஸ ஜே. வி. நாதன் என்ற பெயரில் நீங்கள் கொங்குக் கிராமங்களை மையமாக வைத்து எழுதும் சிறுகதைகள் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து ‘தாமரை’க்கு எழுதுங்கள்! என்று நேரில் கூறி ஊக்கப்படுத்தியவர். ‘தாமரை’ மாத இதழின் பொறுப்பாசிரியர் பெரியவர், அன்பிற்கினிய கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்கள்.

    கடிதங்கள் மூலமும், என் சிறுகதைகளை வெளியிட்டும் நேரில் சந்தித்த போதும் உற்சாகப்படுத்தியவர்கள் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி, ‘கல்கி’ ஆசிரியர் கி. ராஜேந்திரன் ஆகியோர்.

    சிறுகதை எழுதிக்கொண்டிருந்த என்னை செய்திக் கட்டுரை எழுத வைத்தவர்கள் ‘ஜூனியர் விகடன்’ இணை ஆசிரியர் திரு. மதன், மற்றும் செய்தி ஆசிரியர் திரு. ‘ராவ்’ என்மீது நம்பிக்கை வைத்து (அதனாலேயே நான் மிக விழிப்புடன் செய்தி சேகரித்து) எழுத மூலகாரணமாக இருப்பவர் என் வணக்கத்துக்குரிய விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள்.

    எனக்கு உறுதுணையாக அவ்வப்போது ஆலோசனை நல்கும் இலக்கிய உலக நண்பர்கள் திரு. அகிலன் கண்ணன் நல்ல அறிஞரும் காவல்துறை அதிகாரியுமான திரு.டி. ராதாகிருஷ்ணன், ஐ.பி.எஸ்., பத்திரிகையாளர்கள் திரு. தணிகைத்தம்பி, திரு. பிச்சையா (அசரீரி) மற்றும் கவிஞர் அலிபூர் ரகீம், ஆகியோர்.

    எனது முதல் புத்தகமான இச்சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை கொடுத்து நூலுக்குப் பெருமை சேர்த்த திரு. ஜெயகாந்தன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

    இத்தனை பேருக்கும் என் நன்றியினை நெகிழ்வோடு கூறிக்கொள்ள இது நல்ல தருணம் என்பதால், இச்சமயத்தில் கரங்குவிப்புடன் அனைவருக்கும் என் இதயபூர்வ நன்றி.

    5, மூன்றாவது குறுக்குத் தெரு,

    வள்ளலார் நகர்

    சாயிநாதபுரம்

    வேலூர்-632001

    என்றும் அன்புடன்,

    ஜே.வி. நாதன்

    ஜே.வி. நாதன்

    *நானூறுக்குமேல் சிறுகதைகள், மூன்று தொடர் கதைகள், மூன்று குறுநாவல்கள், சுமார் ஆயிரத்திற்கு மேற்ப்பட்டக் கட்டுரைகள், இதுவரை பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.

    * ஆனந்த விகடன், கல்கி ஆகிய இதழ்களில் இவர் எழுதிய பல சிறுகதைகள் கன்னடத்திலும், தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு அந்த மொழிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

    * தேன்மழை, ஆன்ந்த விகடன் இதழ்களில் எழுதிய மூன்று சிறுகதைகள் ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் திறனாய்வில் சிறந்த சிறுகதைக்கானப் பரிசையும், பாராட்டையும் பெற்றுள்ளன.

    * ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட், மற்றும் பல இதழ்களில் கட்டுரைகள் எழுதிவரும் இவருக்கு, புலனாய்வில் அதிக ஈடுபாடு உண்டு. ‘ஜூனியர் விகடன்’ இதழில் இவர் மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக எழுதிய ‘முகமூடி (இல்லாத) கொள்ளைக்காரர்கள்!’ சிறந்த புலனாய்வுக் கட்டுரை என்று சென்னை ‘விஜில்’ அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப் பதக்கம் உள்ளிட்ட ‘பாஞ்சஜன்ய விருதினை’ இவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. மௌனி பற்றிய இவரது நூலும், ஆன்மிகம் குறித்து எழுதியுள்ள பல நூல்களும் பெரும் பாராட்டைப் பெற்று தந்திருக்கின்றன.

    நரிகள்

    எருதுகளை அவிழ்த்துக்கொண்டு கிணற்றுப் பக்கம் வந்தார் நல்லமுத்துக் கவுண்டர். எட்டிப் பார்த்தார். நாற்பதடி அகல-நீளப் பாறைக் கிணறு. சுமார் அறுபதடி ஆழத்தில் கொஞ்சம் தண்ணீர் தெரிந்தது.

    ஏனுங்கப்பா, தண்ணி ஊறிடுச்சா? செம்பில் காப்பி எடுத்து வந்த கவுண்டரின் மகன் கேட்டான்.

    காப்பிச் செம்பைக் கையில் வாங்கியபடியே கவுண்டர் சொன்னார். ரெண்டடித் தண்ணி ஊறியிருக்கு. ராகிக் காட்டுல பாதிக்குப் பாயும்போல. பாளாப்போன மானம் சதி பண்ணுதே கெரகம்... நீ கவலை பூட்டி ஓட்டுலே. நான் ராகிக் காட்டுக்குத் தண்ணி கட்றேன்.

    காப்பிக்குப் பின், மடியில் இருந்து வெற்றிலைப் பையை எடுத்து வெற்றிலை போட்டுக் கொண்டார். அதற்குள் எருதுகளைப் பூட்டி, சால்மாட்டி, தா...ட்ரிய...யோ என்று எருதுகளை விரட்டிக் கவலையோட்டினான், கவுண்டரின் மகன். ‘கீச்...ச்’ சென்று இராட்டினச் சக்கரம் சத்தம் எழுப்பத் தொடங்கியது.

    புகையிலைத் துண்டைக் கிள்ளி கன்ன உள்ளோட்டில் பதமாக அடக்கியவாறு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு மடைவெட்டிவிட ராகிக்காடு நோக்கி நடந்தார் கவுண்டர்.

    பருவ மழை பெய்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. ஆளியாற்றில் திறந்து விடும் தண்ணீர், ஊர் வாய்க்கால் வழியாக வருடத்திற்கு மூன்று மாதமாவது ஓடும்; அப்போது ஊர்க் கிணறுகள் ஊற்றெடுத்துக் கொள்வது வழக்கம்.

    ராகி, புகையிலை, சோளம், பருத்தி, கம்பு இப்படிப் பிரிவு பிரிவாக அந்தந்தப் பருவத்தில் மண்ணுக்கெட்டிய தொலைவுக்குப் பயிரிட்டு என்னமாய் மகசூல் எடுப்பார் அவர்!

    இந்த வருடம் மழையும் இல்லை; ஏனோ வாய்க்காலில் தண்ணீர் வரவுமில்லை; கிணறுகள் வறள ஆரம்பித்துவிட்டன.

    ஊரின் நுழைவாயிலிலேயே கன்னியாத்தா கோவிலின் வடபுறம் துவங்கி பனங்காடு என்று சொல்லப்படும் மலையடிவாரத்து நெழலிக்கரை வரை நல்லமுத்துக் கவுண்டரின் பூமிதான். பாதிக்குமேல் பண்டம், பாடிகள் மேய்க்கிற வறண்ட பூமியானாலும், மிச்சமிருந்த பூமியில் நல்ல விளைச்சல் காணும். கன்னியாத்தா கோவிலை ஒட்டியிருந்த அந்த அகண்ட, ஆழமான கிணற்றில் கவலை ஓடுகையில் ஊர் ஜனங்கள் தண்ணீர் முகந்து செல்வார்கள். ஆங்காங்கு கிணறு இருந்த போதிலும் இந்தத் தண்ணீருக்கு அவ்வளவு ருசி.

    அப்படியிருந்த கிணறுதான் இந்த வருடம் உள்வாங்கிக் கொண்டே சென்று, இரவில் இரண்டடித் தண்ணீர் ஊற, மறுநாள் அதை இறைத்துச் சாகுபடி செய்ய என்று ஆகி, அவர் முன்பு

    Enjoying the preview?
    Page 1 of 1