Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanna Unnai Thedugiren Vaa...
Kanna Unnai Thedugiren Vaa...
Kanna Unnai Thedugiren Vaa...
Ebook211 pages1 hour

Kanna Unnai Thedugiren Vaa...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உமாவும் ரமணனும் அக்கா தம்பி. மாளிகையில் வாழ்ந்த அவர்கள் சிறு வயதிலேயே வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். தாய் தந்தையின் மரணம் தற்கொலை என்று கோர்ட் தீர்ப்பு வழங்க, அது கொலை தான் என்று பூக்காரப் பெண் சொல்கிறாள். அவள் தான் அவர்களை வளர்க்கும் பணியை ஏற்றுக் கொள்கிறாள். பதிமூணு வயதில் உமா பூப்பெய்துகிறாள். அவளை அந்த கிராமத்தில் சந்திக்கும் ஷங்கர் அவளை காதலிக்கிறான். அவளும் அவனை நேசிக்க அவர்கள் பிரிய அவனை தேடுகிறாள். பல வருடங்கள் ஓடி விடுகிறது. அவனை ஒரு வழியாக அவள் சந்தித்த போது, அவனை குற்றவாளி என்று உணர்கிறாள்.

உமாவும் ரமணனும் அவர்களின் சொந்த வீட்டிலேயே அடிமையாக வந்து வாழும் சூழல் ஏற்படுகிறது. பெற்றோரை கொன்றவனை, தப்பிக்க வைத்த நீதிபதியை தேட அது யார் என்று புரிய.... குழப்பங்கள். பிரச்சனைகள்.... வலிகள்.... இவர்கள் வாழ்வுக்குள் சென்று பார்த்தால் தெரிவது இருள் தான். வெளிச்சத்தை தேடும் அவர்களின் முயற்சி பலித்ததா? சமூகத்தில் ஏமாற்றப்பட்ட அனாதை பிள்ளைகளின் விடியலை நீங்களும் தேடிப் பாருங்கள்... படியுங்கள்.

Languageதமிழ்
Release dateJun 8, 2024
ISBN6580174611183
Kanna Unnai Thedugiren Vaa...

Read more from Sankari Appan

Related to Kanna Unnai Thedugiren Vaa...

Related ebooks

Related categories

Reviews for Kanna Unnai Thedugiren Vaa...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanna Unnai Thedugiren Vaa... - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்ணா உன்னை தேடுகிறேன் வா...

    Kanna Unnai Thedugiren Vaa...

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 1

    மணக்க மணக்க கேசரியை தாயரித்து இறக்கி வைத்தாள் உமா. கொஞ்சம் தாராளமாகவே முந்திரிப்பருப்பு போட்டிருந்தாள். குளித்துவிட்டு வந்த ரமணன் ஆஹா...வாசனை மூக்கை துளைக்குதே... என்றபடி அடுப்படிக்கு வந்தான்.

    அக்கா...என்ன இன்னிக்கு தடபுடலான ஸ்வீட் ஐட்டம் செஞ்சிருக்கே.? என்ன விசேஷம் அக்கா?

    நீ வக்கீல் ஆகிட்டே. இதை விட பெரிய விசேஷம் வேறு என்ன இருக்க முடியும் இந்த அக்காவுக்கு? உனக்கு பிடிச்ச கேசரி செஞ்சிருக்கேன்...உக்காரு. சூடா இட்லியும் கேசரியும் வைக்கிறேன்...

    அக்கா...எல்லாம் உன் ஆசீர்வாதம். உன் உழைப்பு...உன் தியாகம்...உன் பாசம்...

    ஸ்டாப்...ஸ்டாப். ஆரம்பிச்சிட்டியா? என் உலகமே நீ தானே டா. நீ வேலையில் சேர்ந்ததும் உனக்கு நான் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடுவேன்...ஒ.கே தானே?

    உனக்கு தான் முதல்லே பார்க்கணும்... என்றபடி

    மனையை எடுத்து போட்டுக் கொண்டு தண்ணீர் கோரி வைத்துக் கொண்டு உட்கார்ந்தான் ரமணன். சூடான இட்லியும் சட்னியும் சாம்பாரும் பரிமாறிய அக்காவை பார்க்கும்போது அவனுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது. நெஞ்சு நெகிழ்ந்தது. அவன் வாங்கியிருக்கும் பிஏ.பி.எல் பட்டம் அவள் வேர்வை சிந்தி அவனுக்கு வாங்கிக் கொடுத்தது. அவள் படிப்பு மெட்ரிக்யோடு முடிந்தது. அவனைப் படிக்க வைக்க உமா தன் படிப்பை நிறுத்திக் கொண்டாள். டியூஷன் சொல்லிக் கொடுத்து...அக்கம் பக்கம் உடை தச்சுக்கு கொடுத்து...பூ கட்டிக் கொடுத்து என்று உழைத்தவள் கடைசியில் ஒரு பாஷன் டிசைனிங் கடை வைத்து பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறாள். உமா ஒரு தாயாக மாறி தந்தையாக படிப்பு கொடுத்து அன்புடன் தம்பியை வளர்த்தாள். அக்கா கஷ்டப்பட்டு தன்னை வளர்த்ததை அவனும் உணர்ந்தான். நன்கு படித்தான். முதல் வகுப்பில் தேறி அக்காவுக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தான்.

    டேய்...உன் கிட்டே ஒரு கேள்வி...

    என்னக்கா?...

    நான் சொல்றத நீ கேப்பியா டா?

    அவன் தட்டில் சூடான கேசரி விழுந்தது. அந்த இனிப்பு அவன் நாவில் கரைந்தது.

    என்ன விஷயம் அக்கா? நல்ல செய்தி தானே?

    ஒரு இனிப்பான செய்தி சொல்லப் போறேன் ரமணன்.

    என்னது அக்கா அது? உன் கேசரியை விடவா இனிப்பாக இருக்க முடியும்? உன் கை பக்குவமே பக்குவம்...

    பாராட்டு இருக்கட்டும்...ஜட்ஜ் சீதாராமன் மகன் மூர்த்தி பெரிய லாயர்ன்னு சொல்றாங்க. அவர் கிட்டே நீ அசிஸ்டண்டா சேரனும். ஜட்ஜ் அய்யா சரின்னு சொல்லியிருக்கார்...

    உமாவுக்கு பல பெரிய மனிதர்கள் வீட்டு பழக்கம் இருந்தது. எல்லாம் துணி தைத்துக் கொடுத்ததன் மூலம் கிடைத்த பழக்கம் தான். அவள் சினிமா நட்சத்திரங்களுக்கு கூட உடை தைத்துக் கொடுத்திருக்கிறாள்... யாரிடமும் அவள் இதுவரை தனக்கு என்று எதுவும் கேட்டதில்லை. முதல் முறையாக தம்பிக்காக ஜட்ஜ் சீதாராமனிடம் கை ஏந்தி நின்றாள்.

    அப்படியா? அக்கா...யார் கிட்டவும் நீ எனக்காக கெஞ்ச வேண்டமக்கா. என் திறமைக்கும் படிப்புக்கும் தானே வேலை கிடைக்கும். எந்த வக்கீலும் என்னை அசிஸ்டண்டா எடுத்துப்பாங்க. நீ கெஞ்ச வேண்டிய அவசியமில்லை அக்கா.

    நீ உலகம் தெரியாம பேசற டா. இந்த காலத்தில் படிப்புக்கும் திறமைக்கும் அபூர்வமாக சில இடத்தில் மதிப்பு தருவார்கள். இல்லேன்னு சொல்லலை. மற்றபடி எல்லாம் சிபாரிசு கேஸ் தான். பணம் கொடுத்தால் வேலை. பிரபல வக்கிலிடம் சேர்ந்தால் தானே நீ முன்னேற முடியும்? நான் சொல்றபடி அவர் கிட்டே போய் பேசு. சரியா?

    சரிக்கா. நீ சொல்லிய பிறகு நான் மறுப்பேனா?

    சாப்பிட்டுவிட்டு அவன் எழுந்தான்.

    காலை பத்துக்கு மேல் அவனை கோர்ட்டில் வந்து என்னை சந்திக்கச் சொல்லுன்னு சொல்லியிருக்கார்...

    துண்டை நீட்டியபடி சொன்னாள் உமா. அவன் அக்காவை பாசத்துடன் பார்த்தான். பாவம் பத்து வருடமாக அவள் உழைத்து உழைத்து அவனை படிக்க வைத்தாள். இருபத்தியாறு வயதிற்குள் அவள் நிறைய கஷ்டங்கள் அனுபவித்துவிட்டாள். அவளை கண் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ரமணன்.

    என் அக்கா ஒரு ஜெம். அவங்க இல்லாட்டி நான் இல்லை.

    தாரக மந்திரம் போல் தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பான். அவன் நண்பர்கள் இடக்காக கேட்பார்கள்.

    ஏய்...உங்க அக்கா யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு உன்னை விட்டு போகப் போறவங்க தானே...அப்புறம் நீ அநாதை தான்... அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும்.

    போங்கடா...பொறாமை புடிச்சவங்க நீங்க. நான் எங்க அக்காவை விட்டு பிரியவே மாட்டேன். என்னை பத்து வயசிலிருந்து வளர்த்த தெய்வம்...

    அவர்கள் சிரிப்பார்கள்.

    நார்மலா இருடா. எதுக்கு இந்த ஓவர் செண்டிமெண்ட்?. அவங்க கடமையை அவங்க செஞ்சாங்க. உனக்கு அப்பாவும் அம்மாவும் சின்ன வயதிலேயே போன பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்தீங்க. அதுக்காக அப்படியே இருக்க முடியுமா? உனக்குன்னு குடும்பம் வரும்...அவங்களுக்குன்னு குடும்பம் வரும். அப்பவும் இப்படி ஒட்டிட்டு இருக்க முடியாதுடா...

    அப்ப எனக்கு கல்யாணமே வேண்டாம்... என்று வாதாடுவான்.

    என்னடா...பதில் சொல்லாம எதையோ யோசிட்டு இருக்கே? அவரைப் போய் பார்ப்பியா மாட்டியா? என்று உமா கேட்டதும் தன் நினைவுக்கு வந்தான்.

    இன்னிக்கே பார்க்க போறேன் அக்கா...டோன்ட் வொர்ரி.

    ப்பா...எனக்கு இப்ப தான் நிம்மதி.

    அவன் தன் உடையை அயர்ன் பண்ண ஆரம்பித்தான்.

    கொடுடா...நான் பண்றேன்...

    ஏன் எனக்கு கை இல்லையா என்ன? நான் பள்ளிக்கு போகும் போதும் கல்லூரிக்கு போகும் போதும் நீ தான் பண்ணித் தருவே. இப்ப நான் வெட்டி ஆபீசரா வீட்டிலே தானே இருக்கேன். நானே பண்ணிக்கிறேன்...உனக்கு ரெஸ்ட் கொடுக்கணும் அக்கா. அது தான் எனக்கு ஆசை. நீ உழச்சு நான் படிச்சேன்...வேலையில் சேர்ந்து இனி நான் உழச்சு உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். அவன் சொல்லியபோது உமாவின் நெஞ்சு நெகிழ்ந்தது. மனசு நிறைந்துவிட்டது.

    ரமணன் ஐயர்ன் பண்ணிய உடையை போட்டுக் கொண்டு வந்து நின்றான். பூஜை ஸ்டாண்டிலிருந்து விபூதி எடுத்துக் கொடுத்து

    அக்கா எனக்கு உன் ஆசீர்வாதம் வேண்டும்... அக்காவின் காலில் விழுந்தான்.

    என் ராஜா...நீ நல்லாயிருக்கனும். நல்ல பெண் கிடைத்து கல்யாணம் பண்ணி...பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழணும்...

    தாங்க்யூ அக்கா...நான் வரேன்...

    ஓடும் தம்பியையே வாத்சல்யத்துடன் பார்த்தாள் உமா. எவ்வளவு கம்பீரமாக இருக்கிறான்!. தலை நிறைய சுருள் முடியோடு மூளையும் இருந்தது. மனசு நிறைய அன்பு. அப்படியே அப்பா ராஜசேகரின் பிரதிபிம்மம். அப்பாவை நினைக்கும் போது அவளுக்கு கண் கலங்கியது.

    அவளுக்கு பத்து வயது. தம்பி ரமணனுக்கு ஏழு வயது...அந்த வயதில் கிடைத்த அதிர்ச்சி யாருக்கும் வரக்கூடாது. தாங்கக் கூடிய சம்பவமா அன்று நடந்தது? அது ஒரு கருப்பு நாளாக அமைந்தது அவர்களுக்கு.

    உமாவும் ரமணனும் அருமையான பெற்றோருக்கு தவப் புதல்வர்களாக பிறந்தார்கள். செல்வ செழிப்பு நிறைந்த சொகுசான வாழ்க்கை. இம் என்றால் இந்தப் பக்கம் ஒரு வேலையாள்...அந்தப் பக்கம் ஒரு வேலையாள் வந்து நின்றார்கள். ஏதோ பணம் மரத்தில் காய்த்து தொங்குவது போலவும் அவர்கள் பறித்துக் கொண்டு வந்து செலவழிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் போலவும் இருந்தது. அம்மா கௌசல்யா பிள்ளைகளை தரையில் நடக்க விட்டதில்லை. அவ்வளவு செல்லம். அப்பா ராஜசேகர் பற்றி கேட்கவே வேண்டாம்...தினம் பிறந்த நாள் கொண்டாடுவது போல் கேக்கும் புது உடைகளும் வீட்டுக்கு அடிக்கடி வாங்கி வருவது அவர் வழக்கம். உமாவுக்கு கோவிலுக்கு போவது மிகவும் பிடித்த விஷயம். அவளுக்கு திருவருட்பா பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். அம்மா கௌசல்யா பாடும் போது அவளுக்கும் மனப்பாடம் ஆகியிருந்தது. தாய்ப் பாலோடு அவள் மகளுக்கு தமிழ் பாலையும் சேர்த்து ஊட்டினாள்.

    கௌசல்யாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். காலையிலேயே குளித்து பூஜை செய்து பின்னர் தான் அவள் மற்ற வேலைகளை கவனிப்பாள். உமாவின் பாட்டி சிவகாமி அங்கு தான் இருந்தார். அவருக்கு வயது எழுபது. இந்த மருமகளைத் தான் அவருக்குப் பிடிக்கும். ஆசாரம் அனுஷ்டானம் என்று மடியாக இருப்பார். குளிக்காமல் அவரை பிள்ளைகள் போய் தொட்டால் அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். ரமணன் பாட்டியிடம் நிறைய வம்பு பண்ணுவான். சிவகாமி அம்மையார் குளித்துவிட்டு நார்மடி புடவை பின் கொசவம் வைத்துக் கட்டிக் கொள்வாள். பூஜை முடித்த பின் தான் வேறு சாதாரண புடவை உடுத்துவாள்.

    பேரன் அடிக்கடி குளிக்காம வந்து தொட்டிடறான். அதான் நார்ப்பட்டு கட்டிக்கிறேன்... என்பாள்.

    அப்ப இந்த புடவை கட்டிகிட்டா தீட்டு இல்லையா பாட்டி? என்று கிண்டல் செய்வான். பாட்டி எப்போதும் குருநாதா உண்டு என்று சொல்வாள். அதை கேலி பண்ணி பாட்டி போல் நடந்து காட்டுவான். பாட்டி ஒரு ரூலரை எடுத்துக் கொண்டு அடிக்க வருவாள். சுற்றி சுற்றி ஓடும் அவனை எங்கே அவள் பிடிக்க முடியும்? இந்த காட்சியைப் பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள்.

    கிட்டே வா பொளந்திடரேன்... என்பாள். இந்த சண்டை வாடிக்கையாக நடக்கும். உமா தம்பியை திட்டுவாள்.

    பாவம்டா பாட்டி...உன்னை அப்பாக் கிட்டே போட்டு கொடுக்கிறேன்... என்பாள். அவன் விழுந்து விழுந்து சிரிப்பான். ஏனென்றால் அப்பாவிடம் சொன்னால் அவர் தன் அம்மாவைத் தான் திட்டுவார்.என்னம்மா...எம் பிள்ளைக் கிட்டே வம்பு பண்றே? பேரன் கிண்டல் பண்ணாமல் வேறு யாரு கிண்டல் பண்ணுவாங்களாம்?

    நீ செல்லம் கொடுத்து கொடுத்து அவன் என் தலை மேலே மிளகாய் அரைக்கிறான்...எப்படியோ போங்க... என்பார் சிவகாமி.

    திட்டுவாரே தவிர அவருக்கு பேரப் பிள்ளைகள் என்றால் உயிர்.

    அவர்களோடு தாயம் விளையாடுவார். பரமபதம் விளையாடுவார்.

    ரமணன் தப்பாட்டம் ஆடுவான். ரெண்டு போட்டுவிட்டு ஆறு போட்டேன் பன்னெண்டு போட்டேன் என்று பொய் சொல்வான். அப்படியும் பாட்டியை அவனால் ஜெயிக்க முடிந்ததில்லை. பரமபதத்திலும் அப்படித்தான். விறுவிறு என்று தப்பாட்டம் ஆடி இறுதி சுற்றுக்கு வந்துவிடுவான். ஆனால் கடைசியில் எட்டு கட்டம் தாயம் போட்டு தான் ஜெயிக்க வேண்டும். அவன் போடுவதற்குள் பாட்டியின் காய் அங்கு வந்துவிடும். இவன் பாம்பு வாயில் அகப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே வந்துவிடுவான். பாட்டி சுலபமாக தாயம் போட்டு ஜெயித்துவிடுவாள்.

    போ பாட்டி...உன்னை தோக்கடிக்கவே முடியலை... என்று சிணுங்குவான்...சிவகாமி பாட்டி பேப்பரில் பை செய்து கொடுப்பார். சைக்கிளில் வேர்கடலை பொரி விற்றுக்கொண்டு போகிறவனை கை தட்டி கூப்பிடுவார். வேர்கடலையும் பொரியும் வாங்கி வைத்திருப்பாள். பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வந்ததும்...ஏய் வாங்க ரெண்டு பேரும்...என்று கூப்பிட்டு பொரியும் கடலையும் கலந்து அவள் செய்த பேப்பர் பையில் போட்டுக் கொடுப்பாள். எவ்வளவோ விலை உயர்ந்த ஸ்வீட்ஸ் வாங்கித் தருவார் அப்பா...ஆனால் உமாவுக்கும் ரமணனுக்கும் இந்த பொட்டலம் தான் ஃபேவரட்.

    பாட்டியின் நினவு வரும் போதெல்லாம் உமா பேப்பரில் பை செய்து வைப்பாள். அப்படி செய்த பைகள் நிறைய இருக்கின்றன.

    என்னக்கா இதெல்லாம்? பார்த்துவிட்டு ஒரு நாள் கேட்டான் ரமணன். உமாவின் கண்களில் ஈரம்.

    சிவகாமி பாட்டி நமக்கு வேர்கடலை பொரி திங்க பேப்பரில் பை செய்து தருவாங்களே...நினைவிருக்கா? அவங்க நினைவு வரும் போதெல்லாம் எனக்கு இப்படி செய்து வைக்கத் தோணும். அதை தூரப் போடப் பிடிக்காது...

    அவனும் நெகிழ்ந்து விடுவான்.

    ச்சே பாட்டியை நான் விளையாட்டில் எவ்வளவு ஏமாத்துவேன்...இப்ப நினைச்சா அவமானமா இருக்கு...

    விடுடா...சின்ன வயசு வால்தனம்...அதை பாட்டி ரசிப்பாங்க தெரியுமா?

    அப்படியா? என்னை அடிக்க வருவாங்களே...

    "அதெல்லாம் சும்மா...அம்மாகிட்டே சொல்வாங்க. கௌசி அந்த புள்ள ரமணன் சாப்பிட்டானா? அவனுக்கு லட்டு குடுத்தியா? அவனுக்கு இட்லி உப்புமா பிடிக்கும்.

    Enjoying the preview?
    Page 1 of 1