Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neela Vanam Neeyum Naanum
Neela Vanam Neeyum Naanum
Neela Vanam Neeyum Naanum
Ebook176 pages59 minutes

Neela Vanam Neeyum Naanum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரேடியோ ஸ்டேஷனில் கன்டென்ட் ரைட்டர் ஆக இருக்கும் ரிதன்யாவிற்கு வேலையே பெரிய சவாலாக இருக்கிறது. அவளுடைய சீனியர் பிரதீப் அதற்கு ஒரு தீர்வு சொல்கிறான். அதை செயல்படுத்த முயலும் பொழுது அவள் சந்திக்கும் சுவாரசியமான சம்பவங்கள் ஒரு பெரிய ஃபிலிம் ஸ்டார் தருண் அறிமுகம். வீடியோவை மட்டும் நம்பும் அவனுடைய குடும்பம் இதை எல்லாம் தாண்டி அவள் ரேடியோ வாழ்க்கையில் வெற்றி பெறுகிறாளா? நாவலுடன் இணைந்து இருங்கள் தெரிந்து கொள்வதற்கு...

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580140911199
Neela Vanam Neeyum Naanum

Read more from Lakshmi Sudha

Related to Neela Vanam Neeyum Naanum

Related ebooks

Reviews for Neela Vanam Neeyum Naanum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neela Vanam Neeyum Naanum - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீல வானம் நீயும் நானும்

    Neela Vanam Neeyum Naanum

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 1

    தொலை தூரத்தில்

    ஒரு

    புள்ளியாக

    நீ

    தெரிகிறாய்

    என்னை

    அறியாமல்

    என் கால்கள்

    உன்னை

    நோக்கி

    நடக்கின்றன...

    ஏதோ

    ஒரு

    மாய

    சக்தியால்

    இழுத்துச்

    செல்லப்படுவது

    போல்

    நான்

    உணர்கிறேன்

    என்னுள்ளே

    ஏதோ

    ஒரு

    பரவசம்...

    புதிய

    அனுபவம்...

    "ரேடியோ வானில் இன்று என்னோட சேர்ந்து பறக்க போற உங்க எல்லாருக்கும் என்னுடைய அன்பான காலை வணக்கம்.

    காலையிலேயே சூரியன் இப்படி வெயில் அடிச்சா

    எந்த வேலையுமே செய்ய முடியல அப்படின்னு நீங்க புலம்பறது என்னோட காதிலையும் கேக்குது என்ன செய்யறது.

    குளோபல் வார்மிங் அப்படின்னு சொல்லி நிறைய அவர்னஸ் கிரியேட் பண்றவங்க இந்த வெயில சமாளிக்கிறதுக்கு என்ன டிப்ஸ் அதையும் சொல்லறாங்க.

    இன்னும் மூணு மாசம் இப்படி தான் இருக்கும். சூரியன் நம்ம பக்கத்து வீட்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும். எது நடந்தாலும் பரவாயில்லை சமாளிச்சுக்கலாம். ஜாலியா இருந்த நான் உங்க ரிதன்யா. ரேடியோ வானில் பறக்கலாம்... ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு"

    அடுத்த ஒரு மணி நேரம் நேயர்களுடன் பேசுவதிலும் அவர்கள் விரும்பும் பாட்டை ஒலிக்க செய்வதிலும் போனது ரிதன்யாவிற்கு.

    "ஹாய்... ரித்து... சோ இன்னைக்கு உனக்கு ப்ரோக்ராம் முடிஞ்சிருச்சு.

    எனக்கு ஈவினிங் ஸ்லாட். முக்கியமான நிகழ்ச்சி.

    ஐபிஎல் பற்றி ஒரு விவாதம்."

    என்றாள் ஷாலினி.

    ஓ ஆல் த பெஸ்ட்... கிரிக்கெட்டர் சீக்கா வராரு தானே. அப்புறம் என்ன ஷோ லைஃப்லியா இருக்கும்.என்றாள் ரிதன்யா.

    அது கரெக்ட் தான். அப்புறம் டைரக்டர் சார் ப்ரோக்ராம் முடிந்த உடன் உன்னை பார்க்க சொன்னார்."

    ஓ அப்படியா... தேங்க்யூ. நான் அவரை மீட் பண்ணி விட்டு அப்புறம் கிளம்புகிறேன். என்றபடியே பிரதீப் அறை நோக்கி நடந்தாள் அவள்.

    குட் மார்னிங் சீனியர் என்றபடியே அறைக்குள் நுழைந்தாள் அவள்.

    குட் மார்னிங்...

    அவன் குரலில் இருந்தே தெரிந்தது அவன் கோபமாக இருக்கிறான் என்று.

    என்ன விஷயம் சீனியர் எதுக்கு என்ன வர சொன்னீங்க:

    "போன வாரம் நீ பண்ண ப்ரோக்ராம் ஓட ஃபீட்பேக்.

    நீயே கண் குளிர பார்." ஒரு ரிப்போர்ட்டை கிட்டத்தட்ட டேபிள் மேல் அவள் முன்னால் வீசினான் அவன்.

    ஒன்றிலிருந்து பத்து வரை ஃபீட்பேக் கொடுக்கலாம். ஒன்று ரொம்ப மோசம் 10 ரொம்ப சூப்பர்.

    அவளுடைய போதாத நேரம் பாதி பேர் அவளுக்கு இரண்டு மூன்று என்று ஃபீட்பேக்கை வாரி வழங்கி இருந்தார்கள். கமண்ட் கேவலமாக இருந்தது.

    ‘ என்ன சார் எப்ப பாரு பாட்டு இல்ல ஒரு விஷயம் இந்த பொண்ணு டல்லா பேசுது.

    ப்ளீஸ் வேற யாராவது போடுங்க. காலையில தூக்கம் தான் வருது. ‘என்று யாரோ ஒரு புண்ணியவான் கமெண்ட் வேறு செய்து இருந்தான்.

    அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்பட்டது.

    அவள் முகம் வாடுவதை அவன் கவனித்தான்.

    "லுக்... உடனே இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

    நான் அப்பவே சொன்னேன். ரேடியோ ஜாக்கி வேறு ரேடியோ ரைட்டர் வேறு. உன்னுடைய ரைட்டிங் நன்றாக இருக்கிறது. அதிலேயே போக்கஸ் செய் என்று உனக்கு பலமுறை சொன்னேன்.

    நீ பிடிவாதமாக ஒரு ப்ரோக்ராம் செய்ய வேண்டும் என்று சொன்னதால்தான் உன்னை காலை சோவிற்கு போட்டேன்.

    சேர்மன் வேறு இதெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னார். ஆனால் அதையும் தாண்டி நான் துணிந்து உன்னை காலை நேர ப்ரோக்ராம் செய்யும்படி சொன்னேன்.

    ஆனால் இது வேலைக்காகாது என்று நினைக்கிறேன். சோ நீ ரேடியோ ரைட்டிங் வேலைக்கு திரும்பலாம். புரிகிறதா"

    ஓகே சீனியர் என்றாள் சோகமான குரலில் அவள்.

    அத்தியாயம் 2

    வண்ண

    வண்ண

    பூக்கள்

    சாலையில்

    எங்கும்

    பூத்து

    உள்ளன...

    வசந்த கால

    வருகையின்

    முன்னோட்டம்

    இந்த

    வண்ண

    பூக்கள்...

    என் மனம்

    பின்னோக்கி

    என் வசந்த

    காலத்தை

    அசை

    போடுகிறது...

    நானே

    எனக்கு

    பாரமாக

    இருந்த

    நாட்கள்

    அவை...

    தெரிந்தும்

    நீ வந்தாய்

    என்னுடைய

    வாழ்க்கையில்

    ஒரு வானவில்லாக...

    "உன்னுடைய ஐடியாக்கள் எல்லாம் நல்லா இருக்கு.

    உன்னை மாதிரி முகம் தெரியாத ஒரு பெண் எந்த பாப்புலாரிட்டியும் இல்லாத ஒரு பெண் இதெல்லாம் ரேடியோவில் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    உன்னுடைய ரைட்டிங் ரொம்ப சீரியஸ் ஆக இருக்கிறது அதை மாற்ற முயற்சி செய்.

    இல்லை நான் இப்படியே தான் இருப்பேன் என்றால் நீ வேறு எங்காவது வேலை தேடிக்கொள் "என்றார் கண்டிப்பான குரலில் சேர்மன்.

    இல்லை சார் நான் அவளிடம் பேசுகிறேன். என்ன சொல்ல வருகிறேன் என்றால் என்று பேச முனைந்த பிரதிப்பை பாதியில் கட் பண்ணினார் அவர்.

    "போதும் பிரதீப் தம்பி. அந்த பொண்ணு உனக்கு தெரியும் என்று சொன்னதால் வேலையில் சேர்த்தேன்.

    ஆனால் இதோட நாலு மாசம் ஆகிவிட்டது அவளுடைய ஃபீட்பேக் இதுவரை ஒன்று கூட நன்றாக வரவில்லை.

    உனக்கே தெரியும் இப்பொழுது டிவி வந்த பிறகு மக்கள் ரேடியோவை பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

    அப்படி இருக்கும் பொழுது இந்த மாதிரி டல்லாக ஒரு ப்ரோக்ராமை என்னால் சும்மா நடத்திக் கொண்டிருக்க முடியாது. புரிந்ததா இன்னும் இரண்டு நாட்களில் எனக்கு முடிவு தெரிந்தாக வேண்டும்.

    ரிதன்யாவை வைத்து என்ன ஷோ செய்யப் போகிறோம் என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும்.

    என்னால் சும்மா தர்மத்திற்கு பே செய்ய முடியாது." என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தார் சேர்மன்.

    "சீனியர் ரொம்ப சாரி. என்னால் உங்களுக்கும் கெட்ட பெயர். நான் இப்பொழுது என்னுடைய ராஜினாமாவை சப்மிட் செய்கிறேன்.

    எனக்கு இங்கே ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ஐ அம் சாரி "என்று சொல்லும் பொழுதே அவள் குரல் உடைந்தது.

    " லுக் உன்னுடைய நன்றி,உரையை கேட்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை.

    நான் சொல்வதைக் கேள்.

    உன்னுடைய ரைட்டிங் கண்டன்ட் நன்றாக இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

    ஆனால் அது ரேடியோ லிசன்நர்சை சென்று அடைய வேண்டும் என்றால் சேர்மன் சொன்னது போல அது ஒரு பாப்புலர் பெர்சனாக இருக்க வேண்டும்.

    அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்தாக வேண்டும். அதனால் நீ..."என்று அவன் முடிக்கும் முன்பு அவள் குறுக்கிட்டாள்.

    "சாரி சீனியர் இது ஒர்க் அவுட் ஆகும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    சேர்மனுக்கு என்னை சுத்தமாக பிடிக்கவில்லை.

    என்னால் உங்களுடைய பெயர் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை"

    "நீ இன்னும் மாறவில்லை காலேஜ் டேசில் இருந்தது

    போல் தான் இப்பொழுதும் இருக்கிறாய்.

    அவசர குடுக்கயாக... சென்சிட்டிவாக இருக்கிறாய்.

    ஒருவர் நம்மை எடுத்தெறிந்து பேசுகிறார் சவால் விடுகிறார் என்றால் அதை சும்மா விட்டு விடக்கூடாது.

    அவர்களுடைய பாயிண்ட் தப்பு என்று நிரூபிக்க வேண்டும்.

    அதை விட்டுவிட்டு கோழை போல் அந்த இடத்தை விட்டு போகக்கூடாது.

    அதுவும் அவர் அன்ரீசனபுலாக எதுவும் சொல்லவில்லை.

    சொன்ன விதம் வேண்டுமானால் தப்பாக இருக்கலாம்.ஆனால் அவர் சொன்னதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதனால் நீ என்ன செய்ய வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன் அதன்படி கேட்டு நட. புரிந்ததா?" என்றான் கடுமையான குரலில் அவன்.

    பிரதீப் முடிவு செய்தால் அதில் எந்த மாற்றமும் இருக்காது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.

    அதோடு தன்மேல் அவன் வைத்திருக்கும் நம்பிக்கை வீணாக கூடாது என்பது அவளுக்கு உரைத்தது.

    அதனால் சரி என்று முனங்கினாள்.

    என்ன குரலில் ஒரு ஜோசே இல்லை என்றான் அவன்.

    சரி என்று காட்டு கத்தலாக கத்தினாள் ரிதன்யா.

    ஓ மை காட் அடையாறில் இருந்து அம்பத்தூர் வரை இது கேட்கும் போலவே என்றான் அவன் சிரித்தபடியே.

    நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் சீனியர் என்றாள் சிரித்தபடியே அவள்.

    "தட் இஸ் தி ஸ்பிரிட். முதலில் ஒரு பாப்புலர் பர்சனை கண்டுபிடிக்க வேண்டும்.

    அதுவும் மற்ற சேனல்களில் வராத ஒருவராக இருக்க வேண்டும்... அந்த மாதிரி இருந்தால் சேர்மனால் மறுப்பு சொல்ல முடியாது "

    சார் நான் உள்ளே வரவா என்று ஷாலினி குரல் கேட்டது.

    வா வா வா. என்னுடைய அறை எப்பொழுதும் ஓபன் டோர் பாலிசி தான் என்றான் பிரதீப்.

    "தேங்க்யூ சார். நாளைக்கு எனக்கு லீவு வேண்டும்.

    எனக்கு எந்த ப்ரோக்ராமும்

    Enjoying the preview?
    Page 1 of 1