Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavin Varavu
Ammavin Varavu
Ammavin Varavu
Ebook143 pages54 minutes

Ammavin Varavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அம்மாவின் வரவு " என்ற சிறுகதை நுட்பமான உணர்வை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை யாருக்கு வரமாக அமைகிறது? எல்லாம் சாபம் என்பது போல்தான் நிகழ்வுகள் நடக்கிறது. எளிய குடும்பம், வறுமை, கல்வி கற்கவே வசதியற்ற பிரச்சனையென களம் விரிகிறது.

நாயகன் காத்திருப்பது போலவே நாமும் காத்திருக்கத் துவங்குகிறோம். இதுதான் கதையின் பலமாகவும் அமைகிறது. "மேஸ்திரி' என்ற கதை எத்தனை இடர்கள் வரினும், எத்தனை தடைகள் இலக்கைத் தடுத்தாலும் காலம் ஒரு நாள் பரிசுக்கோப்பையைத் தருமென்பதைக் கூறும் சிறந்த சிறுகதை.

இப்படி கதைகள் தோறும் பயணிக்கிற போது கதையாசிரியரின் உலகம் விரிந்து விரிந்து எல்லையற்றதாகிறதுநிறைவேறாத ஆசைகள், உண்மையும், பொய்யும் தன்னைத்தானே ஆய்வுக்குட்படுத்திக் கொள்கிற குணம். உண்மையான காதல் உணர்த்தும் உளவியல், சமூகத்திற்கு எது தேவை, எது தேவையில்லையென்கிற பக்குவம் என கதைகள் பரந்த தளத்தில் விரிந்துள்ளது.

நேர்மையோடு வாழ்கிறவர்களை எப்போதும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றே முத்திரை குத்துகிறவர்களும் அந்த உழைப்பைப் புரிந்து கொள்கிற நம்பிக்கையென கதைகள் வாழ்வியலின் பக்கங்களை அடையாளப்படுத்துகிறது. பல்வேறு தேர்வுகள் இன்றைய மாணவர்களின் மனநிலையை எவ்வாறு சிதைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளச் சின்னஞ் சிறுகதையும் தொகுப்பில் உண்டு.

இக்கதைகளில் சமூகம் சார்ந்த கோபங்கள், தனிமனிதத் துயரங்களென யாவும் உண்டு. இக்கதைகளை வாசிக்கிற வேளையில் நமக்குள் இச்சமூகம் குறித்தான சில வினாக்கள் எழுவது உறுதி.

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580146511188
Ammavin Varavu

Read more from Kavimugil Suresh

Related to Ammavin Varavu

Related ebooks

Related categories

Reviews for Ammavin Varavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavin Varavu - Kavimugil Suresh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மாவின் வரவு

    Ammavin Varavu

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    பொருளடக்கம்

    என்னுரை

    வாழ்த்துரை

    அணிந்துரை

    அம்மாவின் வரவு

    மேஸ்திரி

    நாதஸ்வரம்

    அரவணைப்பு

    அறக்கட்டளை திருடர்கள்

    மை விரல்

    பயணம்

    உயரம்

    காதல் தழும்பியது

    மன்னிக்க மனம் கூடுதே

    யாதும் ஊரே

    கடனாளிகள்

    அம்மாவின் மோதிரம்

    இணைந்த உறவுகள்

    தருமராஜன்

    சமர்ப்பணம்

    இலக்கிய ராட்சசன்

    எழுத்துலகின் கம்பீரம்

    காலங்கள் போற்றும்

    சமூக சீர்திருத்த படைப்பாளி

    மறைந்தும்

    தன் வார்த்தைகளால்

    உயிர்ப்போடு

    நம் மனங்களில் வசிக்கும்

    திரு.ஜெயகாந்தன் அவர்களுக்கு

    என்னுரை

    இச்சிறுகதை தொகுப்பில் ஒவ்வொரு கதையும் நீங்கள் வாசிக்கும் போது உங்கள் வாழ்வில் நடந்த அல்லது கண்ட ஏதாவது ஒரு நிகழ்வு உங்கள் மனத்திரையில் படமாக பளிச்சிடும்

    நமது வாழ்வியலில் இருக்கின்ற நடக்கின்ற பிரச்சினைகளை எழுதி இருக்கிறேன்

    ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு கருத்தோட்டம் தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் உணர்த்தும் படியாக இருக்கும்

    வாசிக்கிற உங்கள் ஒவ்வொருவருடைய மனநிலையிலும் அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றபடி அவரவர்களின் அனுபவங்களை ஏற்றபடி கருத்துக்களை விளங்கிக் கொள்ளும்படி செய்யும் இக்கதைகள்

    வாசிப்பவர்கள் உள்ளங்களில் நிச்சயம் பல நல்ல மாற்றங்களை நிகழ்த்தும் என்பது என்னுடைய நம்பிக்கை

    இக்கதைகளை வாசிக்கும் அன்பு வாசகர்களின் மனக்கண்ணோட்டத்தையும் கருத்தையும்

    ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

    இச்சிறுகதை தொகுப்பிற்கு தங்களின் நேரத்தை ஒதுக்கி இக்கதைகள் முழுவதையும் வாசித்து சிறப்பான அணிந்துரை வழங்கின தோழர் க.அம்சப்ரியா அவர்களுக்கும்,

    வாழ்த்துரை வழங்கின அன்பு சகோதரி டெய்சி மாறன் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

    இப்படிக்கு

    கவிமுகில் சுரேஷ்

    அலைபேசி எண் 8610422455

    kavimugilsuresh@gmail.com

    வாழ்த்துரை

    ஒரு சிறந்த படைப்பை படிக்கும்போது பூக்கள் மலர்ந்திருக்கும் நந்தவனத்தில் உலாவுவது போல் ஒரு இதத்தை தர வேண்டும்

    படைப்பின் ஓட்டமும் நடையும் படிப்பவரின் மனதில் ஒன்றிப் படைப்போடு பயணிக்கும் விதத்தில் அமைய வேண்டும்

    எழுத்தாளர் கவிமுகில் சுரேஷ் அவர்களின் சிறுகதைகளை படித்த போது எனக்குள்ளும் அப்படிப்பட்ட ஓர் உணர்வு தோன்றியது வேகத்தடையின்றி வாசித்து முடித்தபோது அது மழலையின் இதழ் பதித்த நிறைவை எனக்களித்தது

    ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் புரிந்து உணர்வோடு களமிறக்கி இருக்கிறார் வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்பார்கள் ஆனால் வலிகளை உடைத்து வாழ்க்கையே வரங்களாய் பெற்றது போல் உணர்ந்தேன் இந்த சிறுகதைகளை வாசித்தப் போது

    ஒரு ஆளுமை ஆணின் சாதனைகளைக் காட்சிப்படுத்தியது போல மனதிற்குள் லயித்துப்போனது

    ஒரு தரமான திரைப்படத்தை பார்த்த முழு நிறைவோடு எழுதப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்

    வாசிக்கும் போதே அந்த தளத்திற்குள் நம்மை கொண்டு சேர்த்துவிடுகிறது காட்சி வடிவிலான எழுத்து பலராலும் பேசப்படும் நேசிக்கப்படும் என்பது நிச்சயம்

    அதையும் தாண்டி சமூகப் பார்வையோடு பல கருத்துக்களை முன் வைத்து தனி முத்திரை பதித்திருக்கிறார் நாவலாசிரியர் கவிமுகில் சுரேஷ் அவர்கள்

    போராட்டம் இன்றி வாழ்வது சாத்தியம் இல்லை இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினத்திற்கும் சாத்தியமாய் அது அமைந்ததும் இல்லை

    முயற்சி என்ற ஒற்றைப் புள்ளியில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது தன் குடும்பம், தன் குழந்தை, உறவினர்கள், நண்பர்கள் இப்படி யாரோ ஒருவரின் மீதான நேசம் தான் நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக் கொண்டிருக்கிறது

    அப்படி இருக்கும் வேளையில் தன்னுடைய கருத்தினை அழகாய் வடித்து மனங்களில் சிம்மாசனம் நிறுத்தி இருக்கிறார் நூலாசிரியர்

    அவர் மேலும் பல புத்தகங்களை வெளியிட்டு சமுதாயத்திற்கு நல்லதோர் தகவலை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

    இப்படிக்கு அன்புடன்

    டெய்சி மாறன்

    நாவலாசிரியர்

    ( சின்னத்திரை சன் டிவி வெள்ளித்திரையின் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா)

    அணிந்துரை

    வாழ்வின் பாதையாகும் கதைகள்

    ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓராயிரம் சுகதுக்கங்கள், பிறருக்கு அறியத் தருவதன் வழியாக வாழ்கின்ற வாழ்வைப் புரியவைத்திட இயலும்.

    மாற்றங்களின் வழியே ஏற்படும் அகச்சிக்கல்களை உளவியல் ரீதியாக பதிவு செய்ய சிறுகதைகள் தக்க துணைபுரிகின்றன.

    இதுவரை எழுதப்படாத கதைகள் என்பவை நாம் அறிந்திடாத பிறர் வாழ்க்கைதான்.

    அதைத் தெரிந்து கொள்வதன் வழியே மனச்சாட்சியுள்ள வாழ்க்கைக்கு அவரவர் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும்.

    அன்றாடம் நாம் எளிதில் கடந்து போகிற மனிதர்களிடம் ஏதேனும் ஒரு துயரம்,மகிழ்ச்சி, கொண்டாட்ட மனநிலை, வாழ்வை வெறுக்கிற சூழலின் அடர்எண்ணம் இருக்கக்கூடும்.

    இவற்றை உணர்கிற நுட்பமனநிலை வாய்த்தால் நமக்குள் இருக்கிற சிறுகதை படைப்பாளரைக் கண்டறிந்துவிட இயலும்.

    அப்படியான கண்டறிதல்களைச் சிறந்த கதைகளாக்குகிறார் கவிமுகில் சுரேஷ்.

    ஒரு நிகழ்வு ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான அனுபவங்களைத் தரக்கூடியது. அதனால்தான் இத்தனை கதைகள் எழுதப்பட்டும் இன்னும் எழுதவென கதை நிகழ்வுகள் காத்திருக்கின்றன.

    இந்தச் சூழலில் கவிமுகில் சுரேஷ் அவர்களின் அம்மாவின் வரவு சிறுகதை புதிய வரவாகியுள்ளது.

    அம்மாவின் வரவு என்ற சிறுகதை நுட்பமான உணர்வை வெளிப்படுத்துகிறது.

    வாழ்க்கை யாருக்கு வரமாக அமைகிறது? எல்லாம் சாபம் என்பது போல்தான் நிகழ்வுகள் நடக்கிறது. எளிய குடும்பம், வறுமை, கல்வி கற்கவே வசதியற்ற பிரச்சனையென களம் விரிகிறது.

    நாயகன் காத்திருப்பது போலவே நாமும் காத்திருக்கத் துவங்குகிறோம். இதுதான் கதையின் பலமாகவும் அமைகிறது.

    " மேஸ்திரி’ என்ற கதை எத்தனை இடர்கள் வரினும், எத்தனை தடைகள் இலக்கைத் தடுத்தாலும் காலம் ஒரு நாள் பரிசுக்கோப்பையைத் தருமென்பதைக் கூறும் சிறந்த சிறுகதை.

    இப்படி கதைகள் தோறும் பயணிக்கிற போது கதையாசிரியரின் உலகம் விரிந்து விரிந்து எல்லையற்றதாகிறது.

    நிறைவேறாத ஆசைகள், உண்மையும், பொய்யும் தன்னைத்தானே ஆய்வுக்குட்படுத்திக் கொள்கிற குணம். உண்மையான காதல் உணர்த்தும் உளவியல், சமூகத்திற்கு எது தேவை, எது தேவையில்லையென்கிற பக்குவம் என கதைகள் பரந்த தளத்தில் விரிந்துள்ளது.

    நேர்மையோடு வாழ்கிறவர்களை எப்போதும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றே முத்திரை குத்துகிறவர்களும் அந்த உழைப்பைப் புரிந்து கொள்கிற நம்பிக்கையென கதைகள் வாழ்வியலின் பக்கங்களை அடையாளப்படுத்துகிறது.

    பல்வேறு தேர்வுகள் இன்றைய மாணவர்களின் மனநிலையை எவ்வாறு சிதைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளச் சின்னஞ் சிறுகதையும் தொகுப்பில் உண்டு.

    இக்கதைகளில் சமூகம் சார்ந்த கோபங்கள், தனிமனிதத் துயரங்களென யாவும் உண்டு.

    இக்கதைகளை வாசிக்கிற வேளையில் நமக்குள் இச்சமூகம் குறித்தான சில வினாக்கள் எழுவது உறுதி.

    இப்படிக்கு

    க.அம்சப்ரியா

    தலைவர்

    பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

    அம்மாவின் வரவு

    பெல்ரம்பட்டி கிராமம்

    காலனியில் எண்பத்தி இரண்டு வீடுகள் பாதி வீடுகள் ஓடு போர்த்தி இருந்த வீடுகள் மீதி வீடுகள் கூரையால் அமைந்திருந்தது அதில் மூன்று வீடுகள் மட்டுமே வசதிப் பொருந்திய மாடி வீடுகளாய் காட்சி தந்தன

    அந்த வீடுகளுக்கு நடுவில் ஒரு கூரைவீடு சமைக்க படுக்க ஒரே அறை குளிக்கப் பொடக்காளி இருந்தது மழைக்காலங்களில் வீட்டின் மண் சுவர் ஓதம் காணும்

    ஓட்டை கூரையின் வழியாக சொட்டும் மழையில் தரை ஈரப்பிசகு கொள்ளும் அச்சமயங்களில் இரவு நேரங்களில் அந்த வீட்டில் குடியிருக்கும் அறுபத்தி ஏழு வயது நிரம்பிய கூன் போட்ட மூக்காயி பாட்டிக்கு தூக்கம் வராது

    கூடவே அவளுடைய பேரன் சுதர்சன் தூக்கம் வராமல் ஒத்த கட்டிலில் கம்பளிக்குள் புரளுவான்

    இன்றும் அப்படிதான் அங்கு பெய்த மழையில் தூக்கம் வராமல் கிடந்தான் திடீரென பவர் கட் ஆகிவிட்டது கும்மிருட்டில் பாட்டி அவனுக்கு பல கதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்

    வெளிச்சம் இல்லாத அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1