Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veera Maharani Velu Natchiyamma
Veera Maharani Velu Natchiyamma
Veera Maharani Velu Natchiyamma
Ebook124 pages44 minutes

Veera Maharani Velu Natchiyamma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காந்தி பிறப்பதற்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது பரங்கியரை எதிர்ப்பதற்கான யுத்தம். அதில் பெரும் பங்கு தமிழ் மன்னர்களையும் வீரர்களையும் தியாகிகளையும் சாரும். நம் தமிழர்களின் வரலாறு அதிக அளவில் மறைக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் ஒரு பெண் போராடி வென்ற கதை தமிழ் வரலாற்றில் தனி இடம் பெற்றிருக்கிறது அந்த வீர தமிழச்சி வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த நாவலை படைத்திருக்கிறேன் அவர்களின் வரலாறு பலரால் நாவலாக எழுதப்பட்டாலும் நானும் அவர்களுக்கு ஒரு வீர வணக்கம் தருவதற்காகவே இந்த நாவலை படைத்திருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580165711109
Veera Maharani Velu Natchiyamma

Read more from Veeranvayal V. Uthayakkumaran

Related to Veera Maharani Velu Natchiyamma

Related ebooks

Related categories

Reviews for Veera Maharani Velu Natchiyamma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veera Maharani Velu Natchiyamma - Veeranvayal V. Uthayakkumaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வீரமகாராணி வேலு நாச்சியம்மா

    Veera Maharani Velu Natchiyamma

    Author:

    வீரன்வயல் வீ. உதயக்குமாரன்

    Veeranvayal V. Uthayakkumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/veeranvayal-v-uthayakkumaran

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    அணிந்துரை

    என்னுரை

    பாராட்டுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    வாழ்த்துரை

    அணிந்துரை

    வீரத்தமிழரசி வேலுநாச்சியார் அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைச் சீமையின் வீரம் மிகுந்த இராணியாகத் திகழ்ந்தார். நம்மை அடிமைப் படுத்திய பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப் போராட்ட தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

    வீரத்தமிழரசி பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

    நமது ஆசிரியர் வீரன்வயல் வீ. உதயக்குமாரன் அவர்கள் ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த வரலாற்றை இலக்கியச் சுவையுடனும், தொடர்ச்சியாக சம்பவங்களை இணைத்தும் மிக அருமையாக எழுதியுள்ளார்.

    மேலை நாட்டு சரித்திரப் புதினம் எழுதிய சர் வால்ட்டர் ஸ்காட் அவர்களைப் போல ஒவ்வொரு பகுதியையும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

    ஆரம்பத்தில் தனது குருவுடன் வேலுநாச்சியார் சிலம்பம் போட்டி போட்டதை மிகவும் அருமையாக வர்ணிக்கிறார்.

    சிலம்பப் போட்டியில் வேலுநாச்சியாரின் தோற்றம் நரகாசுரனைக் கொன்ற பத்மாவதி போல இருந்தது என்கிறார். தந்தையாகிய மன்னர் செல்லமுத்து சேதுபதியிடம் தனக்கு அரேபியக் குதிரை ஒன்று வேண்டும் என்று வேலுநாச்சியார் கேட்கிறார்.

    இந்த சம்பவத்தை நயமுடன் விவரிக்கிறார் நமது ஆசிரியர். அடுத்து வேலுநாச்சியார் அவர்களின் திருமணம் பற்றித் தெளிவாக விவரிக்கிறார்.

    குற்றாலக் காடுகளில் தன் கணவரைக் கொல்ல வந்த புலியைக் தீரமுடன் போரிட்டுக் கொல்லும் காட்சியைப் படிக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது.

    சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னராகப் பொறுப்பேற்று சிம்மாசனத்தில் அமர்ந்த முத்து வடுக நாத பெரிய உடையார்த் தேவர் பற்றிய தகவல்கள் சிறப்பு.

    அவருக்கு கெளரி நாச்சியாருடன் இரண்டாம் திருமணம், நாச்சியாரின் மகள் வெள்ளச்சி பற்றியெல்லாம் சுவையான தகவல்கள்.

    கர்னல் மார்ட்டின், ஜோசப் ஸ்மித், நவாப் போன்ற எதிரிகளின் சூழ்ச்சிகள், நாச்சியாரின் கணவர் மன்னர் கொல்லப்படுதல், ஹைதர் அலியுடன் நட்பு என்று சம்பவங்களை கோர்வையாக அழகாக வர்ணித்திருக்கிறார் ஆசிரியர்.

    உடையாள் மற்றும் குயிலியின் பாத்திர வர்ணனை உச்சம் தொடுகிறது.

    பரங்கியரோடு யுத்தம் செய்த நாச்சியாரின் தந்திரங்கள், மருது சகோதரர்களின் குழப்பம் என்று கதை ஆறு போல் செல்கிறது. தன்னைக் காத்துக் கொள்ளவும், எதிரிகளை வெல்லவும் நாச்சியார் எத்தனையோ இடங்களுக்குப் பிரயாணம் செய்கிறார். ஆசிரியர் ஒன்று விடாமல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

    நாச்சியாரின் பல மொழிகளில் நிபுணத்துவம், வளரிப் பயிற்சி, போர்த்திறமை குறித்து ஆசிரியர் தெளிவான கருத்துகளை முன் வைக்கிறார். கண்களை குளமாக்கும் நாச்சியார் அவர்கள் இறுதிப்பயணம் வரலாற்றை தொய்வின்றி முடிக்கிறார் ஆசிரியர்!

    எல்லோரும் இந்த நூலை வாங்கிப் படித்து இன்புற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    முனைவர் சு.ஆ.பழனிச்சாமி,

    முன்னாள் ஆங்கிலத் துறைத் தலைவர்,

    நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

    ஈரோடு.

    அணிந்துரை

    ஆய்வாளர் என். எஸ். கலைவரதன்

    வீரத்தமிழரசி வேலுநாச்சியார்

    இலக்கிய சமூக இயக்கம்

    புதுச்சேரி

    வேலெடுக்கும் மரபில் வீரம் பதித்த மங்கை

    நண்பர் வீரன் வயல் உதயகுமாரன் மிகச்சிறந்த தமிழ் பற்றாளர், பண்பாளர், கவிஞர் எழுத்தாளர் தமிழர்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் எழுதியுள்ள வீர மகாராணி வேலுநாச்சியம்மா எனும் நாவல் கற்பனைகள் அதிகம் கலக்காமல் வரலாற்றை மையப்படுத்தி மிக நேர்த்தியாக ரசனை குன்றாமல் படைத்துள்ளார். பார்த்தேன் படித்தேன் சுவைத்தேன் என்பது போல் காட்சிகளைத் தேனினும் திகட்டாத சுவையுடன் நகர்த்திய விதம் அருமை.

    வேலுநாச்சியாரின் வீரத்தை... சிலம்பம் சுழற்றும் போட்டியைக் காட்டி வீரத்தை ஊட்டிச் சிறப்புச் செய்த தொடக்கமே அருமை! பலமொழி கற்பது பல் சுவையின் மேன்மை, பன்மடங்கு பலம் என்பது வேலுநாச்சியாரின் வாழ்க்கையை முன்பே கணித்தது போல் உள்ளது.

    அரேபிய முரட்டுக் குதிரையையும் அடக்கி ஆளும் பெண். போர்க்கலைகளில் மிகச் சிறந்த வீராங்கனைக்குத் திருமணச் செய்தி என்றவுடன் பண்ணோடு பிறந்த நாதமாக பெண்ணோடு பிறந்த நாணம், மலரின் வாசமாக மணக்கிறது.

    திருமணம் நடந்தது. தேன்நிலவின் தனிமையில் வன்புலியின் வதைபடலம். அங்கும் வீரம் பறைசாற்றப்பட்டது.

    நீர் மேலாண்மை, வேத பாடசாலை ஆயுதப் பயிற்சி அன்ன சத்திரம் என சிவகங்கையின் சிறப்பை செழிப்பாக காட்டியுள்ளார் நூலாசிரியர்.

    வரி கேட்டு வந்தவன் தலை தெரிக்க ஓடிய விதம் அருமை!. வேலுநாச்சியாரின் மொழிப் புலமை பூண்டது பெருமை!

    மதுரையை மீட்டு, திருமலை நாயக்கரை அரியணையில் அமர வைத்துதது. உதவி என்று கேட்போர்க்கு உதவும் உத்தமர் முத்து வடுகநாதர் என்பதைக் காண முடிகிறது.

    மருதநாயகம் என்னும் கான்சாகிப், வில்லன் ஆங்கிலேயரின் கைக்கூலி, கொள்ளைக்கார கள்ளன் என்பதை புரிய வைத்துள்ளார்.

    கொஞ்சலும் கெஞ்சலும் நிறைந்த சிறுமி குயிலிக்கு, அன்பே வடிவான வேலுநாச்சியாரின் அறிமுகத்தில் நெகிழ்ச்சியைப் படர விட்டுள்ளார்.

    வெள்ளையரின் கொட்டத்தை அடக்கிய வீரமங்கை பட்டத்து ராணி ஆனார்.

    வேலுநாச்சியாரின் மகள் வெள்ளச்சி நாச்சியார் திருமணம். மருமகன் வேங்கன் பெரிய உடையார் தேவர், மருது சகோதரர்கள் மூவரின் ஆலோசனையில் ஆங்கிலேய நட்பு உறவினை பலப்படுத்தும் சின்ன மருதுவின் திட்டங்கள். ராமநாதபுரம் சேதுபதி உறவில் முரண்பட்ட விதம்... இப்படியே நாவல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

    மருது சகோதரர்கள் கப்பம் கட்டியது தப்பென்றும் தன்மான இழுக்கென்றும் அவர்களிடம் தன் கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்திய வேலுநாச்சியாருக்கு. மகளின் குழந்தைப்பேறு செய்தி என வேகம் பிடிக்கிறது நாவல்.

    வேலுநாச்சியாரின் மருத்துவமும் அதன் பின் ஜெய்ப்பூர் அரண்மனை இந்திராணியின் அழைப்பும், அங்கே தங்க முடியாத மனநிலையும், சிவகங்கையில் நிலவிய குழப்பமும், முகவை மன்னர் மீது கொண்ட சூழ்ச்சியும், நம்பிய மருது சகோதரர்களின் நடவடிக்கையும் இந்த சூழ்நிலையில் மகளின் இறப்பும் வேலுநாச்சியாருக்கு மனவலியையும் வேதனையையும் உடல் பலவீனத்தையும் அதிகமாக்கியது.

    காட்சிகள் கடந்து கொண்டே செல்கிறது. உதயமாகிறது உதயபெருமாள் கவுண்டரின் வரவு.

    Enjoying the preview?
    Page 1 of 1