Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sunnath Kalyanam
Sunnath Kalyanam
Sunnath Kalyanam
Ebook181 pages1 hour

Sunnath Kalyanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இறைவனின் நாமத்தை சதா உச்சரித்து கொண்டே இருந்தால் என்ன கிடைக்கும்? பள்ளப்பட்டி மக்கள் விசேஷமாக சாப்பிடும் காலை டிபன் என்ன? பழைய மக்கிப்போன குர்ஆன் பிரதிகளை என்ன செய்ய வேண்டும்? இறந்து போன பாட்டி பேரனுக்கு தரும் ஆன்மிகப் பரிசென்ன?

கூட்டுக் குர்பானி தகுமா?மனைவியை அம்மாவுடன் ஒப்பிடலாமா? பர்தாவின் அவசியம் என்ன? விருத்தசேதனம் மார்க்ககட்டாயமா?இத்தாவின் தேவை என்ன?

இது போன்ற இருபது கேள்விகளுக்கு சிறுகதை வடிவில் பதில் தருகிறது-'சுன்னத் கல்யாணம்'. இஸ்லாம் எனும் அகழிசூழ் இரும்பு மாளிகைக்குள் இத்தனை செய்திகளா என ஆச்சரியப்பட்டு போவீர்கள் வாசக்ஸ்.

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580111011221
Sunnath Kalyanam

Read more from Arnika Nasser

Related to Sunnath Kalyanam

Related ebooks

Related categories

Reviews for Sunnath Kalyanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sunnath Kalyanam - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுன்னத் கல்யாணம்

    (20 இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுப்பு)

    தொகுதி 17

    Sunnath Kalyanam

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பகை நாட்டுக்குள்

    2. திக்ரு

    3. ஓதி பாருங்கள் ஹஜ்ரத்

    4. ஆமீன்

    5. கூட்டுக்குர்பானி

    6. எங்கிருந்தோ வந்தான்

    7. குர் ஆன் ஷெரீப்

    8. நாஷ்ட்டா சோறு

    9. தஸ்பீஹ் மணிமாலை

    10. அது ஒரு நோன்புக் காலம்

    11. ஹஜ் யாத்திரை…

    12. அம்மாவைப் போல...

    13. ரமிஸ்பாத்திமா...

    14. அவன் வருவானா?...

    15. தலைமுறைத் தவறுகள்...

    16. ரியாஸ்…

    17. ஆடு...

    18. சுன்னத் கல்யாணம்...

    19. பர்தா...

    20. இத்தா…

    முன்னுரை

    உலகத்தில் 6900 மதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இஸ்லாம். இஸ்லாத்தை இருநூறு கோடிமக்கள் பின்பற்றுகின்றனர். நான் ஒரு இந்திய தமிழ் முஸ்லிம். மதத்தால் இந்து- முஸ்லிம் சகோதரர்கள் சண்டை இட்டுக்கொள்வது எனக்கு ஒவ்வாத விஷயம். ஒவ்வொரு மதத்தினனும் பிறமத விழுமியங்களை கோட்பாடுகளை அறிந்து பிற மதத்தினனை கண்ணியப்படுத்தவேண்டும். மதம் சாராத ஆத்திகனாக இருந்த நான் தினமலர் அந்துமணியின் கட்டளைக்கிணங்கி திருக்குர்ஆனை (தமிழ்பதிப்பு) படிக்க ஆரம்பித்தேன்.

    கடந்த பதினாறு வருடங்களாக இஸ்லாமின் புனிதநூலை, நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை, விழுமியங்களை, கோட்பாடுகளை, வட்டார மொழி வழக்கை, உணவுபழக்க வழக்கத்தை, ஆடை உடுத்தும் நேர்த்தியை, மார்க்க கல்வியை, கல்வி-பணி-அதிகாரம் சார்ந்த பங்களிப்பை, இமாம்களின் வாழ்க்கை தரத்தை சிறு சிறு நீதிக்கதைகளாய் எழுதி வருகிறேன். நான் தெரிந்து கொண்டதை பிறருக்கு ஊட்டி விடுகிறேன்.

    இக்கதைகளுக்கான அழகிய முன் மாதிரி பைபிள் கதைகளும் திருக்குறள் கதைகளும் தான். நான் எழுதும் இஸ்லாமிய நீதிக்கதைகள் உலகிலேயே முதல்முயற்சி. இக்கதைகளின் முழுமுதல் நோக்கம் மதநல்லிணக்கமே. இதுவரை 500 இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதியுள்ளேன். ஆயிரம் எழுதி முடிக்க இறைவன் உதவட்டும். இக்கதைகளில் கதைத்தன்மை அதிகம். மார்க்கக் கருத்துகள் இல்லாமல் சுவாரசியமான கதைகளாகவும் இவற்றை நீங்கள் வாசிக்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும் இருபது இஸ்லாமிய நீதிக்கதைகள் இருக்கும். வெளியிட்ட புஸ்தகாவுக்கு நன்றி.

    என்றென்றும் அன்புடன் ஆர்னிகா நாசர்

    கைபேசி எண் : 7358962913, 9442737404

    சமர்ப்பணம்

    1980 களில் நாங்கள் திண்டுக்கல்லில் வசித்தோம். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட என் தந்தையார் என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார். நடுத்தெருவில் அனாதரவாக நின்ற என்னை ஆதரவுக்கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டவர் குரு ஸ்டுடியோ உரிமையாளர் திரு. சிவகுருநாதன். அவருக்கு ‘சுன்னத் கல்யாணம்’ என்கிற தொகுப்பு – 17ஐ நன்றியுடன் சமர்ப்பிக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன் ஆர்னிகா நாசர்

    கைபேசி எண் : 7358962913, 9442737404

    1. பகை நாட்டுக்குள்

    நியூயார்க் லாஸ் ஏன்ஜல்ஸ் ஜே. எப். கென்னடி சர்வதேச விமான நிலையம். ஏர் அமெரிக்கா அலுமினியப் பறவை வந்திறங்கியது. படிக்கட்டு இணைக்கப்பட்டது. பயணிகள் இறங்க ஆரம்பித்தனர்.

    முபீனுல் ஜலால் இறங்க ஆரம்பித்தான். தொளதொள ஜிப்பா. பைஜாமா கட் ஷு. தலைகேசத்தை சம்மர்கிராப் அடித்திருந்தான். மீசை இல்லாத மேலுதடு பிசிறு தட்டிய தாடி. நெற்றியில் தொழுகை அடையாளம். வயது 40. உயரம் ஆறடி. கறுப்புநிறம் லேசான மாறுகண்கள். மிக உன்னித்து பார்த்தால் மட்டுமே தெரியும். அத்தர் பூசியிருந்தான். உதடுகள் அல்லாஹ்வின் நாமத்தை திக்கிர் எடுத்தன.

    நடந்தான். இமிக்ரேஷன் அதிகாரிகள் ஓடி வந்தனர். எக்ஸ்க்யூஸ் மீ!

    எஸ்!

    (வாசகர் நன்மைக்காக இனி உரையாடல் தமிழில்)

    உங்களையும் உங்க பயணச்சுமையையும் நாங்கள் சோதிக்க விரும்புகிறோம்!

    எதற்கு?

    இங்கு வந்திறங்கும் ஆயிரம் முஸ்லிம் பிரயாணிகளில் ஐவரை ராண்டம் செக்கிங் செய்வோம். முதலில் உங்கள் ஆடைகளையும் ஷூக்களையும் ஸ்வாப் டெஸ்ட் பண்ணி ஏதேனும் வெடிபொருள் கொண்டு வந்திருக்கிறீர்களா என்று பார்ப்போம்!

    சிரித்தான் ஜலால். உங்கள் மூவரில் மூத்த அதிகாரி யார்?

    140கிலோ எடையுள்ள சீருடை மனிதர் முன் வந்தார். நான்தான்!

    உங்க பெயர் என்ன?

    ரிச்சர்ட் வுட்பிரிட்ஜ்!

    கத்தோலிக்க கிறிஸ்துவரா?

    பிறப்பால் ஆமாம். வளர்ப்பால் நான் ஒரு நாத்திகன். நான் பிறப்பதற்கு முன்னே கடவுள் இறந்துவிட்டார். இப்போது உலகம் ஓட்டுநர் இல்லாத வேக வாகனம்!

    தனியறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் ஜலால்.

    ஸ்வாப் டெஸ்ட் செய்தனர். பின் பயணச்சுமைகளை ஆராய ஆரம்பித்தனர். திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பு எக்ஸ் வடிவ ரைகாலி இணைந்த பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. தொழுகைக்கம்பளம். தஸ்பீஹ் மணி. டேலாகட்டிகள் டப்பா.

    இது உங்க புனித நூலா?

    புனித நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு!

    மூலநூலுக்கு இருக்கும் புனித தன்மை மொழிபெயர்ப்புக்கு உண்டா?

    இல்லை!

    பின்னே நீங்கள் ஏன் குர்ஆன் அரபி மூலத்தை எடுத்து வரவில்லை?

    பகை நாட்டுக்குள் திருக்குர்ஆனை எடுத்துச் செல்லக்கூடாது என்கிறது எங்கள் இஸ்லாம்!

    அமெரிக்கா உங்களுக்கு பகை நாடா?

    நாங்கள் யாரையும் பகை நாடாக அறிவிக்கவில்லை, பாவிக்கவில்லை. அமெரிக்காதான் முஸ்லிம்களை பகைவர்களாக கருதுகிறது. எண்ணெய் வளத்துக்காக பிற நாடுகளுக்குள் மூக்கை நுழைக்கிறது. நான் அரபு மொழி குர்ஆன் கொண்டுவர நீங்கள் அதனை அவமதித்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்வது? ஆகவே முன்னெச்சரிக்கையாக அரபி குர்ஆன் கொண்டு வரவில்லை!

    கோயில்கள் தேவையில்லை. சிக்கலான தத்துவார்த்தங்கள் தேவையில்லை. நமது மூளையும் இதயமுமே கோயில் அன்பே தத்துவார்த்தம் என்றார் தலாய்லாமா. உலகில் 300 மதங்கள் உள்ளன. உங்கள் மதத்தினர் மட்டும் தான் உங்கள் மதத்தையும் உங்கள் இறைதூதரையும் பற்றி அதிகம் தம்பட்டம் அடிக்கிறார்கள்!

    உண்மையை உரக்கக்கூறுவது தம்பட்டம் அல்ல நண்பரே!

    கடவுள் இருக்கிறாரோ இல்லையோ எல்லா மனிதருக்கும் கடவுள் தேவைப்படுகிறார் என்றார் ஹோமர். முஸ்லிம்களுக்கு கடவுள் கூடுதல் தேவை!

    நீங்கள் நாத்திகர் என நினைக்கிறேன்!

    முக்கோணத்திற்கு ஒரு கடவுள் இருந்தால் கடவுளுக்கு மூன்று பக்கம் இருக்கும் என்கிறது ஒரு பழமொழி. மனிதனின் கற்பனைதான் கடவுள்!

    முக்கோணத்திற்கு ஒரு சதுரமோ செவ்வகமோ வட்டமோவா கடவுள் இருக்க முடியும்? முக்கோணங்களுக்கு முக்கோணவடிவில் கடவுள் இருப்பது லாஜிக்கலி கரக்ட்!

    ஒரு மனிதனிடம் மீனைக்கொடு ஒரு நாளைக்கு மீன் சாப்பிடுவான். மதத்தைக் கொடு. மீனைக்கொடு மீனைக்கொடு என்று கடவுளை வேண்டி வேண்டி செத்துப்போவான் மனிதன்!

    உங்க நாத்திகவாதத்தை எடுத்து வைக்கவா என்னை சோதனை என்ற பெயரில் கூட்டி வந்தீர்கள் ரிச்சர்ட்?

    எனக்கு கிறிஸ்துவமதத்தின் பேரிலும் நம்பிக்கை இல்லை. ஆன்மிகவாதி கடவுள் என்கிற வார்த்தையால் தனது அறியாமையை மறைத்துக் கொள்கிறான் என நினைக்கிறேன்!

    தவறான நினைப்பு!

    மிஸ்டர் ஜலால்! அமெரிக்காவில் 3 சதவீத யூதர்களும் ஒருசதவீத முஸ்லிம்களும் இருக்கிறார்கள். இவர்களது கூச்சலால் 97 சதவீத அமெரிக்கர்கள் நிம்மதியாக வாழ இயலவில்லை.

    உலக ஜனத்தொகையில் சொற்ப சதவீதம் அமெரிக்கர்கள். சொற்ப சதவீதம் அமெரிக்கர்களால் மீதி சதவீத உலக மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை!

    சரி, விஷயத்துக்கு வருவோம். நீங்கள் திருக்குர்ஆன் அரபியில் ஓதியவரா?

    ஆம். நாங்கள் எல்லாம் பக்கத்திற்கு 13 வரி உள்ள திருக்குர்ஆன் ஓதியவர்கள். பக்கத்திற்கு 15 வரி உள்ள திருக்குர்ஆன் வாசிக்கக் கொடுத்தால் திணறிப்போவோம்.

    அரபி குர்ஆன்கள் எல்லாமும் மெக்கா மதினாவில் அச்சடிக்கப்படுகின்றனவா?

    இல்லை. இந்தியாவில் இருக்கும் அரபி குர்ஆன்கள் மும்பையில் அச்சடிக்கப்பட்டவை!

    நீங்கள் கொண்டு வந்திருக்கும் குர்ஆன்தமிழ் மொழிபெயர்ப்பை நான் சேதப்படுத்தினால் என்ன செய்வீர்கள்?

    உங்களின் இழிவான நடத்தையை கண்டு வேதனைப்படுவேன். அதே நேரம் மூலநூலை கொண்டு வராமல் போனோமே என்று சந்தோஷப்படுவேன்!

    முஸ்லிம்களுக்கு பேச்சுத்திறமை வளர்ந்திருக்கிறது!

    சிரித்தான் ஜலால்.

    என்ன விஷயமாக ந்யூயார்க் வந்திருக்கிறீர்கள்?

    எனது மகன் பல்மருத்துவராக இருக்கிறான். அவனையும் அவன் குடும்பத்தையும் பார்க்க வந்திருக்கிறேன்!

    அமெரிக்கா மோசம் என்கிறீர்கள். உலகின் ஒற்றை தலைவலி அமெரிக்கா என்கிறீர்கள். பின்னெப்படி உங்க மகனை இங்கு பல்மருத்துவ தொழில் செய்ய அனுமதித்தீர்கள்?

    நான் அனுமதிக்கவில்லை. அவன் விரும்பி வந்தான். பிரச்சனையான நேரங்களில் அமெரிக்காவுக்கு ஏன் வந்தோம் என புலம்புவான். சந்தோஷமான நேரங்களில் அமெரிக்கா ஒரு சொர்க்கம் என மிழற்றுவான்!

    ரிச்சர்ட் வுட்பிரிட்ஜ் சிரித்தார். வடிகட்டின சுயநலம்!

    அமெரிக்கா அதிபர் ஒபாமா பற்றி என்ன நினைக்கிறீங்க?

    ஒபாமா முஸ்லிம் என மீடியாவில் கூறப்பட்டதும் அவர் அய்யய்யோ நான் முஸ்லிம் இல்லைன்னு கூச்சலிடுகிறாரே... முஸ்லிம்கள் என்ன காட்டுமிராண்டிகளா, ஆதிவாசிகளா... அதற்கேன் இந்த கூக்குரல் எழுப்ப வேண்டும் ஒபாமா. என் மூதாதையர் முஸ்லிமாக இருந்தனர் நான் கிறிஸ்துவனாக இருக்கிறேன் என அமைதியாக புன்முறுவலுடன் கூறலாமே? மூதாதையர் முஸ்லிம் என்றால் ஜனாதிபதி பதவி பறிக்கப்பட்டு விடுமா? MY NAME IS KHAN படத்தில் ஷாரூக்கான் கதாபாத்திரம் ‘நான் தீவிரவாதி இல்லை’ என அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்ல அலையும். ஏன் அலைய வேண்டும்? ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதி அல்ல தீவிரவாதி அல்ல என்று அமெரிக்காவிடம் சான்றிதழ் பெற வேண்டுமா? நான் ஒபாமாவை சந்தித்தால் ‘தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே அமெரிக்காதான்’ என்பேன்!

    உங்க பேச்சுகளுக்காகவே உங்களை தீவிரவாதி என முத்திரை குத்தி சிறைக்கு அனுப்பலாம்!

    அனுப்புங்கள் அமெரிக்க சிறைகளின் தரத்தை பார்த்துவிடுகிறேன்!

    "அதிகம் பேசுகிறீர்கள் ஜலால். உங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் பிரயாணி அரபி குர்ஆனோடு வந்தார். நாங்கள் அந்த புனிதநூலை அவமதிக்கவில்லை. எங்களுக்கு பழைய ஏற்பாட்டின் மீதும் புதிய ஏற்பாட்டின் மீதும் எவ்வித உன்னத நோக்கமில்லை. உங்க புனித நூல் மீதும் தான். அதற்காக அவற்றை அவமதிப்பதும்

    Enjoying the preview?
    Page 1 of 1