Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalai Udaiyum Kaalam
Kalai Udaiyum Kaalam
Kalai Udaiyum Kaalam
Ebook203 pages1 hour

Kalai Udaiyum Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பின் மார்க்சியரான ஃப்ரெடரிக் ஜேம்ன்சன் சொல்வதைப்போல, 'கறாரான மதிப்பீட்டைவிடவும் எழுத வருவதே ஓர் அரசியல் செயல்பாடு' என்ற வகையில் மனித சமூகத்தை அரசியல்மயப்படுத்தும் அவசியத்தில் இன்றைய மொழிக்கு அதிக முரண்பாடுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதுபோக புதிய உற்சாகமான அமைப்பு மற்றும் நிறுவனம் சாராத வெளிகள் கருக்கூடி வந்திருப்பதை காணமுடிகிறது. இது கலையைப் பூடகப்படுத்தும் செயலைவிட அருள், தரிசனம், மெய்மைகள் என்று நீளும் தனிச்சிறப்பான ஒரு காலகட்டத்தை கடந்து வந்துவிட்டதையே காட்டுகிறது. மேலும் கலைக்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு மறைந்துவருகிறது என்று கூறலாம். இன்று மரபான அழகியலுக்கும் உடனடி அத்தியாவசியங்களுக்கும் இடையே இருக்கும் மானுடம் திண்டாடுகிறது. அவற்றையே ஆசிரியர் இக்கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580177510892
Kalai Udaiyum Kaalam

Read more from Yavanika Sriram

Related to Kalai Udaiyum Kaalam

Related ebooks

Related categories

Reviews for Kalai Udaiyum Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalai Udaiyum Kaalam - Yavanika Sriram

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கலை உடையும் காலம்

    Kalai Udaiyum Kaalam

    Author:

    யவனிகா ஶ்ரீராம்

    Yavanika Sriram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yavanika-sriram

    பொருளடக்கம்

    நீண்ட கால மனம் நீளும் நாவல்

    இளங்கோ ஒரு பொறுப்பற்ற அகாலவாசி

    அங்கே காலனிய காலச் சிறார்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

    சிதையும் நவீனமும், தகவமையும் தொன்மக்கள் கலாச்சாரங்களும்...

    மானுட உடலின் மறைந்தொழிந்த புலன்களின் ஞாபகப் பாதையே பிதிரா

    ஒடியல், கிரிபத் மற்றும் ஸ்பிரிங்ரோல்

    வெள்ளிப்பாவை சொன்ன சிறுதீவி(னைக்)ன் கதை

    அன்பின் நிமித்தம் வன்முறையைப் பரிசளிப்பது

    நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்: ஒரு வாசிப்புரை

    தமிழ் நவீனக் கவிதையில் ஞானக்கூத்தன் ஒரு திருப்புமுனை

    தன்னிலைக்கான தவிப்பும் இரகசிய வேட்கைகளும்: சி மோகன் குறித்து சில விஷயங்கள்

    சென்னை: தங்கசாலையில் இருந்து தங்க நாற்கர சாலைவரை...

    ஆண்மொழியினூடாக ஆண்மையம் சிதைக்கும் எழுத்து

    நெடு வெண்ணிலவோடு ஒளிரும் பூண்டு தொலிகள்

    நன்றி

    கல்குதிரை

    பவளக்கொடி

    குதிரைவீரன் பயணம்

    சிறுபத்திரிக்கை

    பன்முகம்

    யாவரும்.காம்

    இந்து தமிழ் திசை

    அதீதனின் இதிகாசம்

    அந்த்வான் து செந்த் - எக்சுபெரிக்கு
    பின் உண்மைகளின் காலத்தில் கலை, இலக்கியத்தை இற்றைப்படுத்துதல்

    தமிழில் தொண்ணூறுகளுக்குப் பிறகான விமர்சனப் போக்கு என்பது ஒரு கட்டத்தில் சிறுபத்திரிக்கை சார்ந்து கறாராக இருந்துவந்தது. அது வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் ஓர் ஒழுங்கையும், தூய்மையையும் பேணியது. போக மற்றமைகளுக்கு இடம்தராத புனிதங்களின் தொகுதியாகவும் விளங்கியது. அத்தகைய அரூபச் சிந்தனைகள் இறுதியில் மனித நிலைப்பாடை ஆன்மிக இருப்பு என்பதாக வரையறுத்தது. அதற்கு வெளியில் எந்த இருப்பிற்கும் அவை முகங்கொடுக்கவில்லை. நாளடைவில் புதிய வகைப் படைப்பாளிகள் இக்காலத்தில் நிறைய அறிமுகமானார்கள். அவர்கள் குறிப்பாக அரசியலையும், கலையையும் இணைத்துப் பார்க்கும் சொல்லாடல்களை, அதன் கதையாடல்களை வெளிப்படுத்தினர். எல்லாமே ‘மொழியின் கதையாடல்கள்தான்’ என்பார் மிஷெல் ஃபூக்கோ. குறிப்பாக படைப்புடன் சேர்த்து படைப்பாளியையும் மதிப்பிடுகிற புதிய போக்கு ஒன்று இக்காலத்தில் மேலெழும்பியது. படைப்பில் தன்னை நல்லவராகக் காட்டிக்கொண்டு அந்தரங்கத்தில் பூடகமாகத் தன்னை மறைத்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனாலும், தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழ் அறிவுச்சூழலில் எழுந்த தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல் பற்றிய உரையாடல்கள் படைப்பில் ஊடுருவின. அந்த வகையில் இதுவரை வந்த விமர்சன மதிப்பீடுகள், வாசிப்புரைகள், கட்டுரைகள், பல்கலைக்கழக ஆய்வுகள் யாவும் தன் நிலையில் தடுமாற்றம் கொண்டன. இப்பொழுது படைப்புகள் அதன் கட்டிறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டனவா? அல்லது அரசியல் என்பது படைப்பில் அத்தியாவசியமாகிப் போனதா? என்கிற கேள்விகள் பிரதானமாகின. ஒரு சாரார் படைப்புகள் மலினப்பட்டுவிட்டன என்றும், மற்றொரு சாரார் இப்பொழுதுதான் படைப்புகள் வாழ்வின் யதார்த்தத்தை நெருங்குகின்றன என்றும் வாதிட்டார்கள். ஆனாலும் ஒருவகையில் விளிம்புநிலைக் கதையாடல்களை மையநீரோட்ட அரசியலில் பிரதிநிதித்துவம் செய்வதாக அந்த ஊடுருவல் அமைந்தது. இப்பொழுது ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தார் என பலரும் எழுதத் துவங்கி தங்களது வித்தியாசத்தையும், அடையாளத்தையும் இதனோடே பதிப்பித்துக் கொண்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.

    அந்த வகையில் நவீனத்துவத்துக்குப் பிறகான மாற்றங்களை எழுதிய, எழுதி வந்திருக்கும் பல ஆளுமைகளின் விலகல் குறித்தும் புதிய சொல்லாடல்களை முன்வைத்த இளம் தலைமுறைகள் சிலரின் படைப்புகளையும் சமகாலத்தில் வைத்து வாசித்தபோது உருவான பார்வைகளையே இத்தொகுப்பு தனக்குள் கொண்டிருக்கிறது. மீண்டும் ஒருமுறை அதை வாசித்துப் பார்த்தபோது கொஞ்சம் மினிமலிசமும் வித்தியாசங்களின் மீதான வாத்சல்யமும் உருவாகிவிட்டதை அறிந்து ஏற்கிறேன். பின்-மார்க்சியரான ஃப்ரெடரிக் ஜேம்சன் சொல்வதைப் போல, ‘கறாரான மதிப்பீட்டைவிடவும் எழுத வருவதே ஓர் அரசியல் செயல்பாடு’ என்ற வகையில் மனித சமூகத்தை அரசியல்மயப்படுத்தும் அவசியத்தில் இன்றைய மொழிக்கு அதிக முரண்பாடுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதுபோக புதிய உற்சாகமான அமைப்பு மற்றும் நிறுவனம் சாராத வெளிகள் கருக்கூடி வந்திருப்பதை காணமுடிகிறது. இது கலையைப் பூடகப்படுத்தும் செயலைவிட அருள், தரிசனம், மெய்மைகள் என்று நீளும் தனிச்சிறப்பான ஒரு காலகட்டத்தை கடந்து வந்துவிட்டதையே காட்டுகிறது. மேலும் கலைக்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு மறைந்துவருகிறது என்றும் கூறலாம். இன்று மரபான அழகியலுக்கும் உடனடி அத்தியாவசியங்களுக்கும் இடையே மானுடம் திண்டாடுகிறது. அவற்றையே இக்கட்டுரைகளில் இற்றைப்படுத்தியுள்ளேன். வாசிப்பவர்களின் சிரமம் கருதி இதை எளிமையாக்க என்னிடம் வழிகள் ஏதுமில்லை. ஆனால், சில சங்கேதங்கள், சலனங்கள், குறியீடுகள் இருத்தலியல் மீறிய குணக்குறிகள் யாவற்றையும் இன்றைய படைப்புகள், அதன் ஆளுமைகள் மேலும் இடம், காலம், சூழல் தாண்டி பதிவுசெய்திருக்கிறார்கள். அவற்றுக்கிடையே பல்வேறு கலாச்சாரப் பன்மைத்துவத்திற்கான தங்கள் பொருளியல் இறையாண்மையை உடலுக்கும், உழைப்பிற்கும், காதலுக்கும், அன்பிற்குமாக நவீனம் தாண்டிய நீட்சியில் கோரி நிற்கின்றனர் என்பதை ஒத்துக்கொண்டு, காலாவதியான முற்றொருமைத் தத்துவத்தை விளக்குவதாய் அல்லாமல் இன்பத்தின் குழந்தமையாய், அதற்கான மாற்றங்களை வேண்டுவதாய், புதிய உலகத்திற்குப் பெயர்சூட்டும் தன்னிலையாய் அவை நிற்கின்றன என்பதை என்னால் இயன்ற வகையில் ஒரு வாசகனாய் இத்தொகுப்பில் முன்னிலைப் படுத்துகிறேன். உங்கள் ஆதரவே அதற்கான அறம்.

    யவனிகா ஸ்ரீராம்

    சின்னாளபட்டி

    27 ஆகஸ்ட், 2020

    நீண்ட கால மனம் நீளும் நாவல்

    அன்புடன் கோணங்கிக்கு,

    இடைநிலையில் இருந்து ஆரம்பமும் முடிவும் அற்று சம்பவங்களுக்குள் தூக்கி எறியப்பட்ட நிலையில் திகைப்பிற்கு உரிய முட்டாள்தனங்களோடு கைக்கெட்டிய மொழியுடன் தொடர்புகொள்வது எல்லாவற்றையும் நம்முடன் இணைத்துவிடுகிறது அல்லது எல்லாமே புதியதாகத் திறந்து கொண்டுவிட்டது என்பதைப் போல ஒரு பாவனை மேற்கொள்வதும்கூட நாம் எழுதிச் செல்வதற்கான விளையாட்டை உற்சாகப்படுத்துகிறது எனவும் சொல்லலாம். நீங்கள் தொடர்ந்து நாவல் எழுதுவது குறித்துப் பேசியும் நம்பிக்கையூட்டியும் வருகிறீர்கள். உங்களுடனான பயணங்களில் விடைபெறுதலின்போது நான் கொள்ளும் சங்கல்பமும்கூட அதுதான். ஆனாலும் நாவலின் அல்லது அவ்வகையான நீண்ட தொடர் சம்பவத்தில் தொலைந்துபோன நிலங்களை அல்லது இடம், காலம் போன்ற ஆதாரமான புள்ளிகளைத் தேடிச் செல்வதில் உள்ள பிரயத்தனம் என்பது நெடுங்காலமாய் பழக்க வழக்கங்களில் மெளனமாகிவிட்ட ஒரு நிலவெளி மீதான பற்றற்ற வெறுமையை அல்லது சலனங்களின் மேல் ஐயுறுதல் அல்லது ஒன்றை விவரிக்கும் பொருட்டு அனைத்துப் பரிமாணங்களின் ஊடாகச் செல்லும் மனிதப் பிரக்ஞையற்ற இயற்கையின் நிகழ்த்துதல்கள் போன்றவற்றின் மீதான பெரும் ஆய்வாக முடிவதை ஒரு துரதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

    நமக்கு ஒரு வெருகுப்பூனையின் பசி ஓலம், குங்கிலிய மரச் சரிவுகள், ஒரு மூதாட்டியின் தோல் மணம், காலாவதியாகி குப்பையில் விழும் உணவுப் பண்டங்கள், மழை முகில்கள், நீண்ட ரஸ்தா, வாங்குவாரற்றுக் கிடக்கும் பதனிடப்படாத பிரேத உடல்கள் என உள்ளடக்கி நகரும் படிமங்களை மொழிவழியே அறிமுகப்படுத்தும் சங்கேதங்களை உண்மையிலேயே கண்டுபிடிப்புச் செய்வது நாம் முயன்றிருப்பதுபடியே அநேகப் பக்கங்களை அல்லது ஒரு நாவலை அதன் பைத்தியக்காரதனத்திற்கு ஒப்புக் கொடுத்து விடுகிறது.

    கதை சொல்வதன் சாத்தியங்கள் மொழியை அதன் பயன்பாடு கருதியே உந்துவதாகவும் நாம் மேற்செல்லும்போது அதன் சமிக்ஞையில் இருந்து ஒருவன் பிரதி வருடம் குறிப்பிட்ட நாள் ஒன்றில் கட்டாயம் மழை பெய்து விடுவதாகச் சொல்வதும், யுகம் யுகமாக காதலையும், காமத்தையும் ஊடிழையாகப்பின்னி ஆண் X பெண்ணிற்கிடையே கூருணர்வுடன் பிரவகித்துச் செல்வதில் ஆற்றொழுக்கான சமூக விழுமியங்களை அதன் பொய்மைகளோடு நூற்றாண்டுகளையும்கூட விழுங்கிச் சிரித்து தாவர இலைகள் உதிர, பருவங்களையும் கடந்து, கடல் அரிப்புகளையும் வரலாற்றையும் ஒழுங்குபடுத்தி, பின் ஏதோ ஒன்று நாவல் போல ஓய்ந்தும் விடுகிறது. இதற்கிடையில் ஆவணப்படுத்த முடியாத ஒரு புதிய உயிரி அல்லது பிடிபடாத சம்பவங்கள் (பறக்கும் தட்டு வருவது போலவோ, பூமிக்கடியில் உருவாகிவிட்ட நகரங்கள் போலவோ அல்ல) ஒரு எலி தன் நிகழ்கால உணவாக குழந்தைகளைக் குறிபார்த்துக் கொண்டிருப்பது மாதிரிச் சொல்கிறேன். ஆனாலும் இது ஒரு புதிய சம்பவம் இல்லைதான். நாம் நாட்காட்டிகளையும் வரைபடங்களையும் ஒரு நாவலுக்காக சில ஆவணங்களையும் தூக்கிச் சுமந்து திரியும் அறிதிறன் மூட்டைகளாகவும் புனைவுகளைத் தோண்டியெடுத்து அதை ஒரு பிணக் கத்தலாக சமூகத்தின் செவியில் ஊதிக் கொண்டும் இருக்கிறோம். நெடுங்கால இருப்பு என்பது இடைக்கண்ணியில் ஒரு குவளை மதுவையோ, பெருகி நிறையும் ஆழ்கடல் மீன்களையோ நமக்கென பதிலீடு செய்கிறது. சிலருக்குத்தான் நாவல் எழுதுவது எண்ணெய்க் கிணறு தோண்டுவது போல வாய்க்கிறது.

    கடந்து போன சம்பவத்தின்போது ஒரு தேசத்தின் சுதந்திரத்திற்கான யுத்தங்கள், தியாகங்கள், உயிரிழப்புகள், விதவைகள், அதிகாரிகள், ஆட்சி மாற்றங்கள், உள்நாட்டு வளர்ச்சிகள், தன்னம்பிக்கைகள், இறையாண்மைகள் விளைநிலங்கள், தாவாக்கள், பங்கீடுகள் அதன் முதல் தலைமுறைகள், கல்வி, கலைகள், புரவலர்கள், எழுத்தறிவு போன்றவை ஒரு அந்நியமான நம்பிக்கையை நம் தேர்விற்குரிய வாழ்வின்மீது இருத்திவிட்டுப் போகின்றன. தனது உணவை ஒரு நாவலுக்குள் தேடும் ஒருவருக்கு ஒழிந்துவிட்ட தானியங்கள், எல்லையற்ற பீடபூமிகளின்மீதான அசைவுகள், கால்நடைகள், நதிகள், வியர்வை மற்றும் நீதிகள் தண்டனைகள் அல்லது ஒரு நாயுடன் தொடங்கிய நட்பு போன்றவை மறுபடியும், மறுபடியும் நிகழ்வதைத்தான் இப்படிச் சொல்ல நேர்கிறது.

    நாமோ, நம்மை விட்டுப் போன மனிதர்களைத் தேடி அலைபவர்களாக, பின்பற்றுபவர்களாக அல்லது மறுக்கிறவர்களாக, பிறரை அடையாளப்படுத்துபவர்களாக, எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான மேலும் நம்பிக்கையின்மையைக் கலையாக்க முயல்கிறோம். நிகழ்காலத்தை அதன் உன்னதத்தைக் கேலி செய்பவர்களாக அல்லது காலத்தைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்காகவும் இங்ஙனம் செய்ய நேர்கிறது.

    பிறகு, எப்போதும் உங்களுடனான பயணங்களில், சிறிய வனத்தின் நடுவிலோ அல்லது தாவர காற்று வீசும் குறும் புதர் வெளிகளிலோ மிருகங்களைப் போல போதமற்று ஆழ்ந்து உறங்கிக் கிடக்க நேர்ந்ததை ஞாபகப்படுத்துகிறேன். அது, சந்திப்பின் பிரமைகளை உடைத்துக் கொள்ளப் பயன்பட்டதோடு குறுக்கும் மறுக்குமான மொழியின் வழித்தடங்களைப் பின்தொடர்வதாக அதன் பேச்சரவங்கள் நிலவெளியெங்கும் மர்மங்களைப் போல கவிந்து கிடப்பதாகவும் அனுமானிப்பதில் சென்று முடிந்தது. எல்லாமே புதிர்கள்தான் என வியந்து கொள்ளும்போது, அறிவிகழ்ந்த ஒரு உற்சாகம் எதையும் அறிய முடியா குதூகலம் உண்டானதையும் அப்பயணங்களின் முடிவில் வீடு திரும்புதல் பற்றிய திடுக்கிடல்களையும் இங்கு நினைவுகூர்கிறேன்.

    இவை யாவும் தற்செயல் நிகழ்வுகள்தான் என ஒருவர் வரையறுக்க முடியும் என்றாலும் மீளவும் ஆய்வு செய்வது திரட்டிக் கொள்வது உலகை அல்லது வாழ்விடத்தை ஒரு பரிசோதனை நிலையமாக்கியோ எலும்புகளை உருவி மாடு அடிக்கும் இறைச்சிக் கூடமாக்கியோ விடுகிறது. பிறகு, ஒரு நாவலை எப்படியும் தொடங்கிவிட முடியும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

    கூட்டமாக வாழும் குரங்குகள் மற்றொரு குழுமத்தை அணுகும்போது உண்டாகும் பகிர்வுகள், மோதல்கள், போராட்டங்கள், துரத்தும் எல்லைகள், மீறும் தன்னிச்சையான சூழல்கள் போன்றவற்றின் முடிவாகவும், நீதியாகவும் மனிதன் காரண காரிய அறிவுடன் தோன்றினான் என்பது இயற்கை நியதிபோலத் தெரிவதில் இருந்து ஒரு பனுவல் இறந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தொகுப்புகளை இணைத்துக் கொள்கிறது.

    கடவுள்கூட மனிதக் கூட்டத்திற்குள் இப்படித்தான் தூதனாக, தீர்க்கதரிசியாக, பயன்மதிப்பாக வந்தார். எப்போதும் ஆளற்ற ஒரு அமர்வு நாற்காலி இவ்வுலகின் தலைமைப் பீடத்தில் அதிகாரத்திற்கான போட்டிகளுக்கிடையில் இன்றைய புனைவாகவும் சுழன்று கொண்டிருக்கிறது.

    இதற்கான சமூகச் சாதனங்கள் சமயம், பயன்பாட்டு சடங்கியல்கள், ஆன்மீக தெரிவுகள், அதற்கான இட்டுக் கட்டியவைகள், ஆண் X பெண் இனவிருத்திகள், தத்துவம், நீதி போன்றவை இம்மை

    Enjoying the preview?
    Page 1 of 1