Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennottran, Ival Thanthai? - Part 4
Ennottran, Ival Thanthai? - Part 4
Ennottran, Ival Thanthai? - Part 4
Ebook309 pages2 hours

Ennottran, Ival Thanthai? - Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல சுடும் உண்மைகளின் தொகுப்பே ‘எந்நோற்றான், இவள் தந்தை?’ என்ற நெடுங்கதை! ஆக, ஒரு ஒப்புயர்வற்ற மகளை ... மகளாய் பெற வளர்க்க ஒரு தந்தை என்ன தவம் செய்தான், என்னென்ன தியாகங்கள் புரிந்தான், எத்துணை போராடினான், எதை எதை எதிர் கொண்டான், எங்ஙனம் வாழ்ந்தான், எப்படி எப்படி விழுந்தான் எழுந்தான்... என்ற பதிலே இந்த ‘எந்நோற்றான், இவள் தந்தை?’ . மொத்தத்தில்…ஒவ்வொரு தாயும், தந்தையும், மகளும், மகனும் இத்தகைய நெடுங்கதை நாயகர்களே!

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580180011175
Ennottran, Ival Thanthai? - Part 4

Read more from Dr. M. K. Krishnamoorthy

Related to Ennottran, Ival Thanthai? - Part 4

Related ebooks

Related categories

Reviews for Ennottran, Ival Thanthai? - Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennottran, Ival Thanthai? - Part 4 - Dr. M. K. Krishnamoorthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எந்நோற்றான், இவள் தந்தை? - பாகம் 4

    ‘ஓய்வுக்கு ஓய்வு’

    Ennottran, Ival Thanthai? - Part 4

    Author:

    Dr. M. K. கிருஷ்ணமூர்த்தி

    Dr. M. K. Krishnamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-m-k-krishnamoorthy

    DR MK KRISHNAMOORTHY

    எந்நோற்றான், இவள் தந்தை?

    (பாகம்-4)

    ‘ஓய்வுக்கு ஓய்வு’

    Yatha Drishti, Tatha Srishti!

    சமர்ப்பணம்:

    அம்மா, துணைவி மற்றும் மகள்

    பொருளடக்கம்

    PREFACE

    தென்னையின் புனையுரை:

    கரும்பனையின் தன்னுரை:

    ‘ஓய்வுக்கு ஓய்வு’

    வயது 62

    வயது 63

    வயது 64

    வயது 65

    வயது 66

    வயது 67

    வயது 68

    வயது 69

    வயது 70

    வயது 71

    வயது 72

    PREFACE

    HI(S)TORY!

    His is a history of rags to riches story. He was born in a village and brought up in a coffee estate. He toiled as a labourer, battled against the apparition of poverty and allowed his dreams soar high. If it is fire that tests steel, the young ten year old must have already become a man. His schooling started in 1960 from class V..., lived in a hut, collected firewood, fetched water, cooked food, walked bare footed to school, studied under the dim light of street lamps, never had even two square meals a day…but he aced all his exams and games.

    He passioned for becoming a doctor but God had nobler things for him in store. For two years he had to discontinue his studies and juggled the roles of labourer, airman, teacher and overseer. Destiny through Dr. U. R. Ananthamurthy (the Gyanpeed Awardee Teacher) brought him to RCE, Mysore where amazingly he opted for the subject which was his weakest spot, English. He excelled there in academics, literature, theatre, editing, sketching and sports. But once again he became a labourer as he could neither muster the cash for theatre nor master the art for others.

    A clarion call from KVS in 1975 took him to North East as a primary teacher and eventually became principal in 1995. The profession has brought out the best in him. The response his students gave him made it evident that he is in this world to brighten the future of humanity. His motto being ‘I Dare... Orchid or Kid, I Care’ heralded many innovations in education and has ‘trodden untrodden path’ with a zeal to make the mass of dust into nebula of a new star.

    Golden opportunities slid through his hands inexorably, not because of the lack of mettle but because of several perfidious plans of vested interests. Scandals, conspiracies and controversies – things which would have made lesser mortals question their own survival, only strengthened his resolute to live and with dignity. God has always helped him in his mission to prove ‘Truth too Triumphs’. I wonder how many other teachers can be such fountain heads of forethought and optimism after being pushed to the limits he has been!

    His idol happens to be Mr. E. R. Braithwaite. Following that exemplary teacher, he strove to metamorphose many deadly caterpillars into breath – taking butterflies. His forte is the domain of juvenile delinquents – he calls them affectionately ‘The Thunderbolts’ and makes them assets to the nation. He has always been a strict disciplinarian and stickler for perfection but with full of compassion. And that’s why he has made indelible differences in so many lives. Countless prayers flow in for him, tearing the barriers of regions, religions… which he acknowledges, ‘Your blessings are the wind beneath my wings’.

    He is a prolific writer (so far eight books) and a polyglot too (so far seven languages). God has blessed him with so many laurels, amongst other honours NCERT Award, KVS Eminent Teacher Award, G. N. Bordoloi Award and National Award from the President of India (1995).

    He ignited the eternity with his sterling attitude…I aspire to inherit his fortitude. He may not be a global icon yet. But to millions of his students, he is more than one. To me he is an unsung legend. What makes me the proudest is that he is my father.

    SRISHTI KRISHNAMOORTHY

    (Extracts from Srishti’s article which won her a Commendation certificate from Commonwealth Essay writing Competition in class X--2004)

    தென்னையின் புனையுரை:

    கண்ணன் வந்தான், மாயக் கண்ணன் வந்தான், அல்லும் பகலும் கனவிலும் நனவிலும் அவனே வந்தான். சிறுகதை ஒன்றை கேள் என்றான்... என் பதிலுக்கு காத்திராமல் தன் கதையைத் தொடர்ந்தான்...நான் Coleridge ன் Ancient Mariner இடம் மாட்டிக் கொண்ட மாப்பிள்ளைத் தோழனாய், தப்பிக்க இயலாமல் சிலையாய் கேட்டு நின்றேன்...

    "பழம்படு கிழங்காய் தின்று அழியாத வித்தாய் தப்பிப் பிழைத்து, நீர் பாய்ச்சி களை பறித்து உரம் ஊட்டி வேலி போட்டு பேணி பாதுகாக்காது முளைத்து, புஞ்சையில் வேலியாய் புறம்போக்கில் காடாய் வளர்ந்து, தானாய் பூத்து காய்த்து கனிந்து…

    கோடை வெம்மையில் இதமான பதநீராய், எரித்து காய்ச்ச இனிய கருப்பட்டி வெல்லமாய் கற்கண்டாய் மாமருந்தாய், எஞ்சிய நீர் புளித்து மயக்கும் கள்ளாய்; அரும்பில் அழியாது மிஞ்சிய பிஞ்சுகள் வெட்ட இளம் நுங்காய், ஆடிக் காற்றில் முற்றிய காயின் அவித்த சக்கை தித்திக்கும் தேனடையாய், கனிந்து வீழ்ந்த சுட்டப் பழம் தேனும் திணைமாவும் சேர்ந்த திகட்டாத கூழாய்; மாசி வறட்சியில் நாரையின் வாயாய் வெந்து பிளந்த கிழங்கு சத்து மாவாய், கொட்டையினுள் அடைந்த இலவம் பஞ்சு இயற்கையின் இலவச இனிப்பாய்...என எல்லாம் உணவாக,

    ஓலை… வாழ குடிலாய், காற்று வீச விசிறியாய், கல்வி தொடர இலக்கியம் செழிக்க சுவடியாய்; மட்டை… சமைக்க, குளிர் காய தீயாய்; மரம்… தூணாய், தூலமாய், உத்திரமாய், பாலமாய், ஏற்றமாய்... அடிமுதல் முடிவரை இப்படி எல்லார்க்கும் வாழ்க்கையின் பலமாக,

    ...அன்றும் இன்றும் என்றும் பிறர்க்காகவே வாழும் அந்த அநாதைக் ‘கன்று’… ஆன்றோர்களின் கற்பகத் தருவாய் இருந்தும், தமிழக மரம் என அரசு அங்கீகாரம் பெற்றும், முக்கண் திறந்தும்... ஒரு பனை, வெறும் கரும்பனையே!

    மாறாய் பாதுகாப்பாய் போற்றி பாராட்டி சீராட்டி வளர்த்த அந்த செல்லப் ‘பிள்ளை’, நன்றியாய்... இளநீர், வழுக்கை, தேன் காய், எண்ணெய் என பலதும் உண்ணத் தந்து; ஓடு, மட்டை, நார், கீற்று, ஓலை, மரத்தடி என எல்லாமாய் எல்லார்க்கும் வாழ வழி வகுத்து; தானில்லாமல் பூசையா என… இரு கண் மூடிய ஒற்றைக்கண் தென்னை எல்லாரும் வணங்கும் கல்பதரு ஆகின்றதே!

    ஏன்… எவர்க்கும் உணவாகா, யாருக்கும் உறையுள் தரா, எதற்கும் பலனில்லா கொட்டையைக் கல்லாய் தரும் கமுகு கூட...பூசைக்கும் புனஸ்காரத்திற்கும் தகுதி பெற..."

    அவன் பிடி சற்றே தளர...’போதும் நிறுத்து… நீ யார், ஏன் வந்தாய், எதற்கு இதை எல்லாம் எனக்கு கூறுகின்றாய், இது என்ன மரங்களின் வகுப்பா?’ என்றேன் சற்றே எரிச்சலோடு, பொறுமை இழந்தவனாய்.

    ஏன் என்றால், நீ தென்னை...நான் கரும்பனை! இப்போது என் நெடுங்கதையைக் கேள் என கட்டளை இட்டான்...நான் மாயவனின் மந்திரத்தில் கட்டுண்ட சிறுவனாய், அவன் உலகில் சஞ்சரித்தேன்...

    வியந்தேன்... அவன் வாழ்க்கைப் போராட்டங்களை, கனவை நனவை, உயர்ச்சி வீழ்ச்சி எழுச்சியை, துயரை துணிவை, கொள்கையை கோட்பாட்டை, இழப்பை தியாகத்தை, தன்மானத்தை நன்றிப்பெருக்கை, காதலை பாசத்தை...மொத்தத்தில் அந்த எதிர் நீச்சல் வாழ்க்கையை, முழுமையாய் உணர்ந்து!

    சிலிர்த்தேன் அவனில் என்னைக் கண்டு... இப்படிக்கூட இருவரிலும் ஒருமையா ஒற்றுமையா? ஈருடலாய் பிறந்து ஓருயிராய் ஒரே வாழ்க்கையை வாழ்ந்தவர்களோ என ஐயம் எழுந்து மகிழ்வித்தது!

    அவன் பதிலானான், ஹரியும் ஷிவனும் கூட ஒன்று என்று கூற, கரும்பனையும் தென்னையும் அதாவது கற்பகத் தருவும் கல்பதருவும் ஒன்றே அன்றோ! எனவே நீயும் நானும் ஒருவரே... நீ என் Alter Ego, நான் உன் அந்தராத்மா! என சிரித்து என்னை சிந்திக்கச் செய்தவன், குடத்துள் விளக்கான என் கதையை குன்றில் ஏற்றி, உலகறியச் செய் உன் கதையாக என கட்டளை இட்டு மறைந்தான்.

    ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ‘ஒரு வாரம், ஏழு நாட்கள்’ என்ற என் குறும் புதின கதாநாயகன் என்னிலிருந்து பிரிந்து அவனானான், இந்த ‘எந் நோற்றான், இவள் தந்தை?’ நெடுங் கதையின் நாயகன் அவனிலிருந்து பிரிந்து நானாகின்றான்!

    Dr MK கிருஷ்ணமூர்த்தி

    கரும்பனையின் தன்னுரை:

    ‘பாப்பு, உம் வாழ்க்கை கதையை கூறு’ குழந்தையாய், ‘என் பாப்புதான், என் உலக நாயகன்’ மாணவியாய், ‘உம் வாழ்க்கை, ஒரு அமரகாவியம்’ வளர்ந்தவளாய்... இப்படி மகள் திருஷ்டி, என் கதைக்கு ஆக்க வித்திட,

    ‘தாங்கள், ஒரு பொன் சித்தர்’ மாணவன் மனு, ‘எத்துனை வாழ்க்கைகளை, மெருகேற்றி உள்ளீர்’ மாணவி மீனு, ‘நம்பிக்கையின் ஊற்று, உம் வாழ்க்கை’ ஆசிரிய தம்பி சூதன், ‘சத்தியம் கூட வெல்லும் என்பதின் சாட்சியே நீங்கள்’ முதல்வர் தம்பி முரளி, ‘போராட்டம் இல்லா, பொழுதுண்டோ?’ நண்பர் ஆர்கே, ‘இப்படிக்கூட, ஒரு மாமனிதனா!’ அக்கா மகன் விநாயகன்... இப்படி பலர் ஊக்க உரமாக,

    முப்பத்தைந்து ஆண்டுகள் உறவுகளுக்காய் வாழ்ந்து, நான்கு ஆண்டுகள் அசைவின்றி கிடந்து, மவுன மொழியில் ‘எழுவேன்’ என நம்பிக்கை தந்து, என் ஓரிரவு பிரிவில் நிரந்தரமாய் தனிமைப் படுத்தி அனாதையாய் இறந்து போன ஆரதியின் தாக்கம் ஏக்கம் மாற்றம், மண்ணாகி காற்றாகி ஒளியாகி வளர்க்க,

    ... என் கற்பகத் தரு வளர்ந்தது.

    பிண்டம் முதல் பிரம்மாண்டம் வரை சிரிஷ்டித்து, சுற்றி சுழன்று வாழ நித்தம் வழிவகை செய்யும் பரமாத்மா--என்றும் மாறா ஒரே சீரான சட்ட திட்ட விதி கோடுகளில் கட்டுப்பட்ட ஆத்மாக்களை, தன்னிச்சையாக இயங்கி இணைக்கும் பிணைக்கும் மதி புள்ளிகளின் எண்ணற்ற எண்ண வண்ணங்களுடன் அனுப்ப-- அழகிய கோலம் விதி மதி சங்கமிக்க, மதி சதி செய்ய அலங்கோலம்... வாழ்க்கையாய்;

    இறைவன் கருணையன், சூத்திரதாரன் அன்று ஆட்டிப்படைக்க. எனவே எல்லாம் அவன் செயல் இல்லை, விதி பாதி--மீதி பாதி மதி என்பதே உண்மை. நீதி நெறிமுறை தர்மத்தை நிரந்தரமாக விதி நிர்ணயிக்க, கடமை கண்ணியம் கர்மத்தை மதி தன்னிச்சையால் கட்டுப்படுத்த-- வாழ்க்கை அர்த்தம் ஆகலாம் அனர்த்தமும் ஆகலாம்;

    முயற்சி திருவினை பயக்கும்-- மதியின் இனிய இன்னா எண்ண வண்ணங்களின் இனம் காண, சமய சந்தர்ப்ப கலவையைச் சலித்து சரியானதை தேர்வு செய்ய, ஆத்மாவின் குரலை உய்த்து உணர, பரமாத்மாவை தியானிக்க... இல்லையேல் தண்டனை நிச்சயம். கூட்டு புள்ளிகள் கோட்டை அழிக்கையில், அதாவது கர்மங்கள் எல்லை கடக்கையில், தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பான் இறைவன் மாமனிதனாக... ராமன், கிருஷ்ணன், புத்தன், ஏசு, நபி, நானக் என!

    ...என் அபூர்வ கோலம் மலர்ந்தது.

    கீழை சமவெளியின் வறுமையை, மேலை மலைத்தொடரின் கீழ்மையை, அஸ்ஸாமின் வெள்ளப்பெருக்கை, அருணாச்சலின் நிலச்சரிவை, மேகாலயாவின் பூமியதிர்ச்சியை, தீவிரவாதிகளின் குண்டுகளை, கொடிய நோய்களை, கயவர்களின் ஊழல்களை, வலியோரின் அலைக்கழிப்பை-- எல்லாம் வென்றதை,

    விழைந்ததை அடைந்ததை, தகாததை இழந்ததை, போற்றியதை துறந்ததை, தூற்றியதை மறந்ததை, ஏமாந்து மகிழ்ந்ததை, வஞ்சித்தோரை வாழ்த்தியதை, தரம் தாழாததை, நெறி தவறாததை, உதவியை மறவாததை, நீதிக்காய் போராடியதை-- எல்லாம் ஏற்றதை,

    ஒரு துளி நீரில் பெருங்கடலையும் இருக்கும் இடத்தில் முழு உலகையும் கண்டுகளிக்கும் எனக்கு, ஒருபோதும் உயர் உணவு இல்லை எனினும், கிடைத்ததை ருசித்து புசித்து மகிழும் மனம் பெற்றமையை; ஏதும் இல்லா இல்வாழ்க்கையின் இறுதி, எல்லாம் நிறைந்த இல்லறத்தின் இலக்கணமாய், தாய் சேய்-சேவை செய்ய அரிய சந்தர்ப்பம் அடைந்தமையை,

    ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே ஒளிர்ந்தமையை, அஞ்சிய ஆங்கிலத்தில் ஆசானாய் முனைவர் பட்டம் பெற்றதை, பறிக்கப்பட்ட பதவிகள் விருதுகள் உன்னதமாய் மீண்டதை,

    குழந்தையில் தெய்வம் ஆனதை, பிள்ளைப் பருவத்தில் தெய்வம் ஆக முயன்றதை, வாலிபத்தில் மனிதன் ஆனதை, வயோதிகத்தில் மனிதன் ஆக முயல்கின்றமையை,

    ---எழுதினேன் ‘எந்நோற்றான், இவள் தந்தை?’ என்ற நெடுங்கதையாய், சுடும் உண்மைகளின் தொகுப்பாய்... ஒப்புயர்வற்ற மகளை... மகளாய் பெற வளர்க்க என்ன தவம் செய்தான், என்னென்ன தியாகங்கள் புரிந்தான், எத்துணை போராடினான், எதை எதை எதிர் கொண்டான், எங்ஙனம் வாழ்ந்தான், எப்படி எப்படி விழுந்தான் எழுந்தான்... என்ற கேள்வி பதிலோடு. ஒவ்வொரு தாயும், தந்தையும், மகளும், மகனும் இத்தகைய நெடுங்கதை நாயகர்களே.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று தொடங்கி, கீதா ஜெயந்தி அன்று முடித்தேன். எழுதா சில நாட்கள் போக, ஒரு ஐம்பது நாட்களில், நான்கு பாகங்களை, இருநூறு பக்கங்கள் வீதம், எழுதினேன். ஐம்பது ஆண்டுகளாய்த் தொடரும் நாளேடு பெரிதும் உதவியது, நிகழ்வுகளை இப்போது நடந்தது போல் உணர, உயிர்ப்பிக்க. சர்வம் கிருஷ்ணமயம்!

    மாயக் கண்ணன்

    எந்நோற்றான், இவள் தந்தை?

    பாகம் 4

    ‘ஓய்வுக்கு ஓய்வு’

    வயது 62

    ஓய்வின் முதல் நாள், முதன் முதலாய் எத்தகைய மன அழுத்தமும் இன்றி, வைகரை பொழுதில் எழுந்தேன். ஆரதி குழந்தையாய் உறங்க, மெதுவாய் வீட்டின் வெளியில் வந்தேன். கீழ்வானம் சிவக்க, சூரியன் உதிக்க, பறவைகள் இசைக்க, வீட்டை சூழ்ந்துள்ள காடுகள் இளங்காற்றில் சலசலக்க, உயர உயரப் பறப்பது போன்ற தோன்றல். முதன் முதலாய் இத்தகைய காட்சிகளைக் காண்கின்றேன். இத்தகைய மனநிலையை ஏறத்தாழ முப்பத்தி ஒன்பது ஆண்டுகளில் அனுபவித்ததே இல்லை. ஒரு அலாதியான இன்பம். வீட்டின் அருகில் வளர்ந்திருந்த பெரும் புற்றில் ஏதோ அசைவு, நாய் குட்டிகள் அதைச்சுற்றி அச்சத்தோடு வாலாட்டி குரைப்பு, அந்த அசைவு ஒரு நல்ல பாம்பாய் புறம் வந்து, குரைப்புகளை பொருட்படுத்தாமல், இரை தேடி காட்டில் மறைந்தது. இயந்திரகதியில் அல்லும் பகலும் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள் என வாழ்ந்து, கர்மயோகியாய் சத்திய போராட்டத்தில் மூழ்கிப்போன எனக்கு, எல்லாம் புதுமையாகத் தோன்றின.

    இன்றாவது சற்று அதிக நேரம் தூங்க கூடாதா? என உறங்கி எழுந்து வந்த ஆரதியின் குரல், என்னை உசுப்பிற்று. மென்மையாய் சிரித்து, மெதுவாக ஒன்றும் கூறாமல் வீட்டினுள் சென்றேன், தூய்மை அடைய. குளித்து, பூசை செய்து, சுடச்சுட சிற்றுண்டி உண்டு, செய்தித்தாளை படிப்பதாய் பாவனையில், பள்ளியில் ‘இந்நேரம்’ என மனதில் இறைவணக்கப் அல்லோலகல்லோலங்களை அசை போட்டேன்.

    ஓய்வுக்குப் பின் என்ன செய்வதாய் உத்தேசம்? என சூடான காஃபியோடு கேள்விக் கணையைத் தொடுத்தாள், ஆரதி. சிறிது நேரத்திற்கு முன்னர்தான், இன்றாவது அதிக நேரம் உறங்கக் கூடாதா? என அனுசரணை காட்டியவள், ஓய்வெடுக்க விடாமல் இதோ கேள்வியாய். பெண்களே புதிர்தானோ? ஒரு வாரம் அவளின் அதே கேள்விகள் தொடர்ந்தன, என் மௌனமும் பதிலாய்.

    ஒருநாள் அவளின் பொறுமை எல்லை கடக்க, பெரும் கவலையோடு ஆர்ப்பரித்தாள், என் கேள்விகட்க்கு பதில் ஏதும் இல்லை, இப்படி மௌனியாய் ஒன்றும் செய்யாமல் இருந்தால் என்ன அர்த்தம்? காலகாலமாய் உழைத்த நீங்கள், இப்படி ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியுமா? இப்படி சோம்பலாய் இருந்தால் உடல் நிலை என்ன ஆவது? சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், நின்றால் விழுந்துவிடும். வாழ்க்கை முழுதும் எதிர்கால சிந்தனை ஏதுமின்றி, சத்திய போராட்டத்தில் வாழ்ந்து, வள்ளலாய் எல்லாம் வாரிவாரி எல்லாருக்கும் தானதர்மம் செய்து, எத்தகைய சேமிப்பும் இல்லை. என் ஓய்வு ஊதியம் கூட ‘வேண்டாம்’ என தடை செய்து விட்டீர். இப்போது ஒரு ஓய்வு ஊதியம் மட்டுமே. நாளை ஏதாவது உடல்நிலை சரியில்லை என பெரும் தொகை தேவைப்பட்டால் என்ன செய்வீர்? லட்சம் லட்சமாய் பலருக்கும் கொடுக்கப்பட்டவை மறக்கப்பட வேண்டியவைகளே, யாரும் ஆபத்துக்கு தரப்போவதில்லை. மகளுக்கு ஓராண்டிர்க்கு மட்டுமே ஊக்கத்தொகை கிடைத்துள்ளது. அவள் கனவு கேம்ப்ரிட்ஜில் ஆய்வு செய்ய, அதற்கு ஒருவேளை ஊக்கத்தொகை கிடைக்காவிட்டால் என் செய்வீர்? அதோடு அவளின் திருமணமும் காத்துள்ளது, ஓய்வு பெற்ற கிடைத்த பிடிப்பு தொகையைக் கூட முழுமையாய், யாரோ கேட்டார் என்று தந்துவிட்டு, இப்படி வெறுங்கையோடு யாராவது ஓய்வு பெற்று உட்கார்ந்துள்ள கதையைக் கேட்டு உள்ளீரா? ஏன் எத்தகைய சிரத்தையும் இன்றி இப்படி மெத்ததனமாக உள்ளீர்? நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது... என ஒரே மூச்சில் இறந்த கால நடத்தைகளை, நிகழ்கால மௌனத்தை, எதிர்கால அச்சங்களை மழையாய் கொட்டினாள்.

    அவள் கூறியது முற்றிலும் உண்மையே... ஒருபோதும் நான் திட்டம்போட்டு வாழ்ந்தேன் இல்லை. முக்கியமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1