Kalpatharu - 1
()
About this ebook
முற்றிய தெங்கம் பழம் மண்ணில் ஊன்ற, தினம் தண்ணீர் ஊற்ற, சில மாதங்களில் கரு திருவாய் உயிர்த்து, இறுகிய மட்டையை பிய்த்து, கல்லான ஓட்டை உடைத்து, வாளாய் குருத்து, ஓரிரு ஓலைகள் முளைத்து, இளங்கன்றாய் வளர்ந்து, அடுக்கடுக்காய் இறக்கைகள் பிறந்து உயர உயர...தொடர்ந்து பூத்து காய்த்து கல்பதருவாகி, இளநீரும் இனிய உணவும் உறையுளும் எல்லார்க்கும் தந்து தாயாய் காத்தல்போல… கதாசிரியரின் ‘பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சந்நியாஸ’ வாழ்க்கை நிலைகள், இந்த ‘தசாவதார கல்பதரு’ கதைப்பயணமாக படிப்போர்க்கு பயன் தருமாக!
Read more from Dr. M. K. Krishnamoorthy
Ennottran, Ival Thanthai? - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaaram, Ezhu Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsEnnottran, Ival Thanthai? - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsEnnottran, Ival Thanthai? - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKalpatharu - 2 Rating: 0 out of 5 stars0 ratingsKalpatharu - 4 Rating: 0 out of 5 stars0 ratingsEnnottran, Ival Thanthai? - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsKalpatharu - 3 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kalpatharu - 1
Related ebooks
Kalpatharu - 3 Rating: 0 out of 5 stars0 ratingsKalpatharu - 4 Rating: 0 out of 5 stars0 ratingsKalpatharu - 2 Rating: 0 out of 5 stars0 ratingsEnnottran, Ival Thanthai? - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsEnnottran, Ival Thanthai? - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsEnnottran, Ival Thanthai? - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsEnnottran, Ival Thanthai? - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsVeenaikku Vekkam... Rating: 0 out of 5 stars0 ratingsMuganool Kavithaigal Rating: 5 out of 5 stars5/5Sindhisai Padalgal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsAval Chinna Penna? Rating: 0 out of 5 stars0 ratingsEVEREST IN MIND (TAMIL) Rating: 0 out of 5 stars0 ratingsMayangoli Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsThadaigal Pala Thaandi... Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsMazhalai Ulagu Rating: 0 out of 5 stars0 ratingsVaanampadi Rating: 0 out of 5 stars0 ratingsUlage Poochendu Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsGnanathin Vaayil Rating: 0 out of 5 stars0 ratingsThaiman Ula! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri, Para! Rating: 0 out of 5 stars0 ratingsKarthika Rajkumar Sirukathaigal: Thoguppu 2 Rating: 0 out of 5 stars0 ratingsEnnattavarkkum Iraiva Pottri! Rating: 0 out of 5 stars0 ratingsEn Pandigaiyin Naatkuripilirunthu Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kalpatharu - 1
0 ratings0 reviews
Book preview
Kalpatharu - 1 - Dr. M. K. Krishnamoorthy
https://www.pustaka.co.in
கல்பதரு - 1
‘பிரம்மச்சரியம்’
Kalpatharu – 1
Author:
Dr. M. K. கிருஷ்ணமூர்த்தி
Dr. M. K. Krishnamoorthy
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-m-k-krishnamoorthy
DR MK KRISHNAMOORTHY
கல்பதரு-1
‘பிரம்மச்சரியம்’
(சிறுகதை தொகுப்பு)
Yatha Drishti, Tatha Srishti!
சமர்ப்பணம்
எண்ணும் எழுத்தும் தந்த தந்தைக்கு,
&
எண்ணமும் வண்ணமும் ஊட்டிய தாய்க்கு.
பொருளடக்கம்
PREFACE
என்னுரை:
கல்லூரி மாணவனாக...
1) நட்பா தியாகமா?
2) ஊனம்
3) கலைந்த கனவு
4) பிஞ்சில் பழம்
5) முதலிரவு
6) அவர்கள் எப்போதும் அப்படித்தான்
7) வண்ணத்துப் பூச்சி
8) எங்கே போகிறான்?
9) வெளிச்சத்தின் நிழல்
வேலை தேடுபவனாக...
1) ஓடுகாலி
2) இந்த உலகத்திற்கு என்ன பைத்தியமா?
3) ஆலம் விழுது
4) நெருடும் முள்
5) நாளை என்பது இல்லை
6) நம்பிக்கை
7) நான் கொடுத்து வைத்தவன்
8) எல்லைக்கோடு
9) கண்ணோட்டம்
முதன்மை ஆசிரியராக...
1) வேருக்கு நீர்
2) காலடிச் சுவடுகள்
3) திக்கற்ற தெய்வம்
4) ஒரு கிறுக்கல்
5) ஒரு ஜோடி கால்கள் என்னை தொடர்கின்றன
6) இறைவா உன்னைத் தேடி
7) நீங்கள்தான் என்னை நானாக்கினீர்கள்
8) இடுக்கண் வருங்கால் நகுக
9) ஒரு முக்கோணத்தின் நான்காவது பக்கம்
PREFACE
HI(S)TORY!
His is a history of rags to riches story. He was born in a village and brought up in a coffee estate. He toiled as a labourer, battled against the apparition of poverty and allowed his dreams soar high. If it is fire that tests steel, the young ten year old must have already become a man. His schooling started in 1960 from class V..., lived in a hut, collected firewood, fetched water, cooked food, walked bare footed to school, studied under the dim light of street lamps, never had even two square meals a day…but he aced all his exams and games.
He passioned for becoming a doctor but God had nobler things for him in store. For two years he had to discontinue his studies and juggled the roles of labourer, airman, teacher and overseer. Destiny through Dr. U. R. Ananthamurthy (the Gyanpeed Awardee Teacher) brought him to RCE, Mysore where amazingly he opted for the subject which was his weakest spot, English. He excelled there in academics, literature, theatre, editing, sketching and sports. But once again he became a labourer as he could neither muster the cash for theatre nor master the art for others.
A clarion call from KVS in 1975 took him to North East as a primary teacher and eventually became principal in 1995. The profession has brought out the best in him. The response his students gave him made it evident that he is in this world to brighten the future of humanity. His motto being ‘I Dare... Orchid or Kid, I Care’ heralded many innovations in education and has ‘trodden untrodden path’ with a zeal to make the mass of dust into nebula of a new star.
Golden opportunities slid through his hands inexorably, not because of the lack of mettle but because of several perfidious plans of vested interests. Scandals, conspiracies and controversies – things which would have made lesser mortals question their own survival, only strengthened his resolute to live and with dignity. God has always helped him in his mission to prove ‘Truth too Triumphs’. I wonder how many other teachers can be such fountain heads of forethought and optimism after being pushed to the limits he has been!
His idol happens to be Mr. E. R. Braithwaite. Following that exemplary teacher, he strove to metamorphose many deadly caterpillars into breath – taking butterflies. His forte is the domain of juvenile delinquents – he calls them affectionately ‘The Thunderbolts’ and makes them assets to the nation. He has always been a strict disciplinarian and stickler for perfection but with full of compassion. And that’s why he has made indelible differences in so many lives. Countless prayers flow in for him, tearing the barriers of regions, religions… which he acknowledges, ‘Your blessings are the wind beneath my wings’.
He is a prolific writer (so far eight books) and a polyglot too (so far seven languages). God has blessed him with so many laurels, amongst other honours NCERT Award, KVS Eminent Teacher Award, G. N. Bordoloi Award and National Award from the President of India (1995).
He ignited the eternity with his sterling attitude…I aspire to inherit his fortitude. He may not be a global icon yet. But to millions of his students, he is more than one. To me he is an unsung legend. What makes me the proudest is that he is my father.
SRISHTI KRISHNAMOORTHY
(Extracts from Srishti’s article which won her a Commendation certificate from Commonwealth Essay writing Competition in class X--2004)
என்னுரை:
முறைசார் கல்வி முற்றுகையின் வகுப்பறை சிறையில் அடைக்கப்படாமல், பத்தாண்டு கால நீண்ட பிள்ளைப்பருவத்தில், சுதந்திரப் பறவையாய் சிறகு விரித்து காட்டில் மேட்டில் பறந்து, திறந்தவெளி நடைமுறைக் கல்வியைப் பெறும் பெரும் வரம் பெற்றேன்!
என் படிக்காத பாமரத் தாய், பாலூட்டியக் காலம் போக… ஈராண்டு கீழைச் சமவெளி வயக்காடுகளிலும் ஐந்தாண்டு மேலை மலைத்தொடர் காஃபித் தோட்டங்களிலும், பகல் முழுதும் உழைத்து களைத்து மீண்டு நள்ளிரவு வரை ராமாயண மகாபாரத கதைகளை என்னுள் விதைத்து நெறியாளன் ஆக்கினார்; அரைகுறை படிப்பு படித்த என் தந்தை, எண்ணையும் எழுத்தையும் என் இரு கண்களாக்கி சிறந்த படிப்பாளியாக்கினார்; முன்னிரவில் கூலித்தொழிலாளி தாய்மார்கள் தம் வீட்டு வேலைகளை முடித்து எம் குடிலின் முன் குழுமி வெற்றிலை பாக்கை குதப்பி சிம்னி விளக்கில் என்னை கதைப் புத்தகங்களை படிக்க செய்து, சுற்றிலும் அமர்ந்து ஈடுபாடுடன் கேட்டு... இருப்பதை படித்து இல்லாததை கூட்டி சேர்த்து குரலை உயர்த்தி தாழ்த்தி எல்லாரையும் வசப்படுத்திய என்னை, கதைக்காரன் ஆக்கினர்!
பள்ளியில் ஒரு சிறு கருவாய் குருகுருத்து கல்லூரியில் ஒரு திருவாய் உருபெற்ற ‘நட்பா தியாகமா?’ என்ற என் முதல் சிறுகதை கதையாவது கத்தரிக்காயாவது!
எனவும், ஒரு பரிசோதனை பயணத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘ஒரு வாரம் ஏழு நாட்கள்’ என்ற என் முதல் புதினம் நாவலாவது பொடலங்காயாவது!
எனவும், என் ‘கல்வியில்’ உண்மையாய் நாட்டம் கொண்ட தமிழ்பேராசிரியரால் பெரிதாய் சிறுமைப் படுத்தப்பட; ‘FLASH’ என்னும் மாதாந்திர ஆங்கில இலக்கிய இதழின் ஆசிரியாரான ஒரு பிரபல மூத்த மாணவரை நான் அணுக, தமிழிலா, யார் படிப்பர்? ஆங்கிலத்தில் எழுத இயலாதோ!
என எள்ளி நகையாடி ஏளனப்படுத்த... ‘அரும்பு’ என்ற தமிழ் கைப்பிரதி மாத இலக்கிய இதழைப் பூத்து, பலரையும் எழுதச் செய்து நானும் தொடர்ந்து எழுதி மணம் பெற்றேன்...இப்படியாக முறைசார் கல்வியின் முட்டும் தட்டும் ஏணியாகி என்னை கதாசிரியனாக்கின!
இயல்பு கல்வி பெரும் முன் பெற்ற பின், பணியில் சேரும் முன் சேர்ந்த பின், காதல் கல்யாணம் இல்வாழ்க்கை இல்லாவாழ்க்கை நரைதிரைமூப்பு... என எல்லா காலகட்டங்களும் தொடர் எதிர்நீச்சல் வாழ்க்கையாகி, நிறைய நெருடல்களை நெகிழ்வுகளை அனுபவங்களை படிப்பினைகளை தந்தன. அவைகள் அவ்வப்போது என் படைப்புகள் ஆயின. தோழர் தோழியர் அன்றும் இன்றும் என் கதைகளை படித்து போற்றி புகழ்ந்து துணையாக, கருத்து தெரிந்த காலம் முதல் மகள் சிருஷ்டி என் வாழ்க்கை கதையை கேட்டு உள்வாங்கி கண்டு வியந்து ஊக்கமாக...நான் எழுதுவதை தொடர்கின்றேன், மகிழ்ந்து.
என் படைப்புகள்...
இவைகள் முழுதும் கற்பனை கதைகள் அன்று, அதே நேரத்தில் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியும் அன்று. என் சத்யபோராட்ட வாழ்க்கையில் நான் சந்தித்த பாத்திரங்களும், எதிர்கொண்ட அனுபவங்களும் என் கற்பனையில் பரிணாம மறுமலர்ச்சி அடைகின்றன என்பதுதான் சத்தியம். ஒளியும் தடையும் சேர்ந்து உருவத்துக்கு நிழலை உருவாக்குதல் போல, உண்மைகளும் என் கற்பனையும் சேர்ந்து என் கதைகளாகின்றன. ஆக இது நிழலே நிஜமன்று, எனவே இதில் எது உயர்ந்தது என்ற சர்ச்சை தேவையில்லை. ஒன்று மட்டும் மறுக்க முடியா உண்மை... ஓரளவு எல்லா படைப்புகளிலும், நேரிடையாகவோ மறைமுகமாகவோ நான் வசிக்கிறேன்!
இவைகள் வெற்று வேதாந்தத்திற்காகவும் வெறும் விளம்பர மோகத்திற்காகவும் பிறந்ததல்ல, அவைகள் உண்மையான மனிதனின் மனதில் அழுந்திக் கிடக்கும் நேர்மையான உணர்ச்சிகளின் வெளிப்பாடே.
சமூகத்தின் பெரும் சக்தி அல்ல அதன் ஜீவ ஓட்டம், தனி ஒரு மனத்தின் மென்மையான சிறிய உணர்வுதான் அதன் வளர்ப்பு சக்தி. எனவே அது ஏதாவது ஒரு உள்ளத்தின் ஒரு சிறிய மூலையில் ஒரு சிறிய உணர்வை அசைத்தாலே போதும்.
இவைகள் புரட்சி கருத்துகளின் சங்கமம் அன்று, புரட்டி எடுத்த வாழ்க்கை போதித்த உண்மைகளின் புகலிடமே.
இவைகள், கதைகளின் போர்வையில் ‘வாழ்க்கை இப்படித்தான் அமையவேண்டும்’ என்ற உபதேசங்கள் அல்ல, மாறாய் ‘வாழ்க்கை இப்படித்தான் உள்ளது’ என்ற எளிய தத்துவங்களின் உறைவிடமே.
இவைகளில் என் மனம் கவர்ந்த ஆங்கிலக் கவிஞன் Robert Browning-ன் Dramatic Monologue இலக்கணமாய் அமைய, என் கதை நாயகர்களின் மனதில் முன்னும் பின்னும் பயணித்து ஒரு புது உலகை சிருஷ்டித்துள்ளேன்.
...கோலம் அழகாய் இல்லை என்றால் அது மாவின் குறையோ, தரையின் குறைபாடோ, ஏன் போட்டவரின் குற்றமோ கூட அல்ல. குறை அனுபவமே அதன் காரணம்...அது நிறையாகலாம். பூசை அறை வண்ணக்கோலம் கலையாமல் அப்படியே இருக்கும், ஆனால் வீதியில் போட்ட கோலம் பலர் கண்களின் அழகாகி கால்களின் அடியில் அழிதலில்தான் மகிமை. கன்னியின் தெய்வீகம் தாய்மையில், என் மகிழ்வு என் கதைகள் பலரால் அலசுதலில்!
காலம்தான் எவ்வளவு விரைவில் பறக்கின்றது...மேற்குமலைத்தொடர் குடகு காட்டில் இயற்கையோடு இழைந்த குழந்தைக்காலம், கீழைச்சமவெளி தமிழக வயலூரில் செயற்கை கல்வி கற்ற பள்ளிப்பருவம், மருத்துவ படிப்பு கானல் நீராக ஈராண்டு அக்யாதவாசம், மீண்ட சொர்க்கமாய் இழந்த கல்வி வாலிபத்தின் வசந்தமான இறையருள், வேலையில்லா திண்டாட்டத்தில் விரிசலான உறவுகள், தேடிவந்த வேலையும் சத்யபோராட்டமும், நாடோடி வாழ்க்கையின் நங்கூரமான மனைவி மகள்...எல்லாம் மனதில் நிரந்தர நினைவுகளாய், பெருமையாய்!
முற்றிய தெங்கம் பழம் மண்ணில் ஊன்ற, தினம் தண்ணீர் ஊற்ற, சில மாதங்களில் கரு திருவாய் உயிர்த்து, இறுகிய மட்டையை பிய்த்து, கல்லான ஓட்டை உடைத்து, வாளாய் குருத்து, ஓரிரு ஓலைகள் முளைத்து, இளங்கன்றாய் வளர்ந்து, அடுக்கடுக்காய் இறக்கைகள் பிறந்து உயர உயர...தொடர்ந்து பூத்து காய்த்து கல்பதருவாகி, இளநீரும் இனிய உணவும் உறையுளும் எல்லார்க்கும் தந்து தாயாய் காத்தல்போல…என் ‘பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சந்நியாஸ’ வாழ்க்கை நிலைகள், இந்த ‘தசாவதார கல்பதரு’ கதைப்பயணமாக படிப்போர்க்கு பயன் தருமாக!
சில கதைகள் அக்காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிலையத்திலிருந்து ‘இசையும் கதையும்’ நிகழ்ச்சியில் நிறைய நேயர்களை மகிழ்வித்தன. சில கதைகள் துணைவி Bharati மூலம் அஸ்ஸாமியிலும், பல கதைகள் நண்பர் Dr Akilesh Kumar Goswami மூலம் இந்தியிலும், என் குறும் புதினம் தம்பி Dr Haricharan Shenoy மூலம் கன்னடத்திலும், தமக்கை Chini Champa Mahanta மூலம் அஸ்ஸாமியிலும், தங்கை Prasanna S Pillai மூலம் மலையாளத்திலும் ...மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரமாயின. மகள் Srishti ஆங்கிலத்தில் முயல்கின்றார். தமிழறியா இச்சான்றோர்க்கு என் பன்மொழி சிற்றறிவு பெரிதும் உதவியாய் இருந்தமைக்கு மகிழ்கிறேன்.
இப்படி சில அண்டைய மொழிகளில் பலரையும் பரவசப்படுத்திய என் தமிழ் படைப்புகள், தாய்மொழியில் மட்டும் பதிப்பாக ஏக்கம் பெரும் தாக்கத்தை தந்த நிலையில்தான்...தம்பி ஜெகன் வலைப்பதிவிலும், தோழர் கவிஞர் சந்தர் வழிவகை தந்தும், முனைவர் ராஜேஷ் புத்தகங்களாக பதிப்பித்தும் உலகறியச் செய்கின்றனர்.
மனமார்ந்த நன்றி அனைவருக்கும்.
Dr MK கிருஷ்ணமூர்த்தி
1) நட்பா தியாகமா?
அம்மா...
குதூகலத்தோடு ஓடிவந்தான் ரசாக், மகிழ்ச்சியே நெருங்காமல் இருள் அடைந்துக்கிடந்த அவன் முகத்தில் அப்படி ஒரு ஒளி எங்கிருந்து வந்தது... கவிழ்ந்திருந்த மேகம் களைத்தவுடன் கதிரவன் பளிச்சென்று காட்சி தருவானே அப்படி இருந்தது அவன் முகம். சோகத்தினிடையே ஒரு கீதமா?
என்னப்பா...?
என்று அம்முதியவள் வெளிவந்தது தான் தாமதம், பழுத்த இலைகள் காற்றடிக்கும்போது மரத்திலிருந்து பொலபொலவென்றுக் கொட்டுமே... அப்படி கொட்டினான் வார்த்தைகளை.
அம்மா... இன்று பால்பாயசம் பண்ணுமா, நம்ம ரவி விடுதலையாகர நாளுமா. வீட்டை அலங்காரப்படுத்தறதுக்கு ஏற்பாடு செய்யிமா...
கடைசி வார்த்தைகளை அவளால் தூர இருந்துதான் கேட்க முடிந்தது. அவன்தான் ரவியை அழைத்துவர மகிழ்ச்சியோடு வார்தைகளை வீசிக்கொண்டே ஓடுகின்றானே.
ரவி யார்? ரசாக் யார்? அந்த மூதாட்டி யார்? அவன் உள்ளத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ஏன்? ரவி ஏன் சிறைச் சென்றான்?...ஓடிக்கொண்டிருக்கும் அவன் உள்ளத்தில் அழுந்திக் குமுறிக் கொண்டிருந்த அந்த நினைவுகள் கொப்புளித்து, பிரவாகமாகப் பீரிட்டு வருவதை அலசிப் பார்த்தால் நன்கு புரியும்.
பதினைந்து வருடங்களுக்கு முன்...
கோடை விடுமுறை முடித்து பள்ளிகளெல்லாம் திறந்துவிட்டிருந்தனர். அந்தக் கிராமத்திலிருந்த உயர்நிலைப்பள்ளியும் திறந்து ஒருவாரமாகி விட்டிருந்தது. புதியதாக மாணவர்கள் ஆறாம் வகுப்பில் சேர்ந்துக் கொண்டிருந்தனர். ஒரு மூலையில் அமைதியின் உருவமாய், அடைக்கலமே நிலைக்கலனாய் ஏழை விவசாயி ஒருவரின் அருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவன்தான் ரவிச்சந்திரன். இன்னுமொரு இடத்தில் சுறுசுறுப்பான தோற்றத்தோடு துறுதுறுவென படுச்சுட்டியாய் நிலைகொள்ளாமல் இருந்தான், ஒரு செல்வந்தரின் அருகில் மற்றொருவன், அவன்தான் ரசாக். சேர்ந்தனர் இருவரும். படிப்பும் தொடர்ந்தது. அவனோ கல்வியில் முதல்வன். இவனோ கல்வியைத் தவிர எல்லாவற்றிலும் முதல்வன். ரசாக்தான் ரவியிடம் வலிய வந்து பேசுவான். ஒதுங்கிச் செல்லும் அவனை ஓயாமல் தொடர்ந்து ஒரு நட்புப் பாலத்தை அமைத்தவன் ரசாக்தான். இருதுருவங்களான அவர்களிடையில் தான் நட்பு வளர்ந்தது.
ஒருநாள்...டேய் ரவி, ஏன்டா எப்பப்பாத்தாலும் உம்முனு இருக்கே. துறுதுறுனு இருக்கனும், இல்லனா துறுபிடித்திடும்டா வாழ்க்கை
தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் கேலியோடு அறிவுரைச் சொன்னான் ரசாக்.
இரும்பத்தானேடா துறு பிடிக்கும். நான்தான் துரும்பாச்சேடா... என்ன அது ஒண்ணும் செய்யாது
வேதனையை அடக்கிக்கொண்டு குறும்புத்தனமாக பதில் அளித்தான்.
துரும்ப கரையான் அரிக்குமே...
சமாதானத்திற்காகக் கூறினாலும், ரவி சுட்டிக் காட்டின இரும்பு...துரும்பு, பணக்காரன்...ஏழை வேற்றுமை வேதனையைத் தந்தது.
பேதங்கள் காற்றில் பறக்க இருவரும் ஒற்றுமையாய், நண்பர்களாய் வளர்ந்தார்கள். ரவி கல்வியிலும், ரசாக் மற்றவைகளிலும் ஒருவர்க்கொருவர் உதவி வாழ்ந்தனர். வகுப்புகள் விரைந்தன. ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது... நட்பும் வளர்ந்துக் கொண்டே வந்தது.
பத்தாம் வகுப்பில் இருவரும் நுழைந்தனர். திடீரென்று ஒருநாள் ஹார்ட் பெயிலாகி இறந்துவிட்டார் ரசாக்கின் தந்தை. துடித்தார்கள் நண்பர்கள். தந்தையின் மறைவு தாயின் உடல் நலக் குறைவாய் தொடர்ந்தது. ரவியின் பெற்றோர்கள்தான் ரசாக்கிற்கு ஆறுதலாயிருந்தனர். தந்தையின் மறைவு, தாயின் உடல்நலக் குறைவு, இளமை, செல்வம், பொறுப்புகள்…இவைகள் ஏற்கனவே மோசமாயிருந்த அவனை இன்னும் மோசமாகச் செய்தன, கல்வியல்தான். ஆண்டொன்று மறைந்தது, தாயின் உடல் நலக்குறைவு இன்னும் படு மோசமானது.
ஏன்டா ரசாக்... கொஞ்சம் கஷ்டப்பட்டு படியேண்டா, உன் சிநேகிதன் ரவியப் பாரு... அவன மாதிரி படிக்கர்துக்கு என்னடா கொரச்சல்... என்னா வசதியில்ல உனக்கு. SSLC பாஸ்னு சொல்ர நல்லவார்த்தையையாவது கேட்டுட்டுச் சாகனும்... அதுதாண்டா என்னோட கடைசி ஆசை. எங்கடைசிகாலம் நெருங்கிக்கிட்டே இருக்குது. என்னென்னமோ செய்து பார்க்கனும்னு நெனைச்சேன்...ம்... அவர்போன இடத்துக்கே நானும் போயிடறேன்
தன் மகன் என்று நினைத்து படுத்தப்படுக்கையில் அவள் கடைசி ஆசையை வெளியிட்டாள். ஆனால் ரசாக்கோடு ரவியும் நின்றுகொண்டுள்ளதை அவள் அறியாள் பாவம். முடிவில் கவலை பெரிய உருவில் அவன் மீது கவிழ்ந்தது.
ரவியின் சிந்தையில் ஒரு பெரிய குழப்பம் தலை தூக்கியது. இதுவரையிலும் எப்படியோ ரசாக் வெற்றியடைந்து விட்டான். ஆசிரியர்களிடமிருந்த நற்பெயரே காரணம். ஆயின், இந்த வருடம் நிச்சயமாக வெற்றியடைய இயலாது. அப்போ அந்தத் தாயின் கடைசி ஆசை... நிறைவேறாத அந்த ஆசையை ஏன் நிறைவேற்றக்கூடாது... ஒருவேளை தனயனின் வெற்றியால் தாயின் நோய்கூடத் தீரலாமல்லவா...? குறுக்கு வழியில் ரவியின் மூளை வேலைச் செய்தது.
அம்மா... நேத்து நான் ரசாக்கோட வீட்டிற்குப் போயிருந்தேன். அங்க அவனோட அம்மா ரொம்ப முடியாம படுத்தப் படுக்கையா இருந்தாங்க. ரசாக்கும் என்னோட இருந்தான். அவன் மட்டும்தான் இருக்கர்தா நெனைச்சிக்கினு எப்படியாவது SSLC யில பாஸாயிட்டா போதும்டாப்பா... இப்பக்கி எங்கடைசி ஆசை இதுதாண்டானு சொன்னாங்கம்மா...
என்று தன் அன்னையிடம் கூறினான் ரவி.
அப்படின்னா நல்லாப் படிக்கச் சொல்லுப்பா... நீயும் முடிஞ்சளவுக்கு உதவுப்பா
என்றாள் அவன் தாய்.
எப்படினாலும் அவன வெற்றியடையச் செய்யரேம்மா... ஆனா அவனா படிச்சி எழுதி வெற்றியடைய முடியாது. வேறு எதனாத்தாம்மா வழி செய்யனும். இதுவரிக்கும் பாஸானது பெரிசில்ல. இப்ப பாஸாவது ரொம்ப கஷ்டம். ஏன்னா இது பெரிய பரிட்ச, அதுவும் வெளியூர்லப் போயி எழுதனும்... ம், எப்படியும் நான் பார்த்துகரம்மா...
தன் மகனின் திறமையில் நம்பிக்கைக் கொண்ட அந்தத் தாய் மகிழ்நதாள்.
அடுத்த நாள்...
டேய் ரவி... என்னடா செய்யர்து... எவ்வளவோ கஷ்டப்பட்டு பார்க்கரேன். என்னால இந்த SSLC ய தாண்டமுடியாது போல இருக்குடா. அம்மா வேற...
பயப்படாதடா ரசாக். நான் ஒரு ஐடியா சொல்ரன். அதன்படி நடக்கலாம். தெய்வம் நமக்குத் துணை இருந்தா அதுலே நிச்சயமா வெற்றியடையலாம். உன் வெற்றியே அம்மாவோட உடம்பக் குணப்படுத்தர மாமருந்தாகூட இருக்கலாம்.
அப்படி ஒண்ணும் இல்ல ரவி. நான் வெற்றியடைஞ்சாலும் சரி, தோல்வியடஞ்சாலும் சரி அந்த முடிவு ஒண்ணும் அம்மாவின் உயிரப் பிடிச்சி நிறுத்தாது. நிறுத்தவும் முடியாது. எம் மேல இருக்கிற பாசம் இதுநாள் வரைக்கும் வச்சிருந்திச்சி, அப்பா இறந்தனிக்கே இவங்களும் போயிருக்க வேண்டியவங்க... ‘கணவனா மகனா’ங்கர?’ போராட்டத்ல ‘கணவவன்’தாங்கர முடிவுக்கு இப்ப வந்துட்டாங்க. ஆனா... ஒண்ணு, என் வெற்றி நிம்மதியான முடிவை... அதாவது நம்ம மகன் எதிர்காலத்தில நல்லா இருப்பாங்கற நம்பிக்கையையும், மனச்சாந்தியையும் தரும். அனையப்போர விளக்கும் பிரகாசப்படர மாதிரி அவ்வளவுதான்.
"ரசாக்... நீ என்ன சொன்னாலும் சரி, உன் வெற்றி, நிச்சயமா அந்த அனையப்போர விளக்குக்கு நெய்யா இருந்து தூண்டிவிடும்னு நான் நெனைக்கிறேன் அதால நான் போட்ட திட்டப்படி நீ ஒத்துழைச்சித்தான் ஆகனும்... என் திட்டம் இதுதான்... ‘தேர்வு நடைபெறுவது நகரத்தில், நம் கிராமத்தில் இல்லை. அங்கு வரும் மேற்பார்வையாளர்கள் அநேகமாக எல்லோருமே புதியவர்களாகத்தானிருப்பர். அவரவர்களின் பெயரும், எண்ணும் மேசையின் ஒரு மூலையில் ஒட்டியிருப்பர். அங்கே ரவியின் இடத்தில் ரசாக்கும், ரசாக்கின் இடத்தில் ரவியும் அமர்ந்து தேர்வு எழுதுவார்கள்...’
இந்தத் திட்டத்தைக் கேட்ட ரசாக் நடுநடுங்கிப் போனான். ஐயய்யோ...ரவி கூடவேகூடாது. இது நட்புங்கர பேர்ல பெற்றோர்களுக்குச் செய்யர துரோகம்பா, உனக்கு நீயே செய்துக்கர அழிவுப்பா இது... ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன்.
இந்த மறுப்பெல்லாம் ரவியின் பிடிவாதத்தில் தூள்தூளாயின. முடிவிலே குற்ற உள்ளத்தோடு தாயிற்காகச் சம்மதித்தான். நண்பனின் தியாகத்தை அவன் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தான். அவர்கள் உண்மையிலேயேப் பெருமிதம் அடைந்தனர். இதைக் கண்ட ரசாக்கின் உள்ளத்தில் அவர்கள் தெய்வங்களாக உயர்ந்தனர்.
மார்ச் பிறந்தது. ரசாக்கின் தாயின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. ரசாக்கும் தன்னால் இயன்றளவைவிட அதிகமாகப் படித்தான். ஆனாலும் கலைமகள் அருகில் வர பயந்தார், திருமகளிடம் வெறுப்போ...