Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arivukku Aayiram
Arivukku Aayiram
Arivukku Aayiram
Ebook113 pages43 minutes

Arivukku Aayiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'உயர்ந்தோரின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு' என்னும் மேற்கோள் 'அறிவுக்கு ஆயிரம்' எனும் தேனடையில் அடங்கிய தேன் துளி என்றே கொள்ளலாம். பிறப்பும், இறப்பும் ஒருவர் வாழ்வின் தொடக்கமும், முடிவும் எனக் கொண்டால் இடைப்பட்ட காலங்களில் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளவை எனில் அதுவே வரலாறாகி விடுகிறது. மலர்வது எல்லாம் மணப்பதில்லை. அது போன்றே பிறப்பவர் எல்லாம் சிறப்பெய்துவதுமில்லை. ஆனால் எல்லோரும் மேம்பட முன்னோர் மொழிகளும், அனுபவ அறிவுகளும் துணை நிற்கும் என்பதனை உணர்ந்தமையால் இந்த நூல் பிறப்பெடுத்திருக்கிறது.

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580174711222
Arivukku Aayiram

Read more from Pulavar K. Raveendran

Related to Arivukku Aayiram

Related ebooks

Related categories

Reviews for Arivukku Aayiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arivukku Aayiram - Pulavar K. Raveendran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறிவுக்கு ஆயிரம்

    Arivukku Aayiram

    Author:

    புலவர் கு. இரவீந்திரன்

    Pulavar K. Raveendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pulavar-k-raveendran

    என்னுரை

    புலவர் கு. இரவீந்திரன்

    அறிவுக்கு ஆயிரம் என்னும் இந்நூல், அடுக்கு மல்லி போல் அழகு செய்யும் ஓர் அள்ளிச் சேர்த்த பூமாலை.

    நந்தவனத்தில் புக்க தேனீயாய்த் தேடிச் சேர்த்தத் தேன்துளிகள்.

    மலையின் மணியும், மண்ணின் பொன்னும், அலைகடல் முத்தும் ஆரமாய்த் தவழும் போது அணியாகும்.

    அணி அணிந்தவரையே அழகு செய்யும். நூலறிவு வாலறிவைத் தரும். வாலறிவு வரமுடையார்க்கே கிடைப்பதுங் கூடும்.

    அத்தகு அறிவு தேடிப் பெறுவார்க்கு எளிதில் கிடைக்கும்.

    அத்தேடலில் நான் உதகமண்டலம் பள்ளிகளில் பணியாற்றிய காலத்தில் தேடிப் படித்த இராமகிருஷ்ண விஜயம் மாதவிதழில் கண்டெடுத்த முத்துக்களே அறிவுக்கு ஆயிரமாய் இந்நூலில் அழகு செய்கிறது.

    இராமகிருஷ்ண விஜயம் மாதவிதழில், ஆன்மீகம் பக்தி மணம் கமழும்; அறிவியல் அறிவுக்கு விளக்கங்தரும்; பொன் மொழிகள் மதிநுட்பத்தைக் கூரியதாக்கும்; பழமொழிகள் பண்பாட்டுக்கு விதையிடும். சிந்தனைத் துளிகள் நற்சிந்தனைகளைத் தூண்டி நல்வாழ்வுக்கு வழிகாட்டும்.

    நூலோர் நுவலிய கருத்துக்கள் வாழும் இளந்தலைமுறையைச் செதுக்கும் உளியாகி மாற்றத்தை உண்டாக்கும்.

    அம்மாற்றமே மானிடத் தத்துவமாய் வளர்ந்து மகத்துவத்தைத் தந்துயர்த்தும்.

    அவ்வுயர்வு அனைவரும் பெற்றுயர வேண்டும் என்பதுணர்ந்து, ‘யான் பெற்ற இன்பம் பெறுக இல்வையகம்’ என்பது போல இந்நூல் அணியாக்கப் பட்டது.

    இந்நாலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த குமரி முத்தமிழ் மன்ற அமைப்பாளரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்ப் பல்கலைக் கழக ஆய்வாளருமான பேராசிரியர் முனைவர் செ. சஜீவ் MCA,Phd அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த தமிழாசிரியை திருமதி கா அயீஷாம்மாள் அவர்களுக்கும், இந்நூலினை அழகுபெறச் செய்து அச்சிட உதவிய எனது மருமகன் அன்பிற்கினிய வி.வி., விக்ரம் ME அவர்களுக்கும், அவருடன் துணைநின்ற எனது மகள் முனைவர், கு.இர சிவபாரதி ME, Phd அவர்களுக்கும், எனது எழுத்துலகிற்கு உறுதுணை நிற்கும் எனது மகன் கே ஆர் சிலபிரசாத், மருமகள் எக்ஸ். வித்யா ஆகியோருக்கும், இந்நூலினை அச்சாக்கம் செய்த மார்த்தாண்டம் உஷா அவர்களுக்கும், அச்சிட்டு புத்தகமாக்கிய புஸ்தகா இணையப் பதிப்பகத்தாருக்கும் நான் எனது நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

    அன்புடன்

    புலவர் கு. இரவீந்திரன்

    அணிந்துரை

    பேராசிரியர் முனைவர் செ. சஜீவ்

    ‘உயர்ந்தோரின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு’ என்னும் மேற்கோள் ‘அறிவுக்கு ஆயிரம்’ எனும் தேனடையில் அடங்கிய தேன் துளி என்றே கொள்ளலாம். பிறப்பும், இறப்பும் ஒருவர் வாழ்வின் தொடக்கமும், முடிவும் எனக் கொண்டால் இடைப்பட்ட காலங்களில் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளவை எனில் அதுவே வரலாறாகி விடுகிறது. மலர்வது எல்லாம் மணப்பதில்லை. அது போன்றே பிறப்பவர் எல்லாம் சிறப்பெய்துவதுமில்லை. ஆனால் எல்லோரும் மேம்பட முன்னோர் மொழிகளும், அனுபவ அறிவுகளும் துணை நிற்கும் என்பதனை உணர்ந்தமையால் இந்த நூல் பிறப்பெடுத்திருக்கிறது.

    ஆசிரியரின் அகலப் பார்வையால் 333 ஆளுமைகளின் பொன்மொழிகளோடு, பழமொழிகளும், படைப்பு மொழிகளும் இப்புத்தகப் பக்கங்களை வண்ணமயமாக்கியிருக்கிறது.

    ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் செதுக்கும் உளியாய் பிரதிபலிக்கிறது. புத்தகம் ஒன்று தான், ஆனால் அது தரும் விளைச்சல் அமோகம். இதனூடே பயணிப்பவர்கள் நிச்சயமாக நின்று கவனித்துச் செல்வர். அந்த இடம் அவர்களை உயர்ந்தோராக்கும் ஆரம்பப் பள்ளியாய்த் திகழும். மொத்தத்தில் இப்புத்தகம் ஒரு புள்ளிக் கோலமே! எந்தப் புள்ளியையும் எவரும் தனதாக்கி தனது வாழ்க்கை எனும் கோலத்தை அழகாக்கிட முடியும்.

    ஆங்கிலத்தில் பெனாசியா (panacea) என்றொரு வார்த்தை உண்டு. அதன் பொருளாவது எல்லா நோய்களையும், பிரச்சினைகளையும், இடர்களையும் சரிப்படுத்திடும் நிவாரணி என்பதாகும். குறிப்பாக ‘சர்வ ரோக நிவாரணி’ என்றே வழக்கத்தில் இருக்கிறது.

    இப்புத்தகத்தையும் ஊடுருவிச் செல்பவர்களுக்குப் புரிந்து விடும் இது ஒரு சர்வ ரோக நிவாரணி என்று. மகிழ்ச்சியில், கலக்கத்தில், இளமையில், முதுமையில், துன்பத்தில் என எல்லாக் காலத்திலும் ஆற்றுப்படுத்திடும் புத்தகம். அதன் சிந்தனை தரும் பக்கங்களின் வரிகளில் சிலவற்றையேனும் பதிவு செய்யவில்லையெனில் முன்னுரை முழுமை பெறாது என்பதனை உணர்ந்திருக்கிறேன்.

    எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றோம். அது எங்கே கிடைக்கும்! எப்படி கிடைக்கும்!! என்பதற்கான விடையாக எங்கு அன்பு இல்லையோ அங்கு மகிழ்ச்சி இருக்க முடியாது என்பதனை அடையாளப் படுத்தியிருக்கிறார்.

    ‘குடும்பம் ஒரு கோவில்’ என்னும், சொற்றொடர் எல்லோராலும் அறியப்பெற்ற ஒன்று. துன்பத்தை நீக்கி, இன்பத்தைப் பெருக்கும் இடமாக குடும்பமும், கோவிலும் திகழ்கிறது. உறவுகளின் மொத்த தொகுப்பையே குடும்பம் என்னும் அழகியச் சொல் உணர்த்துகிறது. ஆனால் காலச் சூழல் அதனை குறுகிய வட்டத்திற்குள் குறிப்பாக இரண்டு தலைமுறையினரோடு அடக்கி விட்டது. அக்குடும்பம் நற்புகழை ஈட்ட வேண்டுமெனில் நன்மக்களைப் பெறுதல் அவசியம். அந்த நன்மக்கள் யாவர் என்பதற்கு

    குடும்பத்திற்கு புகழ் உண்டாகும்படி நடப்பவன் நன் மகன் ஆவான் என்னும் சாணக்கியர் சொல் தனைக் கொணர்ந்து அறிவுரைக்கிறார்.

    "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனும் திருமந்திர வரிகளுக்கு இலக்கணமாகி எழுத்துலகில் தடம் பதித்து உயர்ந்தோர் வரிசையில் இடம் பிடித்திருக்கும் நூலாசிரியர் புலவர் கு. இரவீந்திரன் அவர்களை எழுத்துலகப் பிரம்மா எனக் கொண்டாட நீடூழி வாழ்க! என முன்னுரை எனும் முகவரி மூலம் வாழ்த்துகின்றேன். இந்த உரையின் முற்றுப் புள்ளிக்கு முன்னால் தமிழன்பன் வரிகளை வரிசைப்படுத்துகின்றேன்.

    பத்துப் பறவைகளோடுப் பழகி நீங்கள் ஒரு பறவையாகிட முடியாது! பத்து நதிகளோடுப் பழகி நீங்கள் ஒரு நதியாகிட முடியாது!!

    பத்துப் புத்தகங்களோடுப் பழகிப் பாருங்கள் நீங்கள் பதினோராவது புத்தகமாகப் படிக்கப்படுவீர்கள்!!!

    வாசகர்களே உங்களை இந்த உலகம் படிக்க அறிவுக்கு ஆயிரம் படியுங்கள்.

    அன்பெனும் பிடியுள் அகப்பட்ட அன்பன்,

    செ.சஜீவ்

    வாழ்த்துரை

    கா ஆயிசாம்மாள்

    ஒருவரின் வாழ்க்கையைச் செம்மையுறவும், சிறப்புறவும் செய்வது கல்வி. அதிலும் கற்றவரின் வாயிலாகப் பெறப்படும் பொன்மொழிகளும், அனுபவத்தின் மூலம் பெறும் பழமொழிகளும் நம் வாழ்க்கையைப் பட்டை தீட்டப் பயன்படுவன. அறிவும், ஞானமும் உள்ளூரும் எண்ணற்ற அறிஞர்களின் பொன்மொழிகளைத் தொகுத்து வழங்குவது ஒரு மிகச் சிறந்த பணியாகும். அறிவு என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான பகுதியாகும். அறிவின் மதிப்பு என்பது எப்போதும் உயர்வானது.

    நமது முன்னோர்களின் அறிவுரைகள், வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை எளிமையாகவும், ஆழமாகவும் உணர்த்துகின்றன.

    Enjoying the preview?
    Page 1 of 1