Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal
Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal
Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal
Ebook64 pages16 minutes

Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மயிலாப்பூரானது கயிலைக்கு ஒப்பானதால் "மயிலையே கயிலை" என அழைக்கப்படுகிறது. பெருமைகள் பல வாய்ந்த மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு சப்த ஸ்தான சிவத்தலங்களை ஒரே சமயத்தில் வரிசைக்கிரமமாக தரிசித்து பலனடைந்தவர்கள் ஏராளம். ஏழு சிவத் தலங்களையும் முறைப்படி வரிசைக்கிரம்மாக ஒரே நாளில் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மகாசிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் இத்தலங்களுக்குச் சென்று தரிசித்து இறையருளைப் பெறுகிறார்கள்.
Languageதமிழ்
Release dateJun 22, 2024
ISBN6580138811215
Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal

Read more from R.V.Pathy

Related to Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal

Related ebooks

Reviews for Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal - R.V.Pathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மயிலையே கயிலை - திருமயிலை சப்த ஸ்தான சிவத்தலங்கள்

    Mayilaiye Kayilai - Thirumayilai Saptha Sthana Sivathalangal

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    பொருளடக்கம்

    மயிலை ஓர் அறிமுகம்

    சப்த ஸ்தானத் தலம் – ஒன்று

    சப்த ஸ்தானத் தலம் – 2

    சப்த ஸ்தானத் தலம் – மூன்று

    சப்த ஸ்தானத் தலம் – நான்கு

    சப்த ஸ்தானத் தலம் – ஐந்து

    சப்த ஸ்தானத் தலம் – ஆறு

    சப்த ஸ்தானத் தலம் – ஏழு

    ஆர்.வி.பதி

    வணக்கம். திருத்தலங்கள் நிறைந்த ஒரு பழமையான ஊர் மயிலை எனும் மயிலாப்பூர். இந்த மயிலாப்பூரானது கயிலைக்கு ஒப்பானது. இதனாலேயே மயிலையே கயிலை என்கிறார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த மயிலாப்பூரில் ஏழு சப்த ஸ்தான சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஏழு சிவத்தலங்களையும் ஒரே சமயத்தில் வரிசைக்கிரமமாக தரிசித்து பலனடைந்தவர்கள் ஏராளம்.

    ஏழு சிவத் தலங்களையும் முறைப்படி வரிசையாக ஒரு நாளில் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மகாசிவராத்திரி அன்று சிவ பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இத்தலங்களுக்குச் சென்று தரிசித்து இறையருளைப் பெறுகிறார்கள். இந்த ஏழு தலங்களையும் வரிசைப்படி இந்த நூலில் தந்துள்ளேன். காலை வேளைகளிலோ அல்லது மாலை வேளைகளிலோ இந்த ஏழு சிவத்தலங்களையும் இரண்டரை மணி நேரத்தில் நீங்கள் தரிசித்து விட முடியும். இந்த நூலை வாசித்து முடித்து மயிலைக்குச் சென்று ஏழு தலங்களையும் தரிசனம் செய்து வாழ்வில் வளம் பெறுங்கள். எல்லா நலன்களையும் பெறுங்கள்.

    தொடர்ந்து மூன்று முறை இந்த ஏழு கோவில்களுக்கும் சென்று தகவல்களைத் திரட்டி இந்த நூலினை எழுதியுள்ளேன்.

    மயிலையே கயிலை திருமயிலை சப்த ஸ்தான சிவத்தலங்கள் எனும் இந்த ஆன்மிக நூலினை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    மயிலை ஓர் அறிமுகம்

    முற்காலத்தில் மயூராபுரி, மயூராநகரி என்று வழங்கப்பட்ட மயிலையானது பிற்காலத்தில் திருமயிலை என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் என தற்காலத்தில் அழைக்கப்படும் இப்பகுதியில் ஏராளமான திருத்தலங்கள் அமைந்துள்ளன. முற்காலத்தில் இப்பகுதியில் ஏராளமான மயில்கள் வாழ்ந்து வந்தன. இப்பகுதியில் மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தினால் இவ்வூர் மயில் ஆர்ப்பு என்று பெயர் பெற்று பின்னல் மயிலாப்பு என்று வழங்கப்பட்டு மருவி தற்போது மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1