Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanmeega Ennangal!
Aanmeega Ennangal!
Aanmeega Ennangal!
Ebook96 pages37 minutes

Aanmeega Ennangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதங்களில் தொன்மையானதான இந்துமதம் சநாதன தர்மத்தை குறிப்பதே, எந்த தனி மனிதனாலும் தோற்றுவிக்கப்படாத அம்மதம் தானாகவே உதித்து வளர்ந்த ‘அநாக’ என்ற பழமை கொண்டது. எனவே இந்துமத நூற்களையும், அது சம்பந்தப்பட்ட இதழ்கள் என இவைகளை படிக்கும் ஆர்வம், எழுதும் ஆர்வம் இன்றும் என்னைத் தொடர்கிறது. அதன் விளைவே, இந்த ஆன்மீகமே ஆனந்தம் [கேள்வி – பதில்] நூலாக மலர்ந்திருக்கிறது.

Languageதமிழ்
Release dateJun 22, 2024
ISBN6580167009908
Aanmeega Ennangal!

Read more from Geetha Subramanian

Related to Aanmeega Ennangal!

Related ebooks

Reviews for Aanmeega Ennangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanmeega Ennangal! - Geetha Subramanian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆன்மீக எண்ணங்கள்!

    Aanmeega Ennangal!

    Author:

    கீதா சுப்பிரமணியன்

    Geetha Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/geetha-subramanian

    மூன்று துதிக்கைகள் கொண்ட பிள்ளையார் திரு உரு உண்டா?

    திரிகண்ட எனப்படும் மூன்று துதிக்கைகள் கொண்ட விநாயகர் பூனே சோம்வார்பேட்டை பகுதியில் கோயில் கொண்டுள்ளார். புனே புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ள திருக்கோயிலில், தலையில் வெள்ளி கிரீடம் அணிந்திருந்த அவரது காதுகள் முறம்போல் காணப்படும். தனது ஒரு கரத்தில் பரசு, மற்றத்தில் சூலம், அபயஹஸ்தமாக மூன்றாவது, நான்காம் திருக்கரத்தில் மோதகத்துடன் இந்த மூன்று துதிக்கை விநாயகர் அருட்காட்சி தருவார்.

    பேஷ்வா காலத்தில் கருங்கல்லால் கட்டப்பட்டது இவ்வாலயம். இக்கோயிலில் ஒரு சுரங்கப்பாதை உண்டு. ஆண்டில் ஒருநாள் ‘குருபூர்ணிமா’ நாளன்று இது திறக்கப்படும். சிவாஜி காலத்து கோட்டையான சனிவார் வாடா வரை சுரங்கம் சென்று முடிவதாக கூறப்படுகிறது.

    சிறந்த வரப்பிரசாதமாக பக்தர்களுக்கு விளங்குகிறார் திரிகண்ட பிள்ளையார்.

    காஞ்சி மகா பெரியவர் அவதாரமான தினமென்ன?

    ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகம் 1817 ஜய வருஷம் வைகாசி மாதம் 8-ம் தேதி, ஆங்கில ஆண்டு 1894, மே மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, உதயாதி நாழி 19, ப்ரதமை கீர்த்தி நாழிகை 44 வி.35, அனுஷ நட்சத்திரம் நாழிகை 30 வி.51, சிவநாம யோகம் நாழிகை 43 வி.26 கூடிய சுபதினத்தில் சுதேச கடிகாரப்படி கணித்துக் கண்ட பகல் மணி 1, நிமிஷம் 16-க்கு கும்பகோணம் மகாஸ்ரீஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகளுக்கு இந்த காஞ்சி மகான் என்ற புண்ணிய புருஷர் ஜனனமானார்.

    சூரிய தோஷ பரிகாரமென்ன?

    ஒருவருடைய ராசியில் சூரியன் தோஷம் தரும் கிரகமாக அமைந்தால், அவருடைய வாழ்க்கையில் வெற்றி தடைபடுவதோடு, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். அந்த சூரியதோஷத்துக்கு ஆளானவர்கள், கவலைப்பட வேண்டாம்.

    அதற்கான பரிகாரம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலய நவக்கிரக சன்னிதிக்குச் சென்று, சூரியகிரக காயத்ரீயை உச்சரித்து, செந்தாமரை மலரால் அர்ஜித்து வழிபட தோஷத்தின் பாதிப்பு குறைந்து விடும்.

    சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். கோதுமையை தானம் புரிவதும் நன்மை தரும்.

    சக்தி வடிவம் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது?

    வானுலகத் தேவர்கள் அனைவரிடமும் சக்தி வடிவமாக உள்ளவள் ஸ்ரீ துர்க்கை எனக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ பரசுராமரின் துர்க்கா சாஸ்திரத்தில்.

    சிவப்பிரானிடம் சிவையாகவும், ஸ்ரீமன் நாராயணனிடம் லட்சுமியாகவும், நான்முகனிடம் நாமகளாகவும், கிருஷ்ணரிடம் ராதையாகவும் இப்படி எல்லா தேவர்களிடமும் இவளே சக்தியின் அம்சமாக வெவ்வேறு வடிவில் உள்ளாள். ராகு கிரகத்தின் அதிதேவதை இவள்தான்!

    உயிர்கள் அனைத்தையும் தாங்கும் பூமியும் ஸ்ரீ துர்க்கையே என்கிறது புராணம்.

    துறவியான ஸ்ரீ ராம தீர்த்தரின் சிறப்பு அம்சமாக எது கூறப்படுகிறது?

    ஸ்ரீ ராம தீர்த்தர், ஒருபோதும் ‘நான்’ என்று சொல்லமாட்டார். ‘ராம்’ என்றுதான் கூறுவார். அவருக்கு பசி வந்தால் ராமருக்கு பசிக்கிறது என்பார்.

    ராம தீர்த்தருக்கு உடலில் காய்ச்சல் வந்துவிட்டால் ராமருக்கு காய்ச்சல் அடிக்கிறது என்பாராம்.

    ஒரு சமயம் ராமதீர்த்தரை சிலர் மிக மோசமாக அவமானப்படுத்திவிட்டனர். ஆனால் அவரோ அது பற்றி கவலைப்படாமல் இருந்தார். அது பற்றி சீடர்கள் அவரைக் கேட்டபோது ராமர்தான் அவமானப்படுத்தப்பட்டார். நான் வெளியே நின்று வேடிக்கையல்லவோ பார்த்தேன் என சிரித்தபடியே சொன்னாராம்!

    தர்மம், அதர்மம் கொண்ட பிணைப்பு எத்தகையது?

    மகான்கள் அருளியவாறு அனைத்து யுகங்களிலும், தர்மம், அதர்மம் இது இரண்டும் சேர்ந்தே இருந்துள்ளன. ஆனால் அவற்றின் விகிதாசாரம், வடிவம் இவைகள் காலப்போக்கில் மாறும் தன்மை கொண்டவை.

    க்ருதயுகமெனும் முதல் யுகத்தில் தீயவர்கள் உண்டு. கடைசியுகமெனும் கலியுகத்தின் முடிவில் நல்லவர்களும் இருப்பார்கள்.

    தர்ம வழி நடப்போருக்கு எதிர்வினையாக இருக்கும் அதர்மவாதிகளிடம் இந்த தர்மவழிகாரர்கள் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அந்த மாதிரியான சந்தர்ப்பத்தை எதிர்கொள்ள நேரும் நல்லவர்கள் மன உறுதியைக் கடைப்பிடித்து பகவானின் அருளைக் கோரி பிரார்த்திக்கொண்டு, கொஞ்சம் புத்திசாலித்தனத்தை பிரயோகித்து தங்களுடைய இயல்பான தர்மவழியை கடைபிடித்தல் அவசியம்.

    தர்ம வினைகள், நன்னடத்தையுடன் தங்கள் அறிவு, ஆற்றல் பேச்சுவன்மையை, தீயவர்களை சந்திக்க நேர்கையில் பயன்படுத்திவிட்டால் மனித சமுதாயம் தர்மத்தின் மீது நாட்டங் கொண்டு விடும்.

    இதே அறிவு, ஆற்றல், பேச்சுவன்மை, தீயவர்களிடம் இருக்கும் சந்தர்ப்பத்தில், அனைத்து ஜீவராசிகளுக்கும் கெடுதல்தான் விளையும். ஆனால் இது நிரந்தரமானதல்ல.

    எப்படி இருப்பினும், தர்மம், அதர்மம் நடத்தும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவது தர்மம்தான் அடித்து கூற முடியும்.

    பெண் பிறவி உயர்ந்த ஒன்றா?

    மாண்பு நிறையப் பெற்றவர்கள் பெண்கள். ஆதலால்தான் குழந்தையிலிருந்து பேச ஆரம்பிக்கும் மொழியை தாய்மொழி என்கிறோம். பிறந்த நாட்டை ‘தாய்நாடு’ என போற்றுகிறோம்.

    கற்கும் கல்விக்கு காரணமாவாள் சரஸ்வதி. செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். தினம் உண்ணும் உணவுக்கு அன்னபூரணி காரணமாக அனைவரையும் தாங்கும் பூமிக்கு அதிபதி பூமாதேவி ஆகிறாள். செயல்படும் ஆற்றலை ‘சக்தி’ என அழைக்கிறோம்.

    ஒரு பெண்ணை மனம் முடிப்பதின் மூலம், அவள் தாய்மை பேறுபெற்று, குழந்தையை ஈன்றவுடன் அந்த தலைவன் ‘அப்பா’ என்ற புது பதவியும் அடைகிறான்.

    எனவே ஒரு ஆண்மகனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக, நல்ல துணையாக வரும் ‘பெண்மை’யைப் போற்றுவோம்.

    கோமயம் என்ற மறு பெயர் கொண்ட சாணம் கொண்ட சிறப்புகள் யாவை?

    பசுவின்

    Enjoying the preview?
    Page 1 of 1