Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siruvan Seitha Thavaru
Siruvan Seitha Thavaru
Siruvan Seitha Thavaru
Ebook139 pages44 minutes

Siruvan Seitha Thavaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவன் செய்த தவறு: சிறுவன் செய்த தவறு எனும் இப்புத்தகம் பள்ளி மாணவர்கள் பள்ளி விழாக்காலங்களில் நடிக்கும் வகையில் உள்ளது. காந்தி, எடிசன் ஆகியோர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை இந்த நூல் சுவைபட விளக்குகிறது. இலக்கியம் போற்றும் பாரி, கபிலர், ஔவை, அதியமான் ஆகியோர் நட்பு மற்றும் சிறுவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்பு நலன்கள் என நாடகங்கள் வழி காணமுடிகிறது.

Languageதமிழ்
Release dateJun 22, 2024
ISBN6580154610886
Siruvan Seitha Thavaru

Read more from Dr. Jayanthi Nagarajan

Related to Siruvan Seitha Thavaru

Related ebooks

Reviews for Siruvan Seitha Thavaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siruvan Seitha Thavaru - Dr. Jayanthi Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிறுவன் செய்த தவறு

    Siruvan Seitha Thavaru

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    பொருளடக்கம்

    ஆசிரியர் குறிப்பு

    1. சிறுவன் செய்த தவறு

    2. அம்மா என்றால் அன்பு

    3. கலியுக நீலகண்டன்

    4. பாரியும் கபிலரும்

    5. காந்தி எழுதிய கடிதம்

    6. அம்பிகை நேரில் வந்தாள்

    7. பேசும் புத்தகம்

    8. ஔவையும் பாரியும்

    9 ஔவையும் அதியமானும்

    10. பொறுமை என்னும் நகை அணிந்து

    11. நீலச் சிற்றாடை

    ஆசிரியர் குறிப்பு

    திருமதி. Dr. ஜெயந்தி நாகராஜன் Ph.D

    குழந்தைகளுக்காக எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.

    வள்ளியப்பாவின் படைப்புக்களில் வாழ்வியல் அறங்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

    மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் மேனாள் பேராசிரியை, மூத்த பத்திரிகையாளர்.

    உரத்த சிந்தனை ஜீவி விருது, காஞ்சி காமகோடி பீடாதிபதி சேவாரத்னா விருது, வள்ளியப்பா இலக்கிய விருது, அமரர் கே.ஆர். வாசுதேவன் விருது, மன்னை பாசந்தியின் வரலாற்றுச் செம்மல் விருது, புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் எழுத்துச் சுடர் விருது, தனிஷ்க் ஜூவல்லரியின் புதுமைப் பெண் விருது எனப் பல விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.

    இவரது இலக்கிய நாடகம், புராண நாடக நூல்கள் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடமாக உள்ளன.

    இவரது ‘அம்மா தந்த பொம்மை’ எனும் மழலையர் பாடல், முதல் வகுப்பிற்குப் பாடமாக உள்ளது. ஜெயந்தி சிறுவர் சங்க அமைப்பையும் நடத்தி வருகிறார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாஸன், சௌகார் ஜானகி, வாணி ஜெயராம், வாணிஸ்ரீ, சுஹாசினி, விசு, வைரமுத்து எனப் பல பிரபலங்களை நேர்காணல் கண்டுள்ளார்.

    ஊரப்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கலைஞர் டிவி, ஜெயா டிவி, பொதிகை, லண்டன் வெக்டோன் டிவி என ஊடகங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

    இணையம் வாயிலாகப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

    1. சிறுவன் செய்த தவறு

    (நாடகம்)

    காட்சி 1

    இடம்: ரயில் நிலையம்

    பாத்: சிறுவன், பாட்டி, கடைக்காரர், டிக்கட் பரிசோதகர், பெண் பயணி.

    சிறு : பாட்டி! நான் பத்திரமா ஊருக்குப் போயிட்டு வரேன். அதோ! ட்ரெயின் வந்தாச்சு. நான் அடுத்த ஸ்டேஷன்லே ஏதாவது டிபன் வாங்கிக்கிறேன். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க.

    (வண்டி வருதல்)

    சிறு : (தனக்குள்) ம். என்னோட சீட் நம்பர் 28, 25, 26 இதோ இருக்கு 28 பரவாயில்லையே. ஜன்னல் ஓர சீட்... ம்... அதிர்ஷ்டம்தான்.

    (வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றதும் சிறுவன் இறங்குதல்)

    கடை : இட்லி, பொங்கல், வடை வாங்க சார்! வாங்க!

    சிறு : ரெண்டு இட்லி, ஒரு வடை கொடுங்க.

    கடை : (கொடுத்தபடி) பொறுமையா சாப்பிடு தம்பி. வண்டி நிக்கும்.

    சிறு : ரொம்ப நன்றிங்க ஐயா! இந்தாங்க காசு.

    கடை : பார்த்துப் போ தம்பி.

    சிறு : அப்பாடா! சாப்பிட்டாச்சு. இன்னிக்கு வண்டிலே கூட்டம் கம்மி.

    (டிக்கட் பரிசோதகர் வருதல்)

    டி.ப : டிக்கட்! டிக்கட்! ஐயா! பெரியவரே! உங்க டிக்கட் காட்டுங்க. சார்! நீங்க! மேடம்! உங்க டிக்கட் ப்ளீஸ். தம்பி! டிக்கட் காட்டுப்பா.

    சிறு : டிக்கட் தானே ஐயா! இதோ! (தேடுதல்) (தனக்குள்) ஐயோ! இங்கே தானே வைச்சேன். ம். எங்கே போயிருக்கும்?

    டி.ப : தம்பி! என்னப்பா! டிக்கெட் எடுத்தியா இல்லையா?

    சிறு : ஐயா! நான் டிக்கெட் வாங்கித்தான் ஏறினேன். திருச்சியிலே டிபன் சாப்பிட இறங்கினேன். கடைக்காரர்கிட்டே சில்லறை கொடுத்தபோது டிக்கெட் கீழே விழுந்திருக்கும்னு நெனக்கிறேன். என்னை நம்புங்க ஐயா!

    டி.ப : தம்பி! என்னப்பா! நடிக்கிறியா? டிக்கெட் வாங்காம டிராவல் பண்ணிட்டு பொய் வேற பேசற.

    சிறு : (கலங்கி) ஐயா! நான் உண்மையைத்தான் சொல்றேன். காந்தி அடிகளோட உண்மை பேசற குணத்தால கவரப்பட்ட நான் அதை அன்றாடம் வாழ்க்கையிலே கடைப்பிடிக்கணும்னு நெனைச்சு இதுவரை அப்படியே நடந்துகிட்டு வர்றேன். என்னை நம்புங்க ஐயா!

    டி.ப : தம்பி! உன்னை மாதிரி எத்தனை பேரை நான் பாத்திருக்கேன்.

    அங்கிருந்த பெண்மணி : சார்! மன்னிக்கணும். இந்தப் பையன் உண்மைதான் பேசறான்னு நான் நினைக்கறேன். இந்தப் பையனுக்கான அபராதத் தொகையை நானே கட்டறேன்.

    டி.ப : வேண்டாம்! மேடம். இவனைக் காவல்துறையிடம் ஒப்படைக்கறதுதான் சரி. எதுக்குத் தேவையில்லாம நீங்க ஃபைன் கட்டணும். சொல்லுங்க.

    மேடம் : இல்லே சார்! தம்பி! உன் பேர் என்னப்பா?

    சிறு : சத்தியமூர்த்தி மேடம்.

    மேடம் : பாத்தீங்களா சார்! பேரே இவனோட குணத்தைச் சொல்லலியா. அதுமட்டும் இல்லே. இவன் உண்மை பேசணுங்ற எண்ணத்தை உங்க நடவடிக்கை சிதைச்சுடும் இல்லியா? அப்புறம் இவன் பொய்யைத் தழுவிக்கொள்வான். அதுக்கு நாம இடம் கொடுக்கலாமா? அதுவும் இன்னிக்கு காந்தி ஜெயந்தி. இந்த நல்ல நாளில் இவனோட குணத்தைப் பாராட்ட வேண்டாமா?

    டி.ப : சாரி மேடம்! நீங்க சொல்றதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நானே இவனுக்கான ஃபைன்னை கட்டிடறேன்.

    மேடம் : இல்லே சார்! ஒண்ணு செய்வோம். நான் பாதித் தொகையைக் கட்டுவேன். சரியா?

    சிறு : ரொம்ப நன்றி மேடம். சார்! உங்களுக்கும் என் நன்றி.

    டி.ப : ஓகே மேம். தம்பி இந்தா! டிக்கெட். பயப்படாம உட்காரு. சரியா? (அவனைத் தட்டிக் கொடுத்து) தம்பி! உன்னை நெனைச்சு ரொம்பப் பெருமைப்படறேன். இனிமே நீ யாருக்காகவும் இந்தக் குணத்தை மாத்திக்காதே, சரியா. மேடம்! நன்றி.

    மேடம் : சத்தியமூர்த்தி. உண்மை பேசினா மட்டும் போறாது. தகுந்த கவனமும் வேண்டும் அப்படின்னு காந்தியே சொல்லியிருக்காரு. தெரியுமா?

    சிறு : அப்படியா! அதைச் சொல்லுங்க மேடம். தெரிஞ்சுக்கறேன்.

    மேடம் : ஒரு சமயம் காந்தி தன் உடல்நலம் சரியில்லாத அப்பாவைக்

    Enjoying the preview?
    Page 1 of 1