Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Geethanjali
Geethanjali
Geethanjali
Ebook231 pages1 hour

Geethanjali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகத்தான கவிதைகளை நான் எனக்குத் தெரிந்தவகையில், தமிழாக்கம் செய்திருக்கிறேன், அதை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். என்னைப்போலத் தாங்களும் அந்த ஆன்மிக நதியில் நீந்தி, அளவிலா ஆனந்தம் அடைந்து, அஞ்ஞானம் களைந்து, மெய்ப்பாதையைக் கண்டறிந்து, குருதேவனின் அருளுடன், இறையோடு கலந்து நற்பேறடைய அழைக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJun 22, 2024
ISBN6580178511223
Geethanjali

Read more from P.V. Rajakumar

Related to Geethanjali

Related ebooks

Related categories

Reviews for Geethanjali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Geethanjali - P.V. Rajakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கீதாஞ்சலி

    Geethanjali

    Author:

    பொ.வெ. இராஜகுமார்

    P.V. Rajakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pv-rajakuma

    என்னுரை

    தேசியக் கவி இரபீந்திரநாத் தாகூர் அவர்கள், நம் தேசத்தின் ஈடு இணையற்ற பன்மொழிக் கவிஞர், இசையமைப்பாளர், எழுத்தாளர், நாடகாசிரியர், மட்டுமல்ல, ஆன்மிக உலகின் ஒப்பற்ற விஸ்வகுரு என்றே செல்லலாம்.

    நம் தமிழ் நாட்டின் தெய்வப் புலவர்களாக விளங்கும் ஆழ்வார்களும், நாயன்மார்களும், இறைவனையே தம்முடையத் தலைவனாக ஏற்று, அவனையே தம் பாடல்களின் பாடுபொருளாகக் கொண்டு, இயற்றிய ஒப்பற்ற பாசுரங்கள்- நாயக- நாயகி பாவத்தில்- அவன் அருளை அவன் தாள் வணங்கிப் போற்றிப் பாடிய அப்பாடல்கள், நம்முடைய தினசரி வழிபாட்டுப் பாடல்களாக, என்றுமே ஒப்பற்ற வாய்மொழி மந்திரங்களாக விளங்கி, அவற்றை நெஞ்சுருகப் பாடி, பக்தி ரசத்தில் நம்மை இறையுலகுக்குக் கரை சேர்க்கும் ஞானக் களஞ்சியமாகவேத் திகழ்கின்றன.

    அந்த வகையில், தாகூர் அவர்கள், தம்முடைய வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்தபடியே, அவர் இறைவனை விளித்துப் பாடிய பாடல்கள்- உலக வாழ்க்கையின் மூச்சு முட்டும், பழகிப்போன நடைமுறைகளிலிருந்து விடுதலை பெறவும், இறைமையை அடையத் துடிக்கும் தம்முடைய ஆன்மிக உணர்வைத் தடுக்கும், தம்முடைய நிலைகொள்ளா மனத்தைக் கடந்து போக முடியாமல் தவிக்கும் தவிப்பையும், மீட்சியின் அழைப்பிற்கும், தம்முடைய தேவனின் பேரன்பிற்கும் ஏங்கி மனமுடைந்து அழுவதுமான, நெஞ்சுருகும் பாடல்களின் தொகுப்பை ‘கீதாஞ்சலி’ என்ற தேவகாதலின் புத்தகமாக, அற்புதமாக வடித்துள்ளார்.

    அத்தகைய மகத்தான பாடல்களை ஆங்கிலத்தில், வங்காள மொழியிலிருந்து, அவரே மொழிபெயர்த்திருந்ததை, நான் தமிழாக்கம் செய்வதற்குப் பெரும் பாக்கியமடைந்துள்ளேன்.

    என் பதின்ம வயதிலிருந்து, கீதாஞ்சலித் தொகுப்பை நான் வாசித்து வந்திருந்தாலும், அதைத் தமிழில் நான் மொழிபெயர்க்கவேண்டும் என்றத் தணியாத தாகம் எனக்குள் கனன்று கொண்டேயிருந்தாலும், எனக்கு அதற்கான நேரமும், மனத்துணிவும், இறையருளும் வாய்த்ததில்லை!

    ஆனால், இப்போது அந்த இமாலய முயற்சி கைகூடிவந்தது, இறையருளும், குருதேவனின் ஆசியும் மட்டுமே அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது, என்பதில் துளியளவு கூட சந்தேகமில்லை.

    அவர் தம்முடைய பாடல் ஒவ்வொன்றின் மூலமாக என்னுடைய பலவீனங்களையும், சோம்பலையும், அறியாமையும், முயற்சியின்மையும், இதயத்தில் மலிந்து கிடக்கும் எதிர்மறை உணர்வுகளையும், படம்பிடித்து, என் கண்முன்னால் நிறுத்தி, என்னை அந்தப் பரம்பொருளிடமிருந்து மறைக்கும் பெருமலையாய் கிளர்ந்து எழுந்த அஞ்ஞானத்தையும், மாயையும் களையெடுக்கும் சாத்திரத்தை எளிய மொழியில், விளக்கமாக எடுத்துரைக்கின்றன.

    அவை, ஒவ்வொன்றையும், ஒவ்வொரு நாளும், நான் படித்து ஓதும் மந்திரங்களாகப் பரிமளிக்கும் ஞானப்பாலாகும்.

    அத்தகைய மகத்தான கவிதைகளை நான் எனக்குத் தெரிந்தவகையில், தமிழாக்கம் செய்திருக்கிறேன், அதை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். என்னைப்போலத் தாங்களும் அந்த ஆன்மிக நதியில் நீந்தி, அளவிலா ஆனந்தம் அடைந்து, அஞ்ஞானம் களைந்து, மெய்ப்பாதையைக் கண்டறிந்து, குருதேவனின் அருளுடன், இறையோடு கலந்து நற்பேறடைய அழைக்கிறேன்.

    என்னுடைய இலக்கிய முயற்சிகளுக்கு நல்லாதரவும், ஊக்கமும் தந்து, பிழை திருத்தங்களைச் செய்து, என் முதல் ரசிகையாக மிளிரும் என் துணைவியாருக்கும், என் வாழ்க்கையின் தூண்களாக விளங்கும் எனதருமை குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், ஆசிகளும் உரித்தாகட்டும்.

    அன்பன்

    பொ.வெ.இராஜகுமார்.

    தேசியக்கவி இரபீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி
    1.

    THOU hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life.

    This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new.

    At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable.

    Thy infinite gifts come to me only on these very small hands of mine.

    Ages pass, and still thou pourest, and still there is room to fill.

    1.

    நீ என்னை முடிவற்றதாய் உருவாக்கியிருக்கிறாய், அது தான் உன்னுடைய பெருமகிழ்ச்சி! இந்த வலுவற்ற பாத்திரத்தை மீண்டும் மீண்டும் காலி செய்து புதிய வாழ்வைப் பாய்ச்சி நிரப்புகிறாய்!

    இந்தச் சிறிய மூங்கில் குழலை, மலைகள் மீதும், பள்ளத்தாக்குகள் மீதும் எடுத்துச் சென்று, புதிய, நித்தியப் பண்களைச் சுவாசிக்கிறாய்!

    என்னுடைய இதயம் உன்னுடைய அழிவற்ற கரங்களின் தொடுகையில் தன்னுடைய வரம்புகளை மீறி பெருமகிழ்ச்சியில் திளைக்கிறது! விவரிக்க முடியாத முனகல்களைப் பிரசவிக்கிறது!

    உன்னுடைய அலகிலாக் கொடைகள், என்னுடைய இந்தச் சின்னஞ்சிறிய கைகளின் மேலே மட்டுமே வந்தடைகின்றன!

    யுகங்கள் மறைகின்றன! ஆனால் இன்னமும் நீ பொழிந்து கொண்டு தான் இருக்கிறாய்! என்னுள் இன்னமும் நிறைக்கப் படுவதற்கான இடம் இருந்து கொண்டே இருக்கின்றது!

    2.

    WHEN thou commandest me to sing, it seems that my heart would break with pride ; and I look to thy face, and tears come to my eyes.

    All that is harsh and dissonant in my life melts into one sweet harmony- and my adoration spreads wings like a glad bird on its flight across the sea.

    I know thou takest pleasure in my singing. I know that only as a singer I come before thy presence.

    I touch by the edge of the far spreading wing of my song, thy feet which I could never aspire to reach.

    Drunk with the joy of singing I forget myself and call thee friend who art my lord!

    2.

    நீ என்னைப் பாடும்படி ஆணையிடும்போது, என்னுடைய இதயம் பெருமிதத்தில் வெடித்து விடுமோ எனத்தோன்றுகிறது! அப்பொழுது உன்னுடைய முகம் பார்க்கிறேன், கண்ணீர் திரண்டு என் கண்களை நிறைக்கின்றது!

    என்னுடைய வாழ்க்கையின் அவலங்களும், அபஸ்வரங்களும் உருகி ஒரு இனிமையான ஒத்திசையாக என்னுள் ஒலிக்கின்றது! என்னுடைய ஆராதனம் தன்னுடைய ஆனந்தச் சிறகுகளை விரித்து கடற்புரத்தைக் கடந்து பறக்கின்றது!

    நான் பாடுவதை மிகவும் விரும்புவாய் நீ என்று எனக்குத் தெரியும்! நான் பாடகனாகத்தான் உன் பிரசன்னத்தின் முன்னால் வருகிறேன் எனவும் எனக்குத் தெரியும்!

    நான் என்னுடைய பாடலின் நீளும் சிறகின் விளிம்பினால், விரும்பினாலும் அடைய முடியாத உன்னுடைய திருப்பாதங்களைத் தொடுகின்றேன்!

    நான் பாட்டெனும் ஆனந்தத்தில் கிறங்கி, என்னை மறந்து என் இறைவனே, உன்னை ‘நண்பனே’ என அழைக்கின்றேன்!

    3.

    I KNOW not how thou singest, my master! I ever listen in silent amazement.

    The light of thy music illumines the world. The life breath of thy music runs from sky to sky. The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on.

    My heart longs to join in thy song, but vainly struggles for a voice. I would speak, but speech breaks not into a song and I cry out baffled. Ah, thou hast made my heart captive in the end- less meshes of thy music, my master!

    3.

    நீ எப்படிப் பாடுகிறாய் என எனக்குத்தெரியாது என் குருவே! நான் பேச்சற்ற பெருவியப்பில், எப்பொழுதுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்!

    உன்னுடைய இசையின் ஒளி இவ்வுலகை ஒளிரச் செய்கிறது! உன்னுடைய இசையின் புனிதப் புனல், ஒரு ஆகாயத்திலிருந்து இன்னுமொரு ஆகாயத்திற்கு ஊடோடி உயிர்க்கின்றது! உன்னுடைய இசையின் அருட் புனல் எல்லாக் கடினமான பாறைகளையும் உடைத்தெறிந்து பிரவகிக்கின்றது!

    என்னுடைய இதயம் உன்னுடைய பாடலோடு இணைந்து கொள்ள ஏக்கம் கொள்கிறது! ஆனால் வீணே குரலெழும்பாமல் தவிக்கின்றது! நான் பேசிவிடுவேன்! ஆனால் பேச்சு பாடலாக உருவாக முடியாதே! அதனால் பெருங் குழப்பத்துடன் அழுதுப் புலம்புகிறேன்! ஓ! நீ என்னுடைய இதயத்தை உன் எண்ணிலடங்கா இசையின் வலைகளில் சிறைப்படுத்திவிட்டாய், என் குருவே!

    4

    LIFE of my life, I shall ever try to keep my body pure, knowing that thy living touch is upon all my limbs.

    I shall ever try to keep all untruths out from my thoughts, knowing that thou art that truth which has kindled the light of reason in my mind.

    I shall ever try to drive all evils away from my heart and keep my love in flower, knowing that thou hast thy seat in the innermost shrine of my heart.

    And it shall be my endeavour to reveal thee in my actions, knowing it is thy power gives me strength to act.

    4.

    என் வாழ்வின் வாழ்வே! உன்னுடைய துடிப்புள்ளத் தொடுதல், என்னுடைய அவயங்கள் யாவிலும் படர்ந்திருப்பதை அறிந்த நான் இனி எப்பொழுதும் என்னுடைய உடலைத் தூயதாய்ப் போற்றுவேன்!

    என்னுடைய பகுத்தறிவின் ஒளிக் கீற்றலைத் தூண்டிவிட்ட பரஞானமே, நீ தான் என்று அறிந்த பின்னே, என்னுடைய நினைவுகளிலிருந்து உண்மையற்றவையை எப்பொழுதும் விலக்கியே வைத்திருக்க முயற்சிப்பேன்!

    என்னுடைய பேரன்பினை ஒரு மலரில் பொத்திவைக்கிறேன்; அது தான் என்னுடைய இதயக் கருவறையில் நீ வீற்றிருக்கும் அருளாசனம் என்று அறிந்த பின்னே, என்னுடைய உள்ளத்திலிருந்து இனி அனைத்து தீயவைகளையும் வெளியேற்றிடவே நிதமும் முயற்சிப்பேன்,

    உன்னுடைய சக்தி தான் என்னுடைய செயலாக்கத்தின் ஆற்றலைத் தருகின்றது என்று அறிந்த பின்னே, என்னுடைய செயல்களில் உன்னைப் பிரதிபலிப்பதே இனி என்னுடைய வேலையாகும்!

    5.

    I ask for a moment’s indulgence to sit by thy side. The works that I have in hand I will finish afterwards.

    Away from the sight of thy face my heart knows no rest nor respite, and my work becomes an endless toil in a shoreless sea of toil.

    Today the summer has come at my window with its sighs and murmurs and the bees are plying

    Enjoying the preview?
    Page 1 of 1