Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirey Enakkaga
Uyirey Enakkaga
Uyirey Enakkaga
Ebook100 pages34 minutes

Uyirey Enakkaga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரேஷ்மாவின் குடும்பத்தை அமானுஷ்ய அனுபவங்கள் துரத்துகின்றன. அவர்கள் ஆன்மீக வழிமுறைகளை யோசிக்க, அவள் காதலனோ அறிவியல் வழிமுறைகளை நாடுகிறான். முடிவு?

Languageதமிழ்
Release dateJun 28, 2024
ISBN6580131011128
Uyirey Enakkaga

Read more from S. Kumar

Related authors

Related to Uyirey Enakkaga

Related ebooks

Related categories

Reviews for Uyirey Enakkaga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirey Enakkaga - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உயிரே எனக்காக

    Uyirey Enakkaga

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    பொருளடக்கம்

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    ஏழு

    எட்டு

    ஒன்பது

    பத்து

    ஒன்று

    கோவளம் சாலையில் கார் மிதந்து கொண்டிருந்தது. ஸ்டீரியோவில் மடோன்னா.

    பாஸ்கர் ரேஷ்மாவின் தோளைத் தழுவி இருந்தான்.

    கடற்காற்றின் குளுமை, ரேஷ்மாவின் இளமை, நரம்பைச் சீண்டும் இசை, அபவ் ஆல் தனிமை.

    சிகரெட்டைப் பொருத்தினான்.

    பிடுங்கி எறிந்தாள்.

    "பாவி, சர்வாதிகாரி, திஸ் இஸ் டூ மச். என்னமா குளிருது! ஐ டேர்லி நீட் எ சிகரெட்.

    முடியாது.

    ப்ளீஸ்...

    கெஞ்சினாலும் முடியாது. இன்னைய கோட்டா ஓவர்!

    சிகரெட்டுக்கு ரேஷனா?

    யெஸ்.

    பெண்ணெனும் மாயப் பிசாசு.

    ஆமாம். உனக்கு விஸ்கி ஊத்திக் கொடுத்து, டின் டின்னா சிகரெட் பத்த வச்சி, வெளியே கூட்டிட்டுப் போய்க் காட்டினா... பெண் தெய்வமாயிடுவா, இல்லையா?

    நிச்சயமா. கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணுவேன்.

    போடா! மெட்ராஸ் தமிழ்ல திட்டுவேன். உன்னோட ஹெல்த் எனக்கு முக்கியம். இனிமே நாளைக்குப் பொழுது விடியறவரைக்கும் சிகரெட் பிடிக்கக் கூடாது.

    இதைச் சொல்ல நீ யார்? உனக்கென்ன அதிகாரம்?

    நான் உன்னோட மனைவி.

    அது கல்யாணத்துக்குப் பிறகு. இப்போ நீ யார்?

    உன்னோட வுட் பீ.

    மே பீ. பட்...

    வாட்? மே பீயா? உனக்கென்ன திமிர்! ஐ கான்ட் பேர் இட். அப்போ நீ என்னை சின்சியரா லவ் பண்ணலை?

    சின்சியராத்தான் லவ் பண்றேன். நீ கேள்விப்பட்டதில்லையா? செலக்ட் ஃபோர், லவ் த்ரீ, சூஸ் டூ, மேரி ஒன்.

    அப்போ இன்னும் ரெண்டு கழுதைகளை பண்றே?

    ஆமாம். மொத்தம் மூணு கழுதைகள்.

    அப்போ நம்ம காதல், ஜஸ்ட் முப்பத்து மூணு சதவீதம்?

    முப்பத்து மூணு புள்ளி மூணு மூணு.

    ஸ்டாப் த கார்.

    எதுக்கு?

    இறங்கப் போறேன்.

    இந்த அந்துவானத்தில் இறங்கி என்ன செய்வே?

    பஸ் பிடிச்சி மெட்ராஸ் போவேன்.

    போய்?

    சாவேன்.

    தற்கொலையா?

    ஆமாம்.

    வெல்கம். அதுக்கு ஏன் டிக்கெட் எடுத்து மெட்ராஸ் போகணும்? இந்தப் பரந்த கடற்கரையை உபயோகப்படுத்திக்க முடியுமான்னு பாரேன்.

    ஏக் து ஜே கேலியேவா?

    இல்லை. மரோசரித்ரா

    "சாவிலும் ஜோடிதான்! உன்னை விட்டுட்டுப் போறதாயில்லை.

    அப்போ இந்த லொகேஷன் வேணாம். குறிஞ்சி நிலத்துக்குப் போயிடுவோம். மலையும் மலை சார்ந்த இடங்களும். மேலே இருந்து குதிக்கலாம். நானும் சந்தோஷமா உன்னை ட்ராப் பண்ணிட்டு, ஏதாவது மரக்கிளையைப் பிடிச்சி மேலே வந்துடுவேன்.

    வந்து?

    வந்து... ஜிங்கடா ஜிங்கா ஜீபூம்பாதான்! அம்சமா ஒரு சிலோன் குட்டியைப் பிடிச்சி...

    "ச்சே. குட்டியா? அது என்ன வர்ணனை! ரெளடித்தனமா?

    தப்பா புரிஞ்சிட்டியே! குட்டின்னா... ஸ்மால் கேர்ள். ரேவதி மாதிரி சிக்குன்னு...

    உன்னைச் செவுள்ல அறையணும்.

    உதட்டால அறைஞ்சிடு.

    கார் மூட்டுக்காடு ஏரியின் அருகே நின்றது.

    இறங்கினான்.

    இறங்கினாள். மனசில இவ்வளவு ஆசையா? நீ உண்மையிலே யோக்கியனான்னு இப்போ சந்தேகப்படறேன்.

    எல்லாம் ஜஸ் ஃபார் ஃபன். உண்மையில் நான் ஐ.எஸ்.ஐ. யோக்கியன்... போட்டிங் போகலாமா?

    அப்புறமா?

    இப்போ என்ன செய்யலாம்?

    ரெஸ்ட். ரிலாக்ஸ்டா உட்காருவோம்.

    ரிலாக்ஸ், மே ஹவ் எ சார்மினார்.

    ஸ்மோக்கிங் இஸ் ஸ்ட்ரிக்ட்லி ப்ரொஹிபிடட், ஒரு நாளைக்கு இத்தனை சிகரெட் பிடிச்சா, பத்து வருஷத்திலே உனக்குக் கான்சர் வந்துரும்.

    ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.

    ஆனா அவஸ்தைப்பட்டுச் சாகக் கூடாதே?

    வண்டி வண்டியா அறிவுரையும் அச்சுறுத்தலும். இதுக்காகவாவது நிரந்தரமாவோ, தற்காலிகமாவோ சிகரெட்டை நிறுத்தித்தான் ஆகணும்.

    தனியாகவும், ஜோடியாகவும், குடும்பங்களாகவும் போட்டில் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    பாஸ்கர்.

    என்ன?

    தர்ப்பூசணி வேணும்.

    கார்ல மினரல் வாட்டர் இருக்கு.

    எனக்குத் தர்ப்பூசணிதான் வேணும்.

    ஆல்ரைட்.

    சற்றுத் தள்ளியிருந்த வண்டிக்காரனிடம் வந்தான். இவ்வளவு லேசாக துண்டு போட அசாதாரணத் திறமை வேண்டும்.

    ஒரு தள்ளுவண்டியையும் அரிவாளையும் மட்டுமே மூலதனமாக வைத்து அவன் பணம் பண்ணிக் கொண்டிருந்தான்.

    ரேஷ்மா!

    ம்.

    தர்ப்பூசணி.

    தாங்க் யூ.

    கைக்குட்டையில் கையையும் வாயையும் துடைத்துக்கொண்டாள்.

    அடுத்து என்ன? வெள்ளரிப் பிஞ்சா?

    ஏன், கேட்டா வாங்கித் தரமாட்டியா?

    வாங்கித் தரத்தானே கேட்கிறேன்.

    ம்... வேர்க்கடலை.

    இங்கே வந்து போட்டிங் போகாம கரையில் உட்கார்ந்து கடலை சாப்பிடற முதல் ஜோடி நாமாத்தான் இருப்போம்.

    ஸோ, வந்த உடனே கட்டாயம் போட்டிங் போகணும் இல்லே?

    அப்படிச் சொல்லலே. வந்ததே அதுக்காக...

    போகலாம். இன்னிக்கு நாம இங்கே அதிக நேரம் இருக்கப் போறோம்.

    இப்ப அப்படித்தான் சொல்வே. ஈவினிங் ஆனதும் இருட்டறதுக்குள்ள மெட்ராஸ் போகணும்; என் கற்புக்குப் பாதுகாப்புத் தேவைன்னு சொல்வே.

    இன்னிக்கு அப்படிச் சொல்லமாட்டேன்.

    உனக்கு என்ன ஆச்சு?

    ஒண்ணுமில்லே.

    இல்லை. வரும்போது இருந்த உற்சாகம் இப்போ உன்கிட்ட இல்லை.

    அவள் மௌனமாய் அவனை ஏறிட்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1