Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadalil Peitha Mazhai
Kadalil Peitha Mazhai
Kadalil Peitha Mazhai
Ebook184 pages1 hour

Kadalil Peitha Mazhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விபா அன்பு மழை பொழியும் அக்கா. அந்த அன்பு மழையில் நனையும் தங்கை அருள். இருவரின் பாசப் பிணைப்பு, ஒரு கட்டத்தில் உடைந்து போகிறது. அக்காவை குற்றம் சாட்டும் தங்கை. அக்காவை தனிமைப்படுத்துகிறாள் அருள்.

பிரிவு நேர்கிறது. விபா சில வருடங்கள் கழித்து அருளை நாடி வருகிறாள். அருள் அவளை ஏற்கவில்லை. அலட்சியப் படுத்துகிறாள். விபா பெய்த அன்பு மழை விழலுக்கு இறைத்த நீர் தானா? விபாவின் வாழ்வில் பல சிக்கல்கள். தங்கைக்கு கை கொடுத்தாள் விபா. ஆனால் அக்காவுக்கு கை கொடுத்தாளா அருள்? கேள்விக்குறி தான். ஏன்.? படித்துப் பாருங்கள். சுவாரஸ்யமான அக்கா தங்கை உறவு ஆச்சரியப்பட வைக்கும்.

Languageதமிழ்
Release dateJun 28, 2024
ISBN6580174611243
Kadalil Peitha Mazhai

Read more from Sankari Appan

Related to Kadalil Peitha Mazhai

Related ebooks

Related categories

Reviews for Kadalil Peitha Mazhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadalil Peitha Mazhai - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கடலில் பெய்த மழை

    Kadalil Peitha Mazhai

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம்—1

    அத்தியாயம்—2

    அத்தியாயம்—3

    அத்தியாயம்—4

    அத்தியாயம்—5

    அத்தியாயம்—6

    அத்தியாயம்—7

    அத்தியாயம் —8

    அத்தியாயம்—9

    அத்தியாயம்—10

    அத்தியாயம்—11

    அத்தியாயம்—12

    அத்தியாயம்—13

    அத்தியாயம்—14

    அத்தியாயம்—15

    அத்தியாயம்—1

    உன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை நீ தொடங்க முடியாது. பழைய அத்தியாயத்தையே நீ திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தால்.

    ஒரு ஆங்கிலப் பழமொழி.

    வீடே புது பொலிவுடன் காணப்பட்டது. வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்த கலையரசன் திருப்தியுடன் தலையாட்டினான். கையிலிருந்த ஒரு பலகையை வாசல் முகப்பின் மேல் மாட்டினான். ரொம்ப அழகான வாசகம்.

    வெல்கம். புன்னகை புரியுங்கள். அன்றய தினமும் உங்களுடன் சேர்ந்து புன்னகை புரியும்

    அருள் அருள் என்று அழைத்தான். அடுப்பில் பால் காச்சிக் கொண்டிருந்த அவன் மனைவி அருள், அடுப்பை அணைத்துவிட்டு கையை முந்தானையில் துடைத்துக் கொண்டே வந்தாள். பார்... நல்லாயிருக்கா? என்று வாசகத்தை காட்டினான். அருள் பார்த்துவிட்டு புன்னகை செய்தாள். ‘செமையா இருக்கு.’ எங்கிருந்து புடுச்சீங்க இந்த வாசகத்தை?" என்று வியப்புடன் கேட்டாள்.

    அது வந்து... தயங்கிவிட்டு அவன் சொன்னான். உன் அக்காவின் டையிரியிலிருந்து. அவன் சொன்னது தான் தாமதம் அருளின் முகம் மாறியது. அவள் அக்கா விபா காணாமல் போய் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அவள் வந்துவிடக் கூடாதே என்பது தான் அருளின் ஜபம்.

    காணாமல் போனவள் திரும்பியா வரப் போகிறாள்? ஏன் முகம் சுளிக்கிறே? அவள் தான் காணாமல் போய்விட்டாள். அவளின் இந்த வாசகமாவது இருக்கட்டும். அவளால் தானே... அவன் மேலே பேச அருள் அனுமதிக்கவில்லை.

    போதும் நிறுத்துங்க. அவள் வந்துவிடக்கூடாதே என்று நான் தினம் தினம் பயந்துக்கிட்டு இருக்கேன். அவள் வந்தால் இருக்கிற நிம்மதி போயிடும். எனக்கென்னவோ அந்த வாசகத்தை நீங்க தேர்ந்தெடுத்து போட்டது கொஞ்சமும் பிடிக்கலை. அருள் கண்களில் பயம் தெரிந்தது.

    பிள்ளைகள் இருவரும் ஓடி வந்தார்கள். வாசகத்தை பார்த்தார்கள்.

    அப்பா... ரொம்ப நல்லாயிருக்கு. உனக்கு கூட நல்ல வரிகள் எல்லாம் சூஸ் பண்ணத் தெரியுதே.! என்றான் மகன் ப்ரேம்.

    விருந்தினரை இவ்வளவு அழகா வரவேற்க இதை விட சிறந்த வரிகள் கிடைக்காது. எங்கிருந்து திருடினீங்க அப்பா? என்று கேட்டாள் ப்ரீதா. அவள் பன்னிரண்டு வயதை தொட்டிருந்தாள். ப்ரேம் பதினாலு வயதை கடந்திருந்தான். எல்லோரும் வீட்டின் அழகைப் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தனர். இந்த வீட்டை ஒரு வயதான தம்பதிகளான வேலுமணி—சுலோச்சனா தம்பதிகளிடமிருந்து வாங்கினர். அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வெளிநாட்டில் வசிக்கப் போகின்றனர். எனவே அவர்கள் வீட்டை விலை பேசிக் கொண்டிருந்தனர். விலை இவர்களின் பட்ஜெட்டுக்கு ஒத்து வரவே வாங்கி விட்டார்கள். வீட்டை புதுப்பிக்க என்று சில லட்சங்கள் செலவாயிற்று. அதனால் என்ன? இப்ப புதிது போல் இருக்கிறது. விசாலமான அறைகள். ப்ரேமின் அறை ஜேட் கிரீன் கலர். இது கரிபியன் ஒயேசிஸ் போல் இருக்கிறது என்று பீற்றிக் கொண்டான்.

    ஒரு ஓரத்தில் செயற்கை செடி வைத்துக் கொண்டான். இரண்டு குஷன் சோபாக்கள். ஒரு நீள மேஜை. அதில் ஐந்து டிராயர்கள். தரையில் நைலான் கார்பெட் போடப்பட்டிருந்தது. அது தான் நீண்ட நாள் உழைக்கும் என்று கடைக்காரன் சொன்னான். ஒரு ஓரம் புத்தக அலமாரி. அதன் அருகே விளக்கு ஏந்தி நிற்கும் அம்மன் சிலை. டீ கப் மெழுகுவர்த்திகள் டீபாயில் இருந்தது. சின்ன படுக்கை அருகே ஒரு சின்ன மர ஸ்டான்ட். அதில் ஒரு டேபிள் லாம்ப். வால் பேப்பரில் தேரோட்டும் கிருஷ்ணனின் படம் அற்புதமாக காட்சி அளித்தது. போட்டோக்கள் ஒரு பக்கம் அலங்கார அணிவகுப்பு செய்தது. கண்களில் ஒத்திக் கொள்ளலாம் போல் இருந்தது.

    ப்ரேம்... அறையை நல்ல அலங்காரம் பண்ணியிருக்கே. அதே போல் படிப்பிலும் உன் திறமையை காட்டணும். என்று மகனின் முகத்தை அழுத்தமாகப் பார்த்தான் கலையரசன். ப்ரேம் நல்ல படிப்பவன் தான்.

    கவலைபடாதீங்கப்பா... நான் மைக்ரோ பையாலஜி படிக்கப் போறேன். வெயிட் அண்ட் ஸீ உங்க மகன் திறமையை. மகனை பெருமையுடன் தட்டிக் கொடுத்தான். அவன் உள்ளம் அருளின் அக்கா விபாவுக்கு நன்றி சொல்லியது. விபா இல்லாவிட்டால் இந்த கொடுப்பினை ஏது அவனுக்கு?

    ப்ரீதா தன் அறையை ப்ரேம் அறையை விட நன்றாக இருக்கவேண்டும் என்று போட்டி போட்டு அலங்கரித்திருந்தாள். அவள் அறையின் பெயிண்ட் மிக வித்தியாசமாக இருந்தது. ஐஸ்சி நீலத்தில் அற்புதமாக கண்ணுக்கு இனிமை தரும் விதத்தில் இருந்தது. உள்ளே நுழையும் போதே குளிர்ச்சியாக இருந்தது. பெரிய நிலைக்கண்ணாடி வரவேற்றது. அவள் பியானோ வாசிப்பாள் என்பதால் ஒரு பியானோ அறையின் தெற்கு மூலையில் கனமாக உட்கார்ந்திருந்தது. அவளுடைய படுக்கை, தேவையில்லாத போது மடக்கி சோபாவாக மாற்றிக் கொள்ளலாம் என்ற அமைப்பில் காணப்பட்டது. அலமாரி கண்ணாடி பதித்த அடுக்காக இருக்க, அதில் அடுக்கப்பட்டு இருக்கும் புத்தகங்கள் கண்ணுக்குத் தெரிந்தது. ஒரு சின்ன ஊஞ்சல் சேர் தொங்கியது. சிறிய மேஜை. வண்ண விளக்குடன் அம்சமாக அமர்த்திருந்தது. இயற்கை எழில் கொஞ்சும் சித்திரங்களை அவள் மாட்டியிருந்தாள். அப்பா... என் அறை தானே பெஸ்ட்... சொல்லுங்கப்பா என்று நச்சரித்தாள் மகள். ப்ரேம் விடவில்லை.

    அப்பா... எனக்கு தான் நீங்க அதிக மார்கக் போடணும். என் அறை தான் பெஸ்ட். என்று வம்புக்கு வந்தான்.

    இரண்டு பேருக்கும் ஒரே மார்க். தொண்ணூத்தி அஞ்சு... என்றான்.

    மற்ற அறைகளும் விஸ்தாரமாக இருந்தது. ஹால்... கிச்சன் எல்லாம் நேர்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வீட்டின் பெயர் அருளகம் என்று கேட்டின் வலது பக்க பொன்னிற எழுத்துக்கள் சொல்லிற்று. அருளின் பெயர் வைத்து மனைவிக்கு மதிப்பு கொடுத்திருந்தான் கலையரசன். ஹாலில் பெரிய சோபா செட் பா வடிவில் இருந்தது. நடுவில் பெரிய கண்ணாடி டீபாய் போடப்பட்டது. பெரிய ஸ்க்ரீன் டி.வி, தியேட்டரில் சினிமா பார்க்கும் உணர்வை கொடுத்தது. நிறைய பணத்தை நான் சாப்பிட்டிருக்கேன் என்று முழு வீடும் பறைசாற்றியது. தோட்டம் ரொம்ப பெரிசு இல்லை என்றாலும் அங்கு தென்னை மரம் இரெண்டும்... வாழை, முருங்கை, பப்பாளி என்றும் வீட்டுக்கு உபயோகமான மரங்களாக நின்றிருந்தது. ரோஜா, செம்பருத்தி, அரளி பூத்து குலுங்கியது. மல்லிகை செடி வைக்கணும்... அப்புறம் கருவேப்பிலை கண்ணு வைக்கணும். என்னங்க நர்சரியில் வாங்கி கொண்டு வாங்க. என்றாள் அருள்.

    கார் ஷெட்டில் நீல நிற இன்னோவா நின்றுகொண்டிருந்தது. காம்பௌன்ட் சுவர் அதிக உயரம் இல்லை. ஆனால் அதன் மேல் ரெண்டங்குலத்துக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட தற்காப்பு கம்பிகள் நின்றன. நாய் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் அருள்.

    இத்தனாம் பெரிய வீட்டை பராமரிக்கவே நேரம் சரியாக இருக்கும். இதில் நாய் வேறு எதுக்கு? என்றுவிட்டாள். அதனால் ப்ரேமும் ப்ரீதாவும் அடம் பிடித்து ஹாலில் பெரிய கண்ணாடி தொட்டியில் மீன்களை வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். மீன்கள் அங்கும் இங்கும் சுருக் சுருக்கென்று நீந்துவது அழகாகத் தான் இருந்தது. தண்ணீர் மாற்றுவது, மீனுக்கு உணவு கொடுக்க வேண்டியது எல்லாம் பிள்ளைகள் பொறுப்பு என்று சொல்லிவிட்டாள் அருள். மீன்கள் இறந்தால் வேறு வாங்கித் தர முடியாது என்று திட்ட வட்டமாக சொல்லியிருந்தான் கலையரசன்.

    கிருகப்பிரவேசம் சுருக்கமாக வைத்துக் கொண்டார்கள். கண் பட்டு விடும் என்ற பயம். வந்தது சுமார் முப்பது பேர் தான். சின்ன சின்ன பரிசுகள் வந்தன. அதில் வந்த ஒரு பரிசு அமெரிக்காவிலிருந்து. இவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று அமெரிக்காவில் யாரும் இல்லை. அங்கு யாருக்கும் இவர்கள் பத்திரிகை வைக்கவும் இல்லை, போனில் அழைக்கவுமில்லை. பின் யாராக இருக்கும்? அனுப்பியவர்கள் பெயர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராபின்சன் என்று இருந்தது. பரிசை அவர்கள் ஆன்லைனில் ஆடர் செய்து அனுப்பியிருந்தார்கள். உள்ளுரில் ஒரு பிரபல கடையிலிருந்து தான் வந்திருக்கிறது. அந்தக் கடை ஆள் தான் கொண்டு வந்து கொடுத்தான். ஒரு பெரிய பிளவர் பொக்கே... நிஜமான பூக்கள். பிறகு ஒரு சின்ன பார்சல். அதை பிரித்துப் பார்த்த தம்பதிகள் அசந்து போயினர். எம்பிராய்டரி செய்யப்பட்ட வால் ஹாங்கர். இரண்டு குழந்தைகள் ஆறு, நாலு வயதில் வீடு கட்டி விளையாடுகிறார்கள். தத்ரூபமாக இருந்தது. அருளுக்கு மிகவும் பிடித்து விட்டது. குழந்தைகள் சம்பத்தப்பட்ட எதுவும் அவளுக்கு பிடிக்கும். அதை அப்படியே மெயின் ஹாலில் மாட்டி வைத்தாள். அம்சமாக இருந்தது.

    யாராக இருக்கும் என்று மண்டையை போட்டு உடைத்துக் கொண்டார்கள். எவ்வளவு யோசித்தும் புரிபடவே இல்லை. கடையில் போய் அதை அனுப்பியது யார் என்று கேட்டார்கள். எந்த விவரமும் இல்லை. பணம் கட்டி, இந்த பரிசை தேர்ந்தெடுத்து, அனுப்பவேண்டிய விலாசம் மட்டும் கொடுத்தார்கள் என்று சொன்னான். தொடர்பு கொள்ள மெயில் ஐ.டி யோ போனோ இல்லை. ஏமாற்றத்துடன் திரும்பினான் கலையரசன்.

    புது வீட்டுக்கு வந்து மூணு மாசம் ஆகிவிட்டது. அருள் சொன்னது போல் மல்லிகை செடி பதியன் பண்ணி வைத்துவிட்டாள். அது வேர் பிடித்து வளரத் தொடங்கிவிட்டது. கருவேப்பில்லை கண்ணும் சோடை போகவில்லை. மண் நல்ல மண் என்று தெரிந்தது. செம்பருத்தி பூக்களில் இரண்டு நிறம் இருந்தது. ஒன்று மஞ்சள். இன்னொன்று சிவப்பு. பூஜை அறையில் புத்தம் புது ப்ரேம்களில் பிள்ளையார், முருகன், சிவன் பார்வதி... கிருஷ்ணன்... பிறகு அவர்கள் குலதெய்வம் சாஸ்தா எல்லோரும் ரட்சித்துக் கொண்டிருந்தனர். அன்னபூரணி விக்கிரகம் சின்னதாக பொலிவுடன் வெள்ளி குத்துவிளக்கின் அடியில் வீற்றிருந்தது.

    எல்லா சாமிக்கும் செம்பருத்தியும் ரோஜாவும் சூட்டி மகிழ்ந்தாள் அருள். காலை ஆறு மணிக்கெல்லாம் பூஜை மணி அடித்துக் கொண்டிருக்கும். அருள் குளித்துவிட்டு, நேற்று வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மல்லிகைப் பூவை தலையில் வைத்துக் கொண்டு லட்சுமீகரமாக சாமி கும்பிடுவாள். எல்லா அம்மன் பாடல்களும் அவளுக்கு அத்துப்படி. அறை மணி பூஜை செய்த பின்னரே... சாமிகளை நிம்மதியாக விடுவாள். பூவால் அர்ச்சனை பண்ணிக் கொண்டே சுலோகங்கள் சொல்வாள். அருள் நினைவு தெரிந்த நாள் முதல் இப்படித்தான் கடவுள் வழிபாடு செய்கிறாள். இப்பொழுது கடைசியாக அவள் வேண்டுவது யாருக்கும் தெரியாது. அவள் கணவன் அரசனுக்கும் தெரியாது. கடவுளே... என் அக்கா விபா தப்பித் தவறி கூட வந்துவிடக் கூடாது. நீ தான் அருள் செய்ய வேண்டும். அவள் பிரார்த்தனை இதோடு முடிந்துவிடும். அதன் பின் தான் சமயலறைக்குப் போவாள்.

    அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவளிடம் பழக ஆர்வம் காட்டினர். பெரிய வீட்டுக்கு சொந்தக்காரி... பெரிய வீட்டம்மா என்றே குறிப்பிட்டார்கள். அவளை நேரில் சந்திக்கும் போது மலர்ந்த புன்னகை சிந்தினார்கள். மதிப்பும் மரியாதையும் பணக்காரர்களுக்கு சுலபமாக கிடைத்துவிடுகிறது. விலை உயர்ந்த பொருட்களால் வீட்டை அலங்கரித்து வசந்த மாளிகை போல் ஆக்கி வாழ்கிறவர்களை தெய்வத்துக்கு ஈடாக பேசப்படும் விசித்திரமும் நடக்கத் தான் செய்கிறது.

    உங்க ரண்டு பேரையும் சேர்ந்து பார்க்கும் போது பார்வதி பரமசிவனையே நேரில் பார்ப்பது போல் இருக்கு. என்று வயதான அலமேலு அம்மா சொன்ன போது பிள்ளைகளே கேலி செய்தார்கள்.

    ஏம்மா... இது கொஞ்சம் ஓவரா இல்லே? என்றாள் ப்ரீதா.

    பாவம் பரமசிவன் பார்வதி... உங்க முன்னாடி கைகட்டி நிக்க வேண்டியிருக்கு. இந்த சில்லி ஜனங்களுக்கு விவஸ்தையே இல்லை. என்று ஒத்து ஊதினான் ப்ரேம். அரசன் சிரித்தான். "ஏய்... நாங்களாடா

    Enjoying the preview?
    Page 1 of 1