Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valmeeki Ramayanathil Saabangal - Part 1
Valmeeki Ramayanathil Saabangal - Part 1
Valmeeki Ramayanathil Saabangal - Part 1
Ebook104 pages33 minutes

Valmeeki Ramayanathil Saabangal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான கதைகளையும், சம்பவங்களையும், சாபங்களையும், வரங்களையும் காண்கிறோம். வாழ்நாள் முழுவதும் படித்து அனுபவிக்க வேண்டிய இந்தக் காவியத்தில் 61 சாபங்களும் 82 வரங்களும் இடம் பெறுகின்றன.

இந்த முதல் பாகத்தில் பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டத்தில் விவரிக்கப்படும் 29 சாபங்கள் குறித்த விளக்கங்கள் உள்ளன. இந்த நூலில் சாபங்களுக்கான வால்மீகி ராமாயண ஸ்லோகங்களையும் அதற்கான அர்த்தத்தையும் காணலாம்.

Languageதமிழ்
Release dateJun 28, 2024
ISBN6580151011237
Valmeeki Ramayanathil Saabangal - Part 1

Read more from S. Nagarajan

Related to Valmeeki Ramayanathil Saabangal - Part 1

Related ebooks

Related categories

Reviews for Valmeeki Ramayanathil Saabangal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valmeeki Ramayanathil Saabangal - Part 1 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வால்மீகி ராமாயணத்தில் சாபங்கள் - பாகம் 1

    (பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டத்தில் விவரிக்கப்படும் சாபங்கள்)

    Valmeeki Ramayanathil Saabangal - Part 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ராமாயணம் எழுந்த கதை!

    2. மாரீசன், சுபாகுவுக்கு ஏன் சாபம் கொடுக்கப்படவில்லை?

    3. தாடகைக்கு வந்த சாபம்!

    4. மாரீசனுக்கு வந்த சாபம்!

    5. ஸுந்தனுக்கு வந்த சாபம்!

    6. தாடகா வனத்தின் சாபம் நீங்கியது!

    7. சுபாஹு பெற்ற சாபம்

    8. குசகன்யா - வாயு சாபம்

    9. உமா தேவியின் சரித்திரம்: தேவர்களுக்கு சாபம்

    10. உமா தேவியின் சரித்திரம்: பூமிக்கு சாபம்

    11. கங்காவதரணமும், சாப நிவர்த்தியும்!

    12. கௌதமர் இந்திரனுக்கு தந்த சாபம்!

    13. கௌதமர் அகல்யைக்கு தந்த சாபம்!

    14. வசிஷ்ட புத்திரர்கள் திரிசங்குவிற்குத் தந்த சாபம்!

    15. வசிஷ்ட புத்திரர்களுக்கு விஸ்வாமித்திரர் தந்த சாபம்!

    16. விஸ்வாமித்திரரின் சாபத்திற்கு பயந்த ரிஷிகள்!

    17. விஸ்வாமித்திரர் தனது புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்!

    18. விஸ்வாமித்திரர் ரம்பைக்குக் கொடுத்த சாபம்!

    19. கோசலை ராமனைப் பிரிய முடியாமல் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!

    20. கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!

    21. அம்பால் அடிக்கப்பட்ட முனிகுமாரன் தசரதனை நோக்கிக் கூறியது!

    22. தசரதனை முனிவர் சபித்தது!

    23. பரதன் கைகேயியை நிந்தித்தது!

    24. குபேரனிடம் விராதன் பெற்ற சாபம்!

    25. ரிஷிகள் ராக்ஷஸர்களுக்கு சாபம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்!

    26. அந்தணருக்கு பதில் சொல்லாவிடில் சபிப்பாரோ என்ற சீதாதேவியின் எண்ணம்!

    27. ஶ்ரீ ராமர் மலையைப் பார்த்து உன்னை அழிப்பேன் என்று கூறியது!

    28. ஸ்தூலசிரஸ் முனிவர் கபந்தனுக்குத் தந்த சாபம்!

    29. கபந்தன் இந்திரன் தனக்குத் தந்த சாபத்தை விளக்கியது!

    முன்னுரை

    ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான கதைகளையும், சம்பவங்களையும், சாபங்களையும், வரங்களையும் காண்கிறோம்.

    சரிதம் ரகுநாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம் |

    ஏகைக மக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம் ||

    - ‘இந்தக் காவியத்தில் ஒரே ஒரு அக்ஷரத்தைச் சொன்னால் கூட மகா பாவமும் நாசமாகும்’ என்பது வால்மீகி ராமாயணத்தைப் படிப்பதன் முக்கிய பயன்களில் ஒன்றாகும்.

    இந்த நூலில் பொருத்தமான வால்மீகி ராமாயண ஸ்லோகங்களையும் அதற்கான அர்த்தத்தையும் காணலாம்.

    வாழ்நாள் முழுவதும் படித்து அனுபவிக்க வேண்டிய இந்தக் காவியத்தில் 61 சாபங்களும் 82 வரங்களும் இடம் பெறுகின்றன.

    கதை ஓட்டத்திற்கும், கதையின் சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணத்திற்கும் இந்த சாபங்களும் வரங்களும் காரணமாக அமைகின்றன.

    ஆகவே இவற்றை அறிவது இன்றியமையாததாக ஆகிறது.

    இந்த வகையில் முதலில் 61 சாபங்களின் விவரங்களைப் பற்றி இணையதளத்தில் www.tamilandvedas.com -ல் எழுத ஆரம்பித்தேன்.

    அவற்றில் பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று காண்டங்களில் வரும் 29 சாபங்களின் தொகுப்பாக இந்த முதல் பாகம் அமைகிறது.

    அடுத்து, கிஷ்கிந்தா காண்டத்தில் வரும் 4 சாபங்கள், சுந்தரகாண்டத்தில் வரும் ஒரு சாபம், யுத்தகாண்டத்தில் வரும் மூன்று சாபங்கள் மற்றும் உத்தர காண்டத்தில் வரும் 24 சாபங்கள் ஆகியவை இரண்டாம் பாகமாக மலரும்.

    புராண, இதிஹாஸங்களை சரியாகப் புரிந்து கொள்வதற்கு சாபங்கள், மற்றும் வரங்கள் பற்றி அறிவது அவசியம்.

    ஒருவனுக்கு தவறு இழைக்கப்பட்ட போது அதற்கு தண்டனையாக தவறு இழைத்தவனுக்கு சாபம் தரப்படுகிறது. சாபம் கொடுத்து ராட்சஸர்களை ரிஷிகளே அழித்து விடலாமே என்ற கேள்விக்கும் நமக்கு பதில் கிடைக்கிறது. தவம் என்பது மிகவும் கடினமான ஒன்று, அதை மேற்கொண்டு சித்தி பெற்றவர்கள், சாபம் கொடுப்பதன் மூலம் தங்கள் தவ சக்தியை இழப்பர் என்பதே பதில்.

    சாபங்களைப் பற்றி மட்டுமே அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் கவனக் குவிப்புடன் படிக்க முடிவதால் இப்படி பல அரிய விஷயங்களை அறிய முடிகிறது.

    இதை இணையதளத்தில் வெளியிட்டு வந்த லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு வழிகாட்டி நூலாக ஹிந்தியில் அமைந்த நூல் வால்மீகி ராமாயண் – சாப் அவுர் வரதான் என்ற நூலாகும். இதை எழுதிய ஶ்ரீ பாத ரகுநாத தீர்த்த பிடே அவர்களுக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    நூற்றியிருபதுக்கும் மேற்பட்ட எனது நூல்களை வெளியிட்டுள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA, இந்த நூலையும் வெளியிடுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1