Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muththuppattan Kathai
Alli Arasani Malai
Kaththavarayan Kathai
Audiobook series5 titles

Tamil Folk Literature

Written by Folk Tradition, Vanamamalai, Pukazhendi and

Narrated by Ramani

Rating: 0 out of 5 stars

()

About this series

அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை அல்லது குன்றுடையான் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். 

இக்கதை உடுக்கையடி பாடலாகவும், வேடம் தரித்து நடித்தும் பாடப்படுகிறது. கிராமப்புறங்களில் இன்றும் இக்கதை கூத்து வடிவில் நிகழ்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதியைச் சார்ந்த வேட்டுவக்கவுண்டர் சமூக மக்களைத் தவிர, அனைவரும் வணங்கும் தெய்வமாக அண்ணன்மார்சாமி உள்ளது. இதில் அதிகமாக அண்ணன்மார்சாமியை வணங்குபவர்கள் கொங்குவேளாளக் கவுண்டர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆகும். அண்ணன்மார் சாமியின் கதையை முதலில் கள்ளழகர் அம்மானை என்பவரும் அவரைத் தழுவி பிச்சன் என்பவரும் எழுதியிருக்கிறார்கள்.

கொங்குப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் முக்கியமான கதைப்பாடல் ‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் அழைக்கப்படும் கதைப்பாடலாகும். இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர் தலைவர்களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றைக் கூறும் வீரப்பாடல் இது. இவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்னும் தங்கை ஒருத்தி, கதையின் முக்கிய பகுதி இந்தத் தங்கையின் நோக்கிலிருந்தே நகர்கின்றது. கதையின் இறுதிக் கட்டமான படுகளம் அருக்காணித் தங்கத்தை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு

Languageதமிழ்
Release dateMar 20, 2022
Muththuppattan Kathai
Alli Arasani Malai
Kaththavarayan Kathai

Titles in the series (5)

  • Kaththavarayan Kathai

    1

    Kaththavarayan Kathai
    Kaththavarayan Kathai

    முருகப்பெருமானின் ஒரு அவதாரமாக காத்தவராயன் கருதப்படுகிறார். ஈசனிடம் பார்வதி தான் செய்த ஒரு தவறுக்கு தண்டனை பெறுவதை சகிக்காத முருகன், சிவனை எதிர்த்து பேச, சிவனின் கோபத்திற்கு ஆளாகி மனிதனாக பிறந்ததாக வரலாறு. காத்தவராயன் கதையின் கூறுகள் வெவ்வேறு வழிகளில் கூறப்படுவதுண்டு. சாதாரண குடும்பத்தில் பிறந்த காத்தவராயன் அப்பகுதி அந்தணர் மகள் ஒருத்தியைக் காதலித்து மணம் செய்து கொண்டான். அந்தணர் மகளை திருமணம் செய்த குற்றத்தினால், மன்னனது சினத்திற்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மன்னனிடம் தனது காதலுக்காக "மக்களால் வணங்கப்படும் தேவரும் தெய்வங்களும் இவ்வாறே பெண்களைக் காதலித்து மணம் செய்துகொண்டுள்ளார்கள்" என்று காத்தவராயன் வாதிடுகிறான். ஆனாலும் அவன் வாதத்தை ஏற்று கொள்ளாமல் கழுவேற்றி சாகடிக்க ஆணை இடப்பட்டது ஆனால் கழுவேறிய சில நேரத்தில் தான் முற்பிறவியால் உயிர்த்தெழுந்து தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார். காத்தவராயன் கதை தமிழகத்தில் நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம்-திருச்சியைச் சுற்றி உள்ள ஊர்களில் வழங்கும் ஒரு கதையும், கதையை தழுவிய கூத்தும் ஆகும். இது அடிப்படையில் சாதி அமைப்பு முறையை மீறிய ஒரு திருமணக் கதை ஆகும். ஆனால் இது சாதி அமைப்பை நிலைநாட்டும் வழியிலும் கூறப்படுவதுண்டு. காத்தவராயன் காதலித்து உயிர்துறக்க காரணமாய் இருந்த பெண்ணின் பெயர் ஆரியமாலா, இப்போதும் கூட காதலுக்கு காத்தவராயன்-ஆரியமாலா காதல் உவமையாக சொல்லபடுவது வழக்கத்தில் உள்ளது.

  • Muththuppattan Kathai

    2

    Muththuppattan Kathai
    Muththuppattan Kathai

    முத்துப்பட்டன் கதை என்பது தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் கதை ஆகும். இக் கதை 18 ஆம் நூற்றாண்டில் முத்துப்பட்டன் என்பவன் சாதி மீறித் திருமணம் செய்ததையும், அவன் மனைவியின் உறவினர்களுக்கு வரும் இடையூறுகளுக்கு எதிர்த்துப் போராடியதையும், அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்ததையும் பற்றிக் கூறுகிறது.

  • Alli Arasani Malai

    3

    Alli Arasani Malai
    Alli Arasani Malai

    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.

  • Pavalakkoti

    4

    Pavalakkoti

  • Annamar Kathai

    5

    Annamar Kathai
    Annamar Kathai

    அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை அல்லது குன்றுடையான் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும்.  இக்கதை உடுக்கையடி பாடலாகவும், வேடம் தரித்து நடித்தும் பாடப்படுகிறது. கிராமப்புறங்களில் இன்றும் இக்கதை கூத்து வடிவில் நிகழ்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதியைச் சார்ந்த வேட்டுவக்கவுண்டர் சமூக மக்களைத் தவிர, அனைவரும் வணங்கும் தெய்வமாக அண்ணன்மார்சாமி உள்ளது. இதில் அதிகமாக அண்ணன்மார்சாமியை வணங்குபவர்கள் கொங்குவேளாளக் கவுண்டர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆகும். அண்ணன்மார் சாமியின் கதையை முதலில் கள்ளழகர் அம்மானை என்பவரும் அவரைத் தழுவி பிச்சன் என்பவரும் எழுதியிருக்கிறார்கள். கொங்குப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் முக்கியமான கதைப்பாடல் ‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் அழைக்கப்படும் கதைப்பாடலாகும். இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர் தலைவர்களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றைக் கூறும் வீரப்பாடல் இது. இவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்னும் தங்கை ஒருத்தி, கதையின் முக்கிய பகுதி இந்தத் தங்கையின் நோக்கிலிருந்தே நகர்கின்றது. கதையின் இறுதிக் கட்டமான படுகளம் அருக்காணித் தங்கத்தை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு

Related to Tamil Folk Literature

Related categories

Reviews for Tamil Folk Literature

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words