Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pandian Parisu
Azhakin Sirippu
Kannaki Puratchik Kappiyam
Audiobook series14 titles

Bharathidasan Complete Works

Written by Bharathidasan

Narrated by Ramani

Rating: 0 out of 5 stars

()

About this series

பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாக சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

அவருடைய கவிதைகள் 3 தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. அவற்றுள் மூன்றாம் தொகுப்பின் முதல் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் நெடுங்கதை கடல்மேற்குமிழிகள் கேட்கலாம். இரண்டாம் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் அமிழ்து எது, அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துக் கதை ஆகியவற்றைக் கேட்கலாம். மூன்றாம் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் ஏற்றப் பாட்டு, திராவிடர் திருப்பாடல், சமத்துவப்பாட்டு, புரட்சித்திருமணம் ஆகியவற்றைக் கேட்கலாம்.

Languageதமிழ்
Release dateJan 19, 2023
Pandian Parisu
Azhakin Sirippu
Kannaki Puratchik Kappiyam

Titles in the series (14)

  • Kannaki Puratchik Kappiyam

    4

    Kannaki Puratchik Kappiyam
    Kannaki Puratchik Kappiyam

    சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிகழ்ச்சிகளைக் கவிஞர் நீக்கி விடுகிறார். கணவனைப் பெறவேண்டுமென்றால், கண்ணகி சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற குளங்களிலே மூழ்கி மன்மதனைத் தொழ வேண்டும் என்று தேவந்தி என்ற தோழி கூறுகின்றாள். சிலப்பதிகாரக் கண்ணகி அது சிறப்பாகாது என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். பாவேந்தரின் கண்ணகி “உன் தீய ஒழுக்கத்தை இங்கு நுழைக்காதே” என்று எச்சரிக்கின்றாள். மதுரையைக் கண்ணகி தன் ஆற்றலால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறியதை மாற்றினார் பாரதிதாசன். கண்ணகிக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு மக்கள் மதுரை நகர்க்குத் தீயிட்டனர் என்றார் கவிஞர். கண்ணகி வானநாடு போனதாகக் கூறப்பட்டதை மாற்றி மலையிலிருந்து விழுந்து இறந்தாள் என்று கூறினார் கவிஞர். கண்ணகி காவியம் கவிஞரின் படைப்பில் சீர்திருத்தக் காவியமாயிற்று.

  • Pandian Parisu

    5

    Pandian Parisu
    Pandian Parisu

    பாண்டியன் பரிசு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ஒரு புரட்சிக் காப்பியமாகின்றது. “பாண்டியன் பரிசு” என்ற சிறுகாவியம் “பாண்டியன் பரிசு’ என்ற ஆட்சி உரிமையைக் கொண்ட பேழையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது. பாரதிதாசன் தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

  • Azhakin Sirippu

    7

    Azhakin Sirippu
    Azhakin Sirippu

    பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்கள் நல்கும் இறுதிக் கவிதைகள் தனிச் சிறப்பு. சிற்றூருக்கும், பட்டினத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் குறித்தும் அழகாகப் பதிவிட்டுள்ளார். “அதிகாலைப் பொழுதில் உதித்தெழும் சூரியனின் காட்சி மிகவும் அழகானது. அக்காட்சியானது கடலின் மீது விழும் சூரிய ஒளியின் பிரகாசத்தினை கடலும் சேர்ந்து வாங்கிப் பொன் மஞ்சள் நிறமாக ஒளிருகின்ற காட்சி மிகவும் தனித்த அழகுடையது ஆகும். பூஞ்செடிகளின் கூட்டம் அணிவகுக்கும் சோலைகளிலும், அங்கு மலர்ந்து மணம் வீசும் மலர்களிலும், பசுமையான தளிர்களிலும், இப்படிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்த அழகு என்கிற பெண் நம் கண்களில் தெரிந்தாள். அவ்வாறே மாலை நேரத்தில் சூரியன் மறையும் காட்சி ஒரு பெரிய மாணிக்கக் கட்டியினை வெட்டி எடுத்து கீழ்வானில் ஒட்டிவைத்ததனைப் போன்று ஒளிவீசுகின்ற அழகாக அந்த அழகுப்பெண் இருந்தாள். சாலையோரங்களில் நிறைந்திருந்த ஆலமரங்களின் கிளைகளில் எல்லாம் கிளிகளின் கூட்டம் அமர்ந்திருந்த காட்சி மிகவும் அழகிய பெண்ணாகி என் உணர்வுகளைத் தூண்டி இந்தக் கவிதையினைத் தந்தாள்.” என்ற பொருள்தரும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தோடு நூல் ஆரம்பமாகிறது. 

  • Thamizhachiyin Kathi

    13

    Thamizhachiyin Kathi
    Thamizhachiyin Kathi

    தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது. அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் காணுகிறார்கள் என்று இக்கவிதை தொகுப்பு ஆரம்பமாகிறது. அவன் மனைவியாகிய சுப்பம்மாவின் மேல் காமம் சுதரிசன் சிங்குக்கு மீறுகிறது. துன்பியல் காப்பியமாக அமையும் இந்நூல் தமிழிச்சியாகிய சுப்பம்மா வீறு கொண்டெழுந்து முடிவில் எப்படி இறக்கிறாள் என்ற கதையைச் சொல்கிறது.

  • Ilaignar Ilakkiyam

    6

    Ilaignar Ilakkiyam
    Ilaignar Ilakkiyam

    இளைஞர் இலக்கியம் என்ற நூலை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். இந்நூலினை மரபுப்பாடல்களால் ஆக்கியுள்ளார். ஒன்பது பெருந்தலைப்புகளின் கீழ் அமைந்துள்ளன. ஒன்பது தலைப்புகளிலும் வெவ்வேறு குறுந்தலைப்புகளில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. பாவேந்தர் குழந்தைகள் மனதில் நற்சிந்தனைகளை  இனிய தமிழில் எடுத்துரைப்பது சிறப்பானதாகும். கவிதைக்கு அழகைச் சேர்ப்பது பைந்தமிழ்ச் சொற்கள். ஆதலால் இலக்கியச் சொற்களைக் கவிதைகளில் கூட்டும் போது குழந்தைகளின் சொல் அறிவும், மொழி அறிவும் அதிகரிக்கும். “வில்லடித்த பஞ்சு /  விட்டெறிந்த தட்டு /  முல்லை மலர்க் குவியல்; /முத்தொளியின் வட்டம்; / நல் வயிரவில்லை; /நானில விளக்கு” சந்திரனுக்கு நல்ல தமிழ்ச்சொல் நிலவு. அந்த நிலவில் அந்த நிலவின் அழகைப் பாவேந்தர் குழந்தைகளுக்கு இலக்கிய சொற்களைக் கொண்டு எடுத்துக்கூறும் விதம் சிறப்புக்குரியது. அகழி, முணறி, குணகடல், உய்யும் என்பன கவிஞர் பயன்படுத்தியிருக்கும் சொற்களாகும். “சொக்க வெள்ளித்தட்டு – மிகத் / தூய வெண்ணெய்ப்பிட்டு / தெற்கத்தியார் சுட்டு – நல்ல / தேங்காய்ப் பாலும் விட்டு” நாளைய தலைமுறைகளான குழந்தைகளின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்ந்த வேண்டும் என்ற கற்பனை எண்ணத்துடன் பாவேந்தர் கவிதை படைக்கிறார். “குயிலே குயிலே கூவாயோ? / குரலால் என்னைக் காவாயோ? / பயிலும் உன்வாய் பூவாயோ? / பயனை அள்ளித் தூ வாயோ?” எனும் இப்பாடல் குழந்தைகளுக்கு ஓசையின்பம் அளிக்கிறது. “சின்னஞ்சிறு குட்டை – அதில் / ஊறும் தென்னை மட்டை – அதோ கன்னம் கரிய அட்டை – எதிர் / காயும்

  • Isai Amuthu

    9

    Isai Amuthu
    Isai Amuthu

    பாவேந்தர் பாரதிதாசன் நூலான‌ இசை அமுது 52 பாடல்களை மூன்று பகுதிகளாகத் தருகிறது. முதல் பகுதியான காதல் பகுதியில் 31 பாடல்களும் இரண்டாவது பகுதியான தமிழ்ப் பகுதியில் 13 பாடல்களும் மூன்றாவது பகுதியான பெண்கள் பகுதியில் 8 பாடல்களுமாக 52 பாடல்கள் உள்ளன. இவை யாவும் இசையோடு பாடப்படுவத்ற்காக எழுதப்பட்டவை. பரந்த அளவில் அறியப்பட்ட இந்தப் பாடல் மூன்றாவது பகுதியில் உள்ளது. 1951ஆம் ஆண்டு AVM தயாரிப்பில் வெளியான 'ஓர் இரவு' படத்தில் இடம் பெற்ற V.J.வர்மா, M.S.ராஜேஸ்வரி பாடிய பாடல். இசையமைப்பு R. சுதர்சனம். துன்பம்நேர்கையில்யாழ்எடுத்துநீ இன்பம்சேர்க்கமாட்டாயா? -- எமக் கின்பம்சேர்க்கமாட்டாயா? -- நல் லன்பிலாநெஞ்சில்தமிழில்பாடிநீ அல்லல்நீக்கமாட்டாயா? -- கண்ணே அல்லல்நீக்கமாட்டாயா?துன்பம்... வன்பும்எளிமையும்சூழும்நாட்டிலே வாழ்வில்உணர்வுசேர்க்க -- எம் வாழ்வில்உணர்வுசேர்க்க -- நீ அன்றைநற்றமிழ்க்கூத்தின்முறையினால் ஆடிக்காட்டமாட்டாயா? -- கண்ணே ஆடிக்காட்டமாட்டாயா?துன்பம்... அறமிதென்றும்யாம்மறமிதென்றுமே அறிகிலாதபோது -- யாம் அறிகிலாதபோது -- தமிழ் இறைவனாரின்திருக்குறளிலேஒருசொல் இயம்பிக்காட்டமாட்டாயா? -- நீ இயம்பிக்காட்டமாட்டாயா?துன்பம்... புறம்இதென்றும்நல்லகம்இதென்றுமே புலவர்கண்டநூலின் -- தமிழ்ப் புலவர்கண்டநூலின் -- நல் திறமைகாட்டிஉனைஈன்றஎம்உயிர்ச் செல்வம்ஆகமாட்டாயா? -- தமிழ்ச் செல்வம்ஆகமாட்டாயா?துன்பம்... இந்நூலின் 52 பாடல்களும் ஒன்றுக்கொன்று இசை இனிமையில் போட்டி போடுகின்றன என்றால் மிகையாகாது.

  • Manimekalai Venpa

    8

    Manimekalai Venpa
    Manimekalai Venpa

    இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை. இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரின் படைப்புகள். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறும் காப்பியம் மணிமேகலை. அகவற்பாவாலானது. பல கிளைக் கதைகள், வரலாற்று நிகழ்வுகளைக் கூறுவது. பாவேந்தர் பாரதிதாசன் கிளைக்கதைகளை விடுத்து வெண்பா யாப்பில் மணிமேகலையின் கதையைச் சொல்லிப் போகிறார். உருக்கமும் எளிமையும் ஒருங்கிணைந்த‌ படைப்பு. 288 நேரிசை வெண்பாக்களால் ஆனது இந்த நூல்.

  • Kathal Ninaivukal

    14

    Kathal Ninaivukal
    Kathal Ninaivukal

    தாய்மொழியின் வலிமையை தனது சிந்தனையாக வடிவமைத்து, பார்ப்பனர் அல்லாதார் பண்பாட்டைப் போற்றுகிற பாடல்களை தமிழில் கொடுத்தவர் பரதிதாசன். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்திலிருந்து தன் மொழி ஆற்றலை எடுத்து நவீன உலகில் கொடுத்தவர். புரட்சிக் கவியான பாரதிதாசன் எழுதிய காதல் கவிதைகளும் சிறப்பு வாய்ந்தவை. “எல்லோரும் பாட்டுக்கு உரை எழுதியபோது பெரியாரின் உரைக்கு எல்லாம் பாட்டெழுதியவன் பாரதிதாசன்” என்று புகழப்பட்ட பாரதிதாசன் தனது காதல் கவிதைகளிலும் சாதி எதிர்ப்பு மறுமணம் குறித்தெல்லாம் சேர்த்துப் பாடியவர். சங்க இலக்கியங்களில் காதலன் பொருள் தேடி பிரிந்து செல்லும்போது பாடப்படும் பாடல்களைப் போல, பொருள் சேர்க்க காதலன் சென்றதால் பிரிந்திருக்கும் காதலர்கள் எழுதிக் கொள்ளும் கடிதங்களில் தங்கள் வருத்தங்களை, அன்பை, காதல் ஏக்கத்தைப் பாடும் கவிதையாக வடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதம். மாந்தோப்பு எனும் கவிதையில் அமுதவல்லிக்கும் குப்பனுக்குமான காதலை பாடியிருப்பார். ஒரு பெண்ணை விரும்பி அவளிடம் தன் காதலை சொல்லும்போது, நான் சிறுவயதில் விதவையானவள் என்று அவள் கூறுகிறாள். குப்பன் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். பிற்போக்கு எண்ணம் கொண்ட ஊர்காரர்கள், சாதிகாரர்கள் போன்றோர் ஊர் விலக்கம் செய்வோம் என்று பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். சாதியவாதிகளை எல்லாம் மீறி அப்பெண்ணை மணக்கும் அந்த கவிதையில் மறுமணத்தை வலியுறுத்தி பாரதிதாசன் எழுதிய வரிகள் சிறப்பு வாய்ந்தவை. தமிழில் உழைப்பாளிகளின் காதலைப் பாடியவர் பாரதிதாசன். வண்டிக்காரர், மாடு மேய்ப்பவர், பாவோடு பெண்கள், தறித் தொழிலாளி நினைவு, உழவர் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக்(கோடரி)காரர், கூ

  • Puratchikkavi

    12

    Puratchikkavi
    Puratchikkavi

    கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ஒரு குறுங்காவியமே புரட்சிக்கவி என்பதாகும். இக்காவியம் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட பில்கணீயம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டாலும் பாவேந்தர் கதை முடிவில் காட்சி அமைப்பை மாற்றி மக்கள் புரட்சி அமைவதாகக் காட்டியுள்ளார்.இக்காவியத்தில் நாட்டின் அரசன் உதாரன் எனும் கவிஞனை தன் மகளுக்குத் தமிழ் கற்பிக்கத் தருவிக்கிறான். இருவரும் காதல் வயப்படாமல் இருக்கத் தன் மகள் அமுதவல்லிக்குத் தொழு நோய் என்று உதாரனிடமும் உதாரனுக்குக் கண் பார்வையில்லை என்று அமுதவல்லியிடமும் கூறுகின்றான்.ஒரு நாள் இரவு உதாரன் வானத்தில் நிலவைக் கண்டு பாட, அமுதவல்லி கண்பார்வை அற்றவன் எவ்வாறு நிலவைப் பாடுகின்றான் என ஐயம் கொண்டு உதாரனைக் காண, இருவரும் காதல் கொள்கின்றனர். இச்செய்தி அறிந்த மன்னவன் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கின்றான். மக்கள் புரட்சி செய்து, அரசனைத் துரத்தி விட்டு கவிஞனுக்கும் இளவரசிக்கும் மீட்சி தருவதாகவும் அங்கு மக்களாட்சி அமைவதாகவும் காட்டிக் காவியத்தை நிறைவு செய்கின்றார். இப்பாடலில் பாவேந்தர் தம் உள்ளக்கிடக்கையான பெண் கல்வியை வெளிப்படுத்துகிறார். அமுதவல்லி, “தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள் அமைவுற ஆய்ந்தாள் அயல்மொழி பயின்றாள் ஆன்ற ஒழுக்கநூல் நீதிநூல் உணர்ந்தாள்” கொலைக்களத்தில் பேச வாய்ப்பு கிடைத்த பின் உதாரன் நாட்டு மக்களைப் பார்த்து உரையாடுகின்றான். பேரன்பு கொண்டோரே பெரியோரே என் பெற்றதாய் மாரே நல்லிளம் சிங்கங்காள் என்று தொடங்கும் தன் உரையில் உதாரன் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்ப முயல்கிறான். முதலில் அரசன் மக்களின் உழைப்பை உறிஞ்சி மக்களையே ஆள்வதாகக

  • Kurinjiththittu

    18

    Kurinjiththittu
    Kurinjiththittu

    குறிஞ்சித் திட்டு’ என்ற கவிதை நூல் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் வெளியானது. இந்நூலுக்கான முன்னுரையில் இக்கவிதைப் படைப்பைத் தாம் இரு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதத் தொடங்கி, முக்கால் பகுதி போல முடிவடைந்த பிறகு அது குறித்து நினைவு இல்லாமல் போனதாக பாவேந்தர் பாரதிதாசன் கூறியுள்ளார். பின்னர், நூலை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்ட பிறகு, பெரிதும் முயன்று, மீண்டும் முன்னர் எழுதியவற்றைப் பலமுறைப் படித்து நினைவிற்குக் கொண்டு வந்து தொடர்ந்ததாகவும் எழுதியுள்ளார். முதலில் எழுதிய வேகமும் ஆர்வமும் மட்டுப்பட்டுப் போனது குறித்து வருந்தி, நூலின் சுவை குன்றியிருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ச்சி விட்டால் ஏற்படக்கூடிய இத்தகைய இடையூற்றைக் கவனத்தில் கொள்ளுமாறும் இளங்கவிஞர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மிக எளிய கவிதை வடிவில் எழுதப்பட்ட இந்தக் கவிதை நூலின் கதைக் களம் சமகாலத்துத் தமிழக வரலாற்றுக்கு இணையாகவே செல்கிறது. ஆனால், கதை நடப்பது குமரிக்குத் தெற்கே நடுக் கடலில் உள்ள ‘குறிஞ்சித் திட்டு’ என்ற கற்பனையானதொரு குட்டித் தீவில். சென்னையில் இருந்து தெற்கே மூன்று நாள் கப்பல் பயணத் தொலைவில் உள்ளது குறிஞ்சித் திட்டு. கதை நடக்குங் காலத்தில் இன்னமும் அங்கு முடியாட்சி நிலவுகிறது. குடிமக்கள் அங்குத் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பழங்குடித் தமிழ் மக்கள். அங்கு ஐரோப்பியர் போன்ற அயலார் வந்து குறிஞ்சித் திட்டின் ஆட்சியைப் பிடிக்கவில்லை, தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை. ஏனெனில் குறிஞ்சித் திட்டு தீவைச் சுற்றிக் கடலில் சுழல்கள் அதிகம், அவை குறித்து அறியாது தீவை அணுகும் கப்பல்கள் கடலில் மூழ்கிவிடும் (பெர்முடா முக்கோணம்/Bermuda Triangle

  • Veeraththay

    16

    Veeraththay
    Veeraththay

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி 1938-ல் வெளிவந்திருக்கின்றது. அக்கவிதைத் தொகுதியில் ஒன்பது காட்சிகளால் படைக்கப்பட்ட 'வீரத்தாய்' காவியம் ஓர் ஓரங்கக் கவிதை நாடக வகையைச் சார்ந்தது எனலாம். உறவினர் அனைவரையும் இழந்த பிறகும் தனக்கிருந்த ஒரே மகனைப் போருக்குச் செல்லுமாறு அனுப்பியவள் புறநானூற்றுத் தாய். சீவகனின் தாய் அனாதையாய் இடுகாட்டில் மயில் பொறியில் இறங்குகிறாள்; தவக்கோலம் பூண்டு மறைந்து வசித்து வருகிறாள். அவள் மகன் முனிவர் ஒருவரிடம் மாமன்னர்க்குரியதான பல கலைகளைப் பயில்கிறான். அவனே காப்பியத் தலைவனாகச் சீவக சிந்தாமணியில் படைக்கப்படுகிறான். அதேபோல, கரிகாலன் பிறப்பில் அனாதை. அவனை, அவன் மாமன் இரும்பிடர்த்தலை அரசனாக மாற்றினான். அது போலவே, 'வீரத்தாய்' காவியத்தில் மகனை வீரனாக்குவது அவனது தாயே. இக்காவியத்தில் ஆண்மாந்தர்களை விடப் பெண் மாந்தர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தை அகற்றிட, அப்பெண்களின் பார்வையைப் பறித்த சமுதாயத்திற்குப் பகுத்தறிவை ஊட்டிட நினைத்து உருவானதுதான் 'வீரத்தாய்' காவியம். மணிபுரி, மன்னன் இல்லாமல் பாழாய்க்கிடக்கும் நிலையைப் பயன்படுத்தி சேனாதிபதி காங்கேயனும் மந்திரியும் ஒன்றுசேர்ந்து சூழ்ச்சியால் அரசாட்சியைப் பெற்றிட, இளவரசியையும் சுதர்மனையும் ஊர்ப்புறத்தில் விட்டுவிட்டுச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், இளவரசி யாருக்கும் தெரியாமல் தன் மகனுக்கும் தெரியாமல் அவனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுத்து வளர்க்கிறாள். தகுந்த நேரம் பார்த்துச் சூழ்ச்சியை முறியடித்து வெற்றியும் பெறுகிறாள். இளவரசன் சுதர்மன் மணி

  • Sanjivi Parvathathin Saral

    15

    Sanjivi Parvathathin Saral
    Sanjivi Parvathathin Saral

    பாரதிதாசனை அறியாத இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்லவேண்டும் என்று சொல்கிறார் புதுமைப்பித்தன். பாரதிதாசன், முதன்முதலில் படைத்த தொடர்நிலைச் செய்யுள் (சிறிய காவியம்) சஞ்சீவி பர்வதத்தின் சாரல் இது பஃறொடை வெண்பாவினால் அமைந்தது. பல சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்லும் பாங்கில் ஒரு கதையைச் சொல்வதாக அமைந்தது. ஓர் அழகிய சூழலில் கதை நிகழ்கிறது. அந்த இயற்கைச்சூழல் ஒரு மலைச்சாரல். சஞ்சீவி பர்வதம் என்பது அம்மலையின் பெயர். குப்பன் என்ற இளைஞன் ஒருவன் தன் காதலி வஞ்சி என்பவள் வரவுக்காகக் காத்திருக்கிறான். அவளும் வருகிறாள். மனமகிழ்ந்து அவளை முத்தமிடச் செல்கையில் மறுக்கிறாள் அவள். காரணம் கேட்கிறான் குப்பன். முன்நாள் சொன்னபடி குப்பன் அந்த மலையிலிருக் கும் இரண்டு மூலிகைகளைப் பறித்துத் தரவேண்டும் என்கிறாள் வஞ்சி. இல்லையென்றால் என் உயிர் இருக்காதுஎன்று மிரட்டுகிறாள். நீ கல்லில் நடந்தால் கால்கடுக்கும், மற்றும் கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்கிறான் குப்பன். வாழ்வில் எங்கும் உள்ளது தான், வாருங்கள்என்கிறாள் வஞ்சி. இம்மூலிகைகள் அசாதாரணமானவை. ஒன்றைத் தின்றால், உலகின் மாந்தர்கள் அனைவரும் பேசும் பேச்சையெல்லாம் கேட்கலாம். மற்றொன்றைத் தின்றால், இவ்வுலகில் நடக்கும் நிகழ்ச் சிகளையெல்லாம் பார்க்கலாம். ஆதலால் மூலிகையின் ஆசையை விடு என்கிறான் குப்பன். கேட்கும் வஞ்சிக்கோ இன்னும் அதிகமாக ஆசை மூள்கிறது. கோபமுற்ற குப்பன், என்னடி பெண்ணே, இது தகுமோ பெண்களுக்கு? என்கிறான்

  • Anthology 2

    111

    Anthology 2
    Anthology 2

    பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாக சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். அவருடைய கவிதைகள் 3 தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. இரண்டாம் தொகுப்பில் திராவிட நாட்டுப் பண் முதலாக 66 தலைப்புகளில் எழுதிய கவிதைகள் அமைந்துள்ளன. முதல் ஒலிக்குதிரில் இரண்டாம் தொகுப்பின் 1 முதல் 18 வரையிலான பாடல்கள் அடங்கியுள்ளன. இரண்டாம் ஒலிக்குதிரில் இரண்டாம் தொகுப்பின் 19 முதல் 45 வரையிலான பாடல்கள் அடங்கியுள்ளன. மூன்றாம் ஒலிக்குதிரில் இரண்டாம் தொகுப்பின் 46 முதல் 66 வரையிலான பாடல்கள் அடங்கியுள்ளன.

  • Anthology 3

    112

    Anthology 3
    Anthology 3

    பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாக சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். அவருடைய கவிதைகள் 3 தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. அவற்றுள் மூன்றாம் தொகுப்பின் முதல் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் நெடுங்கதை கடல்மேற்குமிழிகள் கேட்கலாம். இரண்டாம் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் அமிழ்து எது, அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துக் கதை ஆகியவற்றைக் கேட்கலாம். மூன்றாம் ஒலிக்குதிரில் மூன்றாம் தொகுப்பின் ஏற்றப் பாட்டு, திராவிடர் திருப்பாடல், சமத்துவப்பாட்டு, புரட்சித்திருமணம் ஆகியவற்றைக் கேட்கலாம்.

More audiobooks from Bharathidasan

Related to Bharathidasan Complete Works

Related categories

Reviews for Bharathidasan Complete Works

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words